Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குத்தூசி(அக்குபஞ்சர்) வைத்தியத்தில் இவ்ளோ நன்மைகளா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்றுடன் இருபது தடவைகளுக்கு மேல் சென்று வந்துவிட்டேன். நிறைய பலன்கள் உண்டு.கொஞ்ச வருடங்களுக்கு முன் சென்றிருந்தால் சிறிய உபாதைகள் வரமுன் தடுத்திருக்கலாம்.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நான் இன்றுடன் இருபது தடவைகளுக்கு மேல் சென்று வந்துவிட்டேன். நிறைய பலன்கள் உண்டு.கொஞ்ச வருடங்களுக்கு முன் சென்றிருந்தால் சிறிய உபாதைகள் வரமுன் தடுத்திருக்கலாம்.

இணைப்பிற்கு நன்றி உடையார்.

இதை உங்களிடம் இன்று கேட்கலாம் என்று இருந்தேன்.நீங்களே எழுதுவிட்டீர்கள்.
நல்லது சுகமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை உங்களிடம் இன்று கேட்கலாம் என்று இருந்தேன்.நீங்களே எழுதுவிட்டீர்கள்.
நல்லது சுகமாக இருங்கள்.

நீங்களும் சென்று பாருங்கள். அல்லது அவர்களிடம் ஆலோசனை கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி உடையார்.......தரமான சிகிச்சை  போல்தான் இருக்கிறது.டயபடீஸுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்குமா ......!   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி உடையார்.......தரமான சிகிச்சை  போல்தான் இருக்கிறது.டயபடீஸுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்குமா ......!   😁

வாறகிழமை போறன்.நல்லவடிவாய் கேட்டுட்டு வந்து சொல்லுறன்.
வேறை ஏதும் டவுட் இருந்தால் சொல்லுங்கோ....:)
 
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

வாறகிழமை போறன்.நல்லவடிவாய் கேட்டுட்டு வந்து சொல்லுறன்.
வேறை ஏதும் டவுட் இருந்தால் சொல்லுங்கோ....:)
 
இதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......!   🙏

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை,

அப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும். 

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, suvy said:

இதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......!   🙏

டயபடிஷுக்கு போடும் மாத்திரை,ஊசி பற்றியா குறிப்பிடுகின்றீர்கள்.அல்லது  டயபடிஷுக்கான அக்குபஞ்சர் பற்றியா கேட்கின்றீர்கள்? 

3 hours ago, goshan_che said:

அண்ணை,

அப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும். 

நன்றி

உதுக்கும் சேர்த்துத்தான் எனக்கு குத்து விழுது.😁
எதுக்கும் தனியாய் பிரிச்சு கேட்டுப்பாக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

டயபடிஷுக்கு போடும் மாத்திரை,ஊசி பற்றியா குறிப்பிடுகின்றீர்கள்.அல்லது  டயபடிஷுக்கான அக்குபஞ்சர் பற்றியா கேட்கின்றீர்கள்? 

அதாவது இந்த  இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை  உண்டா என்று கேட்கிறேன் ....! 

நான் மாத்திரை போடுகிறேன்.....!

நண்பர் ஊசி போடுகிறார்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, suvy said:

அதாவது இந்த  இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை  உண்டா என்று கேட்கிறேன் ....! 

நான் மாத்திரை போடுகிறேன்.....!

நண்பர் ஊசி போடுகிறார்....!

இப்ப விளங்கீட்டுது நன்றி. விளக்கமாக கேட்க இது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணை.

இலங்கையில் இதில் பிரபலமான ஜெயசூர்ய என்பவர் பல தமிழ் சிங்கள மாணவர்கு இதை இலவசமா படிபித்தார். அப்ப தவறவிட்டுட்டன். பெரிசா இது வேலை செய்யும் எண்டு அப்ப தோன்றவில்லை.

ஆனா உந்த சயாடிக்காவுக்கு மருந்தில்லைதானே. அதுதான் உங்களுக்கு வேலை செய்யுதென்றால் நானும் செய்து பார்க்கலாம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 17:49, குமாரசாமி said:

இப்ப விளங்கீட்டுது நன்றி. விளக்கமாக கேட்க இது உதவும்.

எங்கையப்பா, விளக்கமாய் கேட்கப் போனவர் வழியில் கோஷானோடு மினக்கடுகிறார் போல .....!   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

எங்கையப்பா, விளக்கமாய் கேட்கப் போனவர் வழியில் கோஷானோடு மினக்கடுகிறார் போல .....!   😂

இந்ததிரியை நான் தேடாத இடமில்லை..😂

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைந்தார் ஞானத்தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைந்தார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே....😁

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/8/2020 at 17:45, suvy said:

அதாவது இந்த  இரண்டுவிதமான டயாபடீஸுக்கும் அக்குபங்க்சர் சிகிச்சை  உண்டா என்று கேட்கிறேன் ....! 

அக்குபஞ்சர் வைத்தியரிடம் நீங்கள் கேட்ட கேள்வியை கேட்டேன். அதாவது எனது வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு  இப்படியான பிரச்சனைகள் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க முடியுமானால் உங்களிடம் சிகிச்சை பெற விரும்புகிறார்கள் என கூறினேன்.

