Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

    by : Jeyachandran Vithushan

World-Food-Programme.jpg

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர் என உலக உணவு திட்டத்தின் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் ஆரிஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உணவு-தட்டுப்பாடு-இரட்டிப/

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பையும் உலக சுகாதார சபையையும் ஒரு அறையில் வைத்து ஒரு கிழமைக்கு இல்லை ஒரு மாதத்திற்கு பூட்டி வைக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பையும் உலக சுகாதார சபையையும் ஒரு அறையில் வைத்து ஒரு கிழமைக்கு இல்லை ஒரு மாதத்திற்கு பூட்டி வைக்கவேண்டும். 

பிரச்சனை தீர்ந்தது.

வீட்டுத் தோட்ட ஆரம்ப வேலைகளை ஏலவே முடித்துவிட்டேன். அடுத்த பனிப் பொழிவுவரை மரக்கறி வேண்டுவதில்லை என்கின்ற தீர்மானம். 😀

அடுத்த ஒரு வருடத்திற்கு செத்தல் மிளகாயும் வேண்டுவதாக இல்லை. சிறிய வெங்காயம் ஆகக் குறைந்தது இருமுறையாவது அறுப்பது என முடிவு. வெங்காயம் ஏற்கனவே வளரத் தொடங்கிவிட்டது. 👍

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

நல்லவிடயத்தை பலர் செல்லியும் கேளாமல் கொரொணா அடித்த மரண பயம் கேட்க வைத்துவிட்டது👍👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Kapithan said:

பிரச்சனை தீர்ந்தது.

வீட்டுத் தோட்ட ஆரம்ப வேலைகளை ஏலவே முடித்துவிட்டேன். அடுத்த பனிப் பொழிவுவரை மரக்கறி வேண்டுவதில்லை என்கின்ற தீர்மானம். 😀

அடுத்த ஒரு வருடத்திற்கு செத்தல் மிளகாயும் வேண்டுவதாக இல்லை. சிறிய வெங்காயம் ஆகக் குறைந்தது இருமுறையாவது அறுப்பது என முடிவு. வெங்காயம் ஏற்கனவே வளரத் தொடங்கிவிட்டது. 👍

ஒரு படத்தை போடுறது.
வேறை ஒண்டுக்குமில்லை....வெங்காய பாத்தி,மிளகாய்கண்டு பாத்தி சரியாய் இருக்கோ எண்டு பாக்கத்தான்....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஒரு படத்தை போடுறது.
வேறை ஒண்டுக்குமில்லை....வெங்காய பாத்தி,மிளகாய்கண்டு பாத்தி சரியாய் இருக்கோ எண்டு பாக்கத்தான்....😎

வெங்காயம் மட்டும் தான் பாத்தியில. அதுகும் பெரிய அளவில் இல்லை. மற்றவையள் அத்தனையும் பிளாஸ்ரிக் பாத்திரத்தில்தான் (Container). 😎

நம்பினால் நம்புங்கள், இரண்டு வருடத்திற்கு முன்னர் பரீட்சாத்த முயற்சியாக ஒரு பப்பாளி, ஒரு கறி முருங்கை கூட வளர்த்திருந்தேன். காலம் தவறிய வளர்ச்சி பயனேதும் பெற முடியவில்லை. அனால் முயற்சி நூறுவீதமும் வெற்றி. இந்த முறை முருங்கை விதை போட்டிருக்கிறேன். பப்பாளி விதை என்னிடம் இல்லை. பார்ப்போம். இன்னும் ஒரு கிழமை பத்து நாட்களில் எல்லாம் தெரியும்.😀

40 minutes ago, உடையார் said:

நல்லவிடயத்தை பலர் செல்லியும் கேளாமல் கொரொணா அடித்த மரண பயம் கேட்க வைத்துவிட்டது👍👍

உண்மைதான்,

இந்த முறை எனக்கு நல்ல நேரம் கிடைக்கிறது. நிதானமாக முயற்சிக்கிறேன். பலன் மிகவும் அதிகமாகக் கிடைக்கும் என்கின்ற தளராத நம்பிக்கை 😀

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

வெங்காயம் மட்டும் தான் பாத்தியில. அதுகும் பெரிய அளவில் இல்லை. மற்றவையள் அத்தனையும் பிளாஸ்ரிக் பாத்திரத்தில்தான் (Container). 😎

நம்பினால் நம்புங்கள், இரண்டு வருடத்திற்கு முன்னர் பரீட்சாத்த முயற்சியாக ஒரு பப்பாளி, ஒரு கறி முருங்கை கூட வளர்த்திருந்தேன். காலம் தவறிய வளர்ச்சி பயனேதும் பெற முடியவில்லை. அனால் முயற்சி நூறுவீதமும் வெற்றி. இந்த முறை முருங்கை விதை போட்டிருக்கிறேன். பப்பாளி விதை என்னிடம் இல்லை. பார்ப்போம். இன்னும் ஒரு கிழமை பத்து நாட்களில் எல்லாம் தெரியும்.😀

உண்மைதான்,

இந்த முறை எனக்கு நல்ல நேரம் கிடைக்கிறது. நிதானமாக முயற்சிக்கிறேன். பலன் மிகவும் அதிகமாகக் கிடைக்கும் என்கின்ற தளராத நம்பிக்கை 😀

விதையைவிட முருங்கை தடியே விரைவில் வளரும். அங்கு தடி கிடைக்காதா?  ஒருவருடத்தில் நல்ல பலன் கிடைக்கும், முருங்கை நல்லா தண்ணி இழுக்கும், கிழமையில் மூன்று தரம் நல்ல ஈரலிப்பாக வைத்திருந்தால் செழிப்பாக வளரும்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

விதையைவிட முருங்கை தடியே விரைவில் வளரும். அங்கு தடி கிடைக்காதா?  ஒருவருடத்தில் நல்ல பலன் கிடைக்கும், முருங்கை நல்லா தண்ணி இழுக்கும், கிழமையில் மூன்று தரம் நல்ல ஈரலிப்பாக வைத்திருந்தால் செழிப்பாக வளரும்

தடி கிடைக்காது. போன தடவை முருங்கை முழு வெற்றி. குளிர்கால  பராமரிப்பில்  பிழை விட்டுவிட்டேன். வின்ரரோட மரம் பட்டுப்போச்சு. ☹️

இந்த முறை ஒரு கை பார்க்கிறதா முடிவு. 😂

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.