Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை

 

large.1408665285_TamilsMap.jpg.b3d03f97540ef0d0b43d5164a1c02d45.jpg

 

போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர்.

போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர்.

எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர்.

விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு.

அதேவேளை தெலுங்கு  நாயக்கர்கள், தமிழகத்தின் மீதான போர் அழுத்தத்தினை அதே காலப்பகுதியில் ஆரம்பித்து, 1529 ல், தமிழர்களை தோற்கடிப்பதில் முடிந்து, தமிழகத்தினை பிடித்துக் கொண்டனர். உண்மையில் அதற்கு முன்னர் டெல்கி, மாலிக் கபூர், மதுரை பகுதியை பிடித்திருந்தான். விஜய நகர பேரரசின் போரானது, அத்தமிழகத்தின் இதர பகுதிகளுடன், மதுரையினையும் கபூரிடம் இருந்தும் மீட்டும் ஆளத்தொடங்கியது.

நாயக்கர் ஆட்சி வரும்வரை, யாழ்ப்பாண அரசுகள் அழுத்தங்களுக்கு ஆளான போது, தமிழகத்தின் சேர, சோழ, பாண்டியர்கள் அவவ்போது படையுடன் வந்து, சிங்களவன் கொட்டத்தினை அடக்கினார்கள். 

தமிழக்கத்துடன் இருந்த தொடர்புகளை, தீவுக்கூட்டங்களில் இருந்த போர்த்துக்கேயர் தடுக்து, யாழ்பாண ராஜ்யத்தினை மிரட்டியபோது, போர்த்துகேயர்களுடன் இசைந்து போன நாயக்கர்கள், கண்டுகொள்ள வில்லை. அதனால் போர்த்துக்கேயருக்கு கப்பம் கொடுத்து யாழ் அரசு நீடித்தது.

நாயக்கர்கள் , சிங்கள அரச குடும்பங்களுடன் மண உறவுகள் கொண்டபின்னர், போர்த்துக்கேயர், யாழ் ராசதானி மீது போர் தொடுத்து, சங்கிலி மன்னனை வீழ்த்தி,  யாழ்பாணத்தினை பிடித்துக் கொண்டதை கண்டுகொள்ளவில்லை, உதவவில்லை. ஏனெனில் தமிழக தமிழனை வீழ்த்தி ஆண்டு கொண்டிருந்த , மிகப்பலம் பொருந்திய விஜய நகர பேரரசின் தெலுங்கு நாயகர்கள், போர்த்துக்கேயரால் வீழ்த்தப்பட்ட ஈழ  தமிழரை கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆகவே, ஏறத்தாழ சமகாலப்பகுதியில், கடலின் இருபகுதியிலும் இருந்த தமிழர்கள் வீழ்த்தப்பட்டனர். 

நாமாவது போராடினோம். அங்கே திராவிடம் என்ற போர்வையினை எதிரி போர்த்துக்கொண்டு ஆள்கிறான்.

நமக்கு, எதிரி 'நாம் சிங்களவன்' என்று சொன்னதால், அடடா, 'நாம் தமிழரா' என முழித்துக் கொண்டோம். அங்கே, எதிரி, முழித்துக் கொண்டு, 'நாம் திராவிடர்கள்' என்று அல்வாவை கொடுத்து, அங்கே உள்ள தமிழனை முழிக்க விடாமல் செய்து தொடர்ந்து ஆள்கிறான்.

இதுதான் கடந்த 500 வருசமாக, பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் பூர்வீகத் தமிழரின் அவல நிலை.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர்த்துக்கேயர் ஆதிக்கமும், அதனால் விளைந்த கலாசார, அரசியல் மாறுதல்களும் என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் முன்னர் நினைத்துக்கூட பார்க்காத, பல விபரங்களை புரிந்து கொள்கிறேன். முக்கியமாக, யாழ் நல்லூர் ராசதானிக்கு, தமிழகத்தில் இருந்து உதவி கிட்டாமல் போனதன் காரணம் என்ன என்று பகிர்ந்திருந்தேன்.

இது உங்கள் யாரது கவனிப்பிலும் படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இது உங்கள் யாரது கவனிப்பிலும் படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

பட்டது.

மற்றும், வரலாற்றை முழுமையாக அறியாமல், குறிப்பிட சிலர் கேட்ட கேள்விகளான தமிழ் ஆட்சி இருந்திருந்தாலும்  எவ்வாறு யாழ் அரசுக்கு, போத்துக்கேயரை மீறி, உதவி செய்திருக்க முடியும் போன்ற கேள்விகளையும். 
 

On 10/5/2020 at 14:51, Nathamuni said:

இதுதான் கடந்த 500 வருசமாக, பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் பூர்வீகத் தமிழரின் அவல நிலை.

போத்துக்கேயரரால்  சரசுவதி மக(ஹா)ல்,  தமிழரின் வரலாற்றை கொண்ட அன்றைய நூலகம், புராதன அருங்காட்சியகம்  தீயூட்டப்பட்டமை நீங்கள் வாசிக்கும் நூலில் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

பட்டது.

