Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி

ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று  தெரிவித்துள்ளது.

தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்துள்ளார்.

ஈரானில் 124 பேர் வைரஸ் காரணமாக  உயிரிழந்துள்ள நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

iran_parliment_2.jpg

ஈரானின் ஆன்மீக தலைவரிற்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் மார்ச் இரண்டாம் திகதி கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உயிரிழப்புகள் ஈரானின் அரசாங்க  ஸ்தாபனங்களிற்குள் வைரஸ் பரவிவருவதை வெளிப்படுத்தியுள்ளன.
 
https://www.virakesari.lk/article/77301

இதன் பின்னால் நிச்சயம் அமெரிக்க தான் 

அமெரிக்காவின் எதிரிகள் ஆடிப்போயுள்ளார்கள் : சீனா, ஈரான் தென் கொரியா ஊடாக வடகொரியா  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ampanai said:

இதன் பின்னால் நிச்சயம் அமெரிக்க தான் 

அமெரிக்காவின் எதிரிகள் ஆடிப்போயுள்ளார்கள் : சீனா, ஈரான் தென் கொரியா ஊடாக வடகொரியா  

அப்பிடித்தான் உங்கை கனபேர் கதைக்கிறாங்கள்.
நோர்மலாய் பாக்கப்போனால் உந்த வைரசு இந்தியாவை ஒரு உலுப்பு உலுக்கியெல்லோ இருக்கோணும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த வைரசு இந்தியாவை ஒரு உலுப்பு உலுக்கியெல்லோ இருக்கோணும்

அங்கை போன வைரசுகள் எல்லாம் செத்துப் போச்சுதாம்.

ஆட்களில் ஏற்கனவே உசாரான வைரசுகள் இருக்காம்.

  • கருத்துக்கள உறவுகள்

In the UK it is estimated that an average of 600 people a year die from complications of flu. 

பிரிட்டனில் ஒரு வருசத்தில 600 பேர் ஃப்ளு வால் இறக்கின்றனர். சனத்தொகை 62மில்லியன்.  கொரோனாவால் இறந்தவர்கள் 2. (77, 88 வயது)

சீனாவில், கொரோனவால் இறந்தவர்கள் இதுவரை 4000 தாண்டவில்லை. சனத்தொகை 1500மில்லியன்.

13ம் நூறாண்டில் பாக்டீரியாவினால் வந்த பிளேக் நோயினால் பிரித்தானியாவின் சனத்தொகையில் இறந்தவர்கள் 1/3 பங்கு. வருத்தம் வந்தவர்களின், சுக தேகியான உறவினர்கள் கூட, பயம் காரணமாக உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.

கொரோனா சும்மா பெருபிக்கப்படும் ஒரு விசயம்.

Edited by Nathamuni

29 minutes ago, Nathamuni said:

கொரோனா சும்மா பெருபிக்கப்படும் ஒரு விசயம்.

இருக்கலாம்.

இங்கே சிக்கல் என்னவென்றால், கோவிட் - 19 இன் ஆரம்பமும் முடிவும் தெரியவில்லை என்ற பயம், சிவனை போன்று 🙂 ; குறிப்பாக முடிவு. 

மற்றைய நோய்கள், ப்ளூ உட்பட, முழுக்க முழுக்க முடிவு தெரியாவிட்டாலும் ஆரம்பம் ஓரளவிற்கு தெரியும், புத்தரை போன்று  🙂 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

In the UK it is estimated that an average of 600 people a year die from complications of flu. 

பிரிட்டனில் ஒரு வருசத்தில 600 பேர் ஃப்ளு வால் இறக்கின்றனர். சனத்தொகை 62மில்லியன்.  கொரோனாவால் இறந்தவர்கள் 2. (77, 88 வயது)

சீனாவில், கொரோனவால் இறந்தவர்கள் இதுவரை 4000 தாண்டவில்லை. சனத்தொகை 1500மில்லியன்.

13ம் நூறாண்டில் பாக்டீரியாவினால் வந்த பிளேக் நோயினால் பிரித்தானியாவின் சனத்தொகையில் இறந்தவர்கள் 1/3 பங்கு. வருத்தம் வந்தவர்களின், சுக தேகியான உறவினர்கள் கூட, பயம் காரணமாக உயிருடன் எரிக்கப்பட்டார்கள்.

கொரோனா சும்மா பெருபிக்கப்படும் ஒரு விசயம்.

நாதமுனி... சென்ற நவம்பரில் சீனாவில்  ஆரம்பிக்கப் பட்ட "கொரோனா" வைரஸ்,
நான்கு மாதத்தில்... உலகின் 88 நாடுகளுக்கு பரவியிருக்கு என்றால்...
அதனை சாதாரணமான,  வைரசாக கடந்து போய்விட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 9:29 AM, தமிழ் சிறி said:

நாதமுனி... சென்ற நவம்பரில் சீனாவில்  ஆரம்பிக்கப் பட்ட "கொரோனா" வைரஸ்,
நான்கு மாதத்தில்... உலகின் 88 நாடுகளுக்கு பரவியிருக்கு என்றால்...
அதனை சாதாரணமான,  வைரசாக கடந்து போய்விட முடியாது. 

