Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

5600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஹொரணை, குருகொட ஆடைத் தொழிற்சாலையில்  பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று  குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 81 ஊழியர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவ் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

மேலும் 2,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஹொரணை  நிர்வாக பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புளத்சிங்கள யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டு  ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் நேற்றைய தினம் வரை 68 பேருக்கு கொரோானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

https://www.virakesari.lk/article/93885

 

  • Replies 1.1k
  • Views 268.2k
  • Created
  • Last Reply

தனிமை முடக்கம் அமுலாகும் பொலிஸ் பகுதிகள் – விபரங்கள் இதோ!

நாளை (09) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் மாவட்ட ரீதியாக கொரோனா ஆபத்து உள்ள பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தி முடக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன்படி முடக்கப்படும் பொலிஸ் பகுதிகளின் விபரம்,

கொழும்பு – மட்டக்குளி, முகத்துவாரம்,
ப்ளூமென்டல், ஆட்டுப்படித்தெரு,
கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ்,
வாழைத்தோட்டம், கரையோரம்,
பொரளை, தெமட்டகொடை,
மாளிகாவத்தை, வெல்லம்பிட்டி.

கம்பஹா – வத்தளை, பேலியகொடை,
கடவத்தை, ராகை, சபுகஸ்கந்தை,
நீர்கொழும்பு, பமுனுகமை, ஜா-எல.

கேகாலை – மாவனல்லை, ருவான்வெல்ல.

களுத்துறை – ஹொரனை, இங்கிரிய, பாணந்துறை வெகந்த கிராம சேவர் பிரிவு.

குருநாகல் – மாநகர சபை பகுதி, குளியாப்பிட்டிய.

https://newuthayan.com/தனிமை-முடக்கம்-அமுலாகும்/

கொரோனா தொற்றுடன் ஆரோக்கியமான குழந்தை பெற்ற பெண்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவர் ஆரோக்கியமாகக் குழந்தை பெற்றுள்ளார்.

குறித்த கர்ப்பிணி தாய் கொழும்பு தேசிய வைத்திய சாலையிலேயே குழந்தை பெற்றுள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக அவர் குழந்தையைப் பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Thinakkural-watermark-24-Recovered-1.jpg

குறித்த சத்திர சிகிச்சைக்காக 20 பேர் கொண்ட வைத்திய குழுவொன்று செயற்பட்டுள்ளார்கள் என சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்தியர் மயுர மானதெவொலகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான தாய் ஒரு வர் ஆரோக்கியமான முறையில் குழந்தை பெற்ற இரண் டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

https://thinakkural.lk/article/87091

  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாணத்தில் 235 பொலிஸாருக்கு கொரோனா

Published by J Anojan on 2020-11-08 11:31:09

மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மொத்தம் 235 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் 6 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்படி தற்போது சிகிச்சை பெறும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 229 ஆகும்.

இது தவிர தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு குறைந்தது 300 பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் சுய தனிமைப்படுத்தலில் 1,425 பொலிஸார் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/93927

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று – அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு

 
PCR-test.600.png
 26 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் கடந்த 8 நாட்களில்   14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் உலக அளவிலான பாதிப்பு ஐந்து    கோடியே 68 ஆயிரத்து 493 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 54 ஆயிரத்து 411ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரை மூன்று கோடியே 54 இலட்சத்து 80ஆயிரத்து 358 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து ஜூலை மாதத்தில் மட்டும் எந்த மரணமும் பதிவாகவில்லை என்று கூறப்படுகின்றது.

அதேநேரம், நாட்டில் அதிகளவில் ஆண்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரையில் 18 ஆண்களும் 16 பெண்களும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோர் 19 வயது தொடக்கம் 88 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரவில, கொச்சிக்கடை, மருதானை, ஹோமாகம, தெஹிவளை, கல்கிசை, பொல்பிதிகம, முகத்துவாரம், திருகோணமலை, ஹோமாகம, மாவத்தகம, நுகேகொடை, குளியாபிட்டி, கொம்பனிவீதி, ஜாஎல, கொழும்பு, மஹர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே இதுவரையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை ஏழாயிரத்து 723 பேர் இந்த தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 662 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/கொரோனா-தொற்று-அதிக-மரணங/

கிளிநொச்சியின் இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டன – தொற்றாளர் ஒருவர் நடமாடியதையடுத்து அதிரடி

quarantine.01.pngகிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் உறுதிப்படுத்தினார். நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளி தனிமைப்படுத்தலை மீறி சுற்றித் திரிந்தமை அம்பலமானமையை அடுத்தே இந்தப் பகுதிகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தார். அவரை சுயதனிமைப்படுத்துமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அத்துடன், அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவரிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய ஆய்வில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் நடமாடியமை தெரிய வந்தது. இதையடுத்தே அந்தப் பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/87321

