Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத்தின் சகோதரருக்கு அரச சார்பற்ற நிறுவனம் 100 கோடி ரூபா வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. தகவல்!

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான பதியுதீன் மொஹமட் ரியாஜ்ஜின் மக்கள் வங்கியில் உள்ள கணக்குக்கு அரச சார்பற்ற நிறுவனமொன்றிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சுமார் நூறு கோடி ரூபா தொடர்பில் சி.ஐ.டி.எனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்கிஸை பிரதான நீதவான் உதேஷ் ரணதுங்கவுக்கு விசாரணையாளர்கள் இன்று அறிவித்தனர்.

குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்லியூ. திலக்கரத்ன ஆகியோருக்கு, கடந்த பெப்ரவரி மாதம்  ச.தோ.ச நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்து பெற்றுக் கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சோதனை நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்து ஆவணங்கள் பலவற்றை மீட்டுள்ளதுடன் ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.

இது குறித்த நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று மீள கல்கிசை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மொஹமட் இம்ரான் என்ற நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள் சார்பில் விசாரணை அதிகாரி, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா, பொலிஸ் பரிசோதகர் பிரியஞ்ஜித், உப பொலிஸ் பரிசோதகர் ஆனந்த மற்றும் சார்ஜன் பெரமுன உள்ளிட்டோர் ஆஜராகினர்.

இந் நிலையில் குறித்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மேலதிக விசாரணைகள் தொடர்பில் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷா நீதிவானுக்கு மேற்கண்ட விடயங்களை தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதிவான் அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
                   
https://www.virakesari.lk/article/77767

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... செய்தி வந்தவுடனேயே,
ரிஷாத் பதியுதீன்  போன்ற, முன்னாள்  முஸ்லீம் அமைச்சர்களை... 
முட்டிக்கு... முட்டி தட்டி... 🔨  மறியலில்...போட்டிருக்க வேண்டும். 

ஆனால்... சிங்களம் செய்யாது.
காரணம்.... முஸ்லீம் வாக்குகளும், அவர்களுக்கு தேவை.

அவர்களுக்கு.... தமிழன்தான், இழிச்ச வாயன்களாக தெரிகிறார்கள்.

டிஸ்கி: சம்பந்தன், சுமந்திரன்களின்..... முள்ளமாரி செயல்களும், 
சிங்களவனை.... ஊக்குவிப்பதால்,  சிங்களவன்  செய்வதில் தவறு இல்லை. 

இந்த நூறு கோடி ஒரு சிறு துளிதான்। இலங்கையில் உள்ள முன்னணி பத்து பணக்காரர்களில் இவரும் (ரிசார்ட்) ஒருவர்। இவருடைய இப்போதைய சொத்துக்கள் பல பினாமி பெயர்களில் காணப்படுகின்றது।

இறுதி யுத்தம் முடிவடைந்தபோது மூன்று லட்ச்சம் மக்களுக்கும் உணவு வழங்கியவர் இவர்தான்। ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஒன்பது லட்ச்சம் சாப்பாடு பர்ஸல்கள்। ஒரு பார்ஸலுக்கு ஒரு ரூபாய் வந்தாலும் ஒரு நாளைக்கு ஒன்பது லட்ச்சம் ரூபாய்கள் கிடைத்திருக்கும்। நிச்சயமாக இதைவிட அதிகமாக ஐந்து ரூபாயாவது வைத்திருப்பார்கள்। அப்படி என்றால் ஒரு மாதத்துக்கு, வருடத்துக்கு எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்।

பிறக்கப்போகும் முஸ்லிம்களுக்கும் வீடு கட்டிக்கொடுத்த அமைச்சர் என்றால் இவர் ஒரு ஆள்தான்। ஷாப்பிங் பையுடன் போனவருக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் கிடைத்திருக்கும்?

