Jump to content

ஈழத்துக்கே உரிய உறைப்பான பொரித்த சம்பல்

nige

Recommended Posts

Posted
3 hours ago, nige said:

சுவைப்பிரியன் நீங்கள் சொன்ன சம்பல் போட்டாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிகே நன்றி பகிர்வுக்கு. இடி சாம்பல் மிகவும் எனக்கும் பிடிக்கும். இப்பவெல்லாம் அரைசம்பல்தான்.

இடி சம்பல் கேட்டால் எனக்குதான் இடி🤫

ஊர்பெடியள அருவி வெட்டும் போது இடி சம்பலுடன் தோசைகள் கொண்டுவருவார்கள், வயலில் பூவரச நிழலுக்குள் இருந்து சாப்பிட்ட சுவை இன்னும் மனதைவிட்டு அகழவில்லை.

Posted
10 hours ago, உடையார் said:

அது என்னவோ உண்மைதான்.தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சம்பலில் கூட மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது...

10 hours ago, ஈழப்பிரியன் said:

அரைத்த சம்பலை விட இடித்த சம்பல் தனி ருசி.

எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் இடித்த சம்பல்தான் பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/9/2020 at 03:30, nige said:

சுவைப்பிரியன் நீங்கள் சொன்ன சம்பல் போட்டாச்சு 

இது அழகு.சம்பலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இடித்த சம்பல் இல்லையே.

தண்ணி விடாத சட்னி போலை தானே இருக்குது. சட்னிக்கு தான் தாளிதம் செய்வார்கள். வேறு எந்த சம்பலுக்கும் இல்லை.

முக்கியமா, இடித்த சம்பளத்துக்கு, வெங்காயம் பொரிக்காமல், நொறுவலாக இருக்கவேணும்.

மிளகாய், கறிவேல்பிள்ளை மட்டும் சாடையா கொஞ்சம் எண்ணி காட்டி, வாட்டி எடுத்து, (நல்லா பொரியக்கூடாது), சின்னவெங்கயாம், உப்பு சேர்த்து இடித்து, அதனுடன் தேங்காய்பூ சேர்த்து இடித்தால், இடித்த சம்பல். 

சிலர் பழபுளி விடுவர்.... நம்ம வீட்டில் விடுவதில்லை. 

Posted
23 hours ago, Nathamuni said:

உங்கள் கருத்திற்கு நன்றி  உணவு தயாரிக்கும் முறை இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதுண்டு. எங்கள் வீட்டில் தாளித்த தோசைக்கு இப்படித்தான் சம்பல் செய்வது வழக்கம். நீங்கள் சொன்ன சம்பலும் நாங்கள செய்வதுண்டு. ஆனால் அது பாண் அல்லது  இடியப்பத்திற்குதான் அப்படி செய்வம். இவைதான் எனக்கு தெரிந்த முறை. ஒவ்வொருவரது கைப்பக்குவமும் வித்தியாசமானது.பிரதேசத்திற்கு பிரதேசம் அது மாறுபட்டதும் கூட. எங்கள் ஊரில்  தோசை என்றால் அதற்கு தாளித்த சம்பல்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nige said:

தாங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

அடுத்தது, 'தாளித்த' என்றாலே, அது சட்னி தானே....

ஆகவே, உங்கள் ஊரில் தோசைக்கு சட்னி செய்து சாப்பிடுகிறார்கள்.... அதில் தவறு இல்லையே....

சம்பல் என்பது பெரும்பாலும், சமைக்காதது.....

சிங்களவர்கள் கூட, தேங்காய்ப்பூவினுள், வெங்காயம், மிளகாய்த்தூளை போட்டு, தேசிக்காய் புளி விட்டு கையினால் பிசைந்து சம்பல் என்கின்றனர். லுணுமிரிஸ், கட்டசம்பல் தேங்காய்ப்பூ இல்லாதவை.

