Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் நுளம்புகளுக்கு துரோகத்தனம் செய்யப்போகும் ஆண் நுளம்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தனம் செய்யப்போகும் ஆண் நுளம்புகள்.

The History of Humanity's Bloody War Against the Mosquito | WIRED

இலங்கையில் நுளம்பு, தமிழகத்தில் கொசு.

நித்திரையினை பறித்து, ரத்தத்தினை குடித்து, நோயினை தந்து போகும் ஒரு சிறு இயறகை  கொடுத்த உயிர்.

இந்த சிறிய உயிரினத்தினால், மலேரியா, டெங்கு, சிக்கின்குனியா, ஜிக்கா, மஞ்சள் காச்சல்  ஆகிய உயிர் பறிக்கும் நோய்கள் பரவுகின்றன. பல உயிர்களை காவு வாங்குகின்றன. பொருளாதார இழப்புகளும் கூடுதல் ஆக உள்ளன.

இப்போது ஒரு புதிய தந்திரம் ஒன்றினை பிரிட்டிஷ் மருந்து  மருந்து நிறுவனம் ஒன்று கண்டு பிடித்துள்ளது.

ஜெனெடிக்கலி மோடிஃபைட் என்றால்,  மரபணு மாற்றப்பட்ட என்று அர்த்தம்.

சில நுளம்புகளை ஆய்வு கூடத்தில் வளர்த்து, அவைகளின்  மரபணு மாற்றி, அதனை பெருக்கி, இன்று 750 மில்லியன் நுளம்புகளை சூழலில் விட, அமேரிக்க, புளோரிடா மாநிலத்தில் அனுமதியினை பெற்றுக்  கொண்டுள்ளது. 2021ல் இதனை நடைமுறைப்படுத்த அமெரிக்க மத்திய சூழலியல் துறையின் அனுமதியினை பெற்றுக்  கொண்டுள்ளது.

இந்த துரோக நுளம்புகள், சூழலில் உள்ள, நோய் பரப்பும், சாதாரண நுளம்புகளுடன் கலந்து, காதல் செய்து, நோயே பரப்பாத புதிய நுளம்புக் கூட்டத்தினை உருவாக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மனிதனின் இந்த, மெகா திருட்டு மூளைக்கு இணையேது.

ஆனாலும், சூழலியல்காரர்கள், இது இயறகைக்கு மாறானது. வேறு பல பக்க விளைவுகளை உருவாக்கும் என்று எதிர்க்கின்றனர்.

ஜுராசிக் பார்க் போன்ற ஒரு நிகழ்வினை நியமாக்கும் என்று சொல்கின்றனர் அவர்கள்.

எதிர்காலத்தில், எவ்வித பூச்சி  நாசினி மருந்துக்கும் அடங்காத, மனிதனால் வெல்ல முடியாத ஒரு புதிய நுளம்பு வகைகளை உருவாக்குவதில் முடியும் என்று சொல்கின்றனர். அவை வேறு புதிய வகை நோய்களை காவக்  கூடும் என்கிறார்கள்.

பெண் நுளம்புகளே மனிதர்களை கடிக்கின்றன. மனித ரத்தத்தில் உள்ள புரதமே, அவர்களது முட்டை உருவாக்கத்துக்கு தேவையாக இருக்கின்றன. அவ்வாறு ரத்தம் குடிக்கும் போது, நன்றியுடன், எதையாவது திருப்பி கொடுக்கவேண்டுமே என்று, நோய் கிருமிகளை தந்து போகும், பெரு மனம் கொண்டவையாக உள்ளன அவை.

OX5034 என்ற பெயரில் உருவாகும் இந்த ஆண் மன்மத நுளம்புகள் சூழலில் உள்ள, பெண் நுளம்புகளை கவர்ந்து, அதனால் உருவாகும் முட்டைகளில் இருந்து வரும் பெண் நுளம்புகள், முட்டையிடும் பிராயத்துக்கு வருமுன்னரே, அவர்களது, அப்பாக்களின், துரோக புரத்தினால், மாண்டு விடும். ஆண் நுளம்புகள் தப்பும்.

இறுதியில், வம்சமே வளர முடியாதவாறு, பெண் நுளம்புகள் இல்லாமல் இந்த நுளம்பினம் அழியும், நோய்களும் இல்லாமல் போகும் என்கிறார்கள்.

 கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி செவ்வாய் அன்று, புளோரிடா மாநில நுளம்பு கட்டுப்பாட்டு ஆணையகமும் தமது அங்கீகாரத்தினை வழங்கி உள்ளனர்.

பூவுலகின் நண்பர்கள் என்னும் அமைப்பானது, மனிதரால், இயந்திர மயமாக்கப்படட ஒரு, உயிரினம், புளோரிடா மக்கள் மத்தியில் விதைக்கப்படப்போகின்றது. இது இயறகைக்கு மாறானது என்கிறது.

240,000 மக்கள் இந்த திட்டத்தினை எதிர்த்து, change.org  இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

oxtec என்னும் இந்த பிரித்தானிய நிறுவனமோ, தாம் வெற்றிகரமாக இந்த வகை நுளம்புகளை ஒரு பில்லியன் அளவில், சூழலில் ஏற்கனவே விட்டு விட்டதாகவும், அதனால் சமூகத்துக்கு நன்மையே நடந்துள்ளதாகவும், பிரேசில் நாட்டில் தமது நடவடிக்கைகளை உதாரணமாக காட்டுகின்றனர்.

