Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளிடம் ஒரு இரகசியம் விமானப்படை விமானி கைவசமா?

Featured Replies

இலங்கை விமானப்படையினர் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது. மூடிய அறையில் அடிக்கடி இரகசியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஆலோசனைக்காக நிபுணர்கள் அழைக்கப்படுகின்றனர்.

20060925141512p20.JPG

என்னதான் நடக்கின்றது விமானப்படையில்?

வேளிப்படையாகப் பார்க்கும் போது, வான்புலிகளின் அச்சுறுத்தலை எப்படிச்சமாளிப்பது என்பதற்கான ஆலோசனைகளும் முன்னேற்பாடுகளும் இவை என்பது போலத் தெரிந்தாலும் உள்ளேயிருப்பது வேறு பிரச்சினை என்கிறார்கள் விடயம் தெரிந்தவர்கள்.

விமானப்படையுடன் தொடர்புடையவர்கள் எமது கொழும்புத் தொடர்பாளர்கள், சில பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் என்று நாம் ஒரு சுற்று விசாரணைகளில் ஈடுபட்டோம். அப்போது தெரியவந்த விசயங்கள் அதிர்ச்சியானவை. ஏதோ மர்ம நாவல் படிப்பது போல விறுவிறுப்பானவை.

குண்டுவீசச் சென்ற விமானம் தளம் திரும்பவில்லை என்பது உண்மை

கடந்தவாரம் பரபரப்பு வீக்லி பத்திரிகையின் கவர் ஸ்டோரியாக புலிகளால் தாக்கப்பட்ட இலங்கை விமானப்படை விமானம் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தச் சம்பவத்துடன் தான் தொடங்குகிறது விமானப்படையின் சங்கடக் கதை.

கட்டுநாயக்க வான்படைத்தளத்திலிருந்து தான் விமானம் புறப்பட்டிருக்கின்றது. வன்னியிலுள்ள இலக்கு ஒன்றின் மீது குண்டுவீச வேண்டும் என்ற வரைபடம் விமானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையான ‘செக்’ எல்லாம் செய்யப்பட்டு விமானம் ஒழுங்காகப் பறக்கும் நிலையில் இருக்கின்றது என்று விமானப்படையின் என்ஜினியர் ஒருவர் உறுதிப்படுத்திய பின்னர்தான் விமானம் புறப்பட்டுச் சென்றிருக்கின்றது.

புறப்பட்ட விமானம் எந்தவகை விமானம் என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது. ஆதைப் பின்னர் பார்க்கலாம்.

இந்தப் போர் விமானங்கள் வான்தளத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது அவை ஒரு இலக்கத்தாலே அடையாளம் கூறப்படுகின்றது. அந்த இலக்கம் என்னவென்றால் விமானத்தின் Tail Number (விமானத்தின் பின்புறமிருக்கும் வால் பகுதியில் சிறிய எழுத்துக்களில் இந்த இலக்கம் எழுதப்பட்டிருக்கும்).

விமானி கட்டுநாயக்க ATC கோபுரத்திடம் விமானத்தின் வால் இலக்கத்தினைச் சொல்லி அனுமதி கேட்டிருக்கிறார். பறக்கலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டு விமானி விமானத்தை மேலெழுப்பியுள்ளார்.

ஓரளவு உயரம் வரை மேலெழுந்து பறக்கும் விமானம் குறிப்பிட்ட உயரம் வந்தவுடன் விமானி விமானத்தின் Elevation Control பொத்தானை சுழியத்திற்குக் கொண்டு வருவார். இந்த நடைமுறையை Finalization of airborne என்று சொல்வார்கள். அதன் பிறகு விமானம் தரைக்குச் சமாந்தரமாகப் பறக்கத் தொடங்கும்.

நூற்றுக்குத் தொன்னூறு சதவிகித விமானிகள் இந்த நடைமுறை முடிந்தவுடன் உடனடியாகத் தாங்கள் கிளம்பிய விமானத்தளத்தின் ACT கோபுரத்தை அழைத்து Zero Elevation initialized என்று தெரிவிப்பார்கள். அத்துடன், விமானத்தின் நிலை திருப்திகரமாக இருக்கிறதா என்பதையும் தெரிவிப்பார்கள்.

கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்ட வானூர்தியின் வானோடியும் கொழும்பு ATC யினைத் தொடர்பு கொண்டு இதைத் தெரிவித்திருக்கிறார். விமானம் வடக்கு நோக்கிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது.

சுமார் 80 கிலோமீட்டர்கள் வடக்கே பறந்த நிலையில் விமானம் பலாவி வான்படைத் தளத்தின் அலைவரிசைக்குள் வந்திருக்கின்றது. அங்குள்ள கோபுரத்தில் இருந்த கட்டுப்பாட்டாளரைத் தொடர்புகொண்ட விமானி, விமானத்தின் வால் இலக்கத்தையும் தான் பறக்கும் திசையையும் கூறியிருக்கின்றார்.

இது ஒரு வழமையான நடைமுறை.

அதன் பிறகு சிறிது நேரத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் வான்பரப்புக்குள் உள்நுழைந்திருக்கின்றது. அப்போது வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்திருக்கின்றது.

இந்த விமானத்தை தரையில் இருந்து பார்த்தவர்கள் எதிர்பார்த்தது போல விமானம் குண்டு வீசவில்லை. மாறாக வலது புறமாகத் திரும்பிப் பறந்திருக்கின்றது. அப்படியே முகமாலைக்கு மேலாகப் பறந்து கடலுக்கு மேலால் வட்டமடித்து மீண்டும் முல்லைத்தீவு கடல் இருக்கும் திசையிலிருந்து வன்னி வான்னெல்லைக்குள் உள்நுழைந்திருக்கின்றது.

இந்த இரண்டாவது முறை வந்த போது முதல் தடைவ வந்தபோது பறந்து வந்த உயரத்தைவிடக் குறைவான உயரத்திலேயே வந்திருக்கின்றது. அப்போதும் வானம் தெளிவில்லாமல் மப்பும் மந்தாரமுமாகவே இருந்ததாகத் தெரிகின்றது.

முகமாலைக்கு மேலால் பறந்தபோது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தரையிலிருந்து விமானத்தைப் பார்த்திருக்கின்றார்கள். அதுதான் இந்த விமானத்தை அரச தரப்பில் இருந்து கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம்.

அதன்பிறகு விமானத்தை அவர்கள் பார்க்கவும் இல்லை. விமானம் கட்டுநாயக்க வான்படைத்தளத்துக்குத் திரும்பிச் செல்லவும் இல்லை. பலாலி, பலாவி, கட்டுநாயக்க மற்றும் ஹிங்கரங்கொட என்று எந்தவொரு ATC கோபுரத்தையும் தொடர்பு கொள்ளவுமில்லை.

“சுட்டு வீழ்த்தினோம்”

இந்தச் சம்பவம் நடைபெறும் சிறிது நேரத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று, இலங்கை விமானப்படையின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று வெளியிடப்பட்டது.

ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஊடகவியலாளர்களிற்குக் கொடுக்கப்பட்டிருந்த வன்னித் தொலைபேசி இலக்கங்கள் சுறுசுறுப்பாக இருந்தன.

ஆரம்பத்தில் வன்னியிலிருந்து வந்த தகவலில் வீழ்த்தப்பட்டது கிபிர் இரக விமானம் என்று கூறப்பட்டது.

இது நடைபெற்று சுமார் ஒரு மணிநேரத்தில், வீழத்தப்பட்ட விமானம் மிக்-27 இரக விமானம் என்று புலிகளின் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் கிபீர் விமானம் என்று ஏன் கூறப்பட்டது என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.

இதுதான் முதலில் சந்தேகப் பொறியை ஏற்படுத்தியது.

புலிகளிற்கு நன்கு பரிச்சயமான விமானம்

விமானத்தை விடுதலைப்புலிகள் தவறாக அடையாளம் கண்டிருப்பார்கள் என்று யாரும் நம்பத் தயாரான இல்லை. காரணம் இந்த விமானங்கள் அவர்களுக்கு நன்றாகவே பரீட்சயமான விமானங்கள். மிக உயரத்தில் விமானம் பறக்கும் போதே அதன் ஓசையை வைத்தே அது என்ன இரக விமானம் என்று அவர்களால் கூறமுடியும்.

