Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்

Featured Replies

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல தடவை பிணை கோரியும் மட்டக்களப்பு கோர்ட்ஸ்ஸால்  பிணை வழங்க முடியாது கொழும்பு  கைகோட்தான் பிணை பற்றி தீர்மானிக்கலாம் என கூறப்பட்டது அடிச்சு விட வேண்டாம் பொய்களை

அனுதாப வாக்கு அல்ல அத்தனையும் விருப்ப வாக்கு விரும்பிய மக்கள் இட்ட வாக்கு ஏன் கூட்டமைப்பால் வெல்ல முடியவில்லை சிறையில் இருக்கும் ஒருவனை மக்களுக்கு உள்ளிருந்தும் என்ன செய்தானே அதை வெளியிலிருந்தவர்களால் ஏன் செய்யமுடியவில்லை என சிந்தியுங்கள் மாறாக பொய்யான செய்திகளை எழுதி புலம்பெயர்ந்த மக்களை குழப்பியதுதான் மிச்சம்  இணையத்தளங்களால் பிள்ளையானின் திட்டமிடலை கூட நெருங்கவில்லை சிலரால்  காரணம் அறிய வாய்ப்பில்லை சிலருக்கு 

இப்ப ஜே. வி பி நியுஸ் பூட்டியாச்சு செய்தி எழுதினர் அடங்கிட்டார்  

 ராஜா, 

பலதடவைகள் பிணை கேட்கப்பட்டது உண்மைதான். கடந்த நான்கு தவணைக் காலங்களில்  எப்போதாவது பிணை கேட்கப்பட்டதா ? ஏன் கேட்கவில்லை. இலங்கை சட்டவாளர்களை யாராவது கேட்டு தெளிவுபடுத்துங்கள் தேவையென்றால்..பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அல்லது அவசரகால சட்டத்திற்கு மட்டும் இந்த விதி செல்லாது. தவிர பிள்ளையான் அரசியல் கைதியும் இல்லை அவர் ஒரு கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அவருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிணைவழங்க அனுமதி உண்டு. அவரது வழக்கு டயல்அட்பார் சேம்பரில் நடக்கவில்லை. சாதாரண வழக்குதான்.

பிள்ளையான் குழு செய்த கொலைகளையும் கடத்தல்களையும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவற்றைவிட கிழக்கின் பிரச்சனைகள் வேறானவை என்பது எல்லோருக்கும் புரியும். கிழக்கில் தமிழ்  அரசியல் பேசுகின்ற அனைவரும் சேருகின்ற ஒருபுள்ளி என்றால் அது முஸ்லீம் எதிர்ப்பு. மற்றது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு.  பிள்ளையான் மக்களுக்கு செய்த  சேவைகளை குறைத்து மதிப்பிடவில்லை நண்பா. அதேபோல பிள்ளையானில் எதுவித கோபமோ காழ்ப்போ இல்லை. 

ஆனால் ஞானம் மாஸ்டர் இன்னும் பேசுகின்ற யாழ் மேலாதிக்கம் தேவையற்றது. யாழின் மேலாதிக்கம் சுருண்டு படுத்துவிட்டது நண்பா. வேட்க்கையில் பிள்ளையான் கிழக்கில் முஸ்லீம் முதலமைசர் வராதிருக்க தமிழ் தேசியக் கூடடமைப்போடு டீல் பேசியதாக எழுதியிருக்கிறார். 

அதனால் தான் சொல்கிறோம் சந்தர்ப்பவாதம் வேண்டாம், மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுபோதும் 

Edited by யாழ் அரியன்

  • Replies 98
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

முதலமைச்சர் சீட்டுக்கும் , இலங்கை பாராளுமன்றத்தில் எம்பி ,அமைச்சருக்கும் உள்ள வேறுபாடே இன்னும் உங்களுக்கு புரியல்ல.
விக்கி முதலமைச்சர் பதவியில் இருந்து கிழித்ததை விட இவர் அவருடைய மக்களுக்கு நல்லாவே செய்தார்.
பார்ப்போம் கஜேந்திரகுமார் ,விக்கி போன்றோர் பார்லிமென்ட் போய் என்னத்தை கிழிக்கின்ம் என்று 😠

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாராளுமன்றத்தை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றுவார்களா அல்லது சிறையை பாராளுமன்றத்திற்கு மாற்றுவார்களா?

இன பிள்ளையானுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பா  அல்லது சிறைக் கைதிக்குரிய பாதுகாப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொழும்பு நண்பர் சொன்ன கருத்து:

கிழக்கில், மட்டு பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் சேர்ந்து இரு தமிழர்களை, மகிந்தா சார்பிலும், திருமலையில், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து இரு முஸ்லிம்களை, சஜித் சார்பிலும், தேர்வு செய்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

சத்தியமாய் கொலை, கொள்ளை, கடத்தல் செய்ய மாட்டினம்.