நம்மிடம், 

மிளகாய் பொரித்து இடித்த சம்பல் (மிளகாயினை மட்டும் வாட்டி எடுப்பது.)
மிளகாய் பொரியாமல்  இடித்த சம்பல்,  
அரைத்த செத்தல் மிளகாய் சம்பல்
அரைத்த பச்சை மிளகாய் சம்பல்
சட்னி (அரைத்த செத்தல் மிளகாய் சம்பலை தாளிதலுக்குள் போட்டு ஒரு கொதிக்க வைத்தல்)

என்று பல வகையறாக்கள்.

இதனை தவிர, கருவாட்டு சம்பல், றால் சம்பல், மீன் சம்பல்... பல.....

ஊரில் மாலை வேளைகளில் சூட்சுமம் தெரிந்தவர்களின்  கடை போய் வடை சாப்பிட்டால், இந்த செத்த மிளகாய், பச்சை மிளகாய் கலந்த ஒரு சம்பல் போடுவார்கள்.... 

அப்படியே ஒரு டசின் வடை.... பிளைன் டி உடன் உள்ள போகும்....

Posted
51 minutes ago, Nathamuni said:

பொரித்து இடித்த சம்பலிற்கு தாளித்து யாரும் போடுவதில்லை என்று குறிப்பட்டிருந்தீர்கள்.ஆனால் யாழ்பாணத்தில் அந்த வழக்கம் உண்டு என்பதை இந்த recipe இல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர வன்னிப் பிரதேசங்களிலும் இதே வழக்கம் உண்டு. என் அம்மா இப்படித்தான் செய்வதுண்டு. சம்பல் பற்றிய  மேலதிக தகவல்களிற்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nige said:

நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை.

தாளித்துக் கொட்டியதும், பேர் சட்னி ஆக மாறும். அவ்வளவு தான்.

சில பேர் சம்பல் எண்டே சொல்லுவினம்தான் தான்... அது குடும்ப, ஊர்வழமை....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கட தொல்லை தாங்க முடியேல்லை. சாப்பாட்டை தந்தால் அனுபவிச்சுச் சாப்பிட வேணும் ஆராயக் கூடாது. எனக்குச் சமைக்க அவ்வளவுக்கு வராது. ஆனால் நிறைய வாசிப்பேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் அ.முத்ததுலிங்கத்தின் "பார்வதி" சிறுகதையில் இருந்து ஒரு பகுதி, படித்துப் பாருங்கள். 

save.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, theeya said:

இதென்ன கரைசல் தீயா....

உது சாப்பிட்டு திரி... இப்படி தான் அடிபட்டு சாப்பிடுவம்...

நீங்கள் தனித்திரி தொடங்கி பதிய வேண்டியதை சம்பலுக்க பதியக்கூடாது....😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Nathamuni said:

இதென்ன கரைசல் தீயா....

உது சாப்பிட்டு திரி... இப்படி தான் அடிபட்டு சாப்பிடுவம்...

நீங்கள் தனித்திரி தொடங்கி பதிய வேண்டியதை சம்பலுக்க பதியக்கூடாது....😁😁😁

பழக்கதோஷத்தில் பேசி விட்டேன். நீங்கள் தொடருங்கள்!😀

பழக்கதோஷம் - எங்கே போனாலும் இலக்கியம் பற்றியே பேச சொல்லுது.

save.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, theeya said:

2 hours ago, nige said:

பொரித்து இடித்த சம்பலிற்கு தாளித்து யாரும் போடுவதில்லை என்று குறிப்பட்டிருந்தீர்கள்.ஆனால் யாழ்பாணத்தில் அந்த வழக்கம் உண்டு என்பதை இந்த recipe இல் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர வன்னிப் பிரதேசங்களிலும் இதே வழக்கம் உண்டு. என் அம்மா இப்படித்தான் செய்வதுண்டு. சம்பல் பற்றிய  மேலதிக தகவல்களிற்கு நன்றி. 

இதிலை பாருங்கோ...

எங்கட ஊரிலை, சம்பல், தாளிதம் இல்லாமல் இருக்கும்...

ஆனால் தாளிதம் செய்து தோசைக்குள் ஊத்தி கலந்து சுடுவினம்.

எப்படியோ.... தாளிதம் உள்ள போயிடும் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.