அதே நேரத்தில், இந்த விமானம் பகல் நேரத்தில் வந்திருக்கின்றது. உயரம் குறைவாகவும் வந்திருக்கின்றது.

நிச்சயமான வந்தது என்ன இரக விமானம் என்பதை தெரிந்துகொண்டிருப்பார்கள். அப்படியிருந்தும் எதற்காக முதலில் கிபீர் என்றும் பின்னர் மிக் என்றும் கூறவேண்டும்.

இதில் ஏதோ தந்திரம் இருக்கின்றது என்று உடனே புரிந்துகொள்ளப்பட்டது.

பாதுகாப்புப் படையினரின் மிரட்டலான வேண்டுகோள்.

விமானம் வீழ்த்தப்பட்டது என்று புலிககள் அறிவித்த உடனேயே ஊடகவியலாளர்கள் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் தகவற் தொடர்பு மையத்தைத் தொடர்பு கொண்டார்கள். தங்களுடைய விமானங்கள் எதுவும் வீழத்தப்படவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.

வடக்கே அனுப்பப்பட்ட விமானங்களில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறுக்காக எங்காவது தரையிறக்கப்பட்டதா என்று நாங்கள் விசாரித்தபோது, அது பற்றிய தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அரைமணி நேரத்தின் பின்னர் தொடர்பு கொள்ளும் படியும் கூறினார்கள்.

அரைமணிநேரத்தின் பின்னர் தொர்புகொள்ள முயன்றபோது, தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில், கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகங்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொடர்பாளர்களில் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, இந்தச் செய்தியை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். விமானப்படையினரின் விமானங்கள் பற்றிய செய்தியை வெளியிடுவது தேசியப் பாதுகாப்பிற்கு எதிரானது என்ற வகையில் பார்க்கப்படும் என்று இலேசான மிரட்டல் தொனியில் கூறப்பட்டது.

கொழும்பில் பத்திரிகையாளர்கள் சிலரைத் தொடர்புகொண்டபோது அவர்கள் தனிப்பட்ட முறையில் இதை உறுதிப்படுத்தினார்கள்.

இலங்கையில் ஒருவகையான பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருக்கின்றது. எதெது தேசியப் பாதுகாப்புக்கு எதிரானது என்று ஒரு தெளிவான வரைமுறை இல்லை. ஆனால் எழுதுவது எதையும் அவர்கள் நினைத்தால், தேசியப் பாதுகாப்பிற்கு எதிரானது என்று கூறி எழுதிய ஆளையும் கைது செய்துவிடலாம்(செய்தும் இருக்கிறார்கள்).

இதனால் இலங்கையில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் எல்லாம் அடக்கியே வாசித்தன. வுழமையாக ஞாயிற்றுக் கிழமைப் பத்திரிகைகளில் இராணுவ ஆய்வாளர்கள் அந்த வாரம் நடைபெறும் சிறிய சிறிய விடயங்கள் பற்றிக்கூட எழுதுவார்கள். இது நடைபெற்றபின் வெளியாகிய அடுத்த ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் யாரும் இது பற்றி மூச்சுக்கூட விடவில்லை(சம்பவம் நடைபெற்றது திங்கட்கிழமை மதியம் 2:30 க்கு!). சரி உண்மையில் நடந்தது என்ன?

புலிகளின் கையில் விமானி?

எமக்குக் கிடைக்கப்பட்ட ஒரு தகவலின்படி சுடப்பட்ட விமானம் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள்தான் வீழ்ந்து என்று தெரிகின்றது. அதே நேரத்தில் விமானம் விழுவதற்கு முன் விமானி வான்குடைமூலம் குதித்துவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் குதித்த விமானியை புலிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். அத்துடன் வீழ்ந்த விமானத்தின் பாகங்களையும் புலிகள் எடுத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

அப்படி நடைபெற்றிருந்தால் இதைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்திருக்கலாமே?

