Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதை விடவா ஒரு தூரநோக்கு பார்வை இருக்கமுடியும் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை விடவா ஒரு தூரநோக்கு பார்வை இருக்கமுடியும்

தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள்

இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன.

இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்குத் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும்.

- வே.பிரபாகரன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2019 at 5:11 AM, விசுகு said:

சத்தியமான வார்த்தைகள். உலகு எப்படி இயங்குகிறது என்பதை நிச்சயமாக அறிந்தே இருக்கிறார்.

On 11/26/2019 at 5:11 AM, விசுகு said:

இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும்.

- வே.பிரபாகரன்

உலகு எப்படி இயங்குகிறது என்று தெரிந்திருந்தும், இப்படி குரல் எழுப்புவது பயனற்றது என்று புரிந்து கொண்டும், இப்படி கேட்டதற்கு காரணம் வேறு வழி தெரியாத இயலாமையா?  உலக வல்லரசுகளின் பொருளாதார சுயநல தேவைகளுக்கான விட்டுக்கொடுப்புகளை செய்து, தமக்கு தேவையான விடுதலையை, கிழக்கு தீமோர், எரித்திரியா, தென் சூடான் ஆகிய நாடுகள் பெற்றிருப்பதை அறிந்திருந்தும் இவர் ஏன் இவ்வாறான பாதையை கண்டுபிடிக்கவில்லை? அது பற்றிய அறிவும், தொடர்புகளும் உள்ளவர்கள் கிடைக்கவில்லையா?

On 11/26/2019 at 5:11 AM, விசுகு said:

மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்குத் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும்.

- வே.பிரபாகரன்

இது அதிஷ்டத்தை நம்பிய, இலவுகாக்கும் கிளிகளை ஒத்த தீர்வு பாதையாக அல்லவா தெரிகிறது? பரிதாபத்திக்கு உரிய தலைமைத்துவமாகவே  எனக்கு படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சிந்திக்க சிலரால் மட்டுமே முடியும் அதில் தலைவர் முன்நிற்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இது அதிஷ்டத்தை நம்பிய, இலவுகாக்கும் கிளிகளை ஒத்த தீர்வு பாதையாக அல்லவா தெரிகிறது? பரிதாபத்திக்கு உரிய தலைமைத்துவமாகவே  எனக்கு படுகிறது.

தலைமை சரியாகத் தான் இருந்தது.

நாங்கள் தான் எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று எதுவுமே செய்யாமல் வெறும் ஐந்தோ பத்தோ கொடுத்தால் எமது கடமை முடிந்ததென்று இருந்துவிட்டோம்.

3 hours ago, கற்பகதரு said:

உலகு எப்படி இயங்குகிறது என்று தெரிந்திருந்தும், இப்படி குரல் எழுப்புவது பயனற்றது என்று புரிந்து கொண்டும், இப்படி கேட்டதற்கு காரணம் வேறு வழி தெரியாத இயலாமையா?  உலக வல்லரசுகளின் பொருளாதார சுயநல தேவைகளுக்கான விட்டுக்கொடுப்புகளை செய்து, தமக்கு தேவையான விடுதலையை, கிழக்கு தீமோர், எரித்திரியா, தென் சூடான் ஆகிய நாடுகள் பெற்றிருப்பதை அறிந்திருந்தும் இவர் ஏன் இவ்வாறான பாதையை கண்டுபிடிக்கவில்லை? அது பற்றிய அறிவும், தொடர்புகளும் உள்ளவர்கள் கிடைக்கவில்லையா?

போராட்டம் தனியே ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்காது.

அதற்கான சூழ்நிலை உலகில் உருவாகினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2019 at 1:11 PM, விசுகு said:

இதை விடவா ஒரு தூரநோக்கு பார்வை இருக்கமுடியும்

தலைவர் பிரபாகரனின் வார்த்தைகள்

இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலைநாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன.

