Jump to content

Recommended Posts

பதியப்பட்டது (edited)

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன.

இத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விடுமுறை அறிவித்துள்ளது.

இன்று கொழும்பு ஆனந்தா கல்லூரி, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு சென்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையான மத்தேகொடையைச் சேர்ந்த நபரின் பிள்ளைகள் இருவர் ஆனந்தா கல்லூரியில் கற்பதாகவும், அவர்களுக்கும் அத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

எனினும் முதலில், குறித்த கொரோன நோயாளரின் மகன்மார் அங்கு கல்வி கற்கின்றனரா என ஆனந்தா கல்லூரியின் அதிபரிடம் வினவியது. இதற்கு பதிலளித்த ஆனந்தா கல்லூரியின் அதிபர் இரு மகன்மார் அக் கல்லூரியில் கல்வி பயில்வதாக பரவிய தகவல் பொய்யானது எனவும், ஒரு மகன் மட்டும் 12 ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக கூறினார்.

குறித்த 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த செவ்வாயன்றே இறுதியாக வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த பின்னனியிலேயே குறித்த மாணவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறி, வதந்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளியின் குடும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

குடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் நோயாளியின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால், அது சார்ந்து பரவிய வதந்திகளையடுத்தும் இன்று காலை காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் பாடசாலைக்கு சென்று விடயங்களை உரிய முறையில் அங்கிருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

எவ்வாறாயினும் ஆனந்தா கல்லூரியில் கொரோனா வதந்திகளால் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பாரிய பதற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அக் கல்லூரி அதிபர் கூறினார்.

எனினும் சில பெற்றோர் பிள்ளைகளை அச்சம் காரணமாக பாடசாலைக்கு அனுப்பாத சம்பவங்கள் பதிவானதாகவும், சிலர் மாணவர்களை மீள அழைத்துச் சென்றதாகவும் கூரிய அவர், விடயங்களை சுகாதார, கல்வி அமைச்சுக்களுக்கு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் சுற்றுலா சென்று தங்கியிருந்த இடங்களில் ஒன்றான திக்வெல்லை சுற்றுலா விடுதி ஒன்றில் சேவையாற்றுவோரின் பிள்ளைகள் குறித்த பகுதி பாடசாலைகளில் கற்பதை மையப்படுத்தி திக்வெல்லையிலும், அதனை ஒத்த சம்பவங்கள் தம்புள்ளையிலும் பாதிவாகியிருந்த.a

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/77684

Edited by ampanai
  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted

கொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

 

(ஆர்.விதுஷா)

இலங்கை பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவஅதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

gmoa.jpg

 

ஆகவே ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதஅளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

உலகசுகாதரஸ்தாபனம் கொரோனா (கொவிட்-19 )வைரசினைஉலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ்என்றுஅறிவித்துள்ளது.. இதுவரையில், 114நாடுகளைசேர்ந்தஒரு இலட்சத்திற்கும்அதிகமானோர்இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம்பேர் மரணித்துள்ளதுடன்,மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம்அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் முதலில்பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம்தொடக்கம் ஏனையமாகாணங்களிலும் , தற்போது வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும் , இத்தாலி மற்றும் ஈரான், தென்கொரியா , ஆகியநாடுகளில்கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.

இதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகியஇலங்கை பிரஜையொருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் , நோய்த்தொற்றுபரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம்காணப்படுகின்றன.

இவ்விடயம்தொடர்பில் , அரச வைத்திய அதகாரிகள் சங்கம்தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம்தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம் .

அந்த சந்திப்பின் போதுஜனாதிபதியிடம்தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிககவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளைமுன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைதனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளைஅனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். ஊடக நிறுவனபிரதானிகளுடனானவிசேட சந்திப்பினைஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசரகால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்து மற்றும் சுகாதார வசதிகளை , களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும்வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள்இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தொம்.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும் , மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு , அரசாங்கமருத்துவசங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.

https://www.virakesari.lk/article/77685

Posted

image_ad12b1fd00.jpg

Posted

வைரஸ் தாக்கிய இருவருடன் இருந்த 65 பேர் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ள இருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 65 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 13பேர், ஏற்கெனவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்த முதலாவது நபர் (சுற்றுலா வழிகாட்டி) நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர் என்பதோடு, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வரஸ-தககய-இரவரடன-இரநத-65-பர-கணடபடபப/175-246835

Posted

11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக, 11 நாடுகளைச் சேர்ந்த சுற்லுலாப் பயணிகள்  இலங்கை வருவதற்கு,  அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இதற்கமைய,  இந்த தடை உத்தரவு நாளை (14) நள்ளிரவு முதல் அமுலாகுமென, விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தென்கொரியா, இத்தாலி,  ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா  உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/11-நடகளகக-தட-வதததத-இலஙக/175-246841

Posted

வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

( ஆர்.யசி )

நாட்டின் ஏற்றிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.


Petrol.jpg"

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

புரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77735

Posted

மேலும் மூவருக்கு கொரோனா

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையர்களில் மூவருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதென, சுகாதாரச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களில் ஒருவருக்கு 41 வயதென்றும் இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரென, சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, 37 வயதுடைய இன்னொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர், இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் மட்டக்களப்பு - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் மய்யத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் தற்போது, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பணிப்பாளர் நாயகம் கூறினார்.

