Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி லண்டனில்? அதிர்ச்சிகரமான புலனாய்வு தகவல்கள்!!

Featured Replies

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சகரான் என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி என்று மற்றொருவரின் பெயர் தற்பொழுது அடிபட ஆரம்பித்துள்ளது.

யார் அவர்.. அவரது பின்னணி என்ன.. அவருக்கு யார் யாருடனெல்லாம் தொடர்பு இருக்கின்றது.. அவருடைய செயற்திட்டங்களுக்கும் இலங்கையின் முக்கியமான ஒரு தமிழ் அரசியல்வாதிக்கும் இடையிலான சம்பந்தம் என்ன… இது போன்ற விடயங்களை பார்ப்பதற்கு முன்பாக முக்கியமான ஒன்றைத் தெரிவித்தாகவேண்டும்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகமும் கூட, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் தமது சமூகத்தின் பெயரைப் பாவித்து தமது சமூகத்தினுள் வளர்வதை, செயற்படுவதை துஞ்சற விரும்பவில்லை.

கடந்த வருடம் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட 'சகரான்' என்ற தீவிரவாதிக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தற்கொலைத் தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.( புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களை சிறிலங்கா பாதுகாப்பு தரப்பிற்கும் அவர்கள் வழங்கயுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாத ஆயுதக் குழுக்கள் இருப்பது என்பது எப்படியான ஆபத்தை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதைக் கடந்த வருடம் இலங்கை மக்கள் அனுபவத்தின் மூலம் கற்றுகொண்டிருக்கின்ற அதேநேரம், என்றுமில்லாதவாறான அச்சுறுத்தலை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவும் அது காரணமாக அமைந்திருந்தது. இதுபோன்றதொரு அனர்த்தம் மற்றொருதடவை நிகழ்ந்துவிடக்கூடாது என்கின்ற அச்சத்தில், சில முஸ்லிம் சமூகத் தலைவர்கள் இந்த விடயங்களை ஊடகங்களுக்கும், சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினருக்கும் வளங்கியுள்ளார்கள்.

அவர்கள் எமக்குத் தெரிவித்த தகவல்கள் இவைதான்:

1.கடந்த வரும் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரி சகரான் என்றுதான் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சகரான் வெறும் கருவிதான். ‘பொலிஸ் பாயிஸ்’ என்பவர்தான் இந்த செயற்பாடுகளின் சூத்திரதாரி.

2.'பொலிஸ் பாயிஸ்' என்பவர் தற்பொழுது லண்டனில் வசித்து வருகின்றார். லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)

3.லண்டனில் இருந்தவாறு பலமான தீவிரவாதக் கட்டமைப்பொன்றை இலங்கை முழுவதும் நிறுவி நிர்வகித்து வருகின்றார்.

4.காத்தான்குடி தாழங்குடா பிரதேசத்தில், வேடர் குடியிருப்பு என்ற பகுதியில் 14.04.2019ம் அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பும் இந்த ‘பொலிஸ் பாயிஸ்’ ஏற்பாட்டின் பெயரில்தான் மேற்கொள்ளப்பட்டது.

5.காத்தான்குடி உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் முஸ்லிம் தீவிரவாத இளைஞர்களுக்கு அனுப்பி வைக்கும் செயல்கள் இந்த பொலிஸ் பாயிசினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6.சகரானின் தம்பியுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி- காத்தான்குடி, ஆரையம்பதி, சாய்ந்ததமருது பிரதேசங்களில் நடைபெற்ற பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் இந்த பொலிஸ் பாயிஸ் சம்பந்தப்பட்டிருந்தார்.

7.சிறிலங்கா புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் சில முஸ்லிம் நபர்களுடன் இந்த 'பெலிஸ் பாயிஸ்' தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதுடன், அவர்களுக்கு பணமும் அனுப்பி வருகின்றார்.

8.வடக்கில் உள்ள ஒரு முன்நாள் முஸ்லிம் அமைச்சருடன் நெருக்கமான தொடர்புகளை இந்த பொலிஸ் பாயிஸ் மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவில், வவுனியாவில் அவர்களுக்கான சில வியாபார நிலையங்களையும் அமைத்துக்கொடுத்துள்ளார்.

9.இலங்கையில் குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் குறிப்பிட்ட இந்த முன்நாள் முஸ்லிம் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கூட, எதிர்கால இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகளை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

10.வடக்கில் உள்ள முன்நாள் அமைச்சரின் சகோதரன் இந்த தீவிரவாதச் செயற்பாடுகளில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார்.