ஏதோ ஒரு முக்கிய காரணத்திற்காக தங்களிடம் இலங்கை விமானப்படையின் விமானி இருப்பதைப் புலிகள் தெரிவிக்காமல் இருக்கிறார்கள் என்று நம்பப்படுகின்றது.

அப்படி நடப்பதற்குச் சில சாத்தியங்களும் இருக்கின்றன.

சாத்தியம் 1

அகப்பட்டுள்ள விமானி ஒரு வெளிநாட்டுக் குடியாளராக இருக்கலாம். அப்படி இருந்தால் விமானியின் நாடு தமது குடியாளர் ஒருவரை விடுவிக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம். அது புலிகளிற்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

இலங்கை விமானப்படையின் விமானங்களைச் செலுத்தும் விமானிகளில் பல வெளிநாட்டவர்கள் இருக்கிறார்கள். இரஷ்சியர்கள், உக்கிரேனியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் என்று வௌ;வேறு நாட்டுக் குடிமக்கள் இருக்கிறார்கள்.

சாத்தியம் 2

விடயத்தை அறிவிப்பதற்கு முக்கிய தருணம் ஒன்றுக்காகப் புலிகள் காத்திருக்கலாம்.

சாத்தியம் 3

பிடிபட்ட விமானியும், விழுந்த விமானம் பற்றிய விபரமும் புலிகளுக்கு ஒரு முக்கிய துருப்பாக இருக்கலாம். எப்படியென்றால், தொடர்ந்தும் தமிழ்ப்பகுதிகளில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களைச் செய்தால் இந்த விபரங்களை வெளியிருவோம் என்று புலிகளால் தகவல் கொடுக்கட்டிருக்கலாம்.

இது நடைபெறுவதற்கு முன்பு கிட்டத்தட்ட தினமும் வன்னிமீது வான்தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திங்கட்கிழமையின் பின்னர் வான்தாக்குதல்களே நடைபெறவில்லை என்பதைக் கவனியுங்கள்.

மேற்படி சாத்தியங்களில் ஏதாவது ஒன்றுக்கும், விழுந்த விமானம் என்ன இரக விமானம் என்பதற்கும் கூடச் சம்மந்தம் இருக்கலாம். அதற்காகவே, முதலில் கிபீர் விமானம் என்று தெரிவித்துவிட்டு பின்னர் மிக் விமானம் என்று மாற்றியிருக்கலாம். எப்படியென்றால் இலங்கை விமானப்படைக்காக ஒரு குறிப்பிட்ட விமானங்கள் அனைத்துமே வெளிநாட்டு விமானிகளால் செலுத்தப்படும் விமானங்களாக இருக்கலாம். அப்படியிருக்குமானால் குறிப்பிட்ட இரக விமானத்தை வீழ்த்திவிட்டோம் என்று புலிகள் அறிவித்தால் வெளிநாட்டு விமானியின் கதி என்ன என்ற கேள்வி வரும்.

மற்றுமோர் ‘விறுவிறு’ தகவல்

கீழே எழுதப்பட்ட தகவலும் இதுபற்றி விசாரித்த போது கிடைத்தது. அதை நம்புவதும் நம்பாததும் வாசகர்களின் முடிவு. எங்களிற்குக் கிடைத்த தகவல்களைத் தருகிறோம். துகவலைத் தந்தவர் இதற்குமுன் தந்த தகவல்கள் சில பலித்திருக்கின்றன.

அதன்படி, இந்த விமானம் வன்னிக்குள் தரையிறக்கப்பட்டதாம்.

கிடைத்த தகவலின்படி இலங்கை விமானப்படையினர் விமானிகளை வெளிநாட்டில் எடுத்தபோது புலிகளின் ஆள் ஒருவரும் அதில் கலந்துவிட்டாராம். அவர் வெளிநாட்டில் இருந்த தமிழரா அல்லது வெளிநாட்டுக்காரரா என்பது தெரியவில்லை.

விமானப்படையினரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இந்த புலிகளின் ஆள் இலங்கை விமானப்படைக்காக வன்னிமீது சில குண்டுவீச்சுக்களைச் செய்து திரும்பி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தாராம்.

