Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தின் சோதனை இன்று தொடக்கம்

Featured Replies

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்தின் சோதனை அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள சுகாதாரத்துறை அராய்ச்சி நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்திற்கான சோதனை இன்று தொடங்க உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான 45 தன்னார்வலர்களை கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், மருந்து ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்ந்து அதன்மூலம் அடுத்த கட்ட சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/103849/கொரோனா-வைரசிற்கான-தடுப்புமருந்தின்-சோதனை-இன்றுதொடக்கம்

U.S. government official: Coronavirus vaccine trial starts Monday

The first participant in a clinical trial for a vaccine to protect against the new coronavirus will receive an experimental dose on Monday, according to a U.S. government official.

The National Institutes of Health is funding the trial, which is taking place at the Kaiser Permanente Washington Health Research Institute in Seattle. The official who disclosed plans for the first participant spoke on condition of anonymity because the move has not been publicly announced.

Public health officials say it will take a year to 18 months to fully validate any potential vaccine.

https://www.ctvnews.ca/health/coronavirus/u-s-government-official-coronavirus-vaccine-trial-starts-monday-1.4854275

  • கருத்துக்கள உறவுகள்

vaccine

அமெரிக்காவில் கொரானா  வைரசுக்கு (கோவிட் 19 - COVID-19) வுக்கு எதிரான வக்சீன் வளமான மனிதர்களில் சோதிக்கப்படும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது 16ம் நாள் பங்குனித் திங்கள் 2020 இல் இருந்து நிகழ்த்தப்படுகிறது.

முழு செயற்பாடற்ற.. கொரானா வைரஸ் (Corona Virus) கிருமியை கொண்டதல்லாது.. குறித்த வைரஸ் கிருமியின் ஆர் என் ஏயின் ஒரு பகுதியில் இருந்து பெறப்பட்ட குறித்த வைரஸ் தொற்றை மனித உடல் இனங்கண்டு அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் வளர்க்கக் கூடிய மூலக்கூற்றின் அடிப்படையில் இந்த வக்சீன் ( Vaccine) தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின் பின் வக்சீன் உடனடியாக மக்கள் பாவனைக்கு வர முடியாது. சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வக்சீன் உண்டு பண்ணும் விளைவுகள் கண்காணிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டும்.

அதில் வெற்றி பெற்றால்.. கொரானா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் சோதனைக்கட்டமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோரில் இது பரிசோதிக்கப்பட்டு.. மீண்டும் விளைவுகள்.. கண்காணிக்கப்படவும் ஆராயப்படவும் வேண்டும்.

அதன் பின்னர் எல்லா பெறுபேறுகளும் வக்சீன் பாவனைக்கு சாதகமாக அமைந்தால் மட்டுமே இது மக்களின் பாவனைக்காக சந்தைக்கு வர முடியும்.

இதற்கு இன்னும் பல மாதங்கள் வரைபிடிக்கலாம். இந்த அமெரிக்க வக்சீன் சோதனைகள் எல்லாம் முடிந்து மக்கள் பாவனைக்கு வர குறைந்தது 18 மாதங்கள் ஆவது ஆகும்.

மேலும் அமெரிக்காவை போன்று.. பிற நாட்டு மருத்து விஞ்ஞான ஆய்வாளர்களும் அறிவியலாளர்களும்.. இதே போன்ற ஆய்வுகளை தீவிரப்படுத்தி நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில்.. லண்டனை தளமாகக் கொண்ட.. இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களும் இந்த வக்சீன் உருவாக்கத்தில் ஆரம்பக்கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

http://kuruvikal.blogspot.com/

https://www.bbc.co.uk/news/health-51906604

ஜேர்மனியில் உள்ள ஆய்வுகூடம் ஒன்று தடுப்பு மருந்து ஒன்றினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கணிசமாக முன்னேறியுள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்த ஆய்வுகூடத்தை மிகப்பெரிய விலை கொடுத்து இரகசியமாக வாங்க முயற்சித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா தடுப்பு மருந்தினை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சித்ததாக ஜேர்மன் அரசு நேற்று குற்றம் சுமத்தியிருந்தது. 

