Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் மேலும் 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரி சோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Police.jpg

இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள கொ ரோனா சிகிச்சை மையத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளதாக பொரள்ளை பொலிஸ் காரியாலயம் தெரி வித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/85337

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

காலவரையறையின்றி மூடப்பட்டது சிகிரியா சுற்றுலாத்தலம்

Published by T. Saranya on 2020-11-02 11:28:50

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சிகிரியா காலவரையறையின்றி  மூடப்படுவதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.

சிகிரியா தொடர்பாக போலி செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, சிகிரியா அருங்காட்சியகத்திற்கு நுழைய அனுமதிக்கப்படாது என்றும் சிகிரியா திட்ட மேலாளர் துசிதா ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரியா திட்ட அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வாறாயினும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

சிகிரியாவைப் பார்வையிட உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைந்துள்ளதால் அதிக வனவிலங்குகள் நடமாடுவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/93446

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல  குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அசேல  குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த இளைஞர் தனது வீட்டிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், அவரது மரணத்திற்குப் பின்னர்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு உயிரிழந்தவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொதுசுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தற்கொலை-செய்துகொண்ட-25-வயத/

  • கருத்துக்கள உறவுகள்

வரவு பதிவு செய்யும் கருவி மூலம் கொரோனா பரவுகிறதா? மக்களிடையே அச்சம்

 
1-4.jpg
 23 Views

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில், இவ்வாறான கைவிரல் அடையாளம் பதிவு செய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

‘கடந்த யுத்த காலத்தில்கூட எந்தவித அச்சமும் இன்றி நாம் பணியாற்றினோம். அப்போது வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை 9.00 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர். இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது’ எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில்,கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

https://www.ilakku.org/வரவு-பதிவு-செய்யும்-கருவ/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக்கு மத்தியில் இலங்கையில்  அதிகரிக்கும் காற்று மாசு!

 
Air-pollution.jpg
 28 Views

கடந்த சில நாட்களாக இலங்கையில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின்  கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட  பகுதிகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலும் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளது என்றும் அந் நிலையம் தெரிவித்துள்ளது.

மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி, 100 – 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், அது செயற்திறன் குறைந்த நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும்  எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதனால் நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது காற்று மாசடையும் விதம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருக்க வேண்டும். ஆனாலும் காற்று மாசடைதல் அதிகரித்தே காணப்படுகின்றது என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்  வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசடைவு காரணமாகவும், இலங்கையில் வளிமண்டல எல்லைப் பகுதியில் காற்று மாசடைந்துள்ளதாக அறிய முடிகின்றது எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

https://www.ilakku.org/கொரோனாக்கு-மத்தியில்-இலங/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா மரணம் 21ஆகக் குறைந்தது!

கொரோனாவால் மரணித்தார் என இன்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தமது அறிக்கையில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நிலையில் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான இளைஞர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்பின்னர், கொரோனா காரணமாக இலங்கையில் 22ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மதியம் அறிவித்திருந்தது.

எனினும், அவரது மரணம் தற்கொலை என்பதன் காரணமாக கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 21ஆகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையில்-கொரோனா-மரணம்-21/

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புடன் செயற்படவேண்டும் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

 
1-8-696x387.jpg
 43 Views

சமூகப் பொறுப்புடன் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்வது மட்டுமன்றி மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் மற்றும் பொது சுகாதரப் பணியாளர்கள் சிறப்புக் கவனம் கொண்டிருப்பதும் அவசியம் என  வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம்.

அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்த வேண்டும்.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்கு திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

https://www.ilakku.org/ஒவ்வொரு-குடிமகனும்-பொறுப/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகரம் ஆபத்தான நிலைக்குச் செல்லும் நிலை

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வு

 

இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் 275 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 232 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரியவந் துள்ளது.

India.000.coronavirus-1.jpg

ஏனைய 43 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றா ளர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 857 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் 344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண மடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளி யேறியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண் ணிக்கையும் 5ஆயிரத்து 249 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது இரண்டு வெளிநாட்டினர் உட்பட 6,065 கொ ரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதும் உள்ள 46 வைத் தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 389 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/85616

STF படையினர் 23 பேருக்கு கொரோனா

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 275 பேரில் 23 பொலிஸ் விசேட படையினர் உள்ளடங்குவதாக, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 39 பொலிஸாருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு 1-15 வரையான பிரதேசங்களிலிருந்து 32 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் கொழும்பு மாநகர சபை பணியாளர்கள் 9 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் கம்பஹா மாவட்;டத்தில் 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/STF-படயனர-23-பரகக-கரன/175-257965

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவது முற்றாக தடை

 

யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து இன்றைய தினம் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்தினர்.குறித்த செயற்பாட்டின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள அனைத்து கடைகள்,பேருந்து நிலையம் நவீன சந்தை தொகுதி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினர்.