மற்றும், வரலாற்றை முழுமையாக அறியாமல், குறிப்பிட சிலர் கேட்ட கேள்விகளான தமிழ் ஆட்சி இருந்திருந்தாலும்  எவ்வாறு யாழ் அரசுக்கு, போத்துக்கேயரை மீறி, உதவி செய்திருக்க முடியும் போன்ற கேள்விகளையும். 
 

போத்துக்கேயரரால்  சரசுவதி மக(ஹா)ல்,  தமிழரின் வரலாற்றை கொண்ட அன்றைய நூலகம், புராதன அருங்காட்சியகம்  தீயூட்டப்பட்டமை நீங்கள் வாசிக்கும் நூலில் இருக்கிறதா?

போர்த்துக்கேயரால்  நூலகமும், அருங்காட்சியகமும்... எரிக்கப் பட்டதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.😮

இவை.... யாழ்ப்பானத்தில், எந்த இடத்தில் இருந்தவை என்று தகவல்கள் உண்டா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி மகால் நூலகம்

சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கா் மற்றும் மராத்திய மன்னா்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளா்த்தனா். மராத்திய மன்னா்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜி சரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.

இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

போர்த்துக்கேயரால்  நூலகமும், அருங்காட்சியகமும்... எரிக்கப் பட்டதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.😮

இவை.... யாழ்ப்பானத்தில், எந்த இடத்தில் இருந்தவை என்று தகவல்கள் உண்டா?

எதனை சொல்கிறார் என்று தெரியவில்லை. யாழில் இருக்க வில்லை என்று நினைக்கிறேன்.

போர்த்துக்கேயர்கள், இலங்கையின் புகழ் மிக்க இந்து சிவாலயங்களில், தென்பகுதி மாத்தறை (தேவேந்திர முனை) சந்திர மௌலீஸ்வரர் ஆலயம் அல்லது தொண்டீஸ்வரம் எனும் ஆலயத்தினை அழித்து, கொள்ளையடித்து, அங்கிருந்த 500 தான பசுக்களை கொன்று தின்றார்கள்.

மேலும் கோட்டை ரஜமாக விகாரையினையும் அழிக்க போனபோது அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து, பின்னர் உண்டியல் வருமானத்தின் ஒரு பகுதியை மாதாமாதம் தமக்கு தரவேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் விட்டு வைத்தார்கள். இந்த வாக்குறுதியினை கொடுத்திருந்தால், தொண்டீஸ்வரம் தப்பி இருக்கும்.

தமிழகத்தை ஆண்ட, பெரும் பலம் கொண்ட விஜ நகர பேரரசின் நாயக்க மன்னர்கள், ஆடசியில் அமர்ந்த போது, போர்த்துக்கேயர்கள், அப்பகுதிக்கு வந்து சுமார் 30 (1498 - 1529) ஆண்டுகள் ஆகி இருந்தன. ஆகவே அவர்களுடன் முரண்டு பட விரும்பாமல் வியாபார தொடர்பினைப் பேண விரும்பியிருக்கலாம். 

மேலும் தாம், தமிழகத்தில் வீழ்த்தியது தமிழரை... ஈழத்தில் வீழ்வதும் தமிழர். ஆகவே அக்கறையும் இருந்திருக்க முடியாது.

மேலும் போர்த்துக்கேயர்கள், சமூரியர்களிலும் பார்க்க, விஜய நகர பேரரசு மிகப் பலம் கொண்டதால், வடக்கினை ஆண்டு கொண்டிருந்த மொகலாயர்கள் அவர்களுடன் மோதாமல் இருந்த நிலையில் தாமும் மோதுவது புத்திசாலித்தனம் அல்ல என்று நினைத்திருக்கலாம்.

பிரிட்டிஷ் காரர்கள் இந்திய துணைக்கண்டம் வந்த போது, விஜய நகர பேரரசு வீழ்ந்து, தஞ்சாவூரை மராட்டிய சரபோஜி மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். 

இந்த வரலாறுகளை பார்க்கும் போது, எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது புலனாகின்றது.....

சோழர், சேரர், பாண்டியர், நாயக்கர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷ்காரர்....

சிங்களவர்கள் கூட 20ம் 21ம் நூறாண்டில் ஈழத்தினை ஆண்டார்கள் என்று காலம் சொல்லும்....
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இலங்கையில் போர்த்துக்கேயர் ஆதிக்கமும், அதனால் விளைந்த கலாசார, அரசியல் மாறுதல்களும் என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் முன்னர் நினைத்துக்கூட பார்க்காத, பல விபரங்களை புரிந்து கொள்கிறேன். முக்கியமாக, யாழ் நல்லூர் ராசதானிக்கு, தமிழகத்தில் இருந்து உதவி கிட்டாமல் போனதன் காரணம் என்ன என்று பகிர்ந்திருந்தேன்.