11.இவரே பொலிஸ் பாயிசுடன் நேரடித் தொர்புகளை பேணி வருபவர்

12.மேற்படி தகவல்களை சிறிலங்கா அரச படையின் ஒரு சிறப்பு பிரிவான SIU (Special Investigation Unit)  என்ற தனிப்படையிடமும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

யார் இந்த பொலிஸ் பாயிஸ்? அவர் எப்படி பிரித்தரியாவுக்கு வந்தார்?

பிரித்தானியாவில் அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்ற தேடல்களை மேற்கொண்ட போது பல சுவாரசியமாக தகவ்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

தேடப்பட்ட தீவிரவாதிகள்:
2000ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவரவாதத் தலைவர்களாக மூன்று நபர்கள்; சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்கள்.
1.பொலிஸ் பாயிஸ்
2.மூதூர் நிசாம்
3.ராகுல் ஹக்

இந்த மூவருக்கும் அல்-கைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக சிறிலங்கா காவல்துறையின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான DIG எடிசன் குணதிலக தெரிவித்திருந்தார்.

04.07.2009 அன்று காத்தான்குடி ஜும்மா மீரா பள்ளிவாசலில் வைத்து, ஊடகவியலாளர்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் மத்தியில் இந்த கூற்றை தெரிவித்திருந்தார் சிறிலங்கா பொலிஸ் DIG எடிசன் குணதிலக.

கிழக்கில் நடைபெற்ற பல்வேறு ஆட்கடத்தல்கள், கொலை, மிரட்டல் சம்பவங்களில் இவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களைத் தேடி வருவதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

ராணுவ கேணல் கொலை
2007ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், சிறிலங்கா ராணுவ கேணல் லத்தீப் என்பவர் மட்டக்களப்பு ஓட்டைமாவடியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கேணல் லத்தீபை ‘பொலிஸ் பாயிஸ்’தான் படுகொலை செய்தார் என்று தெரிவித்து அவரைத் தேட ஆரம்பித்தது சிறிலங்கா இராணுவம்.

அதேபோன்று ஓட்டைமாவடியில் வைத்து 2007 ஜுலையில் கொலைசெய்யப்பட்ட சித்திக் என்பவரின் கொலை தொடர்பிலும் இந்த பொலிஸ் பாயிஸ்தான் சிறிலங்கா காவல்துறையினால் சந்தேகிக்கப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டுவந்த பொலிஸ் பாயிஸ், அந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய வகாபிச தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி, அந்த அமைப்பில் பல இளைஞர்களை இணைத்துவந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்த இஸ்லாமிய தீவிரவாத ஆயுதக் குழுவின் தேவை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினருக்கு இருந்ததால், ஆரம்ப காலங்களில் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.

ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 'கருணா- பிள்ளையான் குழுக்கள்' மிகப் பெரிய பங்கினை வகிக்க ஆரம்பிக்க, இந்த வாகாபிச தீவிரவாதக் குழுக்களுக்கு சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருந்தது.

தேடுதல் வேட்டைகள், சுற்றிவளைப்புக்கள், கைதுகள் என்று சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு தீவிரம் காட்ட, ‘பொலிஸ் பாயிஸ்’ உட்பட பல தீவிரவாதத் தலைவர்கள் தலைமறைவாக ஆரம்பித்திருந்தார்கள்.

எப்படி லண்டனுக்கு?

இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இருந்து லன்டனுக்கு வகாபிச தீவிரவாத இளைஞர்களை அனுப்பி வைக்கும் நபர்கள் என்று இரண்டு பொறியியலாளர்களின் பெயர்கள், சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தன.

முஸ்தபா அப்துல் ரகுமான் (Production Engineer), பலுல் ஹக் () என்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகளும் ஏராளமான 'வகாபிஸ' தீவிரவாதிகளை, பிரித்தானியாவுக்கும் கட்டாருக்கும் அனுப்பிவைத்ததாக 28.08.2007 அன்று சர்வதேச ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியிருந்தது.

பலுல் ஹக் என்பவர் கட்டாரில் உணவு விடுதி ஒன்றை அமைத்து அதில் வேலைசெய்வதற்கு என்று இளைஞர்களை அங்கு அனுப்பி, இராணுவப் பயிற்சிகளை கட்டாரில் வைத்து வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று, அப்துல் ரகுமான் கொழும்பு தெஹிவளையில் ஒரு கல்வி நிலையத்தை நிறுவி அந்த கல்வி நிலையம் ஊடாக முஸ்லிம் இளைஞர்களை மேற்படிப்புக்கு என்று கூறி பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்து அங்கு அவர்களை வகாபிச தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வந்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

2007ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 200 முஸ்லிம் தீவிரவாத இளைஞர்களை அந்த நிறுவனம் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், பங்காளதேஷ் இளைஞர்கள் சிலர் கூட அந்த 200 பேரில் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற ஒரு வழியால் இந்த ‘பொலிஸ் பாயிஸ்’ பிரித்தானியா வந்திருக்கலாம் என்று நம்புகின்றார்கள் முஸ்லிம் சமூகத் தலைவர்கள்.