இந்த நிலையில் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும் நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில் சர்வதேச சூழ்நிலை எமக்குத் சாதகமாக அமையலாம். அப்பொழுது உலகத்தின் மனச்சாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும்.

- வே.பிரபாகரன்

மன்னிக்கவும், மேலே போல்ட் செய்யப்பட்ட விடயம் தவிர்ந்த ஏனையவை ஒன்றும் பெரிய தீர்க்க தரிசனம் போல எனக்குத் தெரியவில்லை. மனித குலத்தின் தொன்மை தொட்டு, புவிசார் அரசியலே (geopolitics), ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சுயநலனே (National self interest), உலக அரசியலை தீர்மானிக்கிறது என்பது தெரியாத ஒருவரை நான் இன்னமும் என் வாழ்வில் இதுவரை சந்திக்கவில்லை. உலகம் தர்மத்தின் படி இயங்கவில்லை என்பது ஒரு பிரபஞ்ச உண்மை. இதை பிரபாகரன் போன்ற ஒரு பெருந்தலைவர் அறியாமல் இருந்தால் அதுதான் செய்தி. 

இப்போ போல்ட் செய்த பகுதியை நோக்கினால். இதை இரெண்டாக பிரிப்போம்.

1. மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் போது சர்வதேச சூழல் எமக்கு சாதகமாக மாறலாம் ( ஆம் விகுதியை கவனிக்கவும்) என்கிறார்.

2 . அப்போது உலகின் “மனச்சாட்சி” நியாயத்தின் பக்கம், எம்பக்கம் திரும்பும் என்கிறார்.

இதில் 2ம் கூற்றை முதலில் அலசுவோம். இந்த கூற்று ஆரம்பத்தில் கூறிய போல்ட் செய்யாத பகுதியில் கூறப்பட்ட கூற்றுக்கு முரணானது. உலக ஒழுங்கு - மனச்சாட்சி படி நடப்பதில்லை. ஒரு போதும் நடந்ததும் இல்லை. மாற்றங்கள் நிகழும் போது, தம் சுயநலனை முன்னிறுத்தி, பலமான நாடுகள் ஒன்றாய் சேர்ந்தோ அல்லது, ஒன்றோடு ஒன்று போட்டியிட்டோ தமக்கு சாதகமா உலக ஒழுங்கை மீள நிறுவுகிறன அல்லது நிறுவ முயல்கிறன. இங்கே அறம்சார் வெளியுறவுக் கொள்கை என்று ஏதுமில்லை. எனவே மாற்றம் நிழந்தாலும் உலகின் மனச்சாட்சி எம்பக்கம் திரும்பாது. ஆனால் பலமான நாடுகளின் நலனும் எம் நலனும் ஒத்துப் போனால், எமக்கு நன்மை விளையலாம். 

இப்போ கூற்று 1 ஐ அலசுவோம். “எதிர்பாராத மாற்றங்களை” எதிர்பார்த்து எம் எதிர்காலத்தை திட்டமிடுவது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது? எதிர்பாராதது என்றால் என்ன? நடப்பதற்கு இருக்கும் வாய்ப்பை விட நடக்காமல் விடுவதற்கான வாய்ப்பு அதிகம் - அதுதான் எதிர்பாராதது. 

உதாரணதுக்கு நான் ஒரு காரை மாதக் கடனில் வாங்குகிறேன் என வைப்போம். என் வருவாய்க்கு £15 ஆயிரம் பெறுமதியான காரை, 3 வருடகாலத்தில் கட்டும் இயலுமை உள்ளது என வைப்போம். நான் கிழமையில் 2 தரம் லாட்டரி போடும் வழக்கம் உள்ளவன்.  இந்த மூன்று வருடத்தில் எனக்கு 3 மில்லியன் பரிசு “எதிர்பாராமல்” விழக்கூடும். இதை நம்பி நான் என் இயலுமைக்கு அப்பால் போய் ஒரு 50 ஆயிரம் பெறுமதியான காரை மாதக் கட்டுக்காசுக்கு வாங்குவது சரியாகுமா?

