Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோட்டாபய அரசில் பலமான அமைச்சுப் பதவியை இலக்கு வைக்கும் சுமந்திரன்..? கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

Featured Replies

அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும்.

போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துகிறோம்.

வடக்கு கிழக்கிற்கான மாற்று பொருளாதார நிறுவனமொன்றை ஏற்படுத்தும் முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.

எப்படியான பாத்திரத்தை நாங்கள் வகிக்கப் போகிறோம் என்பது இப்பொழுது தெரியாவிட்டாலும், எங்களிற்கு தெரிந்த ஒன்று, நாங்கள் பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது அரசிடம் அமைச்சர்களை கூட எதிர்பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா வேட்பாளர்களுக்கு, மக்கள் அதிருப்தி வெளியிடும் வகையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சுமந்திரன் வெளியிட்டு வரும் இந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய மக்கள் சந்திப்பில் அமைச்சுப் பதவி எதிர் காலத்தில் பெறுவது கட்டாயம் என்பதை மிகவும் லோஜிக்காக சுமந்திரன் கூறுவதற்கான காரணம் இவை தொடர்பில் ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டால் அதன் அர்த்தத்தை அப்படியே மற்றி கூறுவதற்கு ஏதுவாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், வருகின்ற அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழர்களின் எதிர்கால நிரந்தரத்த தீர்வு குறித்த மாத்திரமே நாங்கள் பேச்சுவார்த்தைகளை

கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் முரண்பாடை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் தாம் கண்காணிப்பதாகவும், மேலும் சுமந்திரன் தீர்வு வருவதற்கு இடையில் அபிவிருத்திக்காக அமைச்சுப் பதவிகளை பெறலாம் எனும் கருத்துப் பட கருத்துக்ககை வெளியிட்டுள்ளமைக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/250691?ref=imp-news

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Rajesh said:

குருவை மிஞ்சிய... சிஷ்யன் தான், சுமந்திரன்.
சம்பந்தனுக்கும், மாவைக்கும்... 
"அல்வா"  கொடுத்த, சுமந்திரன் கெட்டிக்காரன். 👿

  • கருத்துக்கள உறவுகள்

பொதுப்பணி துறை நல்ல வளமான துறை ஒரு வேளை வீதி அபிவிருத்தி , நீர் வழங்கல் , நெடுஞ்சாலை...  என்டு தனி தனியாக பிரித்து கொத்து ரொட்டி போட்டு இருந்தால் நெடுஞ்சாலை துறை கேட்டு வாங்குவது நலம் பயக்கும்..👌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும்.

சர்வதேசத்துடன் பேரம்பேசும் சக்தியாக எங்களை உங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யுங்கள் என்கிறார் சம்பந்தர். நாங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்திடம் கோரிக்கை எதுவும்  வைக்கப்போவதில்லை என்கிறார் மற்றவர். அப்படி என்றால்; சர்வதேசத்திடம்:  இலங்கைக்கு முண்டு கொடுப்பதற்காக இவர்களை நாங்கள் தெரிவு செய்து இவர்களை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு, நாங்கள் தேய்ந்து போகவேண்டும். கொலை செய்தவன் தலைநிமிர்ந்து நிக்கிறான். இழப்புகளின்  இனத்தின் தலைவன் கேள்வி கேட்க நாதியற்று கூனிக்குறுகி, சிரம் தாழ்த்தி, யாசகம் எடுக்கிறார். ஏன்? இத்தனை கோடி தமிழர் உலகமெல்லாம் பரந்து கைகொடுக்க காத்திருக்க, இத்துணை ஒண்டு நாட்டுக்காரன் எவ்வளவு திமிராய் செய்த தவறெல்லாம் சரியென குதர்க்கம் பண்ணுறான். எப்படி? எவ்வளவு குட்டினாலும் நிலத்தை குடைஞ்சும் குனிந்து வணங்குவார் சம்பந்தன், பின் எழுந்து தன் மக்களிடம் சிங்கம் போல் கர்சிப்பார் சம்பந்தன் என்று எதிரிக்கு நல்லாவே தெரியும். சாதாரண பேட்டி எடுக்கும் நபர் மீதே எப்படி காய்ந்து விழுகிறார். ஏன்? "முதுகில் புண்ணுள்ளவனுக்கு காடு நுழைய பயம்." முதுகில வாங்கிச் சேர்த்த சொத்தெல்லாம் விழுந்து விடும் என்கிற பயமே அப்படிச் செய்கிறார். தன்ர பாய்ச்சலில் ஒருவரும் தன்னை கேள்வி கேட்க மாடடார்கள். தலைவனையும், இரகசிய ஒப்பந்தங்களையும், அதற்காக வாங்கிச் சேர்த்த சொத்துக்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிற நப்பாசை..

விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற பண்பு, தவறுகளை தட்டிகேட்கும் திருத்திக்கொள்ளும்  பண்பு,  பொறுமையாக விளக்கம் கொடுக்கும் பண்பு, நம்பிக்கையை கட்டி எழுப்பும் பண்பு எதுவும் இல்லாத சோரம் போன, தோல்வியடைந்த சம்பந்தனும், அவர் கூட்டமும் ஒழிக!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கும், அதன் உள்ளடக்கத்திக்கும், சுமந்த்திரன் பேசிய காணொளிக்கும் எவ்வித தொடர்புமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இது தானே வழமையாக நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடு: ஐங்கரநேசன்

July 11, 2020

iynkaran-300x199.jpg

மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே முண்டு கொடுத்து நின்றார்கள். அப்போது இனத்தின் நலனுக்காகப் பேரம்பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாவதற்குப் பேரம்பேசத் தங்களுக்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும்; வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு குறித்துக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சுயேச்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இது தொடர்பான தெருமுனைத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று இரவு யாழ்ப்பாணம் பிறவுண் வீதிப் பகுதியில் நடைபெற்றபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் வடமராட்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் புதிய ஆட்சியில் கூட்டுப்பொறுப்புடன் அமைச்சரவையில் இணைவது குறித்துப் பேசியுள்ளார். மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் குறைந்தபட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பானவர்களின் பிரச்சினை போன்றவை தொடர்பாகவேனும் நிபந்தனைகளை விதித்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றிருக்கமுடியும். ஆனால், அவர்கள் அங்கஜன் அவர்களுக்குப் பிரதி சபாநாயகர் பதவி வழங்கக்கூடாது, டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துத் தாங்கள் நிழல் அமைச்சர்களாகப் பதவி வகிக்க விரும்பினார்களே அல்லாது இனத்தின் நலன் சார்ந்து எதனையும் செயற்படுத்தவில்லை.

சுயேச்சைக் குழுக்கள் தங்களது வாக்குகளைப் பிரிப்பதற்காகக் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் பேசிவருகின்றனர். நாங்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டாலும் தேர்தலின்போது மாத்திரம் தோன்றி மறையும் மழைக்காளான்கள் போன்றவர்களல்லர். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சூழலியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கி வலுவான ஒரு அரசியல் கட்சியாகப் பரிணாமித்திருக்கின்றது. தேர்தல் ஆணையத்தில் கட்சிப்பதிவுக்காக விண்ணப்பித்திருக்கிறோம். தேர்தல் உரிய காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டதால் கட்சிப்பதிவு தாமதப்பட சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளோம். இயற்கையை நீயழித்தால் இயற்கையால் நீயழிவாய் என்று கொரோனா உலகத்திற்கு உரத்துப் போதித்திருக்கும் நிலையில் கொரோனாவிற்குப் பின்னரான அரசியல் இயற்கைக்கான தருணமாகவே இருக்கப்போகின்றது. அந்தவகையில் சூழலியத்தை முன்னிறுத்தியுள்ள தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அரசியலில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/53676

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.