  • தொடங்கியவர்

'கொரோனா' தடுப்பு மருந்து ஜெர்மனி - அமெரிக்கா மோதல்:

பெர்லின் :உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் ஜெர்மனியின் துபின்ஜென் பகுதியில் உள்ள 'கியூர்வேக்' என்ற பயோபார்மசூட்டிகல் நிறுவனம் இதற்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது

இந்நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரூ. 7 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 'அமெரிக்காவுக்கு மட்டுமே இந்த மருந்து' என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்கு ஜெர்மனி பொருளாதார துறை அமைச்சர் அல்ட்மாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஜெர்மனி விற்பனைக்கு அல்ல' என சாடியுள்ளார்.இதுகுறித்து 'கியூர்வேக்' நிறுவன சி.இ.ஓ., கிறிஸ்டப் ஹெட்டிச் கூறுகையில், ''தடுப்பு மருந்தை மிக விரைவில் கண்டுபிடிப்போம். மருந்து கண்டுபிடிப்பது ஜெர்மனி உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகிற்காக தான். தனிப்பட்ட நாட்டுக்காக இல்லை'' என்றார்.

அமெரிக்க பரிசோதிக்க துவங்கியது

இந்நிலையில் அமெரிக்காவின் சியாட் நகரில் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதிக்கும் பணி நடைபெற உள்ளதாகவும், முழு பரிசோதனை முடிய 18 மாத காலம் ஆகும் என அந்நாட்டு மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2503436

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ampanai said:

ஆம் இந்த விடயம் உண்மை.ஆனால் இங்கேயும் ஒரு அரசியல் புதைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா... மூக்கை நுழைக்காத இடமே இல்லை.
உலக மக்களை காக்க... அந்த மருந்து நிறுவனத்தை, ஜேர்மனியிடமே விட்டு வைப்பது நல்லது.

  • தொடங்கியவர்

First Person Injected With Trial Coronavirus Vaccine In Seattle

Morderna COVID-19 COVID coronavirus seattle outbreak pandemic

A new phase 1 clinical trial of a potential vaccine for the SARS-CoV2 coronavirus began on Monday in Seattle, with the first person to enroll in the trial receiving the vaccine.

The vaccine, mRNA-1273, was developed by biotechnology company Moderna in combination with researchers from the National Institutes of Health (NIH). The trial is being conducted at Kaiser Permanente Washington Health Research Institute in Seattle. 

#36e2ec8d2583

Edited by ampanai

  • தொடங்கியவர்
On 3/16/2020 at 5:20 PM, ampanai said:

இந்நிறுவனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரூ. 7 ஆயிரம் கோடி கொடுத்து வாங்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 'அமெரிக்காவுக்கு மட்டுமே இந்த மருந்து' என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்கு ஜெர்மனி பொருளாதார துறை அமைச்சர் அல்ட்மாயர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'ஜெர்மனி விற்பனைக்கு அல்ல' என சாடியுள்ளார்.இதுகுறித்து 'கியூர்வேக்' நிறுவன சி.இ.ஓ., கிறிஸ்டப் ஹெட்டிச் கூறுகையில், ''தடுப்பு மருந்தை மிக விரைவில் கண்டுபிடிப்போம். மருந்து கண்டுபிடிப்பது ஜெர்மனி உள்ளிட்ட ஒட்டு மொத்த உலகிற்காக தான். தனிப்பட்ட நாட்டுக்காக இல்லை'' என்றார்.

அமெரிக்க நாடு வாங்க விரும்பிய ஜெர்மனிய தடுப்பூசி நிறுவனம்   CureVac 

நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் Daniel L. Menichella

ஆனால், இவர் ஒரு அமெரிக்கர்  https://de.wikipedia.org/wiki/Daniel_L._Menichella

It’s a pretty extraordinary story that started off with a CEO exiting a biotech and has now become about the U.S. president allegedly wanting to lure that biotech over to the U.S. to build a vaccine for the coronavirus—but just for Americans.  