 

தமிழ் அரசியல்வாதியின் தொடர்பு:

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, நாம் இந்த இடத்தில் முக்கியமாகப் பார்க்கவேன்றிய ஒரு விடயம் இருக்கின்றது.

பொலிஸ் பாயிஸுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், பொலிஸ் பாயிசின் வகாபிச விரிவாக்கத் திட்டங்களுக்கு அமைய வன்னியில் நில அபகரிப்புக்களை நடாத்தியவர் என்றும் கூறப்படுகின்ற ஒரு நபரை அண்மையில் சிறிலங்கா காவல்துறை கைதுசெய்திருந்தது.

வடக்கின் முன்நாள் அமைச்சர் ஒருவரின் சகோதரனான அந்த சந்தேக நபருக்காக, தமிழ் அரசியல்வாதியும் சட்டத்தரனியுமான ஒரு முக்கியஸ்தர் வாதாடப் போவதாக ஒரு செய்தி வெளியாகி இருந்து. ( தீவிரவாத சந்தேக நபருக்குச் சார்பாக அந்த முக்கிய தமிழ் அரசியல்வாதி ஆஜராக இருக்கும் செய்தி வெளியான உடனேயே த.தே.கூட்டமைப்பு பிரமுகர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி, இது நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமது வெற்றியைப் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்)

 

தமிழ் மக்கள் சந்தேகம் எழுப்பவேண்டிய முக்கியமான இடம் இங்குதான் உள்ளது.

•எதற்காக இந்தத் தமிழ் தலைவர் முஸ்லிம் தீவிரவாதி ஒருவருக்காக வாதாட முன்வந்தார்?

•தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து, தமிழ் மக்களை அகதிகளாக்கிக்கெண்டிருக்கும் ஒரு நபருக்காக அந்த தமிழ் தலைவர் வாதாட வேண்டிய அவசியம் என்ன?

•ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ் மக்கள் உட்பட ஏராளம் பொதுமக்கள் படுகொலைசெய்யப்படுவதற்கு காரணமான சூத்திரதாரி ஒருவருடன் தொடர்புடைய ஒரு தீவிரவாத சந்தேகநபருக்காக அடித்துப் பிடித்துக்கொண்டு வாதாடவேண்டிய நிர்ப்பந்தம் என்ன?

•பெருந்தொகைப் பணமா?

•பணம் கிடைத்தால் எதையும் செய்யும் ஒரு நபரா தமிழ் மக்களின் அந்த தலைவன்?

•இல்லை இலவசமாகத்தான் வாதடப்போனார் என்றால், தமிழ் சமூகத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற ஒரு தீவிரவாதிக்காக எதற்காக அவர் வாதாட வேண்டும்?

•இன்று வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்காக எப்போதாவது இவர் இலவசமாக வாதாடி இருக்கின்றாரா?

•குறிப்பிட்ட இந்த தமிழ் அரசியல்வாதி ஒரு இரகசிய நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாக அண்மைக் காலங்களில் குற்றம்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்ததே - அது இதுதானா?
காலம் பதிலை தரும். அல்லது வடக்கு வாழ் தமிழ் மக்கள் அந்தப் பதிலை நிச்சயம் தந்தே தீருவார்கள்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/crime/01/244598?ref=home-top-trending

 

  • கருத்துக்கள உறவுகள்

.வடக்கில் உள்ள ஒரு முன்நாள் முஸ்லிம் அமைச்சருடன் நெருக்கமான தொடர்புகளை இந்த பொலிஸ் பாயிஸ் மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவில், வவுனியாவில் அவர்களுக்கான சில வியாபார நிலையங்களையும் அமைத்துக்கொடுத்துள்ளார்.

9.இலங்கையில் குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் குறிப்பிட்ட இந்த முன்நாள் முஸ்லிம் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கூட, எதிர்கால இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகளை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

10.வடக்கில் உள்ள முன்நாள் அமைச்சரின் சகோதரன் இந்த தீவிரவாதச் செயற்பாடுகளில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார்.

11.இவரே பொலிஸ் பாயிசுடன் நேரடித் தொர்புகளை பேணி வருபவர்

தெரிந்தும் விட்டு வைத்தவர் ரணில்...இப்ப கோத்தாவும் கூடத்தான்.....இயக்குனர் சுமந்து....இவருக்கு த் தேவை அமைச்சுபதவி...அதுக்கு உதவி முசுலிம் வோட்டு...நிலம் பறிபோய் கிடத்தாலும் அ வருக்கு சரி...அய்யாவுக்கு (சம்) எப்படியும் பெட்டி வந்தால் சரி...நித்திரைத்தூக்கத்தில் வாங்கி வைத்து விடுவார்..

