Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களா?: விக்னேஸ்வரனை இரண்டாவது நாளாக துருவிய சிஐடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள் என விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பில், இன்று இரண்டாவது தடவையாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

பௌத்த பிக்கு ஒருவரால் குற்றப் புலனாய்ப் பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனிடம் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளார்கள்.

சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

2019 நவம்பர் 14 ஆம் திகதி விக்னேஸ்வரன் வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையில், இலங்கையின் மூத்தகுடிகள் தமிழர்களே என குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது எனவும், சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் பௌத்த பிக்கு ஒருவர், செய்த முறைப்பாட்டையடுத்து, கடந்த பொதுத்தேர்தலிற்கு முன்னதாக விக்னேஸ்வரன் முதலாவது தடவையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இன்று இரண்ாடாவது தடவையாக விசாரிக்கப்பட்டார்.

https://www.pagetamil.com/150252/

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை துருவுறது?

விக்கியர் சொல்வது உணமை....

அதனை, மறுக்க முடியாவிடில்.... பயமுறுத்துவது தான் அவர்கள் செய்யும் வேலை.

ஆனால், அந்தாள்.... இதுக்கு மசியாது. 😦

புத்தம் இலங்கை வந்தது, கிறிஸ்துவுக்கு முன்னர்.

சிங்கள மொழி வந்தது கிறித்துவுக்கு பின்னர் ஆறாம் நூறாண்டில்.

ஆகவே புத்தம் வந்தது தமிழர்களிடம். பின்னர் போய் சேர்ந்தது சிங்களவர்களிடம். 

சிங்கத்தின் வாரிசுகள் என்று புருடாவைனை இனியும் நம்ப முடியாது,  தமது வரலாறு தெரியாமல் தவிக்கும் சிங்களவர்கள், தாம் ஆரியர் என்று சொல்லி, தடுமாறி, இப்போது, இராவணனை தேடி ஓடுகின்றனர். 🤦‍♂️

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

என்னத்தை துருவுறது?

விக்கியர் சொல்வது உணமை....

அதனை, மறுக்க முடியாவிடில்.... பயமுறுத்துவது தான் அவர்கள் செய்யும் வேலை.

ஆனால், அந்தாள்.... இதுக்கு மசியாது. 😦

புத்தம் இலங்கை வந்தது, கிறிஸ்துவுக்கு முன்னர்.

சிங்கள மொழி வந்தது கிறித்துவுக்கு பின்னர் ஆறாம் நூறாண்டில்.

ஆகவே புத்தம் வந்தது தமிழர்களிடம். பின்னர் போய் சேர்ந்தது சிங்களவர்களிடம். 

சிங்கத்தின் வாரிசுகள் என்று புருடாவைனை இனியும் நம்ப முடியாது,  தமது வரலாறு தெரியாமல் தவிக்கும் சிங்களவர்கள், தாம் ஆரியர் என்று சொல்லி, தடுமாறி, இப்போது, இராவணனை தேடி ஓடுகின்றனர். 🤦‍♂️

இந்த சிங்கள கூட்டம் கூகிள் விக்கி இணயம்களில் தாங்கள்தான் ஆதி குடிகள் என்று பொய்யான தகவல்களை கொடுத்து மாத்தி விட்டுருக்கினம் முனி.

இங்கிருந்து மீண்டும் சண்டை வேணும் என்று அடம்பிடடிப்பவர்கள் முதலில் இதை கவனிக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

இந்த சிங்கள கூட்டம் கூகிள் விக்கி இணயம்களில் தாங்கள்தான் ஆதி குடிகள் என்று பொய்யான தகவல்களை கொடுத்து மாத்தி விட்டுருக்கினம் முனி.

இங்கிருந்து மீண்டும் சண்டை வேணும் என்று அடம்பிடடிப்பவர்கள் முதலில் இதை கவனிக்கலாம் .