ஓமோம் அவர்கள் தங்கள் கைகளை கறை படியாமல் வைத்திருப்பினம் . ஆனால் அடுத்தவனை தூண்டி விட்டு தங்களுக்கு தேவையானதை சாதித்து கொள்ளுவீனம்/எடுத்து கொள்வீனம்
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

விக்கியரும் கஜேந்திரகுமாரும் யாரை தூண்டினவை?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை இருக்கிற மாதிரியே கதைக்கிறீங்கள். ஐரோப்பிய நாடுகளிலை ஜனநாயகம் என்றால் எப்படியிருக்கின்றது கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவும்.

 ஒருவர் லஞ்சம் வாங்கி நிரூபிக்கப்பட்டாலே அவரின் பொது வாழ்க்கை முடிவுக்கு வரும். அதிலும் சிறைக்கு சென்றால்.....

உங்களைப்போன்ற ஆட்கள் தான் குற்றத்திற்கு குற்றத்தை சமன் பண்ணி நாட்டையே சீரழிக்கின்றவர்கள்.:cool:
நாட்டையும் மக்களையும்  திருந்தவே விடமாட்டீர்கள்.😎

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

49 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் சமீப காலமாக சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஏவல் கொலையாளிகளுக்கு உங்களின் ஆதரவை வெளியிட்டு வருவது தெரியும்.

சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகள் நினைத்தால்.. ஒரு முழுக் குடு வியாபாரியையும் எம் பி ஆக்கி பார்லிமன்ட் அனுப்புவார்கள். கொழும்பில் தென்னிலங்கையில் நடக்காதவை அல்ல. அந்த வகையில்... இந்த சிங்கள பெளத்த பேரினவாதக் கைக்கூலி..  மகிந்தரின் தயவோடு பார்லிமன்ட் போவது அதிசயமோ ஆச்சரியமோ அல்ல.

ஆனால்.. நிச்சயம் கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பது எதையும் இவரோ மகிந்தவோ செய்யப் போவதில்லை. அடுத்த தேர்தலில் மாற்றி போடுவார்கள்.. அவ்வளவும் தான். ஆனால் மக்களின் நிலை எப்போதும் போல் அதே அவலமாகத்தான் இருக்கும். இதுதான் சொறீலங்காவின் கேடுகெட்ட அரசியல் சன நாய் அகம். இதனை முதலில் தாங்கள் விளங்கிக் கொண்டு இனத்துரோகிகளுக்கு வக்காளத்து வாங்குவது நல்லம். மற்றும்படி.. அரசியல் ரீதியில் தங்களின் நிலைப்பாட்டை சீரியஸாவே எடுப்பதில்லை. 

உங்கட கருத்தை பார்க்க பாவமாய்  இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

 உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ரதி said:

இலங்கையில் நடக்கிறதை பற்றி தான் கதைக்கிறோம் ..ஜரோப்பிய ஜனநாயகத்தை ஜரோப்பாவோடு வைத்திருக்க வேண்டும் ...இலங்கையில் அது தற்போதைக்கு செல்லாது ...என்னை திருத்துவது இருக்கட்டும் முதலில் வடக்கில் உள்ள நீங்கள் ஆதரிக்கும் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் ... உங்களை போல் இங்கு பல யாழ் மேலாதிக்கவாதிகள் பிள்ளையான் வட ,கிழக்கில்  உள்ள மற்றவர்களை விட 50000 வாக்குகள் விருப்பு வாக்குகள் எடுத்தது இட்டு பொறாமையில் புழுங்குவது தெரியுது ...இப்படியே எழுதி ,எழுதி பிரதேசவாசத்தை நன்கு ஊட்டி வளவுங்கோ ...இந்த தேர்தலின் பின்னும் பாடம் படிக்கவில்லை என்றால் ?

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

ஐயோ ஐயோ.. இதில வேடிக்கை என்னவென்றால்.. 5ம் திகதி வரை கொம்மானுக்கு வக்காளத்து வாங்கிட்டு.. இப்ப கொம்மானின் கொம்மானின் கொண்ணியின் பகையாளிக்கு வக்காளத்து.

கொம்மானின் கதையை அப்படியே கைவிட்டிட்டு.. இப்ப கொம்மானின் முன்னாள் நண்பனும்.. இன்னாள் பகையாளியும்.. எஜமானர்களின் செல்லப்பிள்ளைகள் என்ற வகையில்..

அதுசரி.. யாழில் அங்கஜனுக்கு.. 36000 க்கும் மேல்.. விருப்பு வாக்காம். அதுவும் மொட்டில இல்லை.. கையில. 