அதேவேளை, ஏரிகள், குளங்கள், குடடைகள், நீர்நிலைகள் நிறைந்த, புளோரிடா மாநிலத்தில், நுளம்பினால் பெரும் நோய் தொல்லைகளும், பொருளாதார செலவுகளும் உண்டாவதால், இந்த திட்டத்துக்கு அனுமதி வழக்கப்படுள்ளது.

புளோரிடா மாநிலத்தினை, தொடர்ந்து, டெக்சாஸ் மாநிலத்திலும் தமக்கு அனுமதி கிடைத்துள்ளதாக நிறுவனம் சொல்கின்றது.

நிறுவனத்தின் வருமானம், ஆபிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளிலேயே கிடைக்கும்.

இவர்களது ஆய்வுக்கு முக்கியகாரணம், மலேரியாவை ஒழிக்க, இரு உலக பெரும் பணக்கார்கள் பொருளாதாரவு கொடுப்பது தான்.

ஒருவர் பில் கேட்ஸ், அடுத்தவர் வாரன் பபேய்    

For Yarl, By Nathamuni.

Source: BBC.co.uk

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சியான தலையங்கம்😄  இதனால் வேறு நோய் நொடி கள்   வராமலிருந்தால் சரி . இயற்கையை குழப்புவது நன்மையளிக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் இடைக்கிட இப்படி பிரயோசனமான வேலைகளும் செய்கிறீர்கள்.பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Nathamuni said:

OX5034 என்ற பெயரில் உருவாகும் இந்த ஆண் மன்மத நுளம்புகள் சூழலில் உள்ள, பெண் நுளம்புகளை கவர்ந்து, அதனால் உருவாகும் முட்டைகளில் இருந்து வரும் பெண் நுளம்புகள், முட்டையிடும் பிராயத்துக்கு வருமுன்னரே, அவர்களது, அப்பாக்களின், துரோக புரத்தினால், மாண்டு விடும். ஆண் நுளம்புகள் தப்பும்.

இறுதியில், வம்சமே வளர முடியாதவாறு, பெண் நுளம்புகள் இல்லாமல் இந்த நுளம்பினம் அழியும், நோய்களும் இல்லாமல் போகும் என்கிறார்கள்.

மனிச இனமே வம்சவிருத்தியில்லாமல் அழியப்போகுது......இதுக்கை நுளம்பு வேறை.😎

கழிவுநீர் கால்வாய்களையும்,மலசலகூடங்களையும் ஒழுங்காக கட்டியமைத்தாலே பாதி நோய்கள் வர வாய்ப்பில்லை ராஜா...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

மனிச இனமே வம்சவிருத்தியில்லாமல் அழியப்போகுது......இதுக்கை நுளம்பு வேறை.😎

விசயம் என்னெண்டா, இயற்கையாக உள்ள ஆண் நுளம்புகள்.....

அவயள்... மூலமா வாற முட்டையள்....

அந்த பாரின் ரிட்டேன் மன்மதராசா வேணாம் கண்ணு..... நம்பாத கண்ணு...லோக்கல் மாமா இருக்கிறேன்ல....

பிரச்சணை அவ்வளவு சிம்பிள் இல்லை கண்டியளே.... 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

கவர்ச்சியான தலையங்கம்😄  இதனால் வேறு நோய் நொடி கள்   வராமலிருந்தால் சரி . இயற்கையை குழப்புவது நன்மையளிக்காது .

நிலாமதி அக்கா....  இந்தத் தலையங்கத்துக்காகவே முழுக் கட்டுரையையும் வாசித்தேன். 😁

நன்றி, நாதம்ஸ். 🙃

  • கருத்துக்கள உறவுகள்

அட மூடமதிகொண்ட விஞ்ஞானிகளே! இந்தப் புதிய நுளம்புகள் மனிசரைக் கடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்....? எங்கள் வனிதாமணிகளையும் கடித்துவிட்டால்.... வம்சவிருத்தி என்னாவது...?? எந்த மரத்தைச் சுற்றி விரதம் இருந்தாலும் பலன் கிடைக்காதே....!!😵

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

அட மூடமதிகொண்ட விஞ்ஞானிகளே! இந்தப் புதிய நுளம்புகள் மனிசரைக் கடிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்....? எங்கள் வனிதாமணிகளையும் கடித்துவிட்டால்.... வம்சவிருத்தி என்னாவது...?? எந்த மரத்தைச் சுற்றி விரதம் இருந்தாலும் பலன் கிடைக்காதே....!!😵

பாஞ்சர், வடிவா வாசீக்கேல்லை போல கிடக்குது.

ஆம்பிள நுளம்புகள் ஊசி போடுவதில்லை. அவையளக்கு மனித சாதி.... ஒத்துவராது. கண்ணிலை காட்டப்படாது.... சாதித்தடிப்பு எண்டு சொல்லுங்கோவன்.

புதிய நுளம்புகள், ஒன்லி ஆம்பிளயள் கண்டியளே.

பொம்பிளயள் தான் ஊசி போடுறவயள்.

அவயள் ஊசியடிக்கிற வயசுக்கு வர முன்னம், சாக வைக்கிற வேலை தான் இப்ப நடக்கப்போகுது. 😎

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பாஞ்சர், வடிவா வாசீக்கேல்லை போல கிடக்குது.

ஆம்பிளயள் நுளம்புகள் ஊசி போடுவதில்லை. 

சோப்பு பவுடர் எல்லாம் முடிஞ்சுது முனிவரே வாங்க மறந்துவிட்டேன் அதுதான்.......

நுளம்பிலும் ஆம்பிளை நுளம்புகள் எவ்வளவு நல்லதுகள். பெண்களைப்போல் மனிசரை கடித்து நோகடிப்பதில்லை.😁 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.