Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர்நீத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image1-720x450.jpeg

உயிர்நீத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி!

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் வெவ்வேறு வாகனங்களில், அங்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, கேரதீவில் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image0.jpeg

http://athavannews.com/உயிர்நீத்த-உறவுகளுக்கு-ம/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் அஞ்சலி

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.இன்றைய நினைவேந்தல் நிகழ்வு குறித்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு நேற்றைய தினம் தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்பாட்டு குழுவினர் முன்னரே அறிவித்திருந்தனர்.இதேவேளை, முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இன்று வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)11234

 

http://www.samakalam.com/செய்திகள்/முள்ளிவாய்க்காலில்-இறுத/

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

உயிர்நீத்த போராளிகள், மக்கள் அனைவருக்கும் அஞ்சலிகள். புலம் பெயர்த்த சிலர் எவ்வளவு குத்தி முறிஞ்சாலும்  தாயகமக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும்  தான் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிக்கான போராட்டத்தை புதிய உத்திகள், புதிய வழிகளில் முன்னெடுப்போம்: நினைவேந்தல் உரையில் விக்கினேஸ்வரன்

600-3.png“தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் நாம் தொடர்ந்தும் பயணிப்போம். நீதிக்கான எமது போராட்டத்தை புதிய உத்திகள் மற்றும் புதிய வழிகளில் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து குறிப்பாக எமது இளையோர் சமுதாயத்தை உள்ளீர்த்து மீண்டும் வடக்கு கிழக்கில் தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். இனியொரு விதி செய்வோம் என்று இந்த நினைவு நாளில் உறுதிகொள்வோம்.”

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் ஆற்றிய உரையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு கூறியிருக்கின்றார். அவரது உரையில் முழு விபரம் வருமாறு:

“முள்ளிவாய்க்காலில் 11 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பின் வலிகள் ஒருபுறம், நீதி கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தடைகள் வந்தாலும் நீதிக்கும் உரிமைகளுக்குமான எமது போராட்டம் ஓயாது என்ற வேட்கை ஒருபுறம், தொடந்து எமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் கட்டமைப்பு மற்றும் கலாசார இனப்படுகொலையின் கொடூரங்கள் ஒருபுறமுமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை இன்றைய தினம் நினைவு கூர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான எமது மக்களுக்கு என்ன நடந்தது என்று இன்னமும் தெரியவில்லை. எமது அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் வாடுகின்றார்கள். போரிலே ஊனமுற்றவர்களும், முன்னாள் போராளிகளும், விதவைகளும் தொடர்ந்து சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவருகின்றார்கள். எமது தொல்லியல் கலாசார சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கில் எமது பூர்வீக நிலங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மூத்த மொழியான எமது தமிழ் மொழியை மற்றும் எமது பாரம்பரிய இருக்கையின் சின்னங்களை அழிக்கும் கைங்கரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முடியாதவர்களாக நாம் தொடர்ந்து ஏமாளிகளாக இருந்துவருகின்றோம். இதுதான் உண்மை. இதற்கு காரணம், முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் அணுகுமுறைகளில் நாம் விட்ட தவறுகளே ஆகும்.

எறிகணைகள் வீசியும் விமானங்கள் மூலம் குண்டுகள் போடப்பட்டும், பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களை செல்லுமாறு கூறிவிட்டு அவர்கள் அங்கு தாக்கப்பட்டும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டும், சரண் அடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கில் எமது தமிழ் மக்கள் மாத்திரம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டமையை இனப்படுகொலை என்று ஏற்க மறுத்தோம். மாறாக நடந்தது இனப்படுகொலை அல்ல என்று வாதிட்டோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு தொடர்ந்து கால அவகாசம் பெற்றுக்கொடுத்து எமக்கு நாமே நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் செயற்பட்டோம். எமது வரலாற்றில் இருந்து எந்தப் பாடங்களையும் கவனத்தில் எடுக்காமல் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் எமக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்திவரும் சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணாகதி அரசியலை மேற்கொண்டோம். இதன் காரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி எம்மை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது. எமது உரிமைகளை பெறுவதற்கும் வாழ்வை வளமாக்குவதற்குமான அரசியல் தீர்வும் தொலை தூரம் சென்றுவிட்டது.

எமக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொண்டு எமது பொருளாதாரம், கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை செழுமைபெறச் செய்வதற்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி மிக முக்கியமானது. இந்த நீதியின் அவசியத்தை குறைத்து மதிப்பிட்டோ அல்லது அதனை கடந்து சென்றோ ஒருபோதும் எமது அரசியல் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ளவோ அல்லது வளமான எதிர்காலத்தை கட்டி எழுப்பவோ முடியாது. ஆகவே, இதனை மையமாக வைத்து எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியல், இராஜதந்திர போராட்ட உத்திகளையும் வழி பாதைகளையும் மீள் பரிசீலனை செய்யும் கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்.