முன்னர் சுமந்திரனுக்கு விழுந்ததே இப்பதான் கள்ளம் என்று தெரிய வந்திருக்குது. இவங்கள் எல்லாம் செய்யுற கள்ளம் எப்ப வெளில வருமோ..??!

இதில.. யாரைப் பார்த்து யார் பாவம் என்பது. 

வாக்குப் போட்ட சனமே அதிர்ச்சில்.. கள்ள வாக்கு கள்ள வாக்குன்னு கத்துதுங்க.. வெளிநாட்டில இருக்கிற காவடிகள் தொல்லை மட்டும் தாங்க முடியல்ல. 😂😂

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

7 minutes ago, குமாரசாமி said:

கருணாவே ஒரு களிசறை. கருணாவை ஆதரிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வாய்ப்பாடு வைத்துத்தான் கூட்டிக்கழித்து பெருக்கி பார்க்க வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
டொட்.:cool:

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

உண்மை எப்பவுமே உறைக்கும் அண்ணா ...என்ன செய்ய போய் படுங்கள் ..குட் நைட் 

உண்மையை விட நான் யதார்த்தவாதி

நிற்க.......
படுப்பதை தீர்மானிப்பது நான் நீங்களல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

10 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள் 

கொம்மானை நிறுத்தினது வெல்ல வைக்கிறதுக்கு அல்ல. வாக்கைப் பிரிச்சு அம்பாறையை தமிழ் பிரதிநிதித்துவம் அற்ற தொகுதியாக்கிக் காட்டுவது. அதில் சிங்களவனும் முஸ்லீமும் கொம்மானை வைச்சு சாதித்துக் காட்டி விட்டார்கள். எனிக் கொம்மானுக்கு ஒரு கெளரவ பதவி அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஆனால்.. மட்டக்களப்பில் யாழில்..இது தற்போதைக்கு சாத்தியமில்லை என்பதால்.. தமக்கு வேண்டியவர்களை.. எதுக்கும் மகிந்தவுக்கு தலையாட்டுபவர்களை.. நிற்க வைச்சும்.. நிற்க வைக்காமலும் வெல்ல வைச்சாச்சு.

இதற்கு சாட்சி.. ஜீ எல் பீரிஸ் தந்து முதல் செய்தியாளர் மாநாட்டில்.. எனி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தானே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொல்ல முடியாது... என்று கூறிவிட்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக பிரதிநிதித்துவம் கோரி வந்த நிலையில்.. டக்கி என்பவருக்கு ஒரு இடத்தில் வெல்ல வைச்சு.. குழப்புவது.. ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.. என்றதும்.. இப்போ.. இப்படி ஆக்கி இருக்கிறார்கள்.

என்ன.. தமிழ் தேசியக் கட்சிகள் தான் மீண்டும்.. பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளன. எட்டப்பர் கூட்டம் அதே பல்லவி தான். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

கருணாவை ஆதரிக்கும் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள் ...பிள்ளையானை ஆதரிப்போர் கருணாவையும் ஆதரிக்கிறார்கள் ...அங்கயன் வெறும் 36000 வோட்டுக்கள் தான் ஆனால் பிள்ளையான் 54000 அதுவும் அங்கயன் பிரச்சாரத்திற்கு என்று எவ்வளவு காசு செலவழித்தார் தெரியுமோ ?...பிள்ளையான் ஜெயிலில் இருந்து கொண்டே ஜெயித்தார் .
இருவரும் மகிந்தாவின் ஆட்கள் 

கள்ள வாக்குகள் போட்டுத் தான் வென்றார்கள் என்றால் ஏன் என் அண்ணரை விட்டவர்கள்  

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

15 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள்  இன்னும் 10 வருடத்துக்குள் நாமல் வட கிழக்கு தமிழரின் பெரும்பான்மையோடு ஜனாதிபதி பதவிக்கு வராட்டில் ...அப்பவும் நாங்கள் யாழில் வந்து கருணா துரோகி ,பிள்ளையான் கள்ளன் என்று எழுதி காலத்தை கடத்துவோம் ...உங்களை போன்றவர்கள் நீங்கள் சொல்வது தான்  சரி, நாங்கள் தான் யதார்த்தவாதி என்று சொல்லி மற்றவரை நக்கலடித்துக் கொண்டு காலத்தை கடத்துங்கோ 

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

பிள்ளையாள் ஏதோ சும்மா ஜெயித்த மாதிரி அக்கா கதை விடுறா.

பிரச்சார கூட்டங்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, சாப்பாடு & தண்ணி. ஆட்களை ஏற்றி இறக்கும் ஆட்டோக்களுக்கு 5,000 இல் இருந்து 10,000 வரை. சொந்த காசிலிருந்தா கொடுத்தார். எல்லாம் கொள்ளையடித்த காசு.

