Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R.Sampanthan.jpg

தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன்

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது,  “இலங்கையில்  70வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்து வருகின்றது.

தமிழினத்தின் தலைவர்களான தந்தை செல்வநாயகம்  மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பலமுறை முயற்சி மேற்கொண்டனர்.

ஆனால் தென்னிலங்கை தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏமாற்றினார்கள்.

இவ்வாறு மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அனைத்து தென்னிலங்கை தலைவர்களும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கவில்லை.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில்  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு அது இடைக்கால அறிக்கைவரையில் சென்றடைந்தது.  இவ்வாறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

அதாவது இனங்களுக்க இடையில் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமாயின் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவை மீளப் பெறாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய வேண்டும். அதற்கு நியாயமான தீர்வொன்று சமஷ்டி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

இதனைத்தான் நாம் கோருகின்றோம். நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதில்லை. எனவே எமது கோரிக்கைகளை நிராகரிக்காது  பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க  அரசாங்கம் முன்வர வேண்டும்.

கடந்த காலத்தில் தந்தை செல்வா மற்றும்  அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை தலைவர்கள் ஏமாற்றியமையால்தான் பிரபாகரன் ஆயுதமேந்தினார். அத்தகைய நிலைமை ஏற்படாதிருந்திருந்தால் அவர் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்.

எனவே நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை வழங்குவது  அவசியமாகும்.

இதனை தென்னிலங்கை தலைமைகள்  முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/தென்னிலங்கை-தலைவர்கள்தா/

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

தென்னிலங்கை தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணம்- சம்பந்தன்

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம் இந்திய “றோ” வின் சதித்திட்டம்.

இதற்கு தமிழ் இளைஞர்களை பலிக்கடா ஆக்கியவர் அமிர்தலிங்கம். அவருக்கு “றோ” வுடன் நேரடி தொடர்பு இருந்தது. இதை கலாநிதி திருநாவுக்கரசு புலிகளுக்கு விளக்கிய காரணத்தாலேயே அவர்கள் இந்தியாவை விட்டு விலக ஆரம்பித்தார்கள். “றோ” வின் நேரடி கூலிப்படையாகவே உருவான ரெலோவையும் அழித்தார்கள். எல்லாருமே (புலிகள் தவிர) இந்திய கூலி ஆயுதப்படைகள். இன்று இவர்கள் விக்நேஸ்வரனின் தலைமையில் “றோ” வின் திட்டப்படி செயற்படுகிறார்கள்.

On 26/7/2020 at 11:54, கற்பகதரு said:

நீங்கள் விக்கி அவர்களின் தலைமையில் RAW செயட்படுவதாக குறிப்பிடடதக்கு எதாவது ஆதாரம் உண்டா? அவர் மூலமாக எதனை சாதிக்க முயட்சிக்கிறார்கள் எண்டு கூற முடியுமா? பிரதமர் மோடி இடம் விக்கி ஐயா வைத்த ஒரே ஒரு கோரிக்கை இந்திய சிறையில் இருக்கும் பிரேமானந்தா சுவாமியை விடுதலை செய்யவேண்டுமென்பதே. அப்படி என்றால் அதட்கான காரணத்தையும் வெளிப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 23:24, கற்பகதரு said:

31 minutes ago, Robinson cruso said:

நீங்கள் விக்கி அவர்களின் தலைமையில் RAW செயட்படுவதாக குறிப்பிடடதக்கு எதாவது ஆதாரம் உண்டா? அவர் மூலமாக எதனை சாதிக்க முயட்சிக்கிறார்கள் எண்டு கூற முடியுமா? பிரதமர் மோடி இடம் விக்கி ஐயா வைத்த ஒரே ஒரு கோரிக்கை இந்திய சிறையில் இருக்கும் பிரேமானந்தா சுவாமியை விடுதலை செய்யவேண்டுமென்பதே. அப்படி என்றால் அதட்கான காரணத்தையும் வெளிப்படுத்த முடியுமா?