தமிழர், இலங்கையில் ஜரோப்பியராலும், தென்னிந்திய துணைக்கண்டத்தில் தெலுங்கு விஜய நகர பேரரசாலும் 1529 அளவில் வீழ்த்தப்பட்டபின், அவர்களது, கறியும் பலர் உரிமை கொண்டாடுவதை எதிர்க்க முடியவில்லை.
 
அட, இந்த 2000 வருசத்து கறியை, தானே அறிமுகப்படுத்தினது எண்டுறானே பிரிட்டிஸ்காரன்.

பின்ன சிங்களவன் சும்மா இருப்பானே?

நமக்கு தெளிவான வரலாறு உண்டு...... இல்லாதவன் நிரூபிக்க அலம்பறை பண்ணுவான்...

சரி விடுங்க.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தமிழர், இலங்கையில் ஜரோப்பியராலும், தென்னிந்திய துணைக்கண்டத்தில் தெலுங்கு விஜய நகர பேரரசாலும் 1529 அளவில் வீழ்த்தப்பட்டபின், அவர்களது, கறியும் பலர் உரிமை கொண்டாடுவதை எதிர்க்க முடியவில்லை.
 
அட, இந்த 2000 வருசத்து கறியை, தானே அறிமுகப்படுத்தினது எண்டுறானே பிரிட்டிஸ்காரன்.

என்ன செய்வது நாதமுனி ஓசி விசுகோத்துக்கு போன கூட்டம் ஒற்றுமையை படிக்காமல் விட்டதன் விழைவு இது .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

என்ன செய்வது நாதமுனி ஓசி விசுகோத்துக்கு போன கூட்டம் ஒற்றுமையை படிக்காமல் விட்டதன் விழைவு இது .

ஒற்றுமை இல்லை பிரச்சணை.

பிரித்தாளும் தந்திரத்தின் வெற்றி.

இலங்கையில், தமிழ் பேசுவோரை, தமிழர், இஸ்லாமியர் என்று பிரித்தார்கள்.

தமிழகத்தில் சாதியாக பிரித்தார்கள்.

ஆளப்படுகின்றனர்.

பாக்கு நீரினையின் இருபுறமும் ஒற்றுமை வருவதை, விரும்பாத நம்மவர்களையே பார்கிறோமே!

  • கருத்துக்கள உறவுகள்

துருவினால் உண்மை பொய்யாகி விடும் என சி.ஐ.டி நினைக்கிறதா? சி.ஐ.டி என்ன தொல்பொருள் ஆராட்சியாளர்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

துருவினால் உண்மை பொய்யாகி விடும் என சி.ஐ.டி நினைக்கிறதா? சி.ஐ.டி என்ன தொல்பொருள் ஆராட்சியாளர்களா??

😀😀பச்சை போடமுடியலை நேற்றுத்தான் கவனித்தன் ஒருநாளைக்கு ,நான்கு  பேர்தான் ஆக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி சிலரும் மோகன் அண்ணாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள். கவனிப்பார் என நினைக்கிறேன். 

2 minutes ago, பெருமாள் said:

😀😀பச்சை போடமுடியலை நேற்றுத்தான் கவனித்தன் ஒருநாளைக்கு ,நான்கு  பேர்தான் ஆக்கும் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் சிஷ்சுவேசனை கற்பனையில் நினைத்துப்பார்த்தேன். 

சீவி அன்பாக கூப்பிட்டு, தேனீர் கொடுத்து, நீண்டதொரு விளக்கம் கொடுத்திருப்பர்.

வந்தவர்கள் தலையை சொறிந்தபடி, சரி அடுத்த முறை விசாரிக்க கூப்பிடுறோம் என சொல்லி எஸ் ஆகி இருப்பார்கள்.

9 minutes ago, nunavilan said:

துருவினால் உண்மை பொய்யாகி விடும் என சி.ஐ.டி நினைக்கிறதா? சி.ஐ.டி என்ன தொல்பொருள் ஆராட்சியாளர்களா??