நான் நினைத்தேன் இந்த‌ வ‌ருட‌ம் தான் கொரோனா ஆர‌ம்ப‌ம் ஆன‌து என்று த‌மிழ் சிறி அண்ணா / உங்க‌ட‌ நாட்டுக்கும் வ‌ந்துட்டாம் எதுக்கும் க‌வ‌ண‌மாய் இருங்கோ , 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

நான் நினைத்தேன் இந்த‌ வ‌ருட‌ம் தான் கொரோனா ஆர‌ம்ப‌ம் ஆன‌து என்று த‌மிழ் சிறி அண்ணா / உங்க‌ட‌ நாட்டுக்கும் வ‌ந்துட்டாம் எதுக்கும் க‌வ‌ண‌மாய் இருங்கோ , 

பையன்.... சீனாவில், முதலில் சென்ற வருடம் நவம்பரில்.. ஆரம்பித்துள்ளது என்று,
சீன வைத்தியர் ஒருவர் அந்த நோயாளியை கண்டு அறிவித்தபோது..
அந்த வைத்தியருக்கு.... சீன  அதிகாரிகளால், வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி... 
மிரட்டல் விடுக்கப் பட் டதாம்.

பின் அந்த வைரஸ்... கையை மீறி எல்லா இடமும் பரவிய போது, நிலைமை மோசமாகி விட்டது.  
அந்த வைரஸ் தொற்றை  கண்டுபிடித்த....  சீன வைத்தியரும், இறந்தது சோகம்.

ஜேர்மனியிலும்  இந்த நோயாளர்கள்  கண்டு பிடிக்கப் பட்டுள்ளார்கள்.
எனது வேலையில்... நேரடியாக பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுடன்,
(இத்தாலி, சீனா உட்பட)  தினமும் பழக வேண்டியுள்ளதை நினைக்க, பயமாக உள்ளது.

Bildergebnis für யாமிருக்க பயம் ஏன்

"யாமிருக்க பயம் ஏன்" என்று.... எல்லாப் பொறுப்பையும், நல்லூர் கந்தன் மேல் போட்டு விட்டு,
வேலையை செய்ய வேண்டியது தான்... பையா.... :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

பையன்.... சீனாவில், முதலில் சென்ற வருடம் நவம்பரில்.. ஆரம்பித்துள்ளது என்று,
சீன வைத்தியர் ஒருவர் அந்த நோயாளியை கண்டு அறிவித்தபோது..
அந்த வைத்தியருக்கு.... சீன  அதிகாரிகளால், வாயை மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி... 
மிரட்டல் விடுக்கப் பட் டதாம்.

பின் அந்த வைரஸ்... கையை மீறி எல்லா இடமும் பரவிய போது, நிலைமை மோசமாகி விட்டது.  
அந்த வைரஸ் தொற்றை  கண்டுபிடித்த....  சீன வைத்தியரும், இறந்தது சோகம்.

ஜேர்மனியிலும்  இந்த நோயாளர்கள்  கண்டு பிடிக்கப் பட்டுள்ளார்கள்.
எனது வேலையில்... நேரடியாக பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுடன்,
(இத்தாலி, சீனா உட்பட)  தினமும் பழக வேண்டியுள்ளதை நினைக்க, பயமாக உள்ளது.

Bildergebnis für யாமிருக்க பயம் ஏன்

"யாமிருக்க பயம் ஏன்" என்று.... எல்லாப் பொறுப்பையும், நல்லூர் கந்தன் மேல் போட்டு விட்டு,
வேலையை செய்ய வேண்டியது தான்... பையா.... :)

மறந்த நோய்த்தடுப்பு மரபுகள்
1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வாசல் வாலி நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.
3. மஞ்சள் பூசி குளித்தது தெளித்து விளையாடியது.
4. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.
5. வேப்பங்குச்சி உப்பு கொண்டு பல் துலக்கியது.
6. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.
7. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
8. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
9. எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.
10. பெரிய காரியம் மற்றும் நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
11. வெற்றிலை பாக்கு போடுவதும்
12. கசாயம் குடிப்பதும்
13. வெள்ளாவியில் உடை வெளுத்தது.
இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதும் மட்டுமே என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்.

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்" 

FB

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2020 at 8:29 AM, தமிழ் சிறி said:

நாதமுனி... சென்ற நவம்பரில் சீனாவில்  ஆரம்பிக்கப் பட்ட "கொரோனா" வைரஸ்,
நான்கு மாதத்தில்... உலகின் 88 நாடுகளுக்கு பரவியிருக்கு என்றால்...
அதனை சாதாரணமான,  வைரசாக கடந்து போய்விட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு தடுப்பூசி.. முழுவீச்சாக ஈடுபட்டுள்ள தமிழர்

922shares
 
weddingman.com

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸூக்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார்.

வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஸ்டாலின் ராஜ் கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவருடன் 5-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பைக் என்ற புரோட்டினை குளோன் செய்து வைரஸிற்கான ஆண்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Biological Safety Levels (BSL) 3 (உயிரியல் பாதுகாப்பு நிலைகள் 3) என்ற ஆய்வகங்கள் இங்கு இல்லாதது தடுப்பூசி கண்டறியும் பணிகளில் கால தாமதம் ஏற்படச் செய்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

IBC தமிழ்

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.