Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா உதவ முன்வராவிட்டால் சீனாவையே நாடுவோம்: கோத்தபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0212-2019%20world-gotapaya.jpg?itok=1wmKlcnj

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

2 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2019 10:41

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார்.

இலங்கை பல்லாண்டு காலமாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆயினும் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சுமார் பத்தாண்டு காலம் அதிபராகப் பதவி  வகித்த மகிந்த ராஜபக்சே சீனாவுடன் நெருக்கமாக இருந்தார். முதலீடாகவும் கடன்களாகவும் 7 பில்லியன் டாலர் (S$9.57 பில்லியன்) வரை சீனாவிடம் உதவிபெற அவர் ஒப்பந்தம் போட்டார்.

இந்நிலையில் சென்ற மாதம் 16ஆம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற மகிந்தவின் தம்பி கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றார். 

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய எந்தவோர் அம்சத்தையும் தமது அரசாங்கம் செய்யாது என்ற அவர் முதலீட்டுக்கான அழைப்புகளை விடுத்தார்.

“இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவையும் இன்னும் பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இலங்கை வளர்ச்சி பெறும். 

“அவ்வாறு செய்யாவிட்டால் இலங்கையைப் போல பிற ஆசிய நாடுகளுக்கும் பிரச்சினை எழலாம். நாடுகள் ஒன்றுக்கொன்று உதவாவிட்டால் சீனாவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹம்பன்தோட்டா துறைமுகம் போன்ற உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது,” என்று திரு கோத்தபய தமது 

பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilmurasu.com.sg/world/story20191202-37183.html?fbclid=IwAR0F1cPZrNqjPMn_jTFWbyBh0PZibK1OL2Pfz2bG5PGuH0F0Z-SYeqwADJk

எந்த ஒரு நாட்டுக்கும் அவர்களது பொருளாதாரம் மிகவும் முக்கியம். மேட்கு  நாடுகள், இந்திய, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார உதவி, முதலீடுகள் (FDI)  செய்யவிடடால் இலங்கைக்கு வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை. எனவே நிச்சயமாக சீனா இதனை பயன்படுத்தும். பின்னர் வந்து குய்யோ , முய்யோ என்று சத்தம்போடுவதில் பிரயோசனம் இல்லை. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இனியும் இதில் கவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

You mentioned India’s suspicions of the past, those include differences over China, and the Tamil issue, but also your allegation that Indian agencies conspired for regime change against your brother. Can your government turn the page on these past suspicions?

I am sure [we can turn the page]. We did hear about agencies conspiring, including the US, for regime change. Some of their suspicions were due to our ties with China, but that was a misunderstanding. We had a purely commercial agreement with China. I want to tell India, Japan, Singapore and Australia and other countries to also come and invest in us. They should tell their companies to invest in Sri Lanka and help us grow, because if they do not, then not only Sri Lanka, but countries all over Asia will have the same [problem]. The Chinese will take the Belt and Road Initiative all over unless other countries provide an alternative. 

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நேரடியாய் வெருட்டி கடன் வாங்குவதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும் 😂
 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு தேவையான பணத்தை சீனாவால் மட்டுமே வழங்க முடியும்.

இந்தியா கொடுக்க முன்வந்த பணம், 450 அமெரிக்க டாலர்கள் இந்திய நலன்களை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. மேலும், அதில் உள்ள நிர்ப்பந்தங்கள் பற்றி பெரிதாக கூறவில்லை. 

சீனாவிடம் அதை விட பெரிய பணம் உள்ளது. அது, சிங்கள இடங்களை அபிவிருத்தி செய்யவும், மீண்டும் தேர்தலில் அவர்கள் வாக்குக்குகளை  மட்டுமே வைத்தும் வெல்லலாம். தேரர்களை கட்டுப்படுத்தும் வல்லமையும் தூண்டிவிடும் பலத்தையும் கொண்டவர்களாக இராசபக்சேக்கள் உள்ளனர்.  

மொத்தத்தில், இந்தியா பணம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. 
சிங்களம், அந்த பணம் வேண்டாம் என கூறும் நிலையை கூட எடுக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.