நாம் விட்ட தவறுகளே இன்று இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டன. தொடர்ந்தும் நாம் ஏமாளிகளாக இல்லாமல் கட்சி அரசியலுக்கு அப்பால் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் பரிகார நீதியினுடனான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றை முன்கொண்டு செல்வோமானால் நாம் எமது இலக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். இதற்காக கட்சி அரசியலுக்கப்பால் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதுடன் ஏனைய அரசியல் கட்சிகளையும் இதுவிடயத்தில் இணைந்து செயற்படவருமாறு அழைப்புவிடுக்கின்றேன்.

நீதிக்கும் சமாதானத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நாம் எந்தளவுக்கு எமக்கு எதிரான இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோமோ அந்தளவுக்கு நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் வாய்ப்புக்களும் அதிகரிப்பன.

நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு முறையான வழிகளில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நாம் முன்னகர்த்தி செல்வதானது மீண்டும் அந்த குற்றங்கள் புரியப்படுவதைத் தடுப்பதுடன் நிலையான நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்படுவதற்கும் திறவுகோலாக அமையும். குற்றம் இழைத்தவர்களுக்கு அவற்றில் இருந்து தண்டனை விலக்களிக்கப்படுவதானது சமூகக் கட்டமைப்பை சீர்குலைப்பதுடன் அரசாங்கத்தின் மீது அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதுடன் நிலையான சமாதானம் ஏற்படுவதற்கும் குந்தகமாக அமையும்.

எமது மக்கள் மத்தியிலே தமக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற உணர்வு ஏற்படும்போது தான் அவர்கள் மத்தியில் இருந்து ஏமாற்றம் , சலிப்பு , கசப்புணர்வு ஆகியன அகன்று நல்லிணக்கம் ஏற்பட்டு சமாதான நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான நம்பிக்கையையும் அது ஏற்படுத்தும். குற்றம் செய்தவர்களின் மீது வழக்குகள் தொடரப்படுவது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் பட்ட துன்பங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்கள் தொலைத்த கௌரவத்தை அவர்கள் மீள நிலைநாட்டுவதற்கும் உதவுகின்றது.

இந்த அடிப்படையில் தான் நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று மேம்படுத்தி வலுப்படுத்துகின்றன. ஆனால், இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் நீதி முற்றிலுமாக மறுக்கபட்டுள்ள நிலையில், எம் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது தற்செயலாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ ஏற்பட்ட ஒன்று அல்ல. நன்கு திட்டமிட்ட முறையில் எமது இருப்பு, அடையாளம் ஆகியவற்றை இலங்கையில் இல்லாமல் செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளே இவை. இத் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உக்கிர நிலை பெற்றுள்ளது. ஆகவே நாம் அரசியல், இராஜதந்திர வழிகளில் போராடித்தான் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கத்துக்கு மயில் இறகுகளினால் தடவுவதுபோல ஒத்தடம் கொடுப்பதன் மூலம் எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. கடந்த ஐந்து வருட கால அனுபவங்கள் எம்மைச் சரியான வழியில் இட்டுச் செல்ல உதவி புரிய வேண்டும்.

மேலும் யுத்தத்தில் என்ன நடந்தது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பவற்றை எல்லாம் எமது சிங்கள சகோதரர்கள் அறிந்து கொள்வதும் அவசியமானது. ஆனால், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் சிங்கள மக்கள் இருட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். சாட்சிகள் இல்லா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றுமே சிங்கள மக்கள் இன்றும் நினைக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்டமையை அநேகமான சிங்கள மக்கள் நம்புவதற்கு தயார் இல்லை. விடுதலைப்புலிகள் ஏன் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள் என்ற உண்மையையும், எமது உண்மையான வரலாறு, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கு நடந்துகொண்டு இருக்கின்ற அநீதிகள் ஆகியவற்றை சிங்கள மக்கள் அறிய வேண்டும். இதை எடுத்தியம்ப நாங்கள் தயக்கம் காட்டவேண்டியதில்லை. அப்பொழுதுதான் நிலையான நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்படமுடியும்.

அதனால்த் தான் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகின்றேன். உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இதில் பழிவாங்கும் நோக்கம் எதுவும் எமக்கு இல்லை. இலங்கையிலே நிலையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முரண்பாடுகளுக்கான கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி எமது மக்கள் மீது தொடரும் இனப்படுகொலையை நாம் நிறுத்த வேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே, ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.

