Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொஹிங்கியர்களால் முடியுமென்றால் ஏன் ஈழத்தமிழர்களால் முடியாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொஹிங்கிய முஸ்லீம்கள் மீது தனது ராணுவத்துடன் சேர்ந்து திட்டமிட்ட முறையில் இனக்கொலை ஒன்றினை நடத்தியதற்காக பர்மாவின் தலைவரும் முன்னாள் மனிதவுரிமைக்கான நொபெல் பரிசினை வென்றவருமான ஆங் சான் சூசி மீது   ஐக்கியநாடுகள் சபையினூடாக விசாரணைதொன்று நடந்துவருகிறது.

முஸ்லீம் நாடுகளின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றினையடுத்து சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான கம்பியா இந்த குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளதுடன், அமெரிக்க வழக்கறிஞர்களைக்கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அண்மையில் ரொஹிங்கிய அகதிகள் தங்கியிருக்கும் பகுதியொன்றிற்குச் சென்றிருந்த கம்பியாவின் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மூலமும், கண்ணால்க் கண்ட சாட்சியங்கள் மூலமும் இனக்கொலை நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். கிராமங்கள் எரிக்கப்பட்டமை, பெண்கள் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டமை, வயதுவேறுபாடின்றி ஆண்கள் கொல்லப்பட்டமை ஆகிய கொடூரங்கள் ஆங் சான் சூசிக்கெதிராகப் பதிவாகியிருக்கின்றன.

 

வெறும் 20,000 பேரினை மட்டுமே கடந்த இரு வருடங்களுக்குள் இழந்திருக்கும் ரொஹிங்கியர்களுக்கு சர்வதேசத்தில் நீதி கேட்டு, குற்றங்களில் ஈடுபட்ட போர்க்குற்றவாளியை இன்று சர்வதேசத்தில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க முடியுமென்றால், சுமார் ஒன்றரை லட்சம் பேரைக் காவுகொடுத்து, சாட்சியங்கள சர்வதேசத்தில் முன்வைத்து காத்திருக்கும் ஈழத்தமிழர்கள் இன்னும் எதுவுமே செய்யமுடியாதிருப்பது ஏன்?

ரஞ்சித் ரோஹிஞ்சா விடயத்தில் காம்பியா (Gambia) என்ற முஸ்லீம் நாடு, சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஒரு அங்கத்துவ நாடு (State Party) மியான்மருக்கு எதிராக போட்ட முறைப்படி தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது . மியான்மார் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஒரு அங்கத்துவ நாடு இல்லாவிட்டாலும் (non-state party) சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் மற்றொரு அங்கத்துவ நாடானா வங்காளதேசத்துடன் (State Party) எல்லையை கொண்டது. இந்த எல்லையை ஒத்த பகுதிகளில் வாழும்  மக்களான ரொஹிங்கிய முஸ்லீம்கள் மீது இனக்கொலையை கட்டவிழ்த்தபோது அந்த மக்கள் ஒட்டுமொத்தமாக அந்த எல்லை கிராமங்களில் இருந்து அப்புறப்படத்தப்பட்டு (Ethic cleansing) வங்காளதேச எல்லை பக்கம் நோக்கி துரத்தப்பட்டனர். அத்துடன் அந்த எல்லையில் சர்வதேச நியமனக்களி மீறி நிலக்கண்ணி வைத்து அவர்களை கொல்லவும், திரும்பி வரவிடாமலும்  (right of return, violation of Geneva conventions) மியான்மார் நடந்துகொண்டது. மியான்மாரை  சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் நிறுத்தலாமா என்று ஆராய்ந்தபோது (Pre-Trial Chamber hearings) இன அழிப்பு நடவடிக்கை சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் அங்கத்துவ நாடானா வங்காளதேசத்துக்கும் பரந்திருந்ததனாலும் வங்காளதேசத்துக் கு துரத்தப்பட்டவர்களை திரும்பிவர விடாமல் செய்திருந்ததனால் இந்த வழக்கை தாங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று சர்வதேச குற்றவியல் நீதி மன்ரூ தீர்மானித்தது. 

ஆங்கிலத்தில்  ஏன் இந்த வழக்கை எடுத்தார்கள் என்பதுக்கு அவர்கள் போட்ட நியாயம்:

a) it is within the jurisdiction of the Court,

இந்த நீதிமன்றின் விசாரணை வரம்புக்குள் இந்த வழக்கு பொருந்தக்கூடியது 

b) it is allegedly committed at least in part on the territory of Bangladesh, or on the territory of any other State Party or State accepting the ICC jurisdiction,

நடந்த இனஅழிப்பின் ஒரு பகுதி சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஒரு அங்கத்துவ நாடு வங்கதேசத்தின் பகுதியில் நடந்தது 

c) it is sufficiently linked to the situation as described in the present decision, and

இந்த மன்றில் இந்த வழக்கு சம்பந்தமாக தாங்க தகவல்கள் நிலைமையின் உண்மையை சித்திரித்திருக்கின்றன 

d) it was allegedly committed on or after the date of entry into force of the Rome Statute for Bangladesh or other relevant State Party.

