Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா படையினரின் முன்னரங்கு புலிகள் வசம் - கவச வாகனம் மீட்பு - 30 படையினர் பலி

Featured Replies

இந்த வெற்றித் தாக்குதலில் வித்தாகிப் போன மாவீரர்களுக்கு எனது வணக்கங்கள்.

  • Replies 50
  • Views 8.1k
  • Created
  • Last Reply

மிகவும் உக்கிரமான போர் நடக்கிறது போல் இருக்கிறது. கடவுளென் துணையோடு தழிழன் கை ஓங்கட்டும். இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் அதிகமாகிறது போல் தென்படுகிறது. உயிர் நீத்த எமது வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30 இராணுவத்தோடு ஒப்பிடுற போது புலிகளின் இழப்புக் கொஞ்சம் அதிகம் தான். இருந்தாலும் 57ம் படையணி என்பது சிங்களச் சிறப்புப் படையணி என்பதை நினைவில் கொள்ள வேணும்.

மறைந்த எம் இனிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

இப்போரில் வீரச்சாவைடைந்த 18 மாவீரற்கும் எனது வீரவணக்கங்கள்.

எம் மண் மீட்க புறப்பட்ட வேங்கைகளுக்கு!! இப்போரில் வீரச்சாவடைந்த 18 மாவீரற்கும் எனது வீரவணக்கங்கள்!!!

களத்தில் விதையாகி விதைந்து போன எமது மண்ணின் மாவீரர்களுக்கு எனது குருதி உறையும் வரை வீர வணக்கம் செலுத்தும் அன்புடன் நாதன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெரு வெற்றிக்கு உரமாகிப்போன மாவீரர்களுக்கு வீர வணக்கங்களும் அஞ்சலிகளும்.

ஞாயிறு 03-06-2007 14:15 மணி தமிழீழம் ஜமயூரன்ஸ

படையினர் மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல்: 30 படையினர் பலி! 40 படையினர் படுகாயம்! 2 துருப்புக்காவி பவள் வாகங்கள் மீட்பு

விடுதலைப் புலிகளால் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சிறீலங்கா இராணுவத்தால் அண்மையில் ஆக்கிரமித்த வவுனியா – மன்னார் முன்னரங்க எல்லைப்பகுதி கிராமங்களான முள்ளிக்குளம்இ விளாத்திக்குளம் ஆகியபகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கமாண்டோ தாக்குதலில் பம்பைமடுவில் ஆயுதக்கிடங்கு தகர்க்கப்பட்டும்இ பவள் துருப்பு காவி வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரந்திரையன் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 40 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை முன்னகர்ந்துள்ள முள்ளிக்குளம்இ விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து பின்னகர்த்துவதற்காக பெருமளவு ஆட்டிலறி எறிகளை மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

விடுதலைப் புலிகள் தரப்பில் 18 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

இதேவேளை விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுததளபாடங்களின் விபரங்கள்

துப்புக்காவி பவள் வாகனம் - 2இ ரக் வாகனம்இ பி.கே எல்எம்ஜிகள்இ ஏஇகே எல்எம்ஜிகள்இ ரி-56 துப்பாக்கிகள்இ 40 மில்லி மீற்றர் எறிகணை செலுத்திகள்இ 60 மில்லி மீற்றர் மோட்டார்கள் என பல ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பதிவு

:D:lol: :lol:

என்னவெல்லாம் நடக்கப்போகுதோ இனி... :D:lol:

"இலங்கையில்...." இந்தகிழமை செய்திகளைபார்க்க.... :D

  • கருத்துக்கள உறவுகள்

செய்தித் தலைப்பில் 30 படையினர் பலி என்று மாற்றி விடுங்கள்.

