Jump to content

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா சமூகப் பரவல்? மக்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது கடந்த பல மாதங்களாக இல்லாது இருந்த நிலையில், சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் இலங்கையர்களுக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்த நிலையில்,  சமூகத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சுமார் 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவரின் மகள் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதே போல்   புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் புங்குடுதீவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து வடமராட்சி பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட 70 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.ilakku.org/இலங்கையில்-கொரோனா-சமூகப்/

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

இலங்கையின் கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவசர நிலையை அறிவித்து, சமூகத்திற்குள் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.  சமூகத்திற்குள் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது கட்டாயம்.

திவுலபிட்டி, வெயங்கொட மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதிகளில் மாத்திரம் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படாத போதிலும், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிக்கு அமைய செயற்படுங்கள். வீடுகளிலிருந்து வெளியேறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக கவசத்தை அணியுங்கள்.

அத்துடன், அடிக்கடி கைகளை கழுவுதல் அத்தியாவசியம் என்பதுடன், நெருங்கி பழகுதலை தவிர்த்துகொள்ளுங்கள்.”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரே நபருக்கு மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவமொன்றும் இலங்கையில் பதிவாகியுள்ளது.

புத்தளம் மாவட்டம் ஆணைமடு பகுதியிலுள்ள 23 வயதான இளைஞர் ஒருவருக்கே மூன்று தடவைகள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கம்பஹா – மினுவங்கொட பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்று பல மாத காலமாக பரவாத நிலையில், நேற்று முன்தினம்  இந்த பெண் சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதையடுத்து, சுமார் 1400ற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் பெறுபேறுகளுக்கு அமைய, 69 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது தொடர்பிலான விசாரணைகளை அரச புலனாய்வு பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதார தரப்பினர் தொடர்ந்தும் தேடி வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.

இதற்கிடையே, கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டதை அடுத்து, சுகாதார அமைச்சு அவசர கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மினுவொங்கட மருத்துவமனை, இரானவிலா கோவிட்-19 மருத்துவ நிலையத்தை கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மினுவொங்கட தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 2000 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் ஊழியர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடங்குவர்.

அத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள்(Lobby) அதுபோல் பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர தெரிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட் சை திட்டமிட்டபடி அதே தினத்தில் நடை பெறும், இதே வேளை உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானிக் கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/இலங்கையில்-அவசர-நிலை-பிர/

Link to comment
Share on other sites

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? தொற்று நோய்ப் பிரிவுப் பணிப்பாளர் விளக்கம்

shop-closed-sri-lanka.jpgநாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் ஏற்படும் நிலவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 101 பேருக்கு தொற்று ஏற்பட்டமை நேற்று ,uT உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆடைத் தொழிற்சாலையில் அந்தப் பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலவரங்களின் அடிப்படையிலேயே நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்படுமா? என்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்றார்.

https://thinakkural.lk/article/77212

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையில் பரவிய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

minu1.jpg
சோதனைகளின் மூலம் மேலும் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குருநாகல் மொனராகலை ஜாஎல மகர சீதுவை கட்டான யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
101 பேரில் 68 பேர் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என அரசாங்க தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/77196

Link to comment
Share on other sites

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தல்; பிசிஆர் மாதிரி பெறப்பட்டது!

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் பிசிஆர் பரிசோதனை அறிக்கை நாளை (06) கிடைக்கப்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/யாழ்-பல்கலை-மாணவர்கள்-9-பே/

Link to comment
Share on other sites

புங்குடுதீவு பெண் பயணித்த வழித்தடம் வெளியீடு!

csm_03_PTV_xServer_Infograph_Routing_15d6c12233.jpg?189db0&189db0

 

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு காெரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அதனால் அந்தப் பெண் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு சுகாதாரத் துறையுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி புங்குடுதீவில் கொரோனா தொற்று உறுதியான பெண்ணுடன் பேருந்தில் பயணித்தோரை 021-2226666 என்ற இலக்கத்துக்கு அழைத்து பதியுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பெண் புறக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் (03) இரவு 8.30 மணிக்கு Ran Silu – WP ND 6503 என்ற பேருந்தில் பயணித்து, நேற்று (04) காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து NP ND 8790 இலக்கமுடைய Matha என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்குச் சென்றடைந்துள்ளார்.

https://newuthayan.com/புங்குடுதீவு-பெண்-பயணித்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 513ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கம்பஹா – மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுடன் தொடர்பை பேணிய மேலும் 101 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளான 241 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 56 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மினுவங்கொடை-ஆடைத்-தொழிற்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘லொக்டவுன்’ என்பது மக்களின் பிழைப்புக்கான அடக்குமுறை…

October 6, 2020

Savendra-silva.jpg

´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்களளின் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார

கொழும்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (06.10.20) இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறினார்.