இந்தியா எனும் நாய் எம்மருகே படுத்து கிடக்கிறது என்பதும், எம் அபிலாசைகளை கருவறுப்பதே அதன் மூல நோக்கங்களில் ஒன்று என்பதும் முழுதாக தெரிந்த எமக்கு, நாம் எதிர்பார்க்கும் மாற்றம் “மிகவும் எதிர்பாராதது” என்பது ஏன் புரியவில்லை.

எம் அத்தனை வளங்களையும், உச்ச வலுவையும் ஏன் “எதிர்பாராத மாற்றம்” நிழந்தால் மட்டுமே சாத்தியமாக கூடிய, அதி குறைந்த நிழக்தகவு உள்ள ஒரு விடயத்தில் மட்டும் 100% செலவளித்தோம் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தலைமை சரியாகத் தான் இருந்தது.

நாங்கள் தான் எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று எதுவுமே செய்யாமல் வெறும் ஐந்தோ பத்தோ கொடுத்தால் எமது கடமை முடிந்ததென்று இருந்துவிட்டோம்..

ஏன் அப்படி இருந்தீர்கள்? உங்களை தலைமை வழிநடத்தவில்லையா? அல்லது புலிகளின் தலைமைக்கு மாறாக வழிநடத்திய தலைமையை பின்பற்றியவர்களில் ஒருவரா நீங்கள்? 

2 hours ago, ஈழப்பிரியன் said:

போராட்டம் தனியே ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்காது.

அதற்கான சூழ்நிலை உலகில் உருவாகினால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.

அப்படியான சூழ்நிலை இருக்கவில்லை என்று தெரிந்தும் போராட்டத்தை தொடர்ந்தால் மக்கள் மடிந்து அழிவர் என்று தலைமைக்கு தெரியவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

மன்னிக்கவும், மேலே போல்ட் செய்யப்பட்ட விடயம் தவிர்ந்த ஏனையவை ஒன்றும் பெரிய தீர்க்க தரிசனம் போல எனக்குத் தெரியவில்லை. மனித குலத்தின் தொன்மை தொட்டு, புவிசார் அரசியலே (geopolitics), ஒவ்வொரு நாட்டினதும் தேசிய சுயநலனே (National self interest), உலக அரசியலை தீர்மானிக்கிறது என்பது தெரியாத ஒருவரை நான் இன்னமும் என் வாழ்வில் இதுவரை சந்திக்கவில்லை. உலகம் தர்மத்தின் படி இயங்கவில்லை என்பது ஒரு பிரபஞ்ச உண்மை. இதை பிரபாகரன் போன்ற ஒரு பெருந்தலைவர் அறியாமல் இருந்தால் அதுதான் செய்தி. 

இப்போ போல்ட் செய்த பகுதியை நோக்கினால். இதை இரெண்டாக பிரிப்போம்.

1. மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் போது சர்வதேச சூழல் எமக்கு சாதகமாக மாறலாம் ( ஆம் விகுதியை கவனிக்கவும்) என்கிறார்.

2 . அப்போது உலகின் “மனச்சாட்சி” நியாயத்தின் பக்கம், எம்பக்கம் திரும்பும் என்கிறார்.

இதில் 2ம் கூற்றை முதலில் அலசுவோம். இந்த கூற்று ஆரம்பத்தில் கூறிய போல்ட் செய்யாத பகுதியில் கூறப்பட்ட கூற்றுக்கு முரணானது. உலக ஒழுங்கு - மனச்சாட்சி படி நடப்பதில்லை. ஒரு போதும் நடந்ததும் இல்லை. மாற்றங்கள் நிகழும் போது, தம் சுயநலனை முன்னிறுத்தி, பலமான நாடுகள் ஒன்றாய் சேர்ந்தோ அல்லது, ஒன்றோடு ஒன்று போட்டியிட்டோ தமக்கு சாதகமா உலக ஒழுங்கை மீள நிறுவுகிறன அல்லது நிறுவ முயல்கிறன. இங்கே அறம்சார் வெளியுறவுக் கொள்கை என்று ஏதுமில்லை. எனவே மாற்றம் நிழந்தாலும் உலகின் மனச்சாட்சி எம்பக்கம் திரும்பாது. ஆனால் பலமான நாடுகளின் நலனும் எம் நலனும் ஒத்துப் போனால், எமக்கு நன்மை விளையலாம். 