Maybe it was something he said after all: After meeting President Donald Trump in early March, CureVac’s CEO Daniel Menichella abruptly left, leaving its old chief back in charge and a lot of unanswered questions.

No reason was given, but the circumstances were strange, given the German mRNA biotech is working on a vaccine against COVID-19, Menichella had taken the top spot only a few years back and has been doing a pretty good job since.

https://www.fiercebiotech.com/biotech/president-trump-tries-to-lure-curevac-to-make-a-u-s-vaccine-but-german-government-steps

  • தொடங்கியவர்

 Interferon Alpha 2B என்ற கியூபாவின் மருந்தும் அமெரிக்காவும் 

medicamento-cuba-coronavirus-816x460-1.jpg

 Interferon Alpha 2B என்ற கியூபாவின் மருந்தை சீனாவில் அதிகம் கோவிட்19ற்கு எதிராக பாவித்ததாயும், சீன மருத்துவர்கள் இத்தாலிக்கும் எடுத்து சென்றதாக கூறப்படுகின்றது. 

ஆனால், இங்கும் அமெரிக்க நாடு கியூபாவின் மீதான பொருளாதார தடை காரணமாக அந்த மருந்தை பற்றி மூச்சு விடக்கூடாது என்பதே !

https://qcostarica.com/cuba-has-antiviral-for-covid-19/

https://www.counterpunch.org/2020/03/17/cubas-contribution-to-combatting-covid-19/

பிரான்சில் Sanofi ஆய்வுகூடம் Plaquenil (hydroxychloroquine) என்ற மலேரியாவுக்குப் பாவிக்கப்படும் மருந்தினைச் சில நோயாளிகளில் பாவித்து வெற்றி கண்டுள்ளது. 3 இலட்சம் நோயாளிகளுக்கான மருந்தை பிரெஞ்சு அரசுக்கு வழங்குவதோடு பாரிய அளவில் சோதனைகளையும் மேற்கொள்ள உள்ளது. வேறு பல நோய்களுக்கும் இந்த மருந்து பாவிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் அதிகம். விஞ்ஞான ரீதியாக கொரோனா வைரசை இந்த மருந்து இல்லாமல் செய்கிறது என்று முழுமையாக நிறுவப்படவில்லை. இருந்தாலும் வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்வரை இதனைப் பாவிக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, இணையவன் said:

பக்கவிளைவுகளுக்கு இன்னொரு மருந்து தருவார்கள்.😎

பக்கவிளைவுகள் இல்லாத விஞ்ஞானமும் இல்லை.
பக்கவிளைவுகள் இல்லாத ஆங்கிலமருத்துவமும் இல்லை.

46 minutes ago, குமாரசாமி said:

பக்கவிளைவுகளுக்கு இன்னொரு மருந்து தருவார்கள்.😎

பக்கவிளைவுகள் இல்லாத விஞ்ஞானமும் இல்லை.
பக்கவிளைவுகள் இல்லாத ஆங்கிலமருத்துவமும் இல்லை.

விஞ்ஞானம் பற்றிய சரியான தெளிவு இல்லை என்று நினைக்க்கிகிறேன். ஆயுர்வேதம் சித்தர் வைத்தியம் எல்லாமே ஒரு வகை விஞ்ஞானமே. இவற்றை அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்தாமல்  அழிய  விட்டதாால்  இன்று இவை மூூட  நம்பிக்கைைகளாாக  மாாறிவிட்டன. நாட்டு வைத்தியத்தைப் பரிந்துரை செய்பவர்கள் பொதுவான ஒரு அனுபவத்தின் மூலமே இவற்றைச் செய்கிறார்கள். பெரும்பாலான நோய்கள் கிருமிகளால் ஏற்படுகின்றன என்ற அறிவு கூட அவர்களிடம் கிடையாது.