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

துருவினால் உண்மை பொய்யாகி விடும் என சி.ஐ.டி நினைக்கிறதா? சி.ஐ.டி என்ன தொல்பொருள் ஆராட்சியாளர்களா??

மென்பொருள் ப்பக் (Software bugs) எண்டால், அவரும் பெரிசா ஒண்டும் செய்யேலாது.

அதை எழுதின கொம்பனி தான் ஏதாவது செய்ய ஏலும்.

ஓப்பின் சோர்ஸ் மென்பொருள் (Open Source software) எண்டால், இந்த பிரச்சணையள் கூட தான்.

20 minutes ago, nunavilan said:

இதைப்பற்றி சிலரும் மோகன் அண்ணாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள். கவனிப்பார் என நினைக்கிறேன். 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தமிழர் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன அல்லது  மறைக்கப்படுகின்றன.

அடுத்த பத்து வருடங்களில் தமிழர்கள் ஐரோப்பாவில் இருந்து......கனடாவில் இருந்து வந்தவர்கள் ஆகி விடுவார்கள்.ஏனெனில் வரலாறுகள் புதிப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.😜
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் தமிழர் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன அல்லது  மறைக்கப்படுகின்றன.

அடுத்த பத்து வருடங்களில் தமிழர்கள் ஐரோப்பாவில் இருந்து......கனடாவில் இருந்து வந்தவர்கள் ஆகி விடுவார்கள்.ஏனெனில் வரலாறுகள் புதிப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும்.

இல்லை என்றே நினைக்கிறன்.

 

கிந்தியா, அந்தந்த நேரத்தில், இடத்தில இருந்த தமிழர்கள் கேட்ட மிகச் சாதாரண (நாகரிகமடைந்த மனித  உயிர்வாழ்வின் அடிப்படை) உரிமைகளை கேட்ட நேரத்தில், இடத்தில் கொடுத்ததும், பின்பு அதை சக்கடத்தார் (இது எதுவென்றே நான் எனது கண்ணால் காணவில்லை) தலையிடுவது, பறிப்பது போல கொடுத்ததையாவது விட்டு  இருந்தால்,

அதேவேளையில், சிங்களம் கேட்டதையாவது கொடுத்து, தலையிடாமல்  இருந்தால்,

தமிழர்களுக்கு தங்கள் யாரென்றே தெரியாமல் போய், இந்தியா என்ற தேசமும் (நான் சொல்வது சமூகம், அதன் ஒழுங்கு), சிறி லங்கா என்ற தேசமும் ஆக  குறைந்தது, இந்த திராவிட நாடு என்ற பகுதியில், வேறுபாடுகள், குறைபாடுகள்  இருந்தாலும், தமிழர்களின் தேசம் என்று ஆகி இருக்கும்.

தமிழர்களிடம், தமிழர்களே ,தமிழ் பிராமி என்று கேள்விக்கு, உனக்கு பிரமை பிடித்து விட்டதா என்று கேட்டு இருப்பார்கள்.

கிந்தியா அமத்த, இப்போது சிந்து வெளி நாகரிகம் மொழியியல் வழியே தொடர்பு இருக்கிறது என்றதில் வந்து இருக்கிறது. மரபணுவும், அதையே சுட்டுகிறது. ஆனால், கிந்தியா தடுக்கிறது. 

இலங்கை தீவில், சிங்களம் விஜயனின் வருகையை எப்படி தமது வரலாற்றில் இருந்து நீக்கலாம் என்று முயல்கிறது.

சிங்கத்தின் தாம் ஆரிய வழி தோன்றல், வேடரின் வலீத் தோன்றல் என்ற எல்லாம் சர்வதேச வரலாற்று மற்றும் தொல்லியல்    மட்டத்தில் நகைப்புக்கு உள்ளாகி, இப்போது இராவணன் என்றும், சிவு, ஹெல (சிங்களத்தை பொறுத்தவரை இலங்கைத் தீவின் வேடருக்கு முந்திய ஆதி குடிகள்) என்று வந்து நிக்கிறது. 