மண் மீட்புக்காக இன்னுயிரை விட்ட போராளிகளுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர மறவர்கட்கு எனது வீர வணக்கங்கள்.

pampaimamu2.jpg

pampaimamu3.jpg

pampaimamu6.jpg

pampaimamu5.jpg

pampaimamu7.jpg

pampaimamu9.jpg

pampaimamu10.jpg

30 இராணுவத்தோடு ஒப்பிடுற போது புலிகளின் இழப்புக் கொஞ்சம் அதிகம் தான். இருந்தாலும் 57ம் படையணி என்பது சிங்களச் சிறப்புப் படையணி என்பதை நினைவில் கொள்ள வேணும்.

மாவீரர்களுக்கு கண்ணீரஞ்சலிகள் போரில் இழப்புக்களை ஒப்பிட்டு பார்ப்பது தேவையில்லாத விடயம் என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது விடுதலைக்காக மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்ட மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் :D

வித்தாகிப் போன வீரவேங்கைகளுக்கு வீர வணக்ககங்கள்

82 dead in Lanka clashes

COLOMBO: Tiger rebels destroyed army bases in northern Sri Lanka leaving 82 combatants dead according to both sides on Sunday, as Japan prepared to launch a fresh peace bid.

http://www.dailytimes.com.pk/default.asp?p...4-6-2007_pg7_28

  • கருத்துக்கள உறவுகள்

82 dead in Lanka clashes

COLOMBO: Tiger rebels destroyed army bases in northern Sri Lanka leaving 82 combatants dead according to both sides on Sunday, as Japan prepared to launch a fresh peace bid.

http://www.dailytimes.com.pk/default.asp?p...4-6-2007_pg7_28

இங்கு 82 பேர் பலி என்பது அரசு சொன்ன பொய்யான தகவலையும்( விடுதலைப்புலிப் போராளிகள் 52 பேர் இறந்ததாக அரசு தகவல் வெளியிட்டு இருந்தது) சேர்த்துத் தான் இவ்வூடகம் வெளியிட்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஸ்ரின்,

உந்த சேர், கீர் ஒண்டும் வேண்டாம்.

நான் 'டாங்கி, ஏவுகணை' பற்றிச் சொன்னது தமிழ்நெற் செய்தியையில்லை. பிரியன்_ஈழம் எண்டவர் இணைச்சிருந்த செய்தியைத்தான். அது எந்த மூலமெண்டு அவரும் குறிப்பிடேல. அனேகமா நிதர்சனம் வகையறாச் செய்தியாத்தான் இருக்கும்.

தயா, (தல எண்டதை மாத்தியாச்சா?)

நான் சுகமாத்தான் இருக்கிறன். கரிசனைக்கு நன்றி.

நான் சொன்ன இடங்கள் இப்ப ரெண்டுதரப்பிட்டயும் மாறிமாறி வாறது இருக்கட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது அது யாரிடமிருந்தது எண்டதுதான் என்ர குழப்பம். போர்க்காலத்தில் இரணை இலுப்பைக்குளத்தைத் தவிர வேற இடங்கள் எதுவும் ரெண்டுதரப்பிட்டயும் மாறிமாறி சில்லெடுபட்டதாக ஞாபகமில்லை.

இப்பவும் மன்னார் _ மணலாறு முனைகளில் ஏதாவது இடங்களை தாம் கைப்பற்றியதாக அரச தரப்பும் பகிரங்கப்படுத்தியதாகத் தெரியவில்லை. எனவே குறிப்பிட்ட இடங்கள் மட்டில் எனக்குக் குழப்பம்தான். முன்னர் அறிந்த ஞாபகத்தில் அவை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக மனத்தில் பதிந்திருந்ததையே சொன்னேன். செய்திகளிலும் முரணாகவும் குழப்பமாகவும்தான் தெரிகிறது. "முன்னகர்ந்திருந்த" இராணுவத்தினர் மீதான தாக்குதல் எனும்போது, அந்த முன்னகர்வு என்பது எல்லை தாண்டியதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் கவசவாகனம் கைப்பற்றப்பட்டது, அஞ்சு இஞ்சிக்குரிய பதுங்குகுழி என்பவற்றைப் பார்க்கும்போது அது அண்மையில் கைப்பற்றி நிலைகொண்ட இடமாகத்தெரியவில்லை. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியாகத்தான் விளங்கிக்கொள்ள முடிகிறது.