  • கருத்துக்கள உறவுகள்

வெலிக்கடை தொற்றாளர் தொகை 102 ஆக அதிகரிப்பு – நேற்றும் 72 பேருக்கு கொரோனா பரவல்

welikade.600-300.png
 24 Views

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேர் கொரோனாவைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 63 பெண் கைதிகளும், 8 ஆண் கைதிகளும் ஒரு சமையல்காரரும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் ஏற்கனவே 29 கைதிகளுக்கும், சிறை அதிகாரி ஒருவருக்கும் என 30 பேருக்குக் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் போகம்பறை சிறைச்சாலையில் 7 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

https://www.ilakku.org/வெலிக்கடை-கொரோனா-தொற்றாள/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உள் நுழையவோ, வெளிச் செல்லவோ தடை!

(எம்.எப்.எம்.பஸீர்)

நாடளாவிய ரீதியில் இன்று முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ள, 25 பொலிஸ் பிரிவுகள் உட்பட 32 பிரதேசங்களுக்கு உள் நுழைவதும், அங்கிருந்து வெளிச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  

தொழில் உள்ளிட்ட எந்த காரணத்துக்காகவும் முடக்கப்பட்ட பகுதிக்குள் உள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டிய அவர், அதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சுட்டிக்காட்டினார். 

நேற்று மாலை   விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி,  தனிமைபப்டுத்தல் ஊரடங்கு நிலை நீக்கப்பட்ட பின்னர், இன்று அதிகாலை 5.00 மணி முதல் அமுல் செய்யப்படும் விஷேட முடக்க நிலையின் போது நடந்துகொள்ள வேண்டியது எப்படி என தெளிவு படுத்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,

கொழும்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகள், அதாவது மட்டக்குளி, முகத்துவாரம், புளூமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோரப் பொலிஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட  பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதனை தவிர கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்த, றாகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய 8 பொலிஸ் பிரிவுகளும்,  களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை மற்றும் இங்கிரிய ஆகிய இரு  பொலிஸ் பிரிவுகளும், குலியாபிட்டிய பொலிஸ் பிரிவும் முடக்க்பபட்டுள்ளன. 

கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் முடக்க நிலை இருக்கும்.

இந்த 25  பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக, பாணந்துறை -  வேகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவையும், குருநாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி,  கொழும்பின் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, முகத்துவாரம் ரன்மிண செவண, மத்தேகொட சிரிசந்த உயன தெமட்டகொட, மாளிகாவத்தை என்.எச்.எஸ். குடியிருப்பு தொகுதிகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள், ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறவோ வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் பிரவேசிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.

குறித்த பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் தொழில் நிமித்தம் கூட அங்கிருந்து வெளியேற முடியாது. முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது நிறுவன ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை நிறுவங்கள் தவிர்க்க வேண்டும். ஆபத்து மிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளே முடக்கப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான இடங்களில் இருந்து ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மிக அபாயகரமானது.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தப்பட்ட  அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விநியோக நிலையங்கள், பல்பொருள் வர்த்தக நிலையங்கள் மருந்தகங்கள், வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும்  அப்பகுதிகளுக்கு வெளியில் இருந்து விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க இதுவரை அனுமதியில்லை. அது தொடர்பில் இன்று ஆராயப்படும்.

அரச ஊழியர்கள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களும் அதே பகுதிகளில் தங்கியிருக்க வேண்டியது அவசியமாகும்.

எவ்வாறாயினும், ஏதேனும் சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய தேவை அல்லது  கொரோனா தொற்று அல்லாத வேறு நோய்களுக்காக மருந்தை பெற வேண்டிய அவசியம் காணப்படின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான அனுமதியளிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்கள் போன்றோருக்கு  இந்த அனுமதி கிடைக்கும். இவையல்லாத வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளியில் செல்லும் தேவையுடையவர்கள், தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இதனைவிட இன்று முதல் ஊரடங்கு நிலைமைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட  பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச்செல்ல முடியாது.  பிரதான வீதிகள் முடக்கப்பட்ட பகுதிகளை அண்மித்து காணப்படும் பட்சத்தில் அந்த பகுதிகளை ஊடறுத்து பயணிக்க முடியும். ஆனால் நிறுத்த முடியாது. ரயில்களும் அவ்வாறே.  மேல் மாகாணத்துக்குள் நுழையும் அதி வேகப் பாதைகள் திறக்கப்பட்டாலும், அதன் நுழைவாயில்களில் பொலிஸார் விஷேட கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்படுவர் என தெரிவித்தார்
 

https://www.virakesari.lk/article/93977

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் விடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை

 
1-51-696x406.jpg
 41 Views

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளை இதுவரை வெளிப்படுத் தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆனால் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்கள் சமூகத்தில் நடமாடக்கூடும் என்பது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

இதன்காரணமாக சுகாதார விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நோய் பரவும் ஆபத்து அதிகம். ஊரடங்கு நீக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என மக்கள் கருதக்கூடாது.

மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து தொடர்ந்தும் நீடிக்கின்றது.

நோய் அறிகுறிகள் இல்லாததால் உங்களுக்கு வைரஸ் இருப்பது உங்களுக்கே தெரியாமலிருக்கலாம், அதேபோன்று உங்களிற்கு தெரிந்த ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இல்லாததால் அவருக்கு கொரோனா இருப்பது உங்களிற்கு தெரியாமலிருக்கலாம். இதன் காரணமாக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் நீங்கள் வெளியில் செல்வதை உறுதி செய்யுங்கள்.

சிரேஸ்ட பிரஜைகளும் ஏற்கனவே நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளது.

https://www.ilakku.org/தொற்றுநோயியல்-பிரிவின்-த/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் -சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆலோசனை

 
Dappula-de-Livera-1-300x168.jpg
 33 Views

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் இன்று மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது வரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  14 ஆயிரத்து 101ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இதுவரை 35 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேராவினால்  திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

அதில் சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-சிறை-கைதிக/

மொரட்டுவவில் இரு பகுதிகள் முடக்கப்பட்டது

மொரட்டுவவில் அங்குலான வடக்கு, அங்குலான தெற்கு ஆகிய பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/87672

  • கருத்துக்கள உறவுகள்

காப்பவர்களை காப்பாற்றுவது யார்? துப்புரவு பணியாளர்கள் அவலம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று – பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 6 பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 355 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/நாட்டில்-இதுவரை-460-பொலிஸ்-அ/

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட் அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரியது - சுகாதார அமைச்சின் பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

கொவிட் அச்சத்திற்குள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளதைப் போன்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட பலரும் முழுமையாக குணமடைந்துள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

spacer.png

இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும்.

கொவிட் தொற்று தொடர்பான அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். இது செய்யக் கூடாததும் இடம்பெறக்கூடக் கூடாததுமாகும். அவ்வாறு அச்சமடைய வேண்டிய தேவை கிடையாது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி எவ்வித அறிகுறிகளும் இன்றி காணப்பட்டோரில் 80 சதவீதமானோர் இலங்கையில் குணமடைந்துள்ளனர். அறிகுறிகளுடன் தொற்றுக்குள்ளானவர்களும் அதிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அருகில் இருந்தாலும் முகக் கவசத்தை முறையாக அணிந்திருந்தால்; ஏனையோர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். கொவிட்டுடன் வாழ்வதற்கு இந்த அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றார்.
 

https://www.virakesari.lk/article/94144

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவினால் மரணமானோர் தொகையை அரசு மறைக்கின்றது – ஹரின் பெர்ணாண்டோ

 
harin.600.png
 1 Views

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்னைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு.

அந்த இறப்புக்கு, கொரோனா வைரஸ்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசு கைவிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அரசின் கவனமின்மை நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும்” என்றார்.

https://www.ilakku.org/கொரோனாவினால்-மரணமானோர்-த/

 

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

covid.600.jpg
 34 Views

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த நாட்களில் 34 மரணங்கள் கொரோனா தொற்றுக்காரணமாக நிகழ்ந்திருந்த நிலையில், இன்றைய தகவலில்  நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக்கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://www.ilakku.org/இலங்கையில்-அதிகரிக்கும்/

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,024 உயர்வடைந்துள்ளதுடன் 4,797 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 10,183 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 523 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக இன்று மாலை நால்வர் உயிரிழந்ததையடுத்து உயிரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  44 ஆக உயர்வடைந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/94198

இலங்கையில் நேற்று மட்டும் 635 பேருக்கு கொரோனா தொற்று பரவியது

corona.12-1.jpgஇலங்கையில் நேற்றும் 635 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டும் சிக்கிப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 121 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/88361

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் 50 க்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதி

kopay.600.png
 30 Views

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள பல வெளி நாட்டவர்களும் கொரோனா தாக்கத்திற்கு இலக்க வருகின்றனர்.