உரிய நேரம் வரும்போது விமானப்படையின் விமானம் ஒன்றுடன் வன்னிக்குள் தரையிறக்கி, விமானத்தைப் புலிகளிடம் சேர்;ப்பித்தும்விட்டாராம்.

இப்படி நடைபெறவும் சந்தர்ப்பம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முன் இலங்கை அரசு தமது இராணுவத்திற்காக வெளிநாடு ஒன்றில் ஆயுதம் வாங்கியபோது புலிகள் தமது வர்த்தகக் கப்பலிலே அந்த ஆயுதங்கள் ஏற்றும்படி ஏற்பாடு செய்துவிட்டு, ஆயுதங்களைத் தாங்களே எடுத்துக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கின்றது.

அது சாத்தியமென்றால் இதுவும் சாத்தியம் தான்.

மிக் அல்லது கிபீர் விமானத்தை வன்னிக்குள் தரையிறக்க முடியுமா?

முடியும். அதற்குத் தேவையெல்லாம் ஓரளவு நீளமான ஓடுபாதை. ஏற்கனவே புலிகளிடம் இருக்கும் இரண்டாவது ஓடுபாதை(புதுக்குடியிருப்பு) C-130 இரக கார்கோ விமானங்களை இறக்கக்கூடிய அளவு நீளமானது என்று கூறப்பட்டது. அப்படியான ஓடுபாதையில் மிக் அல்லது கிபீர் விமானத்தை விமானி நினைத்தால் இறக்கமுடியும்.

விமானத்தின் Final approachd; போது வேகத்தை நன்றாகக் குறைக்கவேண்டும். அத்துடன் டயனெinh றநபைவ மிகக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பயணிகள் விமானம் என்றால் அதன் கார்கோ ஏற்றும் பகுதியிலுள்ள பொருட்களைக் கொட்டி நிறையைக் குறைக்கலாம். போர் விமானங்களில் வேறு பொருட்கள் இருக்காதே, எப்படி நிறையைக் குறைப்பது.

குறைக்கலாம். அந்த நடைமுறையை கரநட னரஅpiபெ என்று சொல்வார்கள். அதாவது விமானத்திலுள்ள எரிபொருளை வெளியே கொட்டுவது. தரையிறங்கும் போது மோசமான காலநிலை இருந்தால் இப்படி எரிபொருளைக் கொட்டுவது வர்த்தக விமானங்களில் ஒரு வழமையான நடைமுறை. எரிபொருளை வழமையாக கடலிற்கு மேலால் பறக்கும் போதுதான் கொட்டுவார்கள்.

இலங்கை விமானப்படையின் விமானம் வன்னிக்குள் வந்துவிட்டு முகமாலைக்கு மேலாக கடற்பரப்பின்மீது பறந்துவிட்டு முல்லைத்தீவினூடாக உள்ளே வந்தது என்று எழுதியது ஞாபகமிருக்கிறதா? விமானம் கடற்பக்கமாகச் சென்றதே எரிபொருளைக் கடலிற்குள் கொட்டுவதற்காகக் கூட இருக்கலாம்!

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை நடைபெற்றிருக்க வெள்ளிக்கிழமை இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று கட்டுநாயக்காவில் வந்து தரையிறங்கியது. அதில் வந்தவர்கள் இராடர் தொழில்நுட்பம் சம்மந்தப்பட்ட வல்லுனர்கள் என்று கூறப்பட்டது.

இவர்கள் வந்தது இந்தியாவில் இலங்கைக்கு வழங்கப்பட்ட 2னு இராடர்கள் பற்றிய தொழில்நுட்ப காரணங்களிற்காக என்று சொல்லப்பட்டாலும், அவர்களது வருகைக்கு வேறு ஒரு காரணமும் இருக்கலாம்.

அது என்னவென்றால், இலங்கை விமானப்படையிடம் இருக்கும் மிக் மற்றும் கிபீர் விமானங்கள் இரண்டிலுமே விமானத்துக்குள்ளேயும் ஒரு இராடர் இருக்கின்றது. இந்த இராடரை வெளியே இருந்து கண்டுபிடிக்கலாம். அதற்கான கருவிகள் இலங்கை விமானப்படையிடம் இல்லாவிட்டாலும் இந்திய விமானப்படை விமானங்களில்; நிச்சயம் இருக்கும்.