அப்படியாக இருந்தால், புலிகள் இப்பகுதிகளைவிட்டுப் பின்வாங்காத பட்சத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்பின் புலிகளின் முதலாவது நிலவிடுவிப்பு இதுவாக இருக்கும். அதை மறைக்கத்தானோ குழப்பமாக சொல்லாடல்கள் வருகின்றன?

ஏனப்பா மொத்தம் எத்தனை தாக்குதல் நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

"A rebel spokesman said they taken government-held positions between Vavuniya and Mannar, killing at least 30 soldiers and capturing military vehicles and long-range weapons."

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6717717.stm

நேற்றைய தாக்குதலில் புலிகள் தரப்பு இழப்புக்களை அரசு மிகைப்படுத்திச் சொல்கிறது என்பதை அதன் தளங்களைப் படிக்கின்ற போது தெரிகிறது. நேற்றைய தாக்குதலில் நீண்டதூர தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்பதை பிபிசி குறிப்பிட்டுள்ளது..! அவை எவை என்பதை புலிகளும் சொல்லவில்லை..! பட்டியலிடப்பட்ட ஆயுதங்களில் உள்ளவை நீண்ட தூர ஆயுதங்கள் எவையும் இல்லை. அவை வழமையாக கைப்பற்றப்படும் ஆயுத வகைகள்..! ஆனால் பிபிசி குறிப்பிட்டுள்ள நீண்ட தூர வீச்சுள்ள ஆயுதங்கள்..??!

வீரமிகு தாக்குதலில் தங்கள் இன்னுயிரை தாய் மண்ணிற்காய் தந்த புலி வீரர்களை இதயங்களில் தாங்குவோமா..! அவர்களில் இலட்சியம் வெல்ல வீழ்ந்த ஆயுதங்களை தாங்குவோமாக..!

Edited by nedukkalapoovan

பாலமோட்டைப்பகுதியில் முன்நகர்ந்திருந்த இராணுவம் மீது புலிகள் துணிகரத்தாக்குதல் பல படையினர் பலி. 15 சடலங்கள் மீட்பு.

Written by Ellalan - Jun 04, 2007 at 10:08 AM

வன்னிப்பகுதியை ஆக்கிரமிக்கும் பெரும் திட்டத்துடன் வவுனியா பாலமோட்டைப்பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்திப் பின்தளப் பகுதிக்கு விடிட்;டியடித்தனர். விடுதலைப்புலிகளின் இந்த துணிகரத்தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 15 இராணுவச் சடலங்கள் மற்றும் இராணுவ கவச வாகனங்கம் உட்பட பெருந்தொகையான இராணுவத்தளபாடங்கள் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த இராணுவ பவள் கவசவாகனம் ஒன்றும் சிறிய ரக இராணுவ வாகனம் ஒன்றும் மற்றும் பி.கே எல்எம்ஜிக்கள், ஏகே எல்எம்ஜிக்கள், ரி56 வகைத் துப்பாக்கிகள், 40 எம்எம் குண்டுசெலுத்திகள், 60 எம்எம் மோட்டார்கள் உள்ளிட்ட பெருந்தொகையான இராணுவ உபகரணங்கள் மற்றும் வெடி பொருட்கள் என்பன விடுதலைப்புலிகளின் தாக்குதல் படையணிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வெற்றிகர நடவடிக்கையில் விடுதலைப்புலிகள் தரப்பில் 18 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்

http://www.sankathi.net/index.php?option=c...84&Itemid=1

புலிகளின் துல்லியமான எறிகணைவீச்சில் இராணுவத்தின் 7 ஆட்லெறிகள் வெடித்துச் சிதறின.

Written by Ellalan - Jun 04, 2007 at 10:07 AM

விடுதலைப்புலிகளின் துல்லியமான எறிகணைத்தாக்குதலில் வவுனியா பம்பை மடுப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏழு ஆட்லறி பீரங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் இராணுவ வெடிபொருள் களஞ்சியமும் வெடித்து அழிவடைந்துள்ளது.

