Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் கொரோனா பீதி! யாழ். களநிலவரம் என்ன? நேரடி ரிப்போர்ட்

Featured Replies

சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மக்களும் கொரோனா பீதியில் உறைந்து போயுள்ளனர்.

கொரோனா தாக்கம் இலங்கையில் ஏற்பட்டதையடுத்து தற்போதுவரை 21 பேர் அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரச விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என்று அரச திணைக்களங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கொரோனாவின் நிலவரம் என்ன? பொது மக்களின் கருத்து தொடர்பில் எமது இணையத்தளம் ஆராய்ந்தது. அதன் முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139128?ref=home-imp-parsely

  • Replies 134
  • Views 11.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கருத்துக் கூறும் யாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் கூறும் காத்திரமான  கருத்துக்கள்.

மக்கள் நல்ல விழிப்பா தான் இருக்கிறாங்கள்!

இடையில சொறிலங்கா அரசின் இணையத்தள கூலிப்படை உண்மைகளை மறைக்க எடுக்கிற முயற்சிகள் எடுபடா.

மற்றைய நாடுகளைவிட இலங்கை அரசு சிறப்பாக இதை கையல்கின்றது

சிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை! யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதியின் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் கொரோனா தொற்றுக்குள்ளானதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

சிவஞானம் சிறிதரன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து யாழ் போதனா வைத்தியசாலையை தொடர்பு கொண்டு வினவிய போது சிறிதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

இவர் அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தார்.

அந்நாட்டில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/139330

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்

வடமாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (19) வியாழக்கிழமை நடந்த யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

  1. அத்தியாவசியத்தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார
    நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களை கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள அவசர நிலையை கருத்தில் கொண்டு பிற்பகல் 3.00 மணியுடன் பூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  2. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருட்களை கொள்வனவு செய்தல் சிறந்தது.
    குடும்பத்துடனோ கூட்டமாக வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  3. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக தண்ணீரில் சவர்க்காரமிட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைகுட்டையால் மூடுதல், உடல்நிலை
    சரியில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்தல், மக்கள் கூடுதலாக ஒன்று கூடும் இடங்களை தவிர்த்தல், கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் கண்கள், மூக்கு, வாய், அல்லது முகத்தை தொடாதிருத்தல், ஒவ்வொரு நபரிடமிருந்தும்
    முடிந்தவரை ஒரு மீட்டர் தொலைவில் இருந்து உரையாடுதல், நோய் எதிர்ப்பு
    சக்தியை அதிகரிக்க விற்றமின் சீ, நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உணவு முறைகளை பின்பற்றுதல், ஏதாவது நோய் அறிகுறி இருப்பின் உடன் வைத்தியசாலையை நாடுதல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறு
    கோரப்பட்டுள்ளது.
  4. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் வருவதனைத்
    தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
  5. வர்த்தக கொள்வனவிற்காக வரும் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பதுடன் தமக்கிடையில் ஒரு இடைவெளியைப் பேணுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
  6. அத்தியாவசியத்தேவையுடையோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்தல் வேண்டும்.
  7. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தபடுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் வணிகர் கழகம் தீர்மானம் எடுத்து தமது உறுப்பினர்களுக்கு உடனடியாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது..

https://newuthayan.com/யாழ்-வணிகர்-சங்கத்தின்-த/

15 minutes ago, பிழம்பு said:

யாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்

நல்ல தீர்மானங்கள்!
உறுதியா நடைமுறைப்படுத்தோனும்!

யாழில கொரோனா பரவ வெளிக்கிட்டா கட்டுப்படுத்துறது கஷ்டம் என்று நினைக்கிறார்கள்.

ஏன்னென்றா மக்கள் கட்டுப்பாடுகளை மதிக்கிறது குறைவு என்ற கருத்து அடிபடுகுது.

 

Edited by Gowin

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை என்ன? யாழ் போதனா வைத்தியசாலையின் அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 21 பேர் பரிசோதனை செய்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தற்போதும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் இதுவரையில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை புள்ளி விபரங்களை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.

ஆகவே வதந்திகளை பரப்ப வேண்டாமென்று கேட்டுக் கொண்டுள்ள வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் பொறுப்பை உணர்ந்து செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/139735

  • தொடங்கியவர்

யாழில் வங்கிகளுக்குச் சென்ற பொது மக்களிடையே ஏமாற்றம்! காரணம் என்ன?

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சில மாவட்டங்களில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் தங்களது பணத்தினை எடுப்பதற்கும், நகைகளை அடகு வைப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்ற போதும் பொது மக்களை அவர்கள் திருப்பியனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் காலை 8 மணியிலிருந்து 12 மணிவரைக்குமான சேவையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் சில அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்துரைத்த பொது மக்கள்,

https://www.ibctamil.com/srilanka/80/139691

  • தொடங்கியவர்

யாழில் வறுமையால் வாடிய தாயின் 2 ஆயிரம் ரூபாயை வழங்க மறுத்த வங்கி முகாமையாளர்!

வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

ஒரு மில்லியன் ரூபாவுக்கு உள்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வங்கிகளின் தலைவருக்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ள நிலையில் இந்தச் செயலை இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளை முகாமையாளர் செய்துள்ளார்.

வட்டுக்கோட்டை (J/160) அராலி மேற்கைச் சேர்ந்த மயூரன் நிசாந்தினி என்பவரே வங்கி முகாமையாளரின் செயற்பாட்டால் தான் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"இன்றைய தினம் இலங்கை வங்கி வட்டுக்கோட்டை கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளப்பெறுவதற்கு சென்றிருந்தேன்.

கடந்த ஆண்டு அந்தக் கிளையில் ஒரு லட்சம் ரூபாய் சுயதொழில் கடனைப் பெற்றிருந்தேன்.

கடன் தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீள செலுத்தி வந்துள்ளேன்.

இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெறுவதற்கு வங்கிக்கு சென்ற போது அதனை வழங்க மறுத்தனர்" என்று பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கரிசனை கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/139744

  • தொடங்கியவர்

யாழ். மாவட்ட வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

kanapathipillai-Mahesan.jpg

கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், சாரதி மற்றும் உதவியாளரின் பெயர்களைப் பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில், “யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குத் தேவையான அத்தியாவசியப் உணவுப் பொருட்களை கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களிலிருந்து கொள்வனவுசெய்து எடுத்துவரவும் யாழில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்குமான வாகன வழி அனுமதி வழங்கப்படுகிறது.

வாகனத்தின் சாரதி, உதவியாளரது பெயர், தேசிய அடையாள அட்டை, வாகன இலக்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு எடுத்து வருகின்ற பொருட்கள் ஆகிய விபரங்களை உரிய பிரதேச செயலரது பரிந்துரையைப் பெற்று அலுவலக நாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரையான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையடுத்து, மாவட்டச் செயலகத்தின் பரிந்துரையைப் பெற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/யாழ்-மாவட்ட-வாகன-உரிமையா/

யாழ் மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை!

வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் நாளை முதல் பின்வரும் இடங்களில் செயற்படவுள்ளது.

 

சங்கானை

1.சங்கானை உப அலுவலகம் முன் உள்ள டச்சு கோட்டை

2.கூடத்து அம்மன் கோயில் மேற்கு புற மைதானம்

3.சிலம்புப்பளியடி பிள்ளையார் கோயில் வீதி

4.சங்கானை நிகரவைரவர் கோயில் வீதி

5.சலேசியார் கோயில் வீதி

 

சுழிபுரம்

1.சத்தியக்காட்டு சந்தைகள்

2.தொல்புரம் மத்திய சந்தைகள்

3.பனிப்புலம் சந்தை

4.பொன்னாலை பனையடி சந்தை

 

அராலி

1.அராலி செட்டியார்மட சந்தை

2.அராலி உப அலுவலகம் முன்பாகவுள்ள கருப்பட்டி பிள்ளையார் கோயில் பின் வீதி

 

வட்டுக்கோட்டை

1.வட்டுக்கோட்டை பொதுச்சந்தை

2.சக்கரத்தை பொதுச்சந்தை

https://www.ibctamil.com/srilanka/80/139899?ref=imp-news

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 25 பேர் யாழில் கைது!

In இலங்கை     March 27, 2020 2:33 pm GMT     0 Comments     1558     by : Benitlas

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தினை-மீறிய/

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் குறித்த அறிவிப்பு- வடக்கு மாகாணம்

In இலங்கை     March 27, 2020 1:07 pm GMT     0 Comments     1194     by : Litharsan

Doctor-A.Ketheeshwaran.jpg

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்திர மருந்துகளை வீடுகளிற்கே விநியோகிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கான தகவல் குறித்து  வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கீழுள்ளஅறிவிப்பை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்.

வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்கள் தெரியாவிடின் உங்களது மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளின் தொலைபேசி இலக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. யாழ்ப்பாணம்   – 021 221 7278
  2. வவுனியா      – 024 222 2893
  3. கிளிநொச்சி     – 021 228 5933
  4. மன்னார்        – 023 222 2916
  5. முல்லைத்தீவு  – 021 229 0102

வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு நீங்கள் உங்களது பின்வரும் தகவல்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

  1. முழுப் பெயர்
  2. வயது
  3. பால்
  4. சிகிச்சை பெறும் வைத்தியசாலை
  5. சிகிச்சை பெறும் கிளினிக்
  6. கிளினிக் இலக்கம் (உங்கள் கிளினிக் கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்)
  7. உங்களது தபால் முகவரி
  8. உங்களைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கம்

உங்களது மருந்துகள் உங்களைத் தேடி உங்களது வீட்டிற்கு வரும்.

http://athavannews.com/கிளினிக்-நோயாளர்களுக்கா/

  • தொடங்கியவர்

யாழ் -உடுவிலில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு கொரோனா? கிளிநொச்சியிலும் பரவியதா?

யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி பகுதியில் இருந்தும் ஆண் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140042?ref=home-imp-parsely

மீன்பிடியை தற்காலிகமாக நிறுத்த ஆளுநரிடம் யாழ்.மேயர் கோரிக்கை!

In இலங்கை     March 29, 2020 11:32 am GMT     0 Comments     1902     by : Litharsan

யாழ். மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக உடன் நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “உலக அளவில் பாரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸினால் ஏற்படும் தாக்கங்களை இலங்கையில் கட்டுப்படுத்துவதற்கான பல செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒரு அம்சமாகவே நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தின் குறித்த ஊரடங்குச் சட்ட நோக்கத்தை முழுமைப்படுத்த முடியாத வகையில் மீன்பிடி செயற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. அதாவது யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோரப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தமது மீன்பிடிச் செயற்பாடுகளை வழமை போன்று தற்போதும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஊரடங்கின் போதும் மக்கள் அதிகளவில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் இவ்வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் ஒரு மரணமும் பதிவாகியிருக்கின்ற இக்கால கட்டத்தில் மாநகர கரையோரப் பகுதி மீன்பிடி செயற்பாடானது எமது மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாகவும் எதிர்பார்க்காத வகையில் பாரிய வைரஸ் தொற்று விளைவுகளையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என அச்சம் ஏற்படுகிறது.

எனவே யாழ். மாநகரத்தின் கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான பகுதியில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் அனைத்துவிதமான மீன்பிடிச் செயற்பாடுகளையும் உடன் நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக தடை விதிப்பதற்கான அறிவுறுத்தல்களைத் தாமதிக்காது உரிய தரப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர், யாழ். பொலிஸ் நிலையப் பிரதம பொலிஸ் பரிசோதகர், வட. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கொழும்புத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குருநகர் ஐக்கிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், நாவாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மீன்பிடியை-தற்காலிகமாக-ந/

வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி- கிளி. மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு

In இலங்கை     March 30, 2020 10:44 am GMT     0 Comments     1158     by : Litharsan

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது வியாபாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்ற வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விசேட பாஸ் அனுமதி நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாவட் அரச அதிபர் தலைமையில் இடம்பெற்றக் இக்கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், கமநல உதவி ஆணையாளர், சமூர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தெரிவிக்கையில், “ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது மாவட்டத்திற்கு வெளியே சென்று பொருட்களைக் கொள்வனவு செய்துவரும் மொத்த வியாபாரிகளுக்கு விசேட பாஸ் அனுமதி ஒன்று பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக்கொள்ளவுள்ள மொத்த வியாபாரிகள் தங்களின் விபரங்களுடன் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஊடாக சுகாதார மருத்துவ அதிகாரி (எம்.ஓ.எச்.) உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலகம் ஊடாக மாவட்டச் செயலகத்திடம் அனுமதி பெற்று பொலிஸாரிடம் குறித்த பாஸ் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட கிருமிநாசினிகளை ஊரடங்கு காலத்தில் நடமாடும் சேவை மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களம் தற்போது விசேட பாஸ் அனுமதி ஒன்றை அறிமுக்கப்படுத்தியுள்ளார்கள். இதனை விவசாயிகள் தங்களது கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்று கிராம அலுவலர் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரின் உறுதிப்படுத்தலுடனும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், அரச உத்தியோகத்தர்களின் போக்குவரத்து தொடர்பபாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

Kilinochchi-GA-Meeting-Corona-Virus-Aler

Kilinochchi-Special-Pass-Activation-Coro

Kilinochchi-Special-Pass-Activation-Coro

யாழில் கொரோனா சந்தேகம் : 24 மணிநேரத்தில் 7 பேர் அனுமதி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ஆனைக்கோட்டை, உரும்பிராய், மன்னாரைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலிருந்து இவர்களது மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தலுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது.

தாவடியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வசித்த பெண் ஒருவரே கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நபர், நெடுந்தீவுக்கு வெளிநாட்டவர்களுடன் சென்று வந்த நிலையில் அவரும் கொரோனா தொற்றுக்குரிய சந்தேகங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உரும்பிராயைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் கொரோனா தொற்று சந்தேகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மன்னாரைச் சேர்ந்த இருவர் இன்று மாலை கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/140196?ref=ibctamil-recommendation

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

குறித்த அறிவிப்பில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை ஒரு நோயாளி மட்டுமே இனம் காணப்பட்டுள்ளார். ஆயினும் இந்நோய் எமது மாகாணத்தில் பரவாது இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் வடக்கு மாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய்
பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இது பற்றிய ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இவ்விடயம் சம்பந்தமான தகவல்களை வழங்கவும் மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் 24 மணி நேரமும் இயங்கும் பின்வரும் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி 021 222 6666 மற்றும் 021 221 7982 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தாங்கள் வீடுகளில் இருக்கும்போது தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அவசர மருத்துவ நிலை ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டுமாயின் 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தாங்கள் ஏதாவது வைத்தியசாலையில் கிளினிக்குக்கு செல்பவராயின் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளது.

நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலையை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் விபரத்தைத் தெரிவிப்பதன் மூலம் இச்சேவையினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் வைத்திய சாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிடப்பட்ட அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியமுடியும்.

தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளைப் பெற்றுக் கொள்வதாயின் அம்மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களது வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

உங்கள் பிரதேசத்தில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறியவேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். இச்சேவையை வழங்குவதற்குத் தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோமீற்றர் ஒன்றிற்கு ஐம்பது (50) ரூயாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில தனியார் மருந்தகங்கள் இச்சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

இச்சேவையினை வழங்குவதற்கு இதுவரை பதிவுசெய்யப்படாத மருந்தகங்களும் முன்வந்தால் தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்களது விபரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/வடக்கு-மாகாண-சுகாதாரத்-த-2/

யாழ்.வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!

கொரோனா தொடர்பாக அளவுக்கு அதிகாமான செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

மன உளைச்சல், பசி, தூக்கம் என்பவற்றைப் பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்கு உள்ளாகி தமது நோயெதிர்க்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ஆகவே, தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளைப் பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளைப் பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140254?ref=imp-news

  • தொடங்கியவர்

யாழ்.மாவட்டத்தில் ஒருவரின் செயலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை (யாழ் தீபகற்பம்)

யாழ் மாவட்டத்தில் தனி ஒருவரின் செயலால் முழு தீபகற்பமுமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டுள்ளது என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமுமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது.

கண்டி மாவட்டத்தில் அக்குறணைப் பிரதேசமும் அட்டலுகம பிரதேசத்தையும் தனிமைப்படுத்தியிருக்கின்றோம்.

தொடர்புபட்டவர்களில் 17 பேர் கண்காணிப்பு நிலையத்திலும் 240 பேரை வீடுகளிலும் தனிமைப்படுத்தி உள்ளோம். இவ்வாறு முழு நாட்டையும் தனிமைப்படுத்தினோம். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில்தான் நாம் குறித்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்துகின்றோம். அதற்கு வேறெந்தக் காரணமும் இல்லை.

அதேபோல் கடந்த தினத்தில் இத்தொற்றுக்குள்ளாகி இறந்தவர் நடமாடிய நாத்தாண்டிப் பகுதியில் இரு கிராமங்களிலுள்ள 08 வீடுகளிலுள்ளவர்களை சுய தனிமைப்படுத்தலை சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140271?ref=home-imp-parsely

Edited by போல்

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய சுகாதார சேவை பணிப்பாளர்

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மட்டும் ஸ்ரீலங்காவில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றுள்ளவர்வர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

https://www.ibctamil.com/srilanka/80/140329?ref=imp-news

யாழில் தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ள கொரோனா! மக்களிடம் விடுக்கப்படும் அவசர கோரிக்கை

உலகை கதி கலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தற்போது தனது வீரியத்தை ஸ்ரீலங்காவில் காட்ட தொடங்கியுள்ளது.

உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியா இலங்கை உட்பட 190 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் பாதிப்புக்கள் அதிகமாகி இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

வல்லரசு நாடுகளே வழி தெரியாமல் முழி பிதுங்கி நிற்கும் வேளையில் தற்போது ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகமாகி வருகின்றது.

நேற்றுடன் 148 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதில் நால்வர் சுவிஸ் போதகருடன் தொடர்பை பேணிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

எனவே இது தொடர்பில் மக்கள் அலட்சியம் கொள்ளாமல் இரட்டிப்பு கவனத்துடன் செயற்படவேண்டும் என அரசால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அதிலும் குறிப்பாக எதிர்வரும் சில நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் என கூறப்படுகின்றது.

இது தொடர்பான முழ விபரங்களுடன் வருகிறது இந்த செய்தி தொகுப்பு...

https://www.ibctamil.com/srilanka/80/140380?ref=imp-news

யாழில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை!

In இலங்கை     April 2, 2020 12:22 pm GMT     0 Comments     1314     by : Litharsan

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் 6 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் COVID-19 வைரஸ் பரிசோதனையில் அவர்கள் ஆறு பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

யாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழில்-கொரோனா-பரிசோதனை-ம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.