இப்போ கூற்று 1 ஐ அலசுவோம். “எதிர்பாராத மாற்றங்களை” எதிர்பார்த்து எம் எதிர்காலத்தை திட்டமிடுவது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானது? எதிர்பாராதது என்றால் என்ன? நடப்பதற்கு இருக்கும் வாய்ப்பை விட நடக்காமல் விடுவதற்கான வாய்ப்பு அதிகம் - அதுதான் எதிர்பாராதது. 

உதாரணதுக்கு நான் ஒரு காரை மாதக் கடனில் வாங்குகிறேன் என வைப்போம். என் வருவாய்க்கு £15 ஆயிரம் பெறுமதியான காரை, 3 வருடகாலத்தில் கட்டும் இயலுமை உள்ளது என வைப்போம். நான் கிழமையில் 2 தரம் லாட்டரி போடும் வழக்கம் உள்ளவன்.  இந்த மூன்று வருடத்தில் எனக்கு 3 மில்லியன் பரிசு “எதிர்பாராமல்” விழக்கூடும். இதை நம்பி நான் என் இயலுமைக்கு அப்பால் போய் ஒரு 50 ஆயிரம் பெறுமதியான காரை மாதக் கட்டுக்காசுக்கு வாங்குவது சரியாகுமா?

இந்தியா எனும் நாய் எம்மருகே படுத்து கிடக்கிறது என்பதும், எம் அபிலாசைகளை கருவறுப்பதே அதன் மூல நோக்கங்களில் ஒன்று என்பதும் முழுதாக தெரிந்த எமக்கு, நாம் எதிர்பார்க்கும் மாற்றம் “மிகவும் எதிர்பாராதது” என்பது ஏன் புரியவில்லை.

எம் அத்தனை வளங்களையும், உச்ச வலுவையும் ஏன் “எதிர்பாராத மாற்றம்” நிழந்தால் மட்டுமே சாத்தியமாக கூடிய, அதி குறைந்த நிழக்தகவு உள்ள ஒரு விடயத்தில் மட்டும் 100% செலவளித்தோம் ?

உங்கள் கேள்விகள் எல்லோருக்கும் உள்ளவையே இதற்கு தலைவரால் மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால் இதற்கு என்னால் தரக்கூடியது விளக்கம். தலைவரின் கேள்வி தான் தமிழீழம் ஆனால் இருக்கும் பலத்தை வைத்து அதிஉட்ச அதிகாரத்தை பெறுவதே நோக்கமாக இருந்தது. அடுத்தது இதில் எதையுமே தரமறுத்து பொய் பேசி வஞ்சகமாக சூழ்ச்சி செய்து அவரை ஏமாற்றியோரை வெற்றி பெற்றதால் மறந்து விட்டு விடுகின்றோம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

ஏன் அப்படி இருந்தீர்கள்? உங்களை தலைமை வழிநடத்தவில்லையா? அல்லது புலிகளின் தலைமைக்கு மாறாக வழிநடத்திய தலைமையை பின்பற்றியவர்களில் ஒருவரா நீங்கள்? 

நீங்கள் போராட்டத்துக்கு ஆதரவில்லாமல் இருந்திருக்லாம்.

போராட்டம் தோற்றுப் போனதையிட்டு சந்தோசப்படலாம்.

ஆனாலும் சிங்களத்துக்கு முன்னால் எல்லோரும் தமிழர் தான்.இது இலங்கையில் இனி எப்போதும் மாறப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

ஏன் அப்படி இருந்தீர்கள்? உங்களை தலைமை வழிநடத்தவில்லையா? அல்லது புலிகளின் தலைமைக்கு மாறாக வழிநடத்திய தலைமையை பின்பற்றியவர்களில் ஒருவரா நீங்கள்? 