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

16 minutes ago, nedukkalapoovan said:

2009 இல் ரணில் யோசித்திருப்பாரா.. தான் 2020ல் வெட்டி ஆவன் என்று. அப்படி நினைத்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிகழாமல் தடுத்திருப்பார். அதேபோல் தான்.. கடந்த 10 ஆண்டில் ரணில் ஆண்டி ஆனது போல்.. மகிந்த கும்பலுக்கு என்னாகுதோ..??!

Sri Lanka election: Rajapaksa brothers win 'super-majority'

Gotabaya Rajapaksa is accused of human rights abuses during the civil war and also of targeting those who dissented. He always dismissed such accusations - but they have not gone away.

A surge in Sinhala nationalism in the run-up to the election has also worried Sri Lanka's minority communities.

Muslim leaders say their community is still reeling from the vilification that followed the devastating Easter Sunday suicide attacks by Islamist militants last year, which killed more than 260 people.

With their dominant majority, the Rajapaksas could attempt to change the constitution, increase the powers of the president so reversing the work of the previous government to introduce more checks and balances.

https://www.bbc.co.uk/news/world-asia-53688584

ஈழ அரசியலை உற்று கவனித்தால் இப்படி எழுத மாட்டீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நீங்கள் இப்படியே இங்கே இருந்து கொன்டு குற்றம் ,குறை பிடித்து கொண்டு சொல்வது சரி என்று கொண்டு இருங்கள் ...நடப்பவற்றை அங்குள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் 

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

எழுதி காலத்தை கடத்தவில்லை யதார்த்தம் இது தான். இப்படி துரோகிகள் முட்டு கொடுப்பதால் 10 வருடம் தேவையில்லை 5 வருடங்கள் போதும்.

துரோகிகள் எப்படி யாரால் உருவாகினார்கள் ? ...இந்த 5வருசத்திற்குள்ள கஜேந்திரனையும் ,கஜேந்திரகுமாரையும் துரோகியாக்காமல் விட்டால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அது சரி, ஏன் கும்மான் தனது மனைவியை பிள்ளையானுக்கு எதிராக களம் இறக்கினவர்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

பிள்ளையான் இவ்வளவு செலவழித்ததுக்கு உங்களிடம் ஏதும் ஆதாரம் இருக்கோ ?, இருந்தால் காட்டுங்கள்

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

என்ன சின்னப்பிள்ளைத்தனம்... அங்கஜன் செலவழிக்கலாம் பிள்ளையான் செலவழிக்க முடியாதோ? அங்குள்ள மக்கள் தான் அங்கஜனுக்கு வாக்களித்தது. நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு இப்படி பிள்ளையானுக்கும் கும்மானுக்கும் மாறி மாறி குடை பிடியுங்கோ.

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

2 minutes ago, MEERA said:

அங்கஜன் செலவழித்தத்ற்கு ஆதாரம் பிளீஸ்?

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அங்கயனின் வெற்றியை நான் குறை கூறவில்லையே ? ...அவரை வரவேற்கிறேன் ..

ஜித்திற்கு அடுத்ததாய் விளம்பரத்திற்கு இவ்வளவு செல்வழித்தது என்று இணையங்களிலேயே இருக்கு 

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

உந்த இணைய விபரங்களை குப்பையில் போடுங்கள். நாளைக்கு யாழ் இணையத்தில் ரதி என்டவ எழுதியிருக்கிறார் என்று இரண்டு மறை கழண்ட கேசுகள் வேறெங்கேயும் ஆதாரமாக காட்ட கூடும்.

உங்களால் ,பிள்ளையான் தேர்தலுக்கு இவ்வளவு செலவழித்தார் என்று காட்ட முடியாததால் இணையங்களை தூக்கி குப்பையில் போட வேண்டும் ...நாளைக்கே தேவை என்றால் இணையங்களில் இருந்து செய்திகளை கொண்டு வந்து இணைப்பீர்கள் அதை நாங்கள் ஏற்க  வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.

தற்போது இருந்தவர்களின் செயற்பாட்டை, அனுபவத்தை வைத்து கணித்துள்ளீர்கள் போலுள்ளது. இவர்கள் போட்ட சிக்கலை அவிழ்க்கவும், இவர்கள் செய்யும் குலூமாசுகளை தடுக்கவுமே காலம் போதாது. எதுக்கு அனுசரணை வழங்குவது, எதுக்கு நீதிமன்றம் போவது, எதுக்கு கை உயர்த்துவது,  எமது கடமை எது? என்கிற விவஸ்தை இல்லாமல் எல்லோர் பின்னாலும் இழுபட்டு இருக்கிறதையும் கோட்டை விட்டிட்டு, அதற்கொரு சான்றிதழோடு வருவினம். இந்த திறத்தில் மற்றவர்களைப்பற்றி ஆரூடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.