ஒரு போர் விமானம் எதிரி நிலப்பரப்பில் காணாமல் போனால் அது எங்கே விழுந்திருக்கும் என்று அறிவதற்கு மற்றொரு விமானம் அனுப்பப்படும். அந்த விமானத்தில் இராடரைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்தால், விழுந்த விமானத்தின் இராடர் தரையில் எந்த இடத்தில் இருக்கலாம் என்பதை சில மீட்டர் பரப்பளவுக்குள் கருவி காட்டிவிடும்.

இந்திய விமானப்படையின் விமானமும் நிபுணர்களும் வெள்ளிக்கிழமை கொழும்பு வந்ததன் காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்.

மற்றொரு தகவலும் இருக்கிறது.

விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்களே தாங்கள் யாரென்று கூறாமல் இலங்கை விமானப்படையைத் தொடர்புகொண்டு அவர்களது விமானம் வன்னியில் எங்கே இருக்கிறது என்று தெரியும் என்று கூறினார்களாம்.

அப்படியொரு விமானம் தொலைந்து போகாமல் இருந்திருந்தால் இந்தக் கூற்றுக்கு விமானப்படையினர் முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டார்கள்.

ஆனால் விமானப்படையினரோ, “எங்கே இருக்கின்றது? விமானம் முழுமையாக இருக்கிறதா?” என்று பரபரப்புடன் விசாரித்தார்களாம்.

அந்தப் பரபரப்பிற்கு அர்த்தம் இருக்கலாம்.

நன்றி- பரபரப்பு ஜெர்னல்

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே :P

உந்தக் கதையை கேக்க நல்லாத்தான் இருக்குங்கோ :P

  • தொடங்கியவர்

உண்மை பொய் நானறியேன் கனடா நண்பர் ஒருவரிடம் இந்த பத்திரிகையை அனுப்பி வைக்குமாறு கேட்டேன் ஆனால் அவர் தட்டச்சு செய்து இக்கட்டுரையை எனக்கு அனுப்பி இருந்தார் நான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற ஒரு நல்லெண்ணத்தில் இந்த கட்டுரையை இங்கு இணைத்தேன் இதில் என்ன உண்மை பொய் என்பது எனக்கு தெரியாது ஆனால் 98ம் ஆண்டு இராணுவத்தின் ஆயுதங்களை புலிகளின் கப்பலில் ஏற்றி புலிகளுக்கு அனுப்பியது யாவரும் அறிந்ததே ஆனால் விமான சம்பவம் பற்றி எனக்கு தெரியாது.திரில்லர் கற்பனை கதை ஒன்றை வாசிப்பது போல இருந்தது சில வேளைகளில் உண்மையாகவும் இருக்கலாம் உண்மை இல்லாமலும் இருக்கலாம் புலிகளே அறிவர்

ஈழப்போராட்டத்தில் புதுமைகள் ஒன்றும் புதிதல்ல..எப்பவும் எதுவும் நடக்கலாம்

இந்த கதை உண்மையாக இருப்பின் போராட்டத்திற்க்கு ஒரு பலமாகத்தானிருக்கும்

புதிய யுத்திகளே சரித்திரம் படைக்கும்.

வாழ்க தமிழ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பேப்பரை சுவிசில் எங்கே வாங்கலாம்? அல்லது தபால் மூலம் பெறுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

  • தொடங்கியவர்

இந்த பேப்பரை சுவிசில் எங்கே வாங்கலாம்? அல்லது தபால் மூலம் பெறுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

http://www.teamalphacanada.com/Paraparapu/...ility/index.htm

untitled-28.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கையும் காலும் கண்ணும் மூக்கும் வைத்து மிக அழகாக கதாசிரியார் சாரி கட்டுரையாசிரியர் பரபரப்பாக எழுதியிருக்கிறார். இது அவருடைய திறமையைக் காட்டுது. இந்தச் செய்தியில கொஞ்சம் உண்மை இருந்திச்சுது எண்டாலும் கூட அவருடைய கற்பனையில மண்விழுந்துபோகும். ஆனால் உண்மையாயிருந்தால் சிறீலங்கா விமானப் படைக்குப் பெரிய அவமானம்.