இது உங்கள் யாரது கவனிப்பிலும் படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

கவனித்தேன். தொடர்ந்து வாசியுங்கள். எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் உள்ளேன். 👍

புத்தகத்தின் பெயர் என்ன ?  யாரால் எழுதப்பட்டது ? 

விபரங்கள் பிளீஸ் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

போர்த்துக்கேயரால்  நூலகமும், அருங்காட்சியகமும்... எரிக்கப் பட்டதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.😮

இவை.... யாழ்ப்பானத்தில், எந்த இடத்தில் இருந்தவை என்று தகவல்கள் உண்டா?

ஆம்.

 இப்போதைய யாழ், மற்றும் நல்லூர், இராசதானி, யமுனாரி, சட்டநாதர் கோயில் போன்ற  புவியியல் அடையாளங்களை வைத்து, எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல விபரங்கள் இல்லை.

ஆனால், அது அரச நூலகம் (royal library) and museum), மற்றும் அரச புராதன, வரலாற்று அருங்காட்சியகம். எனவே இந்த அயலில் (நல்லூர், இராசதானி, யமுனாரி,  மந்திரி மனை (யாழ் இராச்சியத்தின் இப்போதுள்ள ஒரேயொரு அரச மனை, சட்ட நாதர் கோயில் இடது பகமக்காக 1 நிமிட நடை தூரத்தில்), சட்டநாதர் கோயில்) தான் அநேகமாக இருந்திருக்க வேண்டும்.  

சட்ட நாதர் கோயிலின் பெயரே காரணப் பெயர். 

யாழ் இராச்சியம் போத்துக்கேயர் கைவசமாகும் வரைக்கும், தினம் தோறும்  நிர்வாகத்தையும், ஆட்சியையும் தொடங்க முன்பு,  ஆட்சிக்கு, அரசுக்கு, அரசனுக்கு ஆசி வேண்டி அரசின் சட்டக் கோவையை சட்டநாதர் கோயிலின் சிவன் (சிவ லிங்கம்) திருவூலத்தில் வைத்து பூசை செய்து விட்டே, நிர்வாகம் ஆரம்பம் ஆகும். இதன் காரணமே சட்ட நாதர் எனும் பெயர் கோயிலுக்கு.  

 

4 hours ago, Nathamuni said:

எதனை சொல்கிறார் என்று தெரியவில்லை. யாழில் இருக்க வில்லை என்று நினைக்கிறேன்.

தற்போதைய வரலாற்று குறிப்பு:

http://www.ceylontamils.com/history/history4.php

"

The Nallur Kandasamy Kovil was demolished under orders given by de Oliveriya on 2 February 1621, the day he assumed office as the senior Portuguese official in Jaffna. In 1622, the last great Ariya Chakravarti temple, the Thirukonamalai Tiru Konesar Kovil in Trincomalee was also torn down. In both Jaffna and Trincomalee, temple masonry was used to enhance the fortifications being built by the new colonial masters to withstand assault by modern weaponry. In Jaffna and in other towns, the destroyed temples were provided the building blocks for churches.

Perhaps the greatest crime was de Oliveriya's destruction of the Saraswati Mahal, which held the Ola leaf and copper-plate inscriptions containing the history of the oldest written language in the world. This ancient museum and library, the repository of all the lore and history of the Tamil people, was destroyed without a trace."

 

இன்னமும் எனது தேடுதல் தொடக்கிறது.

 the last great Ariya Chakravarti temple  

இந்தக் கோயில் இப்போதைய நிலையில் எது? அல்லது அதன் சுவடே அழிந்து விட்டதா? 

 

Edited by Kadancha
add info

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி & Kadancha பலவிடயங்களை இப்போதுதான் அறிகின்றேன், தொடர்ந்து பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இராச்சியத்தில் சரசுவதி மகால் இருந்தததற்கான வேறு ஓர் வரலாற்றுக்குறிப்பு.

http://community.worldheritage.org/articles/eng/Jaffna

"Most historic buildings such as Temples, Saraswathy Mahal library and palaces in the royal city of Nallur and the rest of Jaffna peninsula were destroyed by the Portuguese colonials. Materials from destroyed buildings were used in the construction of the Jaffna fort and other fortifications."

https://enacademic.com/dic.nsf/enwiki/4691479

"There were three rebellions against the Portuguese rule. During the next 40 years until the Dutch capture of Jaffna fort in 1658, the Portuguese destroyed every known Hindu temple and the "Saraswathy Mahal" library in Nallur, that held all the literary output of the kingdom until then."

google அல்லது வேறு search engine கொண்டு தேடிப்பாருங்கள், வரலாற்றுடன் தொடர்பில்லாத blogs போன்றவற்றிலும் ஓர் passing வரலாற்று குறிப்பாக இருக்கிறது. 

ஒரு குறிப்பில் சரசுவதி மகா ஆலயம் எனவும் எழுதப்பட்டு உள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.