அப்படியான சூழ்நிலை இருக்கவில்லை என்று தெரிந்தும் போராட்டத்தை தொடர்ந்தால் மக்கள் மடிந்து அழிவர் என்று தலைமைக்கு தெரியவில்லையா?

11 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் போராட்டத்துக்கு ஆதரவில்லாமல் இருந்திருக்லாம்.

போராட்டம் தோற்றுப் போனதையிட்டு சந்தோசப்படலாம்.

ஆனாலும் சிங்களத்துக்கு முன்னால் எல்லோரும் தமிழர் தான்.இது இலங்கையில் இனி எப்போதும் மாறப் போவதில்லை.

நாங்கள் முழு உலகுக்கும் முன்னால் தமிழர். இங்கே என் சக அமெரிக்கருக்கு உலகப்படத்தில்  இந்த குறுணி சிறி லங்காவை காட்டி, தமிழ் பேசும் உலகையும் காட்டி,  எங்கிருந்து வந்தோம் என்று புரியவைக்கும் தமிழர் நாம். என் சக அமெரிக்கர் என்றவுடன் எதோ வெள்ளைத்தோல் ஐரோப்பிய வம்சாவளி என்று நினைத்துவிடாதீர்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய, சீன, ஜப்பானிய, கொரிய மற்றும் வியட்நாமிய பரம்பரையில் வந்த அமெரிக்கர். 

அதுசரி, கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லையே?

மீண்டும் ஒரு முறை:

  1. ஏன் அப்படி இருந்தீர்கள்? உங்களை தலைமை வழிநடத்தவில்லையா?
  2. புலிகளின் தலைமைக்கு மாறாக வழிநடத்திய தலைமையை பின்பற்றியவர்களில் ஒருவரா நீங்கள்? 
  3. அப்படியான சூழ்நிலை இருக்கவில்லை என்று தெரிந்தும் போராட்டத்தை தொடர்ந்தால் மக்கள் மடிந்து அழிவர் என்று தலைமைக்கு தெரியவில்லையா?

பதில் சொல்லும் நேர்மை இருந்தால் சொல்லுங்கள். பதில் சொன்னால் உங்களால் எப்படி எங்கள் மக்கள் அழிந்தார்கள் என்று எல்லோரும் அறிந்து விடுவார்கள் என்று நேர்மையீனமாக மறைக்க விரும்பினால் வேறுஏதாவது எழுதி மற்றவர்கள் மேல் பழியை போட்டுவிட்டு "அப்பாடா... இந்த மக்களின் அழிவுக்கு நான் பொறுப்பல்ல ... " என்று தூங்க போய்விடுங்கள். உங்கள் தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2019 at 9:24 PM, ஈழப்பிரியன் said:

தலைமை சரியாகத் தான் இருந்தது.

நாங்கள் தான் எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று எதுவுமே செய்யாமல் வெறும் ஐந்தோ பத்தோ கொடுத்தால் எமது கடமை முடிந்ததென்று இருந்துவிட்டோம்.

நித‌ர்ச‌ன‌ உண்மை ஜ‌யா ,
யாழ்பாண‌த்தை 1995ம் ஆண்டு க‌ட‌சியில் சிங்க‌ள‌ இரானுவ‌ம் பெரும் ச‌ண்டை செய்யாம‌ யாழ்பாண‌த்தை கைப்ப‌ற்றினார்க‌ள் , கார‌ண‌ம் போராளிக‌ள் எம் போராட்ட‌த்துக்கு போதுமான‌ அள‌வு இல்லை அப்போது,

2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தில் நாமும் விளையாட்டு த‌ன‌மாய் இருந்திட்டோம் , சிங்க‌ள‌வ‌னின் ந‌ரிக் குன‌ம் தெரிந்தும் விழிக்காம‌ இருந்த‌து எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ மிக‌ப் பெரிய‌ த‌வ‌று , 