அரசியல்வாதிகள் தங்கள் பண பலத்தால் அரசையே ஆட்டிப்படிக்கிறார்கள்। இல்லாவிடடாள் இவரை எப்போதோ சிறையில் அடைத்துருக்க வேண்டும்।

10 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி: சம்பந்தன், சுமந்திரன்களின்..... முள்ளமாரி செயல்களும், 
சிங்களவனை.... ஊக்குவிப்பதால்,  சிங்களவன்  செய்வதில் தவறு இல்லை. 

இவர்களும் எத்தனை கோடிகளை பதுக்கி வைச்சிருக்கீனமோ தெரியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Gowin said:

இவர்களும் எத்தனை கோடிகளை பதுக்கி வைச்சிருக்கீனமோ தெரியேல்லை.

Image may contain: outdoor

ஆளுக்கு... 500 கோடி தாண்டும்  
ரெல் .மீ .... சம்பந்தன் ஐயா..

2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: outdoor

ஆளுக்கு... 500 கோடி தாண்டும்  
ரெல் .மீ .... சம்பந்தன் ஐயா..

அரசியலுக்கு வர்ரதே உழைக்கத்தானே। பாவம் அவர்களும் உழைத்துவிட்டு போகட்டும்। இருந்தாலும் ரிசஷர்டை போல 5000 கோடி உழைக்க முடியாது। நீங்கள் சொன்னது போல ஒரு வேளை 500 கோடி ரூபா உழைத்திருக்கலாம்।

1 hour ago, Vankalayan said:

அரசியலுக்கு வர்ரதே உழைக்கத்தானே। பாவம் அவர்களும் உழைத்துவிட்டு போகட்டும்। இருந்தாலும் ரிசஷர்டை போல 5000 கோடி உழைக்க முடியாது। நீங்கள் சொன்னது போல ஒரு வேளை 500 கோடி ரூபா உழைத்திருக்கலாம்।

ரிஷடிடம் இருக்கும் சொத்தே பல அவர் பினாமியாக வைத்திருக்கும் சொத்தேமே.... நல்ல காலம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரதிருந்தால் தமிழன் இப்பொழுது முழு வன்னியும் அவர்கள் வசம் சென்று இருக்கும்....,,,

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கிஸ்புல்லாவும், வடக்கில் ரிசாட்டும் போட்டோ போட்டி போட்டு சவூதி சேக்குகளை கொண்டு வந்திறக்கி, பணத்தை வாங்கி கொட்டி லோக்கல் முஸ்லீம் மக்களை வகாபிகளாக மதம் மாத்தி, வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, குண்டை வைத்து, தமக்கும் ஆப்படித்து, கோத்தாவை வரவைத்து இலங்கைக்கும் ஆப்படித்து விட்டனர்.

இப்ப, ரிசாத் , தேர்தலில், ரவூப் கக்கீமுடன் சேர்ந்து, முஸ்லீம்கள் அல்லாரும் ஓண்ணா சேர்ந்து ஒண்ணுக்கு இருக்கணும் என்று பீலா விட்டாலும், இவர்களது ஆப்படிக்க தான் கோத்தாவை சிங்களவர் தேர்வு செய்தனர் என்பதும் நிதர்சனம்.

இந்த நூறு கோடி விடயம், கிஸ்புல்லாவின் மட்டு பல்கலைகழக விடயம், பாராளுமன்ற ஆதரவுக்காக, ரணில் கண்டு கொள்ளவில்லை.

கோத்தா கண்டு கொள்கிறார்.

Edited by Nathamuni

13 minutes ago, Nathamuni said:

இந்த நூறு கோடி விடயம், கிஸ்புல்லாவின் மட்டு பல்கலைகழக விடயம், பாராளுமன்ற ஆதரவுக்காக, ரணில் கண்டு கொள்ளவில்லை.

கோத்தா கண்டு கொள்கிறார்.