இந்நிலையில் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்த வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் அறிவித்துள்ளார்யாழ்.மாநகர சபையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடின், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுவார்கள்.மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். யாராவது வந்தால், உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல்விடுக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும், பேருந்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்.

எமது பேருந்துகளைப் கூட கட்டுப்படுத்தியிருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு எந்தத் தடையையும் நாங்கள் தற்போது விதிக்கவில்லை. உணவகங்களில் மக்கள் அமர்ந்திருந்து உண்ணுவதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் தயாரித்த உணவை,பொதிகள் மூலம் வழங்குவதற்க வேண்டும் என யாழ்.மாநகரசபை சகல உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.உணவக உரிமையாளர்கள் இந்த நடைமுறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது மக்கள் உணவகங்களில் அமர்ந்திருந்து உண்ணுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்த நடைமுறைகளைப் கண்காணிப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.(15)
 

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாநகரத்திற்குற்பட்/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி!

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவில், சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் இன்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய நிலையில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரிடமும் பி.சி.ஆர்  மாதிரிகள் நேற்று பெறப்பட்டன.

அவர்களில் 9 வயதுச் சிறுமிக்கே இவ்வாறு கோவிட் -19 தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும்  மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/93590

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பழி வாங்கும் பொலிஸார் 

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,744 ஆக உயர்வு

 

நாட்டில் மேலும் 409 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் மேலும் 409 நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 401 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங் களில் 08 பேர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

corona.COVID_.MINUWANGODA.jpg

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றார்களின் மொத்த எண்ணிக்கை 8ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 744 ஆக உயர்வடைந் துள்ளது.

தற்போது, 6ஆயிரத்து 140 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை யளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 581ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 430 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/85875

அதிரடிப்படையின் மூன்று முகாம்கள் மூடப்பட்டன – 183 பொலீஸாருக்கு கொரோனா

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை இன்று 183 ஆக அதிகரித்துள்ள நிலையில் மூன்று அதிரடிப்படையின் முகாம்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

களுபோவில, ராஜகிரிய, களனி ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களே இன்று மூடப்பட்டன. இந்த முகாம்களில் உள்ள படையினர் பலருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அந்த முகாம்கள் மூடப்பட்டன.

https://thinakkural.lk/article/85875

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும்  மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Ajith_Rohana_800x400.jpg

வெலிசர பொருளாதார மத்திய நிலையம் முழுமையாகத் தொற்று நீக்கம் செய்யப்படும். அத்துடன் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், வெலிசர பொருளாதார மத்திய மொத்த விற்பனை நிலையத்தின் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கிடையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதியில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிப்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/85938

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் ஊடகவியலாளர் சந்திப்பு வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விளக்கமளித்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 16 கொரோனா தொற்று : 800 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்...

தற்போதுள்ள Covid 19 தொற்று நிலைமையினை கட்டுப்படுத்த ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கிராம மட்ட  ,பிரதேச மட்ட குழுக்களை விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக வினைத்திறனாக செயற்படுத்த  இன்றைய வடக்கு மாகாண covid19 செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நேற்றைய தினம் 443 பேருக்கு கொரோனா தொற்று – மரணம் 24 ஆக உயர்வு

 
corona-economy-scaled-696x414.jpeg Coronavirus economic impact concept image
 27 Views

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா 3ஆவது அலை பாதிப்பில் நேற்றும் 443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்னதாக 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு மேலும் 169 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதா இராணுவத் தளபதி கூறினார்.

இதையடுத்து நேற்று தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 443 ஆக அதிரித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையில் 24 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனையின் போது இது உறுதியாகியுள்ளது.