த‌வ‌று எம் எல்லார் மேலையும் தான் , 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/15/2019 at 12:37 PM, விசுகு said:

உங்கள் கேள்விகள் எல்லோருக்கும் உள்ளவையே இதற்கு தலைவரால் மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால் இதற்கு என்னால் தரக்கூடியது விளக்கம். தலைவரின் கேள்வி தான் தமிழீழம் ஆனால் இருக்கும் பலத்தை வைத்து அதிஉட்ச அதிகாரத்தை பெறுவதே நோக்கமாக இருந்தது. அடுத்தது இதில் எதையுமே தரமறுத்து பொய் பேசி வஞ்சகமாக சூழ்ச்சி செய்து அவரை ஏமாற்றியோரை வெற்றி பெற்றதால் மறந்து விட்டு விடுகின்றோம்

அண்ணை,

ஒரு விசயத்தை பற்றி கதைத்தீர்கள், அதை ஒட்டி கேள்வி கேட்டால், அவரினால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்கிறீர்கள். 

சரி உங்கள் விளக்கத்துக்கே வருகிறேன். தமிழீழம் இல்லை பிரபாவின் இலக்கு அவரின் இலக்கே உச்ச அதிகாரத்தை பெறுவதுதான் என்றால், மறுபடியும், மறுபடியும் தமிழீழத்தை கைவிட்டால் தன்னையும் சுடலாம் என அவர் சொல்லியதெல்லாம் பொய்யா?

பிரபாகரன் ஒரு சிறந்த நேர்மையான  தேசப்பற்று மிக்க  விடுதலைப்போராளி. மிகுந்த ஆளுமை உள்ள போராட்டத்தலைவர். மதி நுட்பம் வாய்ந்த இராணுவத்தளபதி.  

ஆனால் “தொலைநோக்கு அரசியல் பார்வை” என்பது அவரது இயக்கத்திரால் அவர் மீது  திணிக்கப்பட்ட ஒரு வெற்று பில்டப் மட்டுமே.  உலக  அரசியல் ராஜதந்திர விடயத்தில்   பிரபாகரன் மற்றவர்களை தங்கி இருக்காத நிலை இருந்திருந்தால் அவர் எப்படியும்   தமிழ் மக்கள் தன்னாட்சியுடன் வாழும் இலக்கை அடைந்திருப்பார் என்பதே உண்மை. ( இலக்கு என்பது உடனடி தனி நாடு என்று அர்ததம் கொள்ளக் கூடாது ) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அண்ணை,

ஒரு விசயத்தை பற்றி கதைத்தீர்கள், அதை ஒட்டி கேள்வி கேட்டால், அவரினால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்கிறீர்கள். 

சரி உங்கள் விளக்கத்துக்கே வருகிறேன். தமிழீழம் இல்லை பிரபாவின் இலக்கு அவரின் இலக்கே உச்ச அதிகாரத்தை பெறுவதுதான் என்றால், மறுபடியும், மறுபடியும் தமிழீழத்தை கைவிட்டால் தன்னையும் சுடலாம் என அவர் சொல்லியதெல்லாம் பொய்யா?

மீண்டும்  சொல்கின்றேன் தமிழீழத்தை  கைவிட வேண்டுமானால் 

தமிழரது  அபிலாசைகளை ஓரளவேனும் திருப்தி  செய்யக்கூடிய ஒரு  தீர்வை முன்  வையுங்கள்  என்பதே தலைவரின் கோரிக்கையாக இருந்தது.  இது  அவருடன் பயணித்த  அனைவருக்கும்  தெரியும்.

திரும்ப  திரும்ப  இவை  பற்றி எழுதிக்கொண்டிருந்தால்

வார்த்தைகள்  தடித்து

நம் இனம்  இருக்கும்  ஒற்றுமையையும் சிதைத்து கேட்க  நாதியற்றுப்போவதைத்தவிர  வேறென்ன நன்மை??

நானும் எழுதி எவரையும்  இழக்க  விரும்பவில்லை

நன்றி சகோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.