13 hours ago, goshan_che said:

சீவி அன்பாக கூப்பிட்டு, தேனீர் கொடுத்து, நீண்டதொரு விளக்கம் கொடுத்திருப்பர்.

வந்தவர்கள் தலையை சொறிந்தபடி, சரி அடுத்த முறை விசாரிக்க கூப்பிடுறோம் என சொல்லி எஸ் ஆகி இருப்பார்கள்.

CV இன் விளக்கம் இப்படியாக இருந்தால் ...

விஜயனின் வருகை உண்மை, அல்லது மஸகாவம்சத்தின் கதையாக  
இருக்கலாம். ஆனால்  இப்போதைய ஈழத்து தமிழரில் ஏறத்தாழ 29% பெங்காலி core மரபணு அடக்கத்தை  மறைக்க முடியாது. சிங்களவரில் பெங்காலி core மரபணுவை  26-28%. இதை தான் ஈழத்தமிழர்கள் முன்பிருந்தே சொன்னது. இலங்கையின் ஆதி குடிகள், வந்தவர்களுடன்  ஏற்பட்ட கலப்பும் சீரழிவுமே முழு இலங்கை தீவில் உள்ள இப்பொது பூர்விகம் உள்ள அனைவரும், வேடரை தவிர.

வேடரில் கூட, இப்போது இருக்கும் வேடரை தவிர, மிகுதி எல்லா வேடரும்  சிங்கள, தமிழ்  மயமாகி ,  விட்டார்கள். அதனால் தான்,  கரையோரத்தில் பூர்விகம் உள்ள சிங்கள மக்களின் மரபணுவில்  9% வேட மரபணுவும், வாகரைக்கு கீழே பூர்விகம் உள்ள தமிழ் மக்களில் 6% வேதா மரபணுவும் காணப்படுகிறது.  

இப்போதுள்ள வேடரை தவிர, இலங்கை தீவை பூர்விகமாக உள்ளவர்களின் உள்ளார்ந்த (core)  மரபணு, இப்போதுள்ள தென் இந்தியாவில் உள்ள மரபணுவே ஆகும்.    

இவர்களின் அன்றைய மொழி எழு (Elu). வேடிக்கை, சிங்களத்தில் எழு எனும் சொல்லோ, அல்லது அதற்கான கருத்தோ இல்லை.

இவர்களின் அன்றைய மொழி எழு (Elu). வேடிக்கை, சிங்களத்தில் எழு எனும் சொல்லோ, அல்லது அதற்கான கருத்தோ இல்லை.

இங்கு தான் தமிழ் பிரமி என்பதின் (அந்த நேரத்தில் அது ஓர் தொழில்நுட்ப மாய வித்தையாக இருந்து இருக்கும்) மாய அற்புதம் வருகிறது. இந்த மாயத்தை (தமிழ் பிரமி) விளங்காமல், சிங்களம் (ஏன் தமிழரும் கூட) இந்த வரலாற்று சுழிக்குள் சிக்கி வெளியில் வர முடியாமல் தவிக்கிறது. 

பிரமி என்ற பெயர் அதனால் தான் (மாய அற்புதம்) வைத்தார்களோ தெரியவில்லை . 

சிங்களம் சொல்லும் சிங்கள பிராமி என்பது, உண்மையில் தமிழ் பிராமி. 

தமிழ் பிராமி என்பது, உண்மையில் ஒலி வடிவத்தை ஒழுங்கமைக்கும் ஓர் coding அமைப்பு (sound coding system).

உ.ம். (தமிழ் பிரமிக்கு பின்பு தோன்றிய மொழிகள்)

சிங்கள குரல் (உச்சரிப்பு) ——-> தமிழ்  பிரமி (ஒலி வடிவத்தை ஒழுங்கமைக்கும்)  ——-