கடவுளை மட்டும் வணங்கி தீர்வு பெறுவதுதான் விஞ்ஞானம் அல்லாத தீர்வு. இனி உங்கள் விருப்பம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, இணையவன் said:

கடவுளை மட்டும் வணங்கி தீர்வு பெறுவதுதான் விஞ்ஞானம் அல்லாத தீர்வு. இனி உங்கள் விருப்பம். 

நான் ஒரு போதும் எங்கும் கடவுள் வழிபாடுதான் மனித குலத்திற்கு தீர்வு என குறிப்பிடவில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

விஞ்ஞானம் பற்றிய சரியான தெளிவு இல்லை என்று நினைக்க்கிகிறேன். ஆயுர்வேதம் சித்தர் வைத்தியம் எல்லாமே ஒரு வகை விஞ்ஞானமே. இவற்றை அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மேம்படுத்தாமல்  அழிய  விட்டதாால்  இன்று இவை மூூட  நம்பிக்கைைகளாாக  மாாறிவிட்டன. நாட்டு வைத்தியத்தைப் பரிந்துரை செய்பவர்கள் பொதுவான ஒரு அனுபவத்தின் மூலமே இவற்றைச் செய்கிறார்கள். பெரும்பாலான நோய்கள் கிருமிகளால் ஏற்படுகின்றன என்ற அறிவு கூட அவர்களிடம் கிடையாது.

கடவுளை மட்டும் வணங்கி தீர்வு பெறுவதுதான் விஞ்ஞானம் அல்லாத தீர்வு. இனி உங்கள் விருப்பம். 

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
  எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
  கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
  வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
  வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
  நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
  விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
  உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
  உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

  • தொடங்கியவர்
3 hours ago, இணையவன் said:

பிரான்சில் Sanofi ஆய்வுகூடம் Plaquenil (hydroxychloroquine) என்ற மலேரியாவுக்குப் பாவிக்கப்படும் மருந்தினைச் சில நோயாளிகளில் பாவித்து வெற்றி கண்டுள்ளது. 3 இலட்சம் நோயாளிகளுக்கான மருந்தை பிரெஞ்சு அரசுக்கு வழங்குவதோடு பாரிய அளவில் சோதனைகளையும் மேற்கொள்ள உள்ளது. வேறு பல நோய்களுக்கும் இந்த மருந்து பாவிக்கப்படுகிறது. பக்க விளைவுகள் அதிகம். விஞ்ஞான ரீதியாக கொரோனா வைரசை இந்த மருந்து இல்லாமல் செய்கிறது என்று முழுமையாக நிறுவப்படவில்லை. இருந்தாலும் வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்வரை இதனைப் பாவிக்கப் போகிறார்கள்.

இது பொதுவாக இராணுவத்தினருக்கு தரும் மருந்து என்கிறது ஒரு செய்தி. 

பிரான்ஸ் இராணுவத்தை களத்தில் இறக்கி கடும் சட்டங்களையும் அமுல் படுத்தி தன்னை இதில் வெற்றி கொண்ட  மக்களாட்சி நாடாக மாற்ற முயலுகின்றது. காரணம், இந்த வைரசின் தாக்கம் முழுமையாக உலகில் வெல்லப்படும்பொழுது தாம் ஒரு பொருளாதார வல்லரசாக மீண்டு எழவேண்டும் என்ற காரணம் என்கிறார்கள். 

  • தொடங்கியவர்

ஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன- சீனாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு தகவல்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட காய்ச்சல் மருந்து கொரேனா வைரசினை கட்டுப்படுத்துவதில் பலனுள்ளதாக காணப்படுகின்றது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரி ஜாங் ஜின்மின் இதனை தெரிவித்துள்ளார்.

வுகானிலிலும் சென்செகெனிலும் 340 நோயாளிகள் மத்தியில் இந்த மருந்தினை பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பபிபிரவிர் என்ற மருந்தே சிறப்பாக செயற்படுகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து பாதுகாப்பானதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் காணப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனவைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நோயாளிகளிற்கு இந்த மருந்தை வழங்கி நான்கு நாட்களின் பின்னர் வைரஸ்பாதிப்பு தென்படவில்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஜப்பானின் என்எச்கே ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தவிர எக்ஸ்ரே பரிசோதனைகளின் சுவாசக்குழாய்களில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது.