உங்கள் கருத்து மிகவும் தவறானது,உண்மை நிலை நான் கீழே குறிப்பிட்டது

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக

மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக,இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில்  கோத்தாவின் துணை இல்லாமல் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

நாதமுனி நானா வாங்க...வாங்க long time no seen சந்தோசமா ஈக்கி. நான் ஒங்க ரசிசன் வாப்பா

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, colomban said:

நாதமுனி நானா வாங்க...வாங்க long time no seen சந்தோசமா ஈக்கி. நான் ஒங்க ரசிசன் வாப்பா

அல்லாட காவல்...

ஆ... நெனவு ஈக்கி... நியமிக்கி ஸந்தோஷம்..

அப்ப்டி  செல்லுங்க வாப்பா.... பயணம் ஒன்னு பெய்திட்டு வந்தி தானே.... அது சுட்டி தன் வாப்பா வரல்ல...

ஊட்டில எல்லாம் நல்லம் தானே....

ஆ... நம்மட, ஓமன குட்டி எப்ப்டி வா, ஈக்கி... நா சூகம் கேட்டது செல்லி செல்லுங்கவா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

உங்கள் கருத்து மிகவும் தவறானது,உண்மை நிலை நான் கீழே குறிப்பிட்டது

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக

மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக,இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில்  கோத்தாவின் துணை இல்லாமல் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன.

நான் சொல்வது இன்றய நிலை. நீங்கள் சொல்வது நேற்றய நிலை

16 minutes ago, Nathamuni said:

நான் சொல்வது இன்றய நிலை. நீங்கள் சொல்வது நேற்றய நிலை

ஆனால் கோத்தா ரிஷட்டையும் ஹிஸ்புல்லாவைஉம் கட்டுப்படுத்துவார் என்று நினைத்தால் அது எங்களது முட்டாள்தனம். 

ரணில் இருந்த போது ரிஷடின் அராஜகத்தை எதிர்த்து மக்கள் போராடி தடுத்தனர். 2017ம் ஆண்டு 1200 முஸ்லீம் குடும்பங்களை ஒட்டிசுட்டானில் அரச அதிபரின் அனுமதியுடன்    காடழித்து குடியேற்ற முற்பட்ட வேளை வடக்கு கிழக்கை சேர்ந்த எல்லா தமிழ் மக்களும் வெளிப்படையாக போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினர்; ஆனால் அதே இடத்தில் கோத்தா இருந்தால் அப்படி போராடி இருக்க முடியுமா...???

அதிலும் சுவாரிசியமான விடயம் என்னவென்றால் முதலில் தமிழ் மக்களுக்கு தான் காணி வழங்கியுள்ளனர், ஆனால் இடையில் இவர் தலையிட்டு 1200 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி வேண்டும் என்று பிரச்சனை கிளப்பி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Dash said:

அப்படி இல்லையே....

கோத்தாவின் வெற்றிக்கு காரணம், ரிசாத், கிஸ்புல்லாவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட பேரினவாதமே. தமிழர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் இவர்களே இலக்காக இருந்தர்கள்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தேசியமயமாக்கப்படவேண்டும் என சிங்கள இனவாதிகளின் கூச்சல் கேக்கவில்லையா?

ரிசாத்தின், மனைவியும், தம்பியும் நல்லா மாட்டுப்பட்டுள்ளனர்.

கோத்தா, சைலண்டா அலுவல் பார்பவர்.

கிஸ்புல்லா, ரிசாத் இருவரும் தமிழர்கள் மேல் செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

சஜித்துக்கு விழக்கூடிய வாக்குகளை தடுக்கிறேன் என்று கிஸ்புல்லா தேர்தலில் நின்று, கோத்தாவுக்கு ஆதரவு போல் காட்டினார், வேலைக்காகவில்லை.

அத்தாவுல்லாவும் அதே கதை தான்.

அநியாயம் செய்தால், அல்லா நின்றருப்பார்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.