 

https://www.ilakku.org/இலங்கையில்-நேற்றைய-தினம்/

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குளம் வைத்தியசாலையின் ஒரு பிரிவு வடக்கில் 4 வது கொரோனா சிகிச்சை நிலையமாகிறது

 
covid.600.jpg
 2 Views

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொவிட் -19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆகேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருந்தங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒரு பகுதி கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மருந்தங்கேணி ஆரம்ப வைத்தியசாலையில் 50 நோயாளர் படுக்கைகளைக் கொண்டதாக கொவிட்-19 சிகிச்சை நிலையம் கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கி வருகிறது. அத்துடன், கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதி 350 கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்த்தில் கிருஷ்ணபுரம் பகுதியில் கொவிட் -19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது. சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த கொவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சிநிலையமாக இருந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்குள் இருக்கும் காணியிலேயே இந்தசிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/மாங்குளம்-வைத்தியசாலையி/

வழங்கியது சிங்கப்பூர் !!!!

இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், இன்று (5) சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.

சிங்கப்பூரின் டிம்செக் நிதியம் இந்த அன்பளிப்பை செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கையின் மெட் டெக்னோலோஜி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கபில கீதனகே இந்த வென்டிலேட்டர்களை கையளித்துள்ளார்.

https://newuthayan.com/இலங்கைக்கு-50-வென்டிலேட்ட/

கொரோனாவால் மேலும் ஐவர் மரணம் – சற்றுமுன் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது.

இன்று (05) சற்றுமுன் இந்த மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்களின் விபரங்கள்,

கொழும்பு 2ஐ சேர்ந்த 46 வயது ஆண், இவர் கிட்னி தோயாளி, வெல்லம்பிட்டியை சேர்ந்த 68 வயது பெண், இவர் நெஞ்சு வலியேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயது பெண், இவர் இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயது பெண், இவர் சுவாச பிரச்சினையால் வீட்டில் மரணித்தார், கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயது ஆண், இவர் சுவாச இருதய பிரச்சினையால் வீட்டில் மரணித்தார்.

இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 29 பேர் மணமடைந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்ட இருவர் இதுவரை தற்கொலை மற்றும் விபத்து காரணமாக மரணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/கொரோனாவால்-மேலும்-ஐவர்-ம/

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் என்றாலும் சிங்களவர்கள் பிச்சை  எடுத்தாலும் தங்கள் இனத்தை வாழ வைப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் – இலங்கையும்…

November 6, 2020

 

கொழும்பில் 2000ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா…

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார்.

இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பிட்டுள்ளார்.

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின் மூலம் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும்.

சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு காவல் துறைப் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி வீடுகளுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார். அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்.

வத்தளையில் 115க்கு கொரோனா

வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா…

ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது.

அதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக மரணங்கள் நேற்று(05) பதிவாகின.

நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணித்த 5 பேரில், மூன்று பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

https://globaltamilnews.net/2020/152722/

  • கருத்துக்கள உறவுகள்

வத்தளையில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 119 பேருக்கு கொரோனா

November 6, 2020

வத்தளை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 119 பேருக்கு ஒரு கொரானா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையில் 697 பேர் வேலை செய்வதாகவும் இவர்களில் சுமார் 400 வரையிலான அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர. பரிசோதனையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://thinakkural.lk/article/86644

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா மரணம் 30 ஆக உயர்வு – 23 வயதான இளைஞர் ஒருவர் பலி

 
COVID-19-Deaths.png
 2 Views

கொரோனா வைரஸ் தொற்றால் கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் 30 ஆக உயர்ந்துள்ளது.

https://www.ilakku.org/கொரோனா-மரணம்-30-ஆக-உயர்வு-23-வ/

  • கருத்துக்கள உறவுகள்

PCR பரிசோதனையும் இராணுவத்தினர் வசம்!

 
1-36.jpg
 38 Views

இலங்கை இராணுவத்திற்கு புதிய PCR இயந்திரம் கொள்வனவு செய்து நாட்டில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தற்போது PCR பரிசோனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முதல் முறையாக இராணுவத்திற்கு PCR இயந்திரம் கொள்வனவு செய்து சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3ம் திகதி ஜனாதிபதி இராணுவத்திற்கு புதிய PCR இயந்திரம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மேலும் தனியார் நிறுவனங்கள் எம்முடன் இணைந்து புதிய PCR இயந்திரங்களை கொள்வனவு செய்து தர இணங்கியுள்ளன. அதனையும் பெற்று ஒரு மாதத்திற்குள் முப்படைகளையும் களத்தில் இறக்கி அதிக PCR சோதனைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

https://www.ilakku.org/pcr-பரிசோதனையும்-இராணுவத்த/

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நேற்றைய தினம் மேலும் 400பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

CORONA-COVID.jpg

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயில் பிரிவு தெரி வித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 755 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 467 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://thinakkural.lk/article/86858

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.