இந்த குற்றங்கள் வங்கதேசம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஒரு அங்கத்துவ நாடக வந்த பின்னர் இடம்பெற்றவை 

மூலம்:: https://news.un.org/en/story/2019/11/1051451

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் மியான்மரின் உள்நாட்டு விவகாரம் எல்லை கடந்த இந சுத்திகரிக்க போனதனால் மன்றின் முன்னாள் மியான்மார் குற்றவாளியாக நிட்கின்றனர் 

எங்கள்  நிலைமை பற்றி பின்னர் எழுதுகிறேன் 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

சுமார் ஒன்றரை லட்சம் பேரைக் காவுகொடுத்து, சாட்சியங்கள சர்வதேசத்தில் முன்வைத்து காத்திருக்கும் ஈழத்தமிழர்கள் இன்னும் எதுவுமே செய்யமுடியாதிருப்பது ஏன்?

யார் தொடங்குவது அப்படி தொடங்கினாலும் அவரில் பிழை கண்டு பிடிப்பது  ஒற்றுமை என்பது இல்லை அப்படி இருந்தாலும் அதை குழப்ப ஆயிரம் குழப்பவாதிகள் அரசியல் வாதிகள் அங்கு நடந்தது இனப்படுகொலையே இல்லை என்று ஐ நாவரைக்கும் போய் சொல்வார்கள் இன்னும் நிறைய சொல்லலாம் ரகுநாதன் 

அரசாங்களின் ஆதரவை பெறாத தமிழர்கள் வெளியில் நட்புறவு சக்திகளையாவது வளர்த்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான ராஜத‍ந்திரம் எம்மிடத்தில் இல்லை. யுத்தம் முடிந்தவுடன் தாயகம் புலம் இணைந்து இதற்காக செயற்பட சுயாதீன அமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்க வேண்டும்.  அமைப்பு ரீதியான  தங்கள் தங்கள் விசுவாசங்களை  ஒரு பக்கம் ஒதுக்கி  வைத்து விட்டு சுயாதீன அமைப்பாக இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். 

வங்கதேசத்தை உருவாக்கியது இந்தியா. ஆனால், அதே இந்தியா தான் தமிழர்களை பார்த்து உதவ மறுக்கின்றது. உதவுவர்களையும் தடுக்கின்றது.


காரணம்?

அதில் ஒன்று பயம். தமிழர்கள் மீதான பயம். தமிழர்களை ஒன்றிணைய விட்டால்?, என்ற பயம்.
எனவே, தமிழர் தரப்பு அந்த பயத்தை நீக்கவேண்டும். தலைமைகள், நாங்களும் என்றும் ஒரு இராணுவபலமாக இருக்கமாட்டோம் என்ற உறுதி, முடிந்தால் எழுத்தினால் ஆன உறுதி. பொருளாதார ரீதியாக மட்டுமே முன்னேறுவோம் ( இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான ஜப்பான் மற்றும் ஜெர்மனி) என்ற உறுதிமொழி உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 11:47 PM, puthalvan said:

b) it is allegedly committed at least in part on the territory of Bangladesh, or on the territory of any other State Party or State accepting the ICC jurisdiction,

நடந்த இனஅழிப்பின் ஒரு பகுதி சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் ஒரு அங்கத்துவ நாடு வங்கதேசத்தின் பகுதியில் நடந்தது 

ICJ, ICC அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2019 at 7:25 AM, தனிக்காட்டு ராஜா said:

யார் தொடங்குவது அப்படி தொடங்கினாலும் அவரில் பிழை கண்டு பிடிப்பது  ஒற்றுமை என்பது இல்லை அப்படி இருந்தாலும் அதை குழப்ப ஆயிரம் குழப்பவாதிகள் அரசியல் வாதிகள் அங்கு நடந்தது இனப்படுகொலையே இல்லை என்று ஐ நாவரைக்கும் போய் சொல்வார்கள் இன்னும் நிறைய சொல்லலாம் ரகுநாதன் 

மிகமுக்கிய காரணம் எல்லாம் சொல்லிக்கொடுத்த பள்ளிகளில் சமூக ஒற்றுமை பற்றி சொல்லி கொடுக்கபடவில்லை எடுத்துக்காட்டுக்கு வடகிழக்கின்  புகழ் பெற்ற கல்லூரிகளில் தற்போது உள்ள பழைய மாணவர் சங்கம்கள்.