அவர் வழமையான பதிலையே சொன்னார்.  நூறு வீதம் மாற்ற முடியாது. ஆனால் அவர்களின் உடல் நிலை எப்படியிருக்கின்றது என்பதை பார்த்த பின்னரும் அவர்களின் உள்ளுறுப்புகளின் நிலமையை அறிந்த பின்னருமே எதையும் நிறு திட்டமாக கூற முடியும் என்றார். அத்துடன் இவர்களுக்கு வேறு நோய்கள் இருந்தால் உதாரணத்திற்கு இரத்த அழுத்தம் இருந்தால்....எல்லாவற்றுக்கும் சேர்த்து  அக்குபஞ்சர் சிகிச்சையை கையாளும் போது சில வேளைகளில் மாற்றங்கள் தெரியும் தெரியலாம் என்றார்.

நீங்கள் விரும்பினால் உவ்விடம் இருக்கும் அக்குபஞ்சர் நிபுணர்களிடம் தொலைபேசியில் வருத்தங்களை சொல்லி விசாரித்துவிட்டு நேரடியாக சென்று ஆலோசனை பெறலாம் என நினைக்கின்றேன்.செலவு ஜாஸ்தி கவனம்.

எனது முதலாளிக்கும் காலில் ஒரு பிரச்சனை இருந்தது. நான் பரிந்துரை செய்து அனுப்பினேன். தன்னால் முடியாது என திருப்பி அனுப்பி விட்டார். 

எனவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு முறை முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை என நான் நினைக்கின்றேன்.

பதிலளிக்க பிந்தியதற்கு வருந்துகின்றேன்.

நலமோடு இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்கு விசாரித்து பதில் தந்ததற்கு மிகவும் நன்றி கு. சா..........!  🌹

எனக்கு இப்ப இது பெரிய பிரச்சினை இல்லை. சொல்வழி கேட்டுக்கொண்டு சமத்தா தன் பாட்டிலை இருக்குது. குறைந்தளவு மருந்துதான் எடுக்கிறானான். அவரிடமும் சொல்லி விடுகிறேன்......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/8/2020 at 13:48, goshan_che said:

அண்ணை,

அப்படியே “சயாடிக்கா” கால் நோவுக்கும் இதுல நிவாரணம் இருக்கோ எண்டும் கேட்டுச்சொல்லவும். 

நன்றி

வணக்கம் கோசான்!
உங்கள் நோய் சம்பந்தமாகவும் கேட்டேன். எலும்பு பாதிப்புகள் இல்லாவிட்டால் 70% அக்குபஞ்சர் உதவக்கூடும் என தெரிவித்தார். எனக்கு ஓரளவு மாறிவிட்டது போல் இருக்கின்றது. உடற்பயிற்சிகள் முக்கியமென குறிப்பிட்டார். அதற்காக உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலையே செய்யக்கூடிய பயிற்சிகளை சொல்லித்தந்தார்.கூடுதலாக தரையில் படுத்துக்கொண்டு காலை மேலே 20நிமிடங்கள் உயர்த்தி வைத்திருத்தல்..இன்னும் பல

6 Gründe, öfter die Füße hochzulegen - Mr. Fuss | Direkt

நான் கிட்டத்தட 20 தடவைகள் சென்று விட்டேன் பலன் தெரிகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 00:11, குமாரசாமி said:

நன்றி அண்ணர். இந்த போசை பார்த்தால் வின்னர் படத்தில் வடிவேல் படுத்த நியாபகம்தான் வருது 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20/9/2020 at 02:34, goshan_che said:

நன்றி அண்ணர். இந்த போசை பார்த்தால் வின்னர் படத்தில் வடிவேல் படுத்த நியாபகம்தான் வருது 🤣

 கோசான் இரண்டு பொசிசனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு...😎

Happy'ness for All on Twitter: "@Vaira_Ganesh Thoongu da kaipulla moment  :-))))"

6 Gründe, öfter die Füße hochzulegen - Mr. Fuss | Direkt

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

 கோசான் இரண்டு பொசிசனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு...😎

Happy'ness for All on Twitter: "@Vaira_Ganesh Thoongu da kaipulla moment  :-))))"

6 Gründe, öfter die Füße hochzulegen - Mr. Fuss | Direkt

வடிவாய் உற்றுப் பார்த்தால் தான், அந்த வித்தியாசம் தெரியும். 😁

கோசான்.... மேலோட்டமாக, அந்தப் படத்தை பார்த்துள்ளார் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

வடிவாய் உற்றுப் பார்த்தால் தான், அந்த வித்தியாசம் தெரியும். 😁

கோசான்.... மேலோட்டமாக, அந்தப் படத்தை பார்த்துள்ளார் போலுள்ளது. 🤣

 வடிவேலு அளவுக்கு காலை விரிச்சு ரிலாக்ஸாய்   இருக்க நான் எந்த இடத்திலையும் சொல்லவேயில்லை.....மேலோட்டமாய்  பார்துட்டு கதை விடுறார் எண்டுதான் நானும்....😂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2020 at 12:00, suvy said:

இதில் இரண்டுவகை உண்டு. ஒன்று ஊசி போடுதல்.... மற்றது மாத்திரை போடுதல். இரண்டைப் பற்றியும் இடைவாரியாய் (விலாவாரியாய்)விசாரித்து சொல்லவும்.....நன்றி......!   🙏

ஊரில் வாழ்ந்தால் ஒன்டும் தேவையில்லை.எனது சொந்த அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, சுவைப்பிரியன் said:

ஊரில் வாழ்ந்தால் ஒன்டும் தேவையில்லை.எனது சொந்த அனுபவம்.

கோவிலில் பிரதட்சை செய்யச் சொன்னால் எத்தனை கதை?
அதையே காசைக் கொடுத்து ஊசியாக போடவேண்டி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.