அதே நேரம் கொழும்பில் இலங்கையரும் நோய்த்தாக்கத்திற்கு இலக்காவதனால் தெற்கு வைத்தியசாலைகள் அனைத்தும் நோயாளர்களினால் நிரம்பியுள்ளது.

கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களிற்கும் தற்போது கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலையில் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஓர் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்திய தொழிலாளர்களும் கொரோனா நோய்த் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் கோப்பாய் கல்வியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.ilakku.org/கோப்பாய்-கொரோனா-வைத்தியச/

 

  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத் தடை

November 11, 2020

 

மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது. உடனும் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட இந்தத் தடையானது எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து மக்கள் வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கருத்துரு தொிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். #மேல்மாகாணம் #பயணத்தடை #தனிமைப்படுத்த
 

https://globaltamilnews.net/2020/152930/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் 98 இலங்கையர்கள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சுமார் 98 இலங்கையர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இதில் அதிகளவான மரணங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரையில் சவுதி அரேபியாவில் மாத்திரம் 34 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும், ஓமானில் 4 பேரும், பஹரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் தலா இருவரும் இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் உயிரிழந்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் வசித்து வந்த ஐந்து இலங்கையர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதோடு, அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா இரு உயிரழப்புகள் பதிவாகியுள்ளதுடன், ஈரானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-காரணமாக-வெள/

ட்ரோன் கமெராக்கள் கண்காணித்தன – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 15 பேர் முகத்துவாரத்தில் கைது

dronelife.pngதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெறும் பயணங்களை கண்காணிக்க விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமராக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் ட்ரோன் கமராக்களில் கண்காணிக்கப்பட்டதன் பின்னர் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு இணங்க பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக இந்த ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/88689

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது

November 14, 2020

haritha.png

கொரோனா தொற்றுப் பரவலால் கொழும்பு நகரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1083 கொரோனாத் தொற்றாளா்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இயக்குனா் வைத்தியர் ஹரித அளுத்கே தொிவித்துள்ளாா்

முன்பு கம்பஹா மாவட்டத்தில் காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமை தற்போது கொழும்பு மாவட்டத்தில் காணப்படுகின்றது எனத் தொிவித்துள்ள அவா் விசேடமாக அண்மைய நாட்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மாத்திரம் 200 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளா்ா.

இதனால் புதிய அவதான வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா் #கொரோனா #கொழும்பு #அச்சுறுத்தல் #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #ஹரிதஅளுத்கே

 

https://globaltamilnews.net/2020/153021/

 

  • கருத்துக்கள உறவுகள்

சமூக இடைவெளியின்றி யாழில் அலைமோதிய மக்கள்

November 14, 2020

கொரோனாத் தடுப்பு சமூக இடைவெளியைப் பேணாது தீபாவளிப் பண்டிகைக் கொள்வனவுக்காக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொதுமக்கள்
நேற்று அலை மோதினர்.

ja.jpg

 

வழமையாக தீபாவளிப் பண்டிகையின் முதல் நாள் சனக்கூட்டத்தால்
யாழ்.நகரம் நிறைந்து காணப்படும். எனினும்,இம்முறை கொரோனா அச்சுறுத்த
லால் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியைக்கொண்டாடுமாறு
சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் இந்து மதத் தலைவர்களும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதனால் யாழ்.நகரம் நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், புடவைக் கடைகள் மற்றும் ஏனைய
கடைகளில் பொதுமக்கள் வழமைபோன்று அலைமோதியதைக் காண முடிந்தது.
 

https://thinakkural.lk/article/89168

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சம் – 40,000 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

 
1-84-696x435.jpg
 39 Views

கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 40,000 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தெற்கு ஐரோப்பாவிலிருந்து 9,800 க்கும் மேற்பட்டவர்கள் வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் நாட்டுக்கு திருப்பி அழைக்குமாறு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலை காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு தேடுவதற்காக ஜோர்டான், கட்டர் போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்  கூறினார்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து இலங்கையரை மீள அழைக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை  முதல் ஆரம்பமாகவுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/கொரோனா-அச்சம்-40000-இலங்கையர்/

  • கருத்துக்கள உறவுகள்

389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு

 
coronavirus.600.png
 10 Views

நாட்டில் மேலும் நேற்று சனிக்கிழமை 389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து 13 ஆயிரத்து 84ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிககப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 214 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை பதினொராயிரத்து 324 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 53 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/389-பேருக்கு-நேற்று-கொரோனா-த/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது

November 16, 2020

இலங்கையில் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மேலும் 704 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 13ஆயிரத்து 788 ஆக உயர்ந்துள்ளது.

CORONA-COVID-1.jpg

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர்.இதன்படி நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 562 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://thinakkural.lk/article/89590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.