ஏதாவது ஒரு கல்லூரி ஒரே ஒரு பழைய மாணவர் சங்கம் உண்டா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

மிகமுக்கிய காரணம் எல்லாம் சொல்லிக்கொடுத்த பள்ளிகளில் சமூக ஒற்றுமை பற்றி சொல்லி கொடுக்கபடவில்லை எடுத்துக்காட்டுக்கு வடகிழக்கின்  புகழ் பெற்ற கல்லூரிகளில் தற்போது உள்ள பழைய மாணவர் சங்கம்கள்.

ஏதாவது ஒரு கல்லூரி ஒரே ஒரு பழைய மாணவர் சங்கம் உண்டா ?

இருக்கு ஆனால் அவை போட்டோக்களுக்கும் பார்ட்டிகளுக்கும் மட்டுமே

3 hours ago, Kadancha said:

ICJ, ICC அல்ல.

நன்றி கடைஞ்சா. எனக்கும் அந்த குழப்பம் முன்னர் வந்தது. 

ICC:

ICC விசாரணையாளர் முன் வைத்த சாட்சியங்களுக்கு  ICC நீதிபதிகள் நவம்பர் 11ல் மியான்மார் தொடர்பாக கொண்டுவந்த தீர்ப்பு அது. ICC ஒன்று தான் இன  அழிப்பு போன்ற சர்வதேச குற்றங்களை விசாரித்து அதட்கு காரணமான நபர்களை தண்டனைக்கு உட்படுத்தலாம் ( ICC is the world’s only permanent  criminal tribunal with a mandate to investigate and prosecute individuals who participate in international atrocity crimes, including genocide and crimes against humanity).

ICJ:

அதே சமயம் ICJ என்கின்ற உலக நீதிமன்றம் நாடுகளுக்கிடையான சர்ச்சர்களை விசாரணை செய்து அதில் தீர்ப்பு வழங்கும் (ICJ, known as the ‘World Court’, settles disputes submitted by States on a range of matters). மியான்மார் ICCல் ஒரு அங்கத்துவ நாடு இல்லை என்பதால் ICC விசாரணைக்கு எடுத்து நபர்களை அடையாளம் கண்டாலும் மேட்கொண்டு அவர்களால் அந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அதை நடைமுறைப்படுத்த ஒன்றும் செய்யமுடியாது (சூடான் போல ). ஆனால் மியான்மார் 1948இல் இருந்து ICJல்  இருக்கிறது. எனவே காம்பியா ICJ இடம் மயன்மாரை இன  அழிப்பை நிறுத்துமாறு உத்தரவிடவேடும் என்று கோருகிறது.  ("All that The Gambia asks is that you tell Myanmar to stop these senseless killings, to stop these acts of barbarity that continue to shock our collective conscience, to stop this genocide of its own people," The Gambia's Attorney General and Justice Minister, Abubacarr M Tambadou, told the court.). இனஅழிப்பில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதட் ICCன்  கடமை .

எனவே காம்பியா ICC தீர்ப்பு வந்த பின் உடனடியாக மயன்மாரை ICJ முன் நிறுத்தி இந்த நாட்டுக்கு எதிராக தீர்ப்பு எடுக்க முனைகிறது. அவ்வாறு தீர்ப்பு வந்தால் ICJ இநஅழிப்பு போன்ற சர்வதேச குற்றங்களை விசாரித்து அதட்கு காரணமான நபர்களை தண்டனைக்கு மேலும் உத்வேகம் கொடுக்கலாம்.

இதை ஆராய்ந்து பார்த்தால் காம்பியா இந்த அணுகுமுறை எடுக்க காரணம் ICC விசாரணைகள் பல ஆண்டுகாலம் எடுக்கலாம். எனவே நடைமுறையில் அந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வராது. அதோடு இந்த விவகாரத்தில் சீன போன்ற பாதுகாப்பு கவுன்சில் அங்கத்துவ நாடுகளின் தாக்கம் தமக்கு சாதமாக இருக்காது என்றும் காம்பியா நினைங்க கூடும். சூடான் விடயத்தில் உமர் பஷீர் மீது ICC பிடிவிறாந்து இருந்தபோது அவர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். மியான்மார் தலைவி ICJ செல்ல சிலநாள் முன்னர் சீன வெளிவிகார அமைச்சர் அவரை சந்திருந்தார். சீனா தனக்கும் மயன்மாரை ஒத்த பிரச்னை  உள்நாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை ஒரு கட்டத்துக்கு மேல் போகவிடாது. எங்களது பிரச்சனை போல மனிதஉரிமை  பல சக்திகளின் விளையாடுபொருளாகிவிட்டது. 

மேலும் கருத்துக்களை வையுங்கள் . மேலதிக தகவல்களை வாசித்து இணைக்கிறேன் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.