விக்னேஸ்வரன் தலைமையில் றோ செயற்படுவதாக கூறவில்லை, ஆனால்  றோவின் முன்னாள் கூலி ஆயுதக்குழுக்கள் விக்னேஸ்வரன் தலைமையில் றோவின் திட்டப்படி செயற்படுகிறார்கள் என்றே எழுதினேன். விக்னேஸ்வரன், நல்ல மனிதர், அறிவாளி, இரக்க குணம் கொண்டவர். அவரது பேரப்பிள்ளைகள் சிங்களவர் - தமிழர் கலப்பாக இருப்பர். ஆகவே இலங்கைக்குள் சிங்களவருடன் அவர் வாழ்ந்தாக வேண்டும். அப்படி இருக்க எப்படி றோவுக்கு வேலை செய்கிறார்?

இவர் அப்பாவி - வட கிழக்கு அரசியல் இவருக்கு புதிது. ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும். றோவின் கூலிப்படைகள். தமிழ் மக்களுக்கு விமோசனம் இந்தியா மூலம் தான் கிடைக்கும் என்று இவரை ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் நம்பவைத்து இவரை தேர்தலில் இறக்கி இருக்கிறார்கள். இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. அதை பயன்படுத்தி கூட்டமைப்பின் பலத்தை றோ உடைக்க போகிறது. இதன்மூலம் கூட்டமைப்பு நிரந்தர தீர்வுக்கு 3 இல் 2 பெரும்பான்மையை அரசுக்கு வழங்கும் சாத்தியத்தை இல்லாமல் செய்வதே றோவின் தேவை.

ஏன் றோ நிரந்தர தீர்வை விரும்பவில்லை? நிரந்தர தீர்வின் பின் இலங்கை முழுவதுமாக சீன சார்பு நாடாகி விடும். புலம்பெயர்ந்த தமிழரின் பணமும் தாராளமாக வரும். பொருளாதாரம் வளரும். இலங்கை சீனாவின் பொருளாதார - இராணுவ - அரசியல் தளமாவதை இந்தியாவால் தடுக்க முடியாத நிலை உருவாகும். 

மறுவளமாக பாருங்கள். இலங்கை அரசுக்கு 3 இல் 2 கிடைக்க கூட்டமைப்பு உதவ முடியாவிட்டால், பிரச்சினை தொடரும். வறுமை அதிகரிக்கும். பல புலஸ்தினி இராஜேந்திரன்கள் மூலம் றோ ஹொட்டேல்களில் குண்டுத்தாக்குதல் நடத்தி இலங்கையை குழப்பத்தில் வைத்து மிரட்டி சீனாவின் பலம் இலங்கையில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம்.

அப்படி என்றால் விக்கி அவர்கள் ஒரு படித்த முடடாள் என்று சொல்லுகிறீர்கள். அதாவது படிப்பறிவுள்ள அல்லது படிப்பறிவற்ற ஆயுதக்குழுக்கள் அவரை கையாளுகிறார்கள். உங்களுக்கு தெரிந்த அளவுக்கு இந்த ரோ , ஆயுதக்குழுக்கள் மூலமாக தன்னை கையாளுகிறது என்று படித்த நீதியரசருக்கு விளங்கவில்லை? நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கலாம். ஏன் என்றால் இவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது கேட்பதட்கு எத்தனையோ தமிழர்களின் பிரச்சினை இருந்தது. ஆனால் அவர் கேட்டிட ஒரே ஒரு கோரிக்கை என்ன தெரியுமோ? கட்பளிப்பு, கொலை , கொள்ளைகளுக்காக சிறையில் இருந்த பிரேமானந்தா சுவாமியை(?) விடுதலை செய்ய வேண்டும் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Robinson cruso said:

எல்லோரிடமும் சில துறைகளில் அறிவும், பல துறைகளில் முட்டாள்தனமும் இருக்கின்றன.  இவரும் அதற்கு விலக்கல்ல.