ஜப்பான் மருந்தினை பயன்படுத்தி கிசிச்சை வழங்கப்பட்ட 91 வீத நோயாளிகளில் இந்த மாற்றம் தென்பட்டுள்ளது.

எனினும் இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

இதேவேளை சீன அதிகாரியின் இந்த கருத்தினை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு சந்தை நிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சிறிதளவு பாதிப்புள்ளவர்களை அடிப்படையாக வைத்து ஜப்பான் மருத்துவர்கள் இநத மருந்தினை பரிசோதனை செய்துவருகின்றனர்.

இதேவேளை கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களிற்கு இந்த மருந்தினால் பலாபலன் கிட்டாது என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/78149

  • தொடங்கியவர்

அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.

மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில் செயல்படும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அசோசியேட் ப்ரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும், கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சியாட்டில் நகரைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்மணியிடம், இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

``கொரோனை வைரஸை தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்`` என அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய சுகாதாரத்துறையின் நிதி உதவி மூலம் மனிதர்கள் மீது இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்த தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறும்.

ஆனால் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பின் பின்னணியில் இருக்கும் உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம், ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டு, முயற்சி செய்யப்பட்ட வழிமுறைகள் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறது.

``இந்த தடுப்பூசி அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மையில் மிக வேகமாக இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது வைரஸுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதக்குலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது.`` என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜான் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தட்டம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும்.

ஆனால் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் mRNA-1273 என்ற இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கோவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது.

உண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவுக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சோதனை தடுப்பு மருந்து தன்னார்லர்கள் மீது பல்வேறு அளவுகளில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என கையின் மேல் தசை பகுதியில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும்.

இந்த முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து செயல்பாடு வர இன்னும் 18 மாதங்கள் ஆகும்.

https://www.bbc.com/tamil/science-51941482

3 hours ago, Paanch said:

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
  எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி
 
பாடலுக்கு நன்றி. 🙂

கொரோனாவுக்கு ?

இன்னும் இருக்கு எச்.ஐ.வி, எபோலா, H1N1, Tuberculosis, Chikungunya, டெங்கு ... இப்படி ஏராளம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, இணையவன் said:

பாடலுக்கு நன்றி. 🙂

கொரோனாவுக்கு ?

இன்னும் இருக்கு எச்.ஐ.வி, எபோலா, H1N1, Tuberculosis, Chikungunya, டெங்கு ... இப்படி ஏராளம் உண்டு.

நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்றொரு முதுமொழி உண்டு. 

  • தொடங்கியவர்

கொரோனா சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு

கொரோனாவுக்கான சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவை தடுக்கவும், குணமாக்கவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், மலேரியா மற்றும் ஆர்த்ரிடிஸ்  தடுப்பு மருந்தான குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

இம்மருந்தானது பிற நோய்களுக்கு ஏற்கெனவே உபயோகிக்கப்பட்டு நல்ல முடிவுகள் வந்துள்ளதால், நோயாளிகள் யாருக்கும் இம்மருந்தால் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.

குளோரோகுயின் மருந்தை பரவலாக கிடைக்கவைப்பதற்கும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/104350/கொரோனா-சிகிச்சைக்குகுளோரோகுயின்-மருந்தைபயன்படுத்த-அமெரிக்காமுடிவு

  • தொடங்கியவர்

கொரோனாவுக்கு பலன் அளிக்கும் ஜப்பான் மருந்து

டோக்கியோ: ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 'ஏவிகேன்' என்ற வைரஸ் தடுப்பு மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஏவிகேன் மருந்தில் உள்ள 'பேவிபிராவிர்' என்ற உட்பொருள், நுரையீரல் செயலிழப்பை சீராக்கி விரைவில் குணப்படுத்துவதாக சீனா தெரிவித்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2505809

  • தொடங்கியவர்
8 hours ago, ampanai said:

கொரோனா சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.