முதல் தொற்றாளரான பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று காவற்துறைப் பிரிவுகளை உள்ளடக்கி காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்தப் பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு சமூகமளிப்பதனை கருத்தில் கொண்டே மூன்று காவற்துறைப் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

´குறித்த ஆடை தொழிற்சாலையில் 1400 பேர் தொழில் புரிகின்றனர். 400 பேர் துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர். மீதமுள்ள 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். ஆகவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை. அதனை செய்வது மிகவும் எளிதானது, ஆனால் அது நாடு முன்னேறும் வழியாக அமையாது´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2020/151404/

Link to comment
Share on other sites

யாழுக்கு ரயிலில் வந்த 50 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல்!

கம்பஹா – மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளான திவுலப்பிட்டிய பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு 50 கடற்படை வீரர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பயணித்துள்ளார்.

இதனால் 50 கடற்படை வீீரர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தம்பகொலபத்துன முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த ரயில் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

https://newuthayan.com/யாழுக்கு-ரயிலில்-வந்த-50-கட/

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 220 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்-சவேந்திர சில்வா

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.

saventhirasilva.jpg

 

இதன் படி நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 220 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/77235

நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதி தெரிவித்தது என்ன?

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தால் நாட்டைப் பூட்டு வது எளிதான வழி என்றாலும், இலங்கை மக்கள் வாழ்வா தாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக் கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

எனவே, கொரோனா தொற்றாளி அடையாளம் காணப் பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கிய மானதல்ல எனவும் மாறாகக் குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலைத் தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

 

shawendra.jpg

 

குறித்த பகுதியில் பெண் ஒவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பகுதிகளிலிருந்து அதிகமான மக்கள் பணி நிமித்தம் வருவதைக் கருத்தில் கொண்டே இந்த ஊடரங்கு அமுல் படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்

https://thinakkural.lk/article/77266

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோரோனா பரவல் அச்சம்; முற்றாக முடக்கப்பட்டது புங்குடுதீவு; 3,915 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்.மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:-

யாழ்.மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருந்தோம். இந்தச் செயலணிக் கூட்டத்தில், மிகவும் முக்கிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

அதன் பிரகாரம், கம்பஹா மாவட்டத்தில், ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில் இனங்காணப்பட்டிருந்த, புங்குடுதீவைச் சேர்ந்த இருவர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

கடந்த 30ஆம் திகதி மற்றும் மூன்றாம் திகதி இரண்டு பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களில், 3ஆம் திகதி வந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடன் நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர், புங்குடுதீவு பகுதியில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வேலணைப் பிரதேசசெயலர் பிரிவில் 57 பேர், பொதுப்போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்தப் பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதைவிட, நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்தனர் என்ற அடிப்படையில் 88 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மருதங்கேணிப் பகுதியில் குடாரப்பு கிராமத்தில் 73 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 9 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பபட்டுள்ளனர். இதனைவிட எழுவைதீவைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவில் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட கொரோனா தொற்று காரணமாக, ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3,915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தப்பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்திலே யாழ். மாவட்டம் தற்போது, அனர்த்தத்தை மிகவும் சிக்கலான சூழ்நிலையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த அபாயகரமான சூழல் என்று நாங்கள் தற்பொழுது கருதப்படவேண்டிய புங்குடுதீவுப் பகுதி முற்று முழுதாக முடக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், ஏனைய பகுதிகளிலும், சில சில செயற்பாடுகளை அரசின் அறிவுறுத் தலின் பிரகாரம் மேற்கொண்டிருக்கின்றோம்” என்றார்.

https://www.ilakku.org/கோரோனா-பரவல்-முற்றாக-முட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 831 ஆக அதிகரிப்பு

 

இலங்கையில், ஒரே நாளில் அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 831 ஆக உயர்ந்திருக்கின்றது.

திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பணி புரிந்த பிரென்ட்டிக்ஸ் ஆடைத்தொழில்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்தத் தொழில்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 831 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரைநேற்று மாலை 6 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/பிரென்டிக்ஸ்-ஆடைத்-தொழிற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா சமூகப்பரவல் குறித்து  தகவல் வெளியிட்ட மருத்துவர் பதவி நீக்கம்

MRI-Director-Dr.-Bandara-replaced.jpg

 

இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் உத்தரவின் பேரில் இடம்பெறவில்லை என  செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ள மருத்துவர் ஜயருவான் பண்டார தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில், கடந்த சிலமாதங்களாக கோவிட் 19 சமூகத்தினுள் காணப்பட்டது என தெரிவித்திருந்தார்.

ஜனவரி முதல் இந்த வைரஸ் எப்படியோ சமூகத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சமூகத்திற்குள் ஏற்கனவே நோயாளிகள் இருந்திருக்காவிட்டால் புதிய நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சூழ்நிலையேற்பட்டிருக்காது எனவும் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

https://www.ilakku.org/mri-director-dr-bandara-replaced/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகக்கவசம் அணியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

முகக்கவசம் அணியாதோர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு பாதசாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.

http://athavannews.com/முகக்கவசம்-அணியாதோருக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவர்கள் தொடர்பாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/மினுவாங்கொட-பகுதியைச்-சே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் உத்தரவின் பேரில் இடம்பெறவில்லை என  செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ள மருத்துவர் ஜயருவான் பண்டார தனியார் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில், கடந்த சிலமாதங்களாக கோவிட் 19 சமூகத்தினுள் காணப்பட்டது என தெரிவித்திருந்தார்.

ஜனவரி முதல் இந்த வைரஸ் எப்படியோ சமூகத்தில் காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சமூகத்திற்குள் ஏற்கனவே நோயாளிகள் இருந்திருக்காவிட்டால் புதிய நோயாளியொருவர் கண்டுபிடிக்கப்படுவதற்கான சூழ்நிலையேற்பட்டிருக்காது எனவும் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியு

அப்பவே சொன்னோம்ல ....
பரிசோதனை செய்யாமல் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையை   பூச்சியமாகவே வைத்திருக்கலாம், இதனால் தான் கொரோனாவை வெற்றிகரமாக தடை செய்த நாடுகளின் பட்டியலிலேயே மாதன முத்தா இல்லை   

Link to comment
Share on other sites

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரவுப் பணிப்பெண் ஊழியர் ஒரு வருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரி சந்திக பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்

https://thinakkural.lk/article/77730

ராகம வைத்தியாசாலையிலிருந்து தப்பியோடிய நபரின் படம் வெளியானது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை தப்பியோடி நபரின் படத்தினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான உதவியை நாடியுள்ளனர்.

man-1-300x182.jpg

பேலியகொடவை சேர்ந்த நபரே மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/77717

சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சீதுவ பொலிஸ் பிரிவுக் குட்பட்ட பகுதிகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/77706

கொரோனா மீண்டும் பரவியதற்கு காரணம் என்ன? ஜனாதிபதி கோட்டாபய விஷேட அறிக்கை

gota-00.jpg“மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன்.”

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு சற்று முன்னர் விடுத்த செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செய்தியின் விபரம் வருமாறு;

கொவிட் தடுப்பிற்காக அரசாங்கம் வழங்கி இருந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவடைந்ததே நோய்த்தொற்று மீண்டும் பரவியதற்கான அடிப்படை காரணமாகும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட் நோய்த் தடுப்புக்குப் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட செயற்பாடுகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றாமை பெரும் குறைபாடாக அமைந்து விட்டது என காவற்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட் நோய்த் தொற்று உலகின் ஏனைய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வருகின்ற போதிலும் – அது தொடர்பான அறிவூட்டல்களை வழங்கி, மக்களுக்குத் தெளிவூட்டும் நடவடிக்கைகளை ஊடகங்களும் குறைத்துக்கொண்டுவிட்டிருந்தன.