றோவின் கையாளல் பற்றி இவருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால், தமிழ்மக்களுக்கு வேறு உதவி இல்லை என்றும், றோ - இந்தியா உதவும் என்றும் அவர் நினைத்திருக்க கூடும். முதலமைச்சரான ஆரம்ப நாட்களில் இந்தியாவை தவிர்க்க முயன்றார். ரணிலுடன் உண்டான முரண்பாடு, சுமந்திரனுடனான பிரச்சினை (தவறு சுமந்திரனில்), சிவாஜிலிங்கம், அனந்தி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் இடைவிடாத முயற்சி ஆகியன இவரை இறுதியாக றோவின் கரங்களுக்குள் தள்ளிவிட்டுள்ளன.

13 hours ago, கற்பகதரு said:

அவர் இந்த அரசியலுக்கு வந்ததே ஒரு முடடல்தானம். எனக்கு தெரிந்தவரையில் நீதிபதியாக இருந்து சொந்த புத்தியில் நடந்து அரசியலுக்கு வந்ததாக நான் கேள்விப்படடாதே இல்லை. சுமந்திரன் யார்? இவரது மாணக்கண். எனவே அங்கிருப்பது ஆசிரியன் மாணாக்கன் பிரச்சினை. சிவாஜிலிங்கம் ஒரு வாயால் வெட்டி விழுத்தும் மாபெரும் பேச்சாளர் மட்டுமே. செயலில் எடுத்துக்கொண்டால் எல்லாம் பூச்சியமே.அனந்தி என்பவர் அரசியலில் வந்து அமைச்சராக இருந்து எண்ணத்தை செய்தார்? ரிசார்ட் பதியுதீனுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்தாரே தவிர நேர்மையாக மக்களுக்கு சேவை செய்யவில்லை. அடுத்தவர் மண்டையன் குழு தலைவர் சுரேஷ். இவரும் பெரிதாக எதையும் சாதித்தவரும் இல்லை சாதிக்கப்போவரும் இல்லை. வாய்ப்பேச்சில் வல்லவர்கள் , அதிகாரத்துக்காக ஆசைப்படுபவர்கள். இவர் எல்லாம் சுதந்திர கட்சி ஆட்சியில் தினேஷ் குணவர்தனவின் சகோதரன் மீன்பிடி அமைச்சராக இருந்தபோது அங்கு அவருக்கு ஆலோசகர்களின் ஒருவராக இருந்தவர். என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்பதட்கும் அந்த மனிதன் உயிரோடு இல்லை. இவர்கள் எல்லாம் சுயநல அரசியல் செய்பவர்களே ஒழிய வேறு ஒரு மண்ணங்கட்டியும் கிடையாது.. இவர்களை வைத்துக்கொண்டுதான் சமசடியையும், சுயாட்சியையும், வடகிழக்கு இணைப்பையும் செய்யப்போகிறார்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திறனை விட்டு மிகுதி எல்லாருமே றோவின் கரங்களுக்குள் போய்  விட்டது போல் பரப்புரை நடக்கிறது .

விழிப்புணர்வு இருந்தாலும் வயத்துக்கோளாறுகளினால் இப்படி நடக்கின்றது. சிலர் வறுமையினால் இப்படி போய் விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 16:07, தமிழ் சிறி said:

கடந்த காலத்தில் தந்தை செல்வா மற்றும்  அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை தலைவர்கள் ஏமாற்றியமையால்தான் பிரபாகரன் ஆயுதமேந்தினார். அத்தகைய நிலைமை ஏற்படாதிருந்திருந்தால் அவர் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்.

தேர்தல் நெருங்குவதால் ஐயா உசாராகவும், உரத்தும் குரல் கொடுக்கிறார். தேர்தலும் முடிய படுத்து விடுவார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.