கோவிட் 19 தாக்கம் காரணமாக முழு உலகமும் பெரும் நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்பட்டு மீண்டு எழுவதற்கான எத்தனங்களில் முழுக் கவனத்தைத் திசை திருப்பி இருப்பதை நாம் அறிவோம். கோவிட் 19 க்கு எதிரான சர்வதேச முன்னெடுப்புக்களுக்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட உலகம் முழுவதிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தவிதமான அலட்சியமோ கவனக்குறைவோ இல்லாமல் ஐ. நா சபையும் சர்வதேச சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் நாம் தொடர்ந்தும் பயணிப்போம். நீதிக்கான எமது போராட்டத்தை புதிய உத்திகள் மற்றும் புதிய வழிகளில் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து குறிப்பாக எமது இளையோர் சமுதாயத்தை உள்ளீர்த்து மீண்டும் வடக்கு கிழக்கில் தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். இனியொரு விதி செய்வோம் என்று இந்த நினைவு நாளில் உறுதிகொள்வோம்.

முள்ளிவாய்க்காலில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நாளில் உயிர் நீத்த அனைவரையும் நினைத்து, அவர்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து என் இந்தச் சிற்றுரையை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.

 

http://thinakkural.lk/article/42273

மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

virakesari_news__5_.jpg


தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணுவித்து,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

DSC_0673.JPG


குறித்த அஞ்சலி நிகழ்வில் மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகள்,மனித உரிமைகள் செயற்பாட்டளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு கலந்து கொண்டவர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி குறித்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியில் கலந்துகொண்டவர்களுக்கு உப்புக்கஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/82276

 

DSC_0678.JPG

 

DSC_0700.JPG

 

DSC_0708.JPG

98175368_3184013028299119_662374190011121664_o.jpg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_ohc=4RJrMjST7NAAX8RrH49&_nc_ht=scontent-yyz1-1.xx&_nc_tp=7&oh=85d085c81a5a465b4dee9e384fa33610&oe=5EE78457

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

virakesari_news__8_.jpg

 

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை(18) மாலை4.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர் சுடர் ஏற்றினார்.
 

தொடர்ந்து கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மெழுகுதிரிகளை எரித்து குறித்த வரலாற்று சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்கான பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

ert__7_.jpeg

 

அத்துடன் நிகழ்வில் மௌன பிராத்தனை முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலம் தொடர்பாக பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படுவதன் ஊடாக ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச பொறிமுறையினூடாக நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/82289

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=AvggNNytGxg&feature=emb_logo

வவுனியாவில் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நினைவேந்தல்

 

வவுனியாவில் அக்கினி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா குடியிருப்பு குளத்தடியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து  நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தின் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டாளர்களை அழைத்து இவ்விடத்தில் நினைவேந்தலை நடாத்தவேண்டாம், இது பொதுவான இடம்என்று தெரிவித்திருந்தனர்.
 
இதனால் பொலிசாருக்கும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடுமையான முரன்பாடு ஏற்பட்டிருந்தது. நாளையதினம் இடம்பெறவுள்ள போர் வெற்றிவிழா நிகழ்வை உங்களால் நிறுத்தமுடியுமா என்று பொலிசாரிடம் கேள்வி எழுப்பிய ஏற்பாட்டாளர்கள்,இங்கே கடமையில் நிற்கும் புலனாய்வு பிரிவினர் சமூக இடைவெளியை பின்பற்றியா பணியை மேற்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தனர்
 
எனினும் குறித்த பகுதியில் நிகழ்வை நடாத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
 
பின்னர் பொலிசாருடன் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் பேச்சுவார்த்தை நடாத்தியதையடுத்து,பதாதை எதனையும் காட்சிபடுத்தாமல் சமூக இடைவெளியை பினபற்றி நிகழ்வை நடாத்துமாறு பொலிசாரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.பின்னர் பதாதை அகற்றப்பட்டு நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
 
இதேவளை பேச்சுவார்தை இடம்பெறும் போது காணொளியினை எடுக்க வேண்டாம் என்று பொலிசாரால் ஊடகவியலாளர்களிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் ஊடகவியலாளர்கள் தமது பணியினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

வவுனியாவில்  பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்  நினைவேந்தல்

 

வவுனியாவில்  பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்  நினைவேந்தல்

வவுனியாவில்  பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்  நினைவேந்தல்

http://www.palmyrahtamilnews.com/2020/05/18/வவுனியாவில்-பொலிசாரின்/

முன்னாள் அமைச்சர் பிரபா கணேசன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய தினம் அஞ்சலி செலுத்தியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழவுக்கள் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த அவர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி

http://www.palmyrahtamilnews.com/2020/05/18/முன்னாள்-அமைச்சர்-முள்ளி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.