வன்னிப்பகுதி மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் படையினருக்கு ஆதரவாகச் சூட்டுப்பலத்தை வழங்குவதற்காக இந்த ஆட்லெறித்தளம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் பீரங்கிப் படையணி துல்லியமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு படைத் தளபாடங்களிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

விடுதலைப் புலிகளின் இந்த தாக்குதலில் வவுனியா பம்பைமடுவில் அமைந்திருந்த படையினரின் ஆட்லறித்தளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. துளத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்த 7 ஆட்லறிப் பீரங்கிகள் முற்றாக தகர்க்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக களஞ்சியப்படுத்தபட்டிருந்த பெருந்தொகையான ஆட்;லறி எறிகணைகள் மற்றும் மோட்டார் எறிகணைகள் வெடித்துச்சிதறியுள்ளன.

http://www.sankathi.net/index.php?option=c...83&Itemid=1

புலிகளின் நேரடித் தாக்குதழில் தாக்கியழிக்க பட்டது மோட்டார் ஏவுகனைத்தளம், புலிகளின் எறிகணைத்தாக்குதளில் தாக்கியழிக்க பட்டது ஆட்லெறி ஏவுகனைத்தளம், ஆட்லெறி ஏவுகனைத்தளத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடக்கும் நேரத்தில் (Divert செய்து) மோட்டார் ஏவுகனைத்தளம் மீது நேரடித் தாக்குதல் நடந்திருக்குமோ???

7 ஆட்லெறி என்பது மிகப்பெரிய இழப்பு….. ஆதாவது அந்த ஆட்லெறி தளமே தாக்கியழிக்க பட்டு விட்டது. அப்ப அந்த தளத்தில் இருந்த ஆமி????

30 ஆமிதான் விடுதபை;புலிகள் கண்டது, ஆதாவது, புலிகளின் நேரடித் தாக்குதழில் தாக்கியழிக்க பட்ட மோட்டார் ஏவுகனைத்தில் மட்டும். புலிகளின் எறிகணைத்தாக்குதளில் தாக்கியழிக்க பட்ட ஆட்லெறி ஏவுகனைத்தளத்தில் 7 ஆட்லெறியும் தாக்கியழிக்க பட்டு விட்டது என்றால் ( ஒரு ஆட்லெறி ஏவுகனைத்தளத்தில் மொத்தமாக 7 ஆட்லெறிகள் தான் நிற்க்கும்.) அப்ப அந்த தளத்தில் 7 ஆட்லெறிகளும் சிதறிவிட்டன, அந்த தளத்தில் இருந்த ஆகக்குறைந்தது 80 ஆமியும் எங்கே????

இக்களத்தில் வித்தாகி போன மாவீரர்களுக்கு எனது வீர வணக்கம்.

Edited by priyan_eelam

சிறுத்தைகள் அமைப்பு போராளியோ தெரியவில்லை...

குத்துவரி என்டால் இம்ரான் பாண்டியன் படையணி. அதிலும் பல பிரிவுகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா - மன்னார் முன்னரங்க பகுதி மோதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்

மு.சுப்பிரமணியம்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இராணுவதினருக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமை வவுனியா பம்பைமடு பகுதியில் நடைபெற்ற மோதலில் புலிகளும் இராணுவத்தினருமாக 82 வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா, மன்னார் முன்னரங்க பகுதியில் இடம்பெற்ற கடும் மோதலில் பரிசங்குளம், முள்ளிக்குளம், விளாத்திகுளம் போன்ற இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேற்ற இராணுவ நடவடிக்கையில் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதல் வெற்றியளித்துருப்பதாக கூறும் புலிகள் இராணுவத்தினருக்கு பலத்த உடமை மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மோதலில் சுமார் 30 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 40 பேர்வரை காயப்பட்டிருக்களாம் கனரக வாகனங்கள் ஆயுதங்கள் பல கைப்பற்றபட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் தமது தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலிகளால் கைப்பற்றிய இடங்கள் ஆயுதங்கள் சம்பந்தமாக புகைப்படங்கள் சில தமிழ் இணையத்தளங்கள் பிரசுரமாகியுள்ளன. பல மணித்தியாள உக்கிர சண்டையில் 52 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் ஷெல் வீச்சுத்தாக்குதல்கள் இடையிடையே நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவுக்கு மேற்கே தொடர்ந்து உக்கிரச்சமர்