43 வயதுடைய மற்றைய கொரோனா நோயாளியும், கந்தக்காடு மய்யத்திலிருந்தவர் என்றும் அவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த ஜாசிங்க, இதுவரையில் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளதென்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மலம-மவரகக-கரன/150-246847

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ampanai said:

11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

 

7 hours ago, ampanai said:

தென்கொரியா, இத்தாலி,  ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா  உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/11-நடகளகக-தட-வதததத-இலஙக/175-246841

9 நாடுகள் தானே ?

+Germany, Switzerland

Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

 

9 நாடுகள் தானே ?

+Germany, Switzerland

Earlier the Civil Aviation Authority (CAA) said that passengers from France, Germany, Spain, Sweden, Switzerland, Denmark, Netherlands and Austria have been banned from visiting Sri Lanka.

The Civil Aviation Authority also imposed a travel ban for passengers flying from Iran, Italy and South Korea.

https://colombogazette.com/2020/03/13/sri-lanka-bans-passengers-from-multiple-countries/

Posted

கொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

coronna-1.jpg

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அதேபோன்று மற்றொருவரும் நேற்றிரவு வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.https://athavannews.com/கொரோனா-வைரஸ்-இராணுவச்சி/

Posted

கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று உள்ளவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

எதிர்வரும் 2 வாரங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்கான அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார். 

குறிப்பாக வெளிநாடுகளில் அதிகளவில் மக்கள் கூடிய இடங்களிலிருந்தே கொரோனா தொற்று பரவியுள்ளதென தெரியவந்துள்ளதென தெரிவித்த அவர்,  இலங்கைக்குள் தனிமைப்படுத்தபட்ட மருத்து ஆய்வு கூடங்கள் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன என்றார். 

அதனால் சில குறைபாடுகள் நிலவியிருக்காலம் எனத் தெரிவித்த அவர்,  அந்த நேரத்தில் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தெரிவித்த எதிர்ப்பால் அந்த பணிகள் மேலும் தாமதமாகின என்றார்.

அதேபோல் வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தபட்ட ஆய்வை செய்ய முறையாக ஒத்துழைப்பது அவசியமென கோரிய அவர் வெளிநாடுகளிலிருந்து வருவோராலேயே நோய் பரவுகிறது என்றார். 

மேலும் கொரோன தொற்று ஒழிப்புக்கான செயலணியின் பணிகள் நாளைய தினம் முதல் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ள விஷேட அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.    

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறறயர-எணணகக-7-ஆக-அதகரபப/150-246867

Posted

விழாக்கள், பாரிய கூட்டங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடும் விழாக்கள், பாரிய கூட்டங்கள் ஆகியவை 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77811

Posted

இலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை !

<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 10  ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இன்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நேற்றையதினம் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இன்றையதினம் மாலை 44 , 43 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளதோடு , ஒருவர் கண்டக்காடு மற்றும் சிலாபம் நாத்தாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதையடுத்து 7 ஆக அதிகரித்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் 8 ஆக அதிகரித்தது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்காக சிகிச்சைபெற்று வந்த 17 வயதுடைய யுவதியொருவருக்கும் கடந்த 7 ஆம் திகதி இத்தாலியில் இருந்து இலங்கை வந்த 56 வயதுடைய பெண்ணொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/77822

 

 

Posted

Update - 16 ஆம் திகதி விடுமுறை !"

எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை வர்த்தக, வங்கி மற்றும் பொதுவிடுமுறை தினமாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை அரச விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/77824

Posted

தடுப்பு முகாம் : கண்டகாடு, வெலிக்கந்தை

400 பேர் வரை தடுத்து வைக்கப்படலாம்

S5200018.jpg

S5200012.jpg

 

 

400 க்கு மேற்பட்ட மருந்து கொல்லி பூசும் காவலர்கள்

DSCF0756.jpg

பீதியால் அங்காடிகளை வழித்தெடுக்கும் மக்கள் 

IMG-20200313-WA0006.jpg

Posted

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்!

 (எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 11 ஆவது நபர் இன்று மாலை இணங்காணப்பட்டார்.

இவர் இதற்கு முன்னர் ஜேர்மனிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் வருகை தந்தவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

45 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/77881

Posted

Wher_can_you_get_tested_for_COVID-19_tamil-01.jpg

  • Like 1
Posted

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் தற்போது மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 18 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது. 

https://www.virakesari.lk/article/77890

Posted

திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை..!

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவியுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன, நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாள் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

http://www.hirunews.lk/tamil/236580/திருமண-நிகழ்வுகளுக்கு-தடை-விதிக்கப்படவில்லை

Posted

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

corrona-virus-1.jpg

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மேலும்  7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையும் 18 பேர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தாக்கம்-அதி/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரவோடு இரவாக... வவுனியா வந்த கொரோன சந்தேக விமான பயணிகள்.
மட்டக்களப்பை அடுத்து தற்போது வவுனியாவில் கொரோனா சிகிச்சை முகாம்.

Posted
9 minutes ago, Kavi arunasalam said:

E9-FC2471-8031-4465-A3-C8-66010478-F19-B

கொரோனாவின் பரவலை சிறப்பாக காட்டும் சித்திரம்!

Posted

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்!

Disease-X-Coronavirus-1232570.jpg

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 22 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த 73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.

http://athavannews.com/கொரோனாவினால்-பாதிக்கப்-4/

Posted

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 28 ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சுமார் 200 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அனில் ஜசிங்க மேலும் கூறினார்.

இன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77971




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.