கொவிட் நோய்த்தொற்று பரவல் மிகச் சாதாரணமாக நிகழத்தக்க தீவிர புறச்சூழல் ஒன்று நிலவியதை மக்கள் அலட்சியப்படுத்தி நடந்து கொண்டமை எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றது.

தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு – கோவிட் பரவல் மேலும் நிகழ்வதனைத் தடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாரிய பொறுப்பு – அனைத்து ஊடகங்களுக்கும், எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் உள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை, ஒரு கூட்டுப் பொறுப்புணர்வோடு ஊடகங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துணர்ந்து, உரிய தற்காப்பு அறிவுரைகளைப் பின்பற்றி, மக்களும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் நான் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றேன்.

https://thinakkural.lk/article/77631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோய் பரவும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இல்லை

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸில் பரவிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 700ஐ கடந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘நாட்டில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் செல்லுபடியானவை. எனினும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல என்பதால் பிரச்சினைகள் காணப்படுகின்றன. நடைமுறைகளை மீறுவதற்கு எதிராக, குறிப்பாக தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் நாங்கள் தற்போது இல்லை.’

தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதத்தில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இது தொடர்பாக 1897ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஊடாக இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, முகமூடி அணிவது, கை கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்வது போன்ற வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் செயற்படாவிட்டால், அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினால் நேரடியாக வழக்குத் தொடர முடியுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/நோய்-பரவும்-நிறுவனங்களுக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் – மட்டக்களப்பில் கல்வி நிலையங்களை மூட முடிவு

 
IMG_0050-696x464.jpg
 

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது நாடு கொரோனா அச்சுறுத்தலுக்கு மீண்டும் உள்ளாகிவரும் நிலையில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

IMG_0022.jpg

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தல்,தனியார் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பேணும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,வெளியிடங்களில் வருவோர் தொடர்பிலான அவதானங்களை செலுத்துதல்,உள்ளுராட்சிமன்றங்களின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

கம்பஹாவில் இருந்து வருகைதந்த கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் எவரும் தொற்றுக்குள்ளாகவில்லையென தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், எனினும் அவர்கள் தொடர்ச்சியாக தனிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு மேலும் ஒரு தடைவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

IMG_0040.jpg

கடந்த காலத்தில் பொதுமக்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றினார்களோ அந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம்கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-மட்டக்களப/

 

Link to comment
Share on other sites

இன்று மேலும் 8 கொரோனா நோயாளர்கள் குணமடைவு

நேற்று 7 கொரோனா நோயாளர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில் இன்று மேலும் 8 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொற்று நோய் மருத்துவமனையில் 05 நோயாளர்களும் , வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 02 நோயாளர்களும் ,ஈரானாவிலா மருத்துவமனையில் இருந்து 01 நோயாளியும்
சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . இலங்கையில் இந்நோயினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,274 ஆக அதிகரித்துள்ளது.

https://thinakkural.lk/article/77752

Link to comment
Share on other sites

தப்பியோடிய தொற்றாளி கைது

 

 

 

ராகமை வைத்தியசாலையில் இருந்த தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

https://newuthayan.com/தப்பியோடிய-தொற்றாளி-கைது/

IMG_20201007_131829.jpg?189db0&189db0

Link to comment
Share on other sites

16 மாவட்டங்களில் கொரோனா தொற்று – இராணுவத் தளபதி

Daya Dharshini October 8, 2020

நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திவுலபிட்டிய ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா – மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத் தலுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Shavendra.jpg

 

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இருக்க முடியாது என்றும் அவர் கள் வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர் கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டோர் இதுவரை வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தலுக்குட்படா தவராயின் 011 3 456 548 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத் தளபதி கேட்டுகொண்டுள்ளார்.

https://thinakkural.lk/article/78007

20ம் திகதியே நோய்அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன – மினுவாங்கொட தொழிலாளர்கள்

