Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்!

114.jpg

இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும்,கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

சமூக சேவையில் சிறந்து பணியாற்றியதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் ஜெகநாதனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைப்பதற்காக போராடி வருகிறார்.

அதுபோலவே சமூகசேவைப் பிரிவில் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமா்சேவா சங்க நிறுவன தலைவா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 1981ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கி, கடந்த 38 ஆண்டுகளாக பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து வாழ பணியாற்றி வருகிறார். பாம்பே சகோதரிகள் என்று அழைக்கப்படும் கர்நாடக இசைக் கலைஞர்கள் லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு கூட்டாக பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஓவியர் மனோகர் தேவதாஸுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப், ஷேக் மெகபூப் சுபானி சென்னை ஐஐடி விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகள் பெறவுள்ளனர். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் பத்மபூஷன் விருது புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
https://minnambalam.com/k/2020/01/26/114

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் அவாளா?

  • கருத்துக்கள உறவுகள்

அவாளேதான்!!!

5 hours ago, goshan_che said:

எல்லாரும் அவாளா?

அப்படியே தான். இந்திய பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் அவர்களது  மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவாள் மாத்திரம் தான் இந்தியகுடிமக்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களது பொருளாதார பயன்பாட்டிற்கான கால்நடைகள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அப்படியே தான். இந்திய பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் அவர்களது  மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவாள் மாத்திரம் தான் இந்தியகுடிமக்கள். மற்றவர்கள் எல்லோரும் அவர்களது பொருளாதார பயன்பாட்டிற்கான கால்நடைகள். 

1 hour ago, Eppothum Thamizhan said:

அவாளேதான்!!!

இதுக்கு அவாள நொந்து ஒன்னும் ஆகப்போறதில்லடா அம்பி.

இப்பெல்லாம் அவா எல்லாம் நம்மவா, ஆனா அவாளிண்ட இருந்து கொஞ்சூண்டு விமோசனமேனும் எடுத்ததந்தாரோன்னோ, அதுதான் அந்த ப்ரம்மஹத்யி - ராமாசாமி அவர்தான் இப்ப நம்மவாக்கெல்லாம் நம்பர் வன் சத்ரு.

இதுதாண்ட அம்பி தமிழ் தேசியம். 

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்து புரிஞ்சிகோடா அம்பி - ராமசாமி என்கிற துஸ்டன் மட்டும் இல்லாட்டி நம்மாவாதான் 100% ம்.

large.41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg.e0ff82681145544706123dfac62df2f4.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

படம் பார்த்து புரிஞ்சிகோடா அம்பி - ராமசாமி என்கிற துஸ்டன் மட்டும் இல்லாட்டி நம்மாவாதான் 100% ம்.

large.41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg.e0ff82681145544706123dfac62df2f4.jpeg

இதில் மலையாளிகள் எத்தனை பேர் ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இதுக்கு அவாள நொந்து ஒன்னும் ஆகப்போறதில்லடா அம்பி.

இப்பெல்லாம் அவா எல்லாம் நம்மவா, ஆனா அவாளிண்ட இருந்து கொஞ்சூண்டு விமோசனமேனும் எடுத்ததந்தாரோன்னோ, அதுதான் அந்த ப்ரம்மஹத்யி - ராமாசாமி அவர்தான் இப்ப நம்மவாக்கெல்லாம் நம்பர் வன் சத்ரு.

இதுதாண்ட அம்பி தமிழ் தேசியம். 

"அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' 😂

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இதில் மலையாளிகள் எத்தனை பேர் ? 

தெரியவில்லை. கேரளாவில் ஒரு வழக்கம் - பிராமண குடும்பத்தில் முதல் மகன் மட்டும் ஒரு பிராமண பெண்ணை மணம் செய்ய வேண்டும். ஏனைய மகன்கள் எல்லாம் பிராமணரல்லாத பெண்ணை முடிக்கலாம் - ஆனால் பிள்ளைகள் எல்லாரும் தாயின் வம்சமாகவே கருதப்படுவர். ஒரே தந்தையுடன் தாய் வாழ வேண்டும் என்ற கட்டயமுமில்லை. 

உதரணதுக்கு ஒரு நாயர் பெண் - நம்பூதிரியோடு குடும்பம் நடத்தலாம். பிறக்கும்  பிள்ளை நாயர்தான். சம நேரத்தில் அதே பெண் இன்னும் பலருடனும் சேர்ந்து வாழலாம்.

மலையாளிகள் காட்டி, கூட்டி கொடுத்து வேலையில் மேலே போவார்கள் என பல தமிழர் ஏசுவார்கள் (குறிப்பாக மத்திய கிழக்கில் இருப்போர்). 

இந்த வகையான நெகிழ்ந்து போன இனமாக அவர்களை மாற்றியவர்கள் பிராமணர்கள்.

இது ஒரு வரலாற்றுப் பழி.

55 minutes ago, goshan_che said:

படம் பார்த்து புரிஞ்சிகோடா அம்பி - ராமசாமி என்கிற துஸ்டன் மட்டும் இல்லாட்டி நம்மாவாதான் 100% ம்.

large.41B2CEB1-4FAF-4FD9-A095-7DDECD7F0273.jpeg.e0ff82681145544706123dfac62df2f4.jpeg

இந்த படம் சோசல் மீடியாவில் கிடைத்தது. ஆகவே 100% நம்பிக்கையான தரவு இல்லை. ஆனால் உண்மைக்கும் இதுக்குமான தூரம்

அதிகம் இல்லை.

3 minutes ago, குமாரசாமி said:

"அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' 😂

"இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன்

கீதை மீது உறுதிமொழி எடுத்த பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேனுக்கு பத்ம ஸ்ரீபடத்தின் காப்புரிமைTWITTER/BOBBLACKMAN

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு.

சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்?

பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன்.

ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன்.

தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார்.

'பாரத் மாதா கி ஜே'

பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார்.

https://www.bbc.com/tamil/global-51255035

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

அரசியலை இந்திய கண்டத்தினரிடம் கற்றிருப்பார் போலும்.

பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் - ஏன் சம்பந்தர் ஐயாவாள் முடியவில்லை என கேட்க தோன்றுகின்றது 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2020 at 3:16 PM, ampanai said:

பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன் - ஏன் சம்பந்தர் ஐயாவாள் முடியவில்லை என கேட்க தோன்றுகின்றது 😀

பிளக்மேனுக்கு பிரமணிய-இந்திய அனுசரணை தேவை. பிரமணிய-இந்தியா தனது கோரமுகத்தை பிரிட்டனில் மறைக்க பிளேக்மேன் தேவை.

ஈழத்தமிழரும் அவர்தம் தலைவருகளும் யாருக்கும் பிரயோச்சனம் இல்லாதவர்கள்.

குதிரைக்குத்தான் குஞ்சம் கட்டுவார்கள், அதை பார்த்து தானும் குஞ்சம் கட்டுப்படுவோம் என கழுதை எதிர்பார்க்காது, கழுதைக்கு உரிய முறையில் முயற்சி செய்ய வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2020 at 12:10 AM, goshan_che said:

எல்லாரும் அவாளா?

அவாளேதான் எல்லாமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.