முஸ்தபா அப்துல் ரகுமான் (Production Engineer), பலுல் ஹக் () என்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகளும்

இந்த இரண்டு பேரும்தான் காத்தான் குடியில்  பெண்களுக்கான பீச் கட்டினவை....

மாணவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய சஹ்ரான் குழு : விசாரணைகளில் வெளியான பல தகவல்கள்

வனாத்தவில்லு - அரபு பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கு சஹ்ரான் குழு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வனாத்தவில்லு - கரதீவில் அமைந்துள்ள அரபு பாடசாலையில் கல்வி கற்ற பாடசாலை மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவன் ஒருவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.

இந்த அரபு பாடசாலை 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் இயங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெற்றோரை இழந்த முஸ்லிம் சிறுவர் சிறுமியர் 35 முதல் 40 சிறுவர் சிறுமியர் கல்வி கற்றுள்ளனர்.

இந்த பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் கற்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் துப்பாக்கிச் சூடு நடாத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142094

ஒரு வருடமா இப்படியான தகவல்களை கண்டுபிடிக்க ஏலாம போனது ஏன்?

சரியா ஒருவருட முடிவில்லா இப்பிடியான தகவல்கள் வருவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல்வாதிகளுக்கு போர் வெற்றிக் கோசம் பழசாப் போச்சு. கொரானாவோடு போர் வெற்றியையும் கலந்தடித்து முப்படைகளையும் கோர்த்துவிட்டு ஒரு வெற்றி விழா எடுப்பம் என்றால்.. கொரானா அடங்கிறதாத் தெரியல்ல. ஆக சிங்களவர்களை உசுப்பேத்த.. மிஞ்சி இருக்கிறது.. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் செய்திகள் தான். எனவே இப்படி.. அடிக்கடி பல செய்திகள் வரும். முன்னர் புலிகள் இல்லாத போதும்.. புலியை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.. ஆயுதங்களை மீட்டுக்கொண்டிருந்தார்கள்.. இவை எல்லாம்.. அவர்களுக்கு முதலீடு. 

என்ன செய்வது சிங்கள மக்களை அப்படி ஒரு வெறியூட்டி வைத்திருக்கிறார்கள். அவ்வளவே. 

On 28/4/2020 at 06:38, போல் said:

 

எப்படி லண்டனுக்கு?

இந்தக் காலகட்டத்தில், இலங்கையில் இருந்து லன்டனுக்கு வகாபிச தீவிரவாத இளைஞர்களை அனுப்பி வைக்கும் நபர்கள் என்று இரண்டு பொறியியலாளர்களின் பெயர்கள், சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தன.

முஸ்தபா அப்துல் ரகுமான் (Production Engineer), பலுல் ஹக் () என்ற பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற இந்த இரண்டு பொறியியல் பட்டதாரிகளும் ஏராளமான 'வகாபிஸ' தீவிரவாதிகளை, பிரித்தானியாவுக்கும் கட்டாருக்கும் அனுப்பிவைத்ததாக 28.08.2007 அன்று சர்வதேச ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியிருந்தது.

 

அதேபோன்று, அப்துல் ரகுமான் கொழும்பு தெஹிவளையில் ஒரு கல்வி நிலையத்தை நிறுவி அந்த கல்வி நிலையம் ஊடாக முஸ்லிம் இளைஞர்களை மேற்படிப்புக்கு என்று கூறி பிரித்தானியாவுக்கு அனுப்பிவைத்து அங்கு அவர்களை வகாபிச தீவிரவாதத்தில் ஈடுபடுத்தி வந்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

பொதுவாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் ஒரு விடயம்। இஸ்லாமிய மாணவர்கள் மற்றைய இந மாணவர்களுடன் சேரமாடடார்கள்। ஒரு இரண்டு வீதம் விதி விலக்காக இருக்கலாம்। இவர்களுக்கு நிறையவே பணம் பல நிறுவனங்கள் மூலம் கிடைக்கும்। இது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள்மூலமாக கொடுக்கப்படுபவை। மற்றைய இந மாணவர்கள் மாதா மாதம் வீட்டிலிருந்து பணம் எதிர்பார்த்திருப்பார்கள் அல்லது வங்கிமூலம் கடன் எடுப்பார்கள்। ஆனால் இவர்களோ , மாதா மாதம் வீட்டிட்கு பணம் அனுப்புவார்கள்। அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் இவர்களுக்கு எவ்வளவு பணம் வருகிறதென்று। பல்கலைக்கழக மாணவர்களை அரசு விசாரித்தால் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.