மினுவாங்கொட பிரன்டிக்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் செப்டம்பர் 20 ம் திகதியே நோய் அறிகுறிகள் தென்பட்டன என தொழிலாளர்களை மேற்கோள் காட்;டி சிலோன் டுடே செய்திவெளியிட்டுள்ளது.
காய்ச்சல் இருமல் போன்ற பாதிப்புகள் குறித்து முறைப்பாடு செய்த தொழிலாளர்களுக்கு பிரன்டிக்ஸ் மருத்துவநிலையம் வலிநிவாரணிகளையே வழங்கியது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

brandix-01-300x169.jpg
செப்டம்பர் 27 ம் திகதி அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ள தொழிலாளர்கள் ஆனால் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் உரிய மருத்துவசிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அன்று தொலைநோக்குடன் செயற்படாததன் காரணமாக இன்று தொழிற்சாலை மோசமான நெருக்கடியை எதிர்கொள்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருந்தகத்திற்கு சென்ற அனைவருக்கும் வலிநிவாரண மருந்துகளே வழங்கப்பட்டன தனிமைப்படுத்தலில் உள்ள நோயாளியொருவர் தெரிவி;த்துள்ளார்

https://thinakkural.lk/article/77976

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்று உறுதியானவர்களின் தொகை 1,034 ஆகியது

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.

அதன்படி மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையின் நான்கு ஊழியர்களும், வெலிசறையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழில்சாலையின் ஊழியர் ஒருவரும் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய துப்புரவுப் பணியாளர் ஒருவரும் இறுதியாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் ஆவர்.

முன்னதாக இந்த ஆடைத் தொழில்சாலையின் 190 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலில் மொத்தமாக 1,034 பேரதொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையில் 729 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,448 ஆக உயர்வடைந்ததுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆக 3,274 பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் மினுவாங்கொட கொவிட்-19 கொத்தணி பரவலுடன் தொடர்புடைய சுமார் 4,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

https://www.ilakku.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் வேகமாக பரவும் வைரஸ் – அச்சத்தில் மக்கள்

1-22-696x392.jpg

 

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், கம்பஹா பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள் என அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களை சுயதனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும், அந்த பகுதிகளிலுள்ள மக்கள் வெளியில் வருவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களை நோக்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து செல்லும் பஸ்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில், ரயில்கள் நிறுத்துவதும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநாடுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்கள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த தடையுத்தரவு நாடு பூராகவும் அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக அழைத்து செல்ல அம்பியூலன்ஸ் வண்டிகளை வீடுகளுக்கு அனுப்புகின்ற போதிலும், சிலர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

அதே நேரம், ராஜகிரியவில் ஆடைதொழிற்சாலை ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட ஆடை தொழில்சாலையை சேர்ந்த 27 தொழிலாளர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச,கொரோனா தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது என்றும்  இது மிகவும் சவாலான தருணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

https://www.ilakku.org/சிறீலங்காவில்-வேகமாக-பரவ/

Link to comment
Share on other sites

நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது- பொலிஸ் பேச்சாளர்

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ்பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் நாடு முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து காணப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை முக்கவசங்களை அணியுமாறும்சுகாதார விதிமுறைகைளை பின்பற்றுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Ajith-Rohana-L-1-300x200.jpg
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த பலர்ஊழியர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்னமும் கண்டுபிடிக்கவேண்டிய நிலையிலுள்ளதாக பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் தெரிவித்துள்ளனர் என அவர்குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுவரை 400 தொழிலாளர்களே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆடைதொழிற்சாலை தொழிலாளர்கள் தாமாக முன்வந்து தங்களை பதிவு செய்வதற்கு நேற்றுடன் காலஅவகாசம் முடிவடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தலை தவிர்க்க முயல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்

https://thinakkural.lk/article/78223

முடக்கப்பட்ட புங்குடுதீவின் இப்போதைய நிலவரம் என்ன?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தளாயில் யுவதிக்கு கொரோனா தொற்று உறுதி ; 41 மாணவர்கள் தனிமைப்படுத்தல்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk

கந்தளாய் பிரதேசத்தின் கொரோனா தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று(9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த தகவலை தெளிவுபடுத்தினார்.

இவை தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையில்,

கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டதையடுத்தே ஊடகங்கள் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே கந்தளாய் பிரதேச கொரோனா குழு ஊடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்த எண்ணியதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை மூலமாக  கந்தளாய் பிரதேசத்தில் யூனிட் 11,கந்தளாவ பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கே கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளதாகவும், மற்றும் 41 பாடசாலை மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும்,இம் மாணவர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்றவர்கள் என்றும் ஐந்து பேர் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் இச்செயற்பாடுகளை கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார்.