[04 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

* இரு தரப்பிலும் கடும் இழப்புகள்; ஆயுதக் களஞ்சியம் சேதம்

வவுனியாவிற்கு மேற்கே பம்பைமடு பகுதியிலுள்ள இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடும் ஆட்லெறி, ஷெல் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகள், இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் மீதும் பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வவுனியாவுக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள பம்பைமடு இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியம் மற்றும் ஆட்லறி நிலைகள் மீதும் வவுனியா- மன்னார் வீதியில் வவுனியாவின் எல்லையிலுள்ள முள்ளிக்குளம், விளாத்திக்குளம் மற்றும் பரிசங்குளம் பகுதிகளிலுள்ள இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் மீதுமே இந்தத் தாக்குதல்களை புலிகள் தொடுத்துள்ளனர்.

இரவு 8 மணியளவில் ஆரம்பித்த இந்தப் பாரிய சமர் நேற்று பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதலில் புலிகள் தரப்பில் பெருமளவானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தங்கள் தரப்பில் மூவர் மட்டுமே கொல்லப்பட்டும் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்தது.

எனினும், படையினர் தரப்பில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன், பெருமளவு போர்த் தளபாடங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதுடன், தங்கள் முன்னரங்க காவல் நிலைகளையும் முன்நகர்த்தியுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பாரிய தாக்குதலில் ஏழு ஆட்லறிகள் முற்றாகத் தகர்த்தழிக்கப்பட்டதுடன், கொல்லப்பட்ட படையினரில் 15 பேரது சடலங்களையும் பவள்கவச வாகனமொன்று மற்றும் `ட்ரக் ' ஒன்று உட்பட பெருந்தொகையான போர்த் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் தங்கள் தரப்பில் 18 போராளிகள் உயிரிழந்துள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

பம்பைமடு இராணுவ முகாமின் ஆட்லறித் தளங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்கள் மீதான புலிகளின் பாரிய தாக்குதலைத் தொடர்ந்தே இந்தப் பகுதியில் இரு தரப்புக்குமிடையே பரஸ்பரம் ஆட்லறி ஷெல் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்தச் ஷெல் சமர் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே புலிகளின் கமாண்டோ அணிகள் வவுனியா- மன்னார் எல்லையில் முள்ளிக்குளம், விளாத்திக்குளம் மற்றும் பரிசங்குளம் முன்னரங்க காவல் நிலைகளில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலையும் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சனிக்கிழமை இரவு 9 மணியளவில் முள்ளிக்குளம், கல்மடு பகுதியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பும் தீவிர ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதலில் ஈடுபட்டன.

புலிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக படையினர் மிக உக்கிரத் தாக்குதலைத் தொடுத்தனர். வவுனியாவுக்கு மேற்கே புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகள் மீது படையினர் கடும் ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதலையும் பல்குழல் ரொக்கட் தாக்குதலையும் நடத்தினர்.