''பரபரப்பு இதழில்வெளிலரும் ஆக்கங்கள் முழுமையாகவோ பகுதியாகவோஅச்சிலோ இணையத்தளங்களிலோ அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதை சட்டரீதியாகத் தடை செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது"" என போடப்பட்டுள்ளது இதனை உங்களுக்கு அனுப்பிய நண்பர் உங்களுக்கு சொல்லவில்லையா? அல்லது அவரும் இதனை கவனிக்கவில்லையா?

பரபரப்பில் வெளிவரும் சில கட்டுரைகளை இங்கு பதிப்பதற்கு மனம்விரும்பினாலும்இதன்காரண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகைபிடித்தல் உடல் நலத்துக்குகேடு என்டு சிகிரட் பெட்டியில எழுதிவைக்கினம்.அதுக்காக அதை யாரும் பிடிக்கிறதில்லையா என்ன.

  • தொடங்கியவர்

''பரபரப்பு இதழில்வெளிலரும் ஆக்கங்கள் முழுமையாகவோ பகுதியாகவோஅச்சிலோ இணையத்தளங்களிலோ அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதை சட்டரீதியாகத் தடை செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது"" என போடப்பட்டுள்ளது இதனை உங்களுக்கு அனுப்பிய நண்பர் உங்களுக்கு சொல்லவில்லையா? அல்லது அவரும் இதனை கவனிக்கவில்லையா?

பரபரப்பில் வெளிவரும் சில கட்டுரைகளை இங்கு பதிப்பதற்கு மனம்விரும்பினாலும்இதன்காரண

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புகைபிடித்தல் உடல் நலத்துக்குகேடு என்டு சிகிரட் பெட்டியில எழுதிவைக்கினம்.அதுக்காக அதை யாரும் பிடிக்கிறதில்லையா என்ன.

இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.. சிகரட் பெட்டியில் புகைப்பிடிப்பது சட்டவிரோதம் என்று போடவில்லைதானே!

எமது தேசத்தில் பரபரப்பு பத்திரிகை வருவது குறைவு அதற்காக நாம் என்ன செய்ய முடியும் இதுதானே வழி மற்றது பத்திரிகை வெளிவந்து 2 கிழ்மையின் பீன்னரே இங்கு பதிப்பிடிருகின்றோம் ஆக பிரச்சினை எதுவும் இல்லை

பரபரப்புக்கு இது ஒரு நல்ல விளம்பரம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இளந்திரயன் நிலவரம் நிகள்ச்சியில் சொல்லி இருந்தார் எங்களிடம் இலகுரக விமானங்கள் மட்டும் தான் இருக்குது என்று நாங்கள் சொல்லவில்லையே என்று. :blink: மற்றும் முன்பும் ஒரு தடவை தமிழ் விமானி ஒருவர் விமானத்துடன் கானாமல் போன சம்பவமும் நடந்து இருக்குது. அதுக்காக நான் மேல் உள்ள கட்டுரையில் உள்ளது எல்லாம் உன்மை என்று கூற வரவில்லை.

இந்த கட்டுரைக்கும் இராணுவம் அவசரஅவசரமாக ஓடிச்சென்று ஏவுகணைத் தொழில்நுட்பம் கொண்ட MIK29 ஜ கொள்வனவு செய்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ தெரியவில்லை?( புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் இலகுரக விமானங்களை அழிப்பதற்காக MIK29 கொள்வனவு செய்யப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை.)

இந்த கட்டுரைக்கும் இராணுவம் அவசரஅவசரமாக ஓடிச்சென்று ஏவுகணைத் தொழில்நுட்பம் கொண்ட MIK29 ஜ கொள்வனவு செய்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ தெரியவில்லை?( புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் இலகுரக விமானங்களை அழிப்பதற்காக MIK29 கொள்வனவு செய்யப்பட்டது என்பது நம்பும்படியாக இல்லை.)

புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் இலகுரக விமானங்களை அழிப்பதற்காக MIK 29 கொள்வனவு செய்யப்பட தேவையில்லை, ஏனவே கட்டுரை உண்மையாகவும் இருக்கலாம். என்ன இருந்தாலும் இளந்திரையன அண்ணை சொன்னது போல -இது வல்லவன் பம்பரம் மணலிலையும் ஆடும்.

''பரபரப்பு இதழில்வெளிலரும் ஆக்கங்கள் முழுமையாகவோ பகுதியாகவோஅச்சிலோ இணையத்தளங்களிலோ அனுமதியின்றி மறுபிரசுரம் செய்வதை சட்டரீதியாகத் தடை செய்யும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது"" என போடப்பட்டுள்ளது இதனை உங்களுக்கு அனுப்பிய நண்பர் உங்களுக்கு சொல்லவில்லையா? அல்லது அவரும் இதனை கவனிக்கவில்லையா?

பரபரப்பில் வெளிவரும் சில கட்டுரைகளை இங்கு பதிப்பதற்கு மனம்விரும்பினாலும்இதன்காரண

ரிசியின் கட்டுரை படிப்பதற்கு சுவாரசியமாகத்தான் இருக்கிறது.

மிக் வன்னியில் தரையிறக்கப்படுவதற்கு ரிசியின் சொல்லும் சாத்தியங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

ஆனாலும், சாத்தியப்படாத பலவற்றை தலைவர் சாத்தியப்பட வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசத்தில் பரபரப்பு பத்திரிகை வருவது குறைவு அதற்காக நாம் என்ன செய்ய முடியும் இதுதானே வழி மற்றது பத்திரிகை வெளிவந்து 2 கிழ்மையின் பீன்னரே இங்கு பதிப்பிடிருகின்றோம் ஆக பிரச்சினை எதுவும் இல்லை

சிட்னியில் இப்பத்திரிகையினை பிளமிங்டன் பிரமிட்டிலும் , மெல்பேர்ணில் ஒரு வர்த்தக நிலையத்திலும் வாங்கலாம். சிங்கள ஊடகங்களில் ஆய்வாளார்கள் , இந்தியா, அமெரிக்கா ஊடகங்களில் வரும் செய்திகளை மையமாக வைத்தும் இப்பத்திரிகையில் சில ஆய்வுக்கட்டுரைகள் வருகின்றன. இந்திய அமைதிப்படைகாலத்தில் நடந்த சம்பவங்கள் பரபரப்பு ஜேர்னலில் தொடர் கட்டுரையாக வருகிறது. தமிழரின் நிலைப்பாடு, இந்திய நிலைப்பாடு, இலங்கை அரசின் நிலைப்பாடு ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் கட்டுரை விருவிருப்பாகப் போகிறது. பரப்பரப்பு பத்திரிகையில் 'உள்ளே நடந்த கதை' என்ற தொடரில் 80களில் இந்தியா,அமெரிக்கா,இலங்கை, தமிழர் இயக்கங்கள் ஆகிய 4 நிலைகளில் இருந்து தெரியாத பல செய்திகள்( வேறு ஊடகங்களில் பிற்காலத்தில், பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்கள்) அழகாக விருவிருப்பாக சொல்லப்படுகிறது.

கதை கேட்பதற்கு ஹொலிவூட் படம் பார்ப்பது போல் நன்னாத்தான் இருக்கு, உண்மையாக இருந்தால் இன்னும் நன்னா இருக்கும். உண்மையில்லையென்றாலும் பரவாயில்லை, இப்போதைக்கு படம் பார்த்த கிக் ஏறியுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

"கேட்கிறவன் கேணையன் எண்டால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்" என்ற கதையாகக் கிடக்கு!

"கேட்கிறவன் கேணையன் எண்டால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்" என்ற கதையாகக் கிடக்கு!

கேக்குறவன் கேணையனா இருந்தா கேஆர்வி..... :rolleyes::lol::lol: நல்லா மாத்தி சொல்லுறிங்கள் அண்ணா...

நான் பழமொழியைச் சொன்னான். வேற எதுவும் தப்பா அர்த்தம் எடுக்காதீங்கள்.

Edited by வாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.