கந்தளாயில் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறும் அனைத்து பொது இடங்களிலும் பொது மக்களுக்காக வேண்டி கைகளை சுத்தப்படுத்துவதற்கான உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,கந்தளாய் பொலிஸார்,சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுத்து வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/91686

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழப்பு : ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பாதுகாப்பு சபையில் சாட்சியம் Published By: DIGITAL DESK 7    12 MAY, 2024 | 09:40 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாட்சியமளித்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி, ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று மீண்டும் இலங்கைக்கு  தப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளனர். இவர்களை போரில் தொடர்புப்படுத்தியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபையில் வலியுறுத்தினார். இலங்கை பாதுகாப்பு படைகளை சார்ந்தவர்களை ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்க செய்தவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரையும் அன்றைய தினம் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு தகவல்கள் கோரப்பட்டது. ஏனெனில் குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பல தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இதன் பிரகாரமே அவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு தப்பிவந்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டது. உடனடியாக தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட பாதுகாப்பு சபை அதிகாரிகள், முழு விபரத்தையும் கேட்டறிந்தனர். குறித்த இராணுவ அதிகாரி வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், நாட்டு மக்களை தெளிவுப்படுத்தி ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள் பங்கேற்பதை தவிர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரட்னவுக்கு ஆலோசனை வழங்கினார். https://www.virakesari.lk/article/183284
    • 12 MAY, 2024 | 09:49 AM   இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும் எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாப சுயவிளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15 ஆவது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு இலங்கை அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது.   தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு.   ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும் தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது. மனித உரிமைக்காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்களின் வெள்ளைச்சாயம் தமிழினப்படுகொலையில் வெளுக்கத்தொடங்கி தற்போது காசாவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலையில் கட்டங்கட்டமாக அப்பட்டமாக தோலுரிக்கப்படுகிறது.   மனித உரிமை சாசனத்தை ஒரு கையிலும்இகொலைக்கருவியை இன்னொரு கையிலும் கொண்டு சனநாயகம் போதிப்பவர்களின் அபத்தம் வெளிக்கிளம்புகிறது. ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது. நீதிக்கான தொடர் தேடலும் ஓர் ஆயுதமே என்பதை ஆர்மேனியா தொடக்கம் பலஸ்தீனம் வரைக்கும் விடுதலைப்போராட்டங்களின் வரலாறு எமக்கு சொல்லித்தருகின்றது.  பேரவலத்தை நினைவு கூருவதற்கு அப்பால்இ ஈழத்தமிழினம் விடுதலைக்காய் தியாகித்தவர்களின் கனவுகளின் நினைவுகளைச் சுமந்து பயணிக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல.அடக்குமுறை எதிர்ப்பின் நம்பிக்கையின் குறியீடு விடுதலைப்போராட்டத்தை வெற்றிஃதோல்வி என இருமைக்குள் வரையறுத்துவிட முடியாது. 15வது ஆண்டின் நினைவேந்தல் ஒழுங்குமுறைகளை தயார் செய்யும்ஈழத்தமிழினம்இ முள்ளிவாய்க்கால் தரும் விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய கால கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்துவதென்பதுஇ ஒரு அமைப்பின் நிகழ்ச்சித்திட்டமல்ல.  ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுக்கடமையும் உரிமையும் கூட. இதை நினைவில் கொண்டு இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும். எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாபசுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம்.  https://www.virakesari.lk/article/183285
    • KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் இரு இடங்களில் கொல்கத்தா இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும். ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி. மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.   தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர். இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ரஸல், ராணா திருப்புமுனை ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர்.   கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது. பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை. பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது. அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   ‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’ பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை." "இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர். அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார் ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட மூலாதாரம்,SPORTZPICS ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. நம்பிக்கையளித்த பேட்டர்கள் சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cnd6jw30dj9o
    • 12 MAY, 2024 | 07:20 AM வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183279
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.