புலிகளின் உக்கிர தாக்குதலுக்கு பதிலடியாக படையினர் நடத்திய பதில் தாக்குதலில் புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. படையினரின் பதில் தாக்குதலில் முள்ளிக்குளம் பகுதியில் புலிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதேநேரம், புலிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்காக படையினர் பாதைகள் பலவற்றை மூடி புலிகளை அப்பகுதியில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள் மீது படையினர் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்து புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

படையினரின் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பெருமளவு புலிகளின் உடல்கள் அந்தப் பகுதியெங்கும் கிடந்தன. அவர்களது தொலைத் தொடர்பு உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது அவர்களுக்கு பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிந்திய தகவலின்படி, மூன்று படையினர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் சிறுகாயங்களுடன் அநுராதபுரம் இராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரின் பொறிக்குள் சிக்கிய புலிகளால் அதற்குள்ளிருந்து வெளியேற முடியாத நிலையேற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில்;

அண்மைக் காலத்தில் படையினர் முன்நகர்வு முயற்சிகளில் ஈடுபட்ட, வவுனியா- மன்னார் எல்லைப் பகுதியில் சனிக்கிழமை இரவு புலிகளின் கொமாண்டோ படையணி கடும் தாக்குதலைத் தொடுத்தது.

இந்தத் தாக்குதலில் படையினரின் ஆட்லறி ஏவு தளங்கள் அழிக்கப்பட்டதுடன், பவள் கவச வாகனம் உட்பட மிகப் பெருமளவு போர்த் தளபாடங்களும் எமது போராளிகளால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் மற்றும் பரிசங்குளம் பகுதிகளில் இராணுவ நிலைகளைத் தகர்த்து அழித்து முன்னேறிய புலிகள் அந்தப் பகுதிகளில் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தி முன்னரங்க காவல் நிலைகளையும் அமைத்தனர்.

பம்பைமடுப் பகுதியில் இராணுவ ஆயுதக் களஞ்சியம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்தக் களஞ்சியம் வெடித்துச் சிதறி எரிந்துள்ளது. சனிக்கிழமை இரவு முதல் நேற்றுக் காலை வரை இந்தக் களஞ்சியம் எரிந்து அழிந்துள்ளது.

இந்தத் தாக்குதல்களை தங்கள் போராளிகள் வெற்றிகரமாக நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இதேநேரம், இரு தரப்புக்குமிடையிலான இந்த மோதல் நேற்று பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்தது.

http://www.thinakkural.com/news/2007/6/4/m...s_page28362.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போரில் விதையான எம் வேங்கைச் சோதரர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

வெற்றியை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதில் மனம் மகிழ்ந்தாலும் அதற்கு கொடுக்கும் விலைகளில் உள்ளம் கவலை கொள்கின்றது சோதரரே!. உங்கள் தியாகத்தால் விடுதலை விரைவில் மலரும்.!

சிறிலங்கா இராணுவத் தளபதி வவுனியா சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரு சில மணிநேரத்தில் தாக்குதல் - இதில் 7 ஆட்டிலெறிப் பீரங்கிகள் அழிக்கப்பட்டன.

[Monday June 04 2007 02:32:21 PM GMT] [puthinam.com]

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வவுனியாப் படைத்தளத்துக்கு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திய சில மணிநேரத்திலேயே, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும் தாக்குதல், படைகள் மீது நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை வவுனியாவுக்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை சரத் பொன்சேகா ஆராய்ந்துள்ளார்.

அவ்வேளையில் வவுனியாப் படைப்பிரிவின் கட்டளைத் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க தலைமையிலான உயர் இராணுவ அதிகாரிகள் சரத் பொன்சேகாவை சந்தித்து அங்குள்ள பாதுகாப்பு முன்ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்தனர்.

இவ்வேளையில் அவசர நேர செயற்பாட்டு முறைகள் தொடர்பாக சரத் பொன்சேகா தனது அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

வவுனியாவிற்கான சரத்தின் இத்திடீர்ப்பயணத்தின் பின்னர் நேற்று முன்னாள் இரவு பம்பைமடுப் பகுதியில் இராணுவ ஆட்டிலெறிப் பீரங்கிகளை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.

இதில் 7 ஆட்டிலெறிப் பீரங்கிகள் அழிக்கப்பட்டன. அத்துடன் பாரிய நடவடிக்கைக்காக முன்னகர்ந்திருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி படைகளுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி அவர்களை பின்தளத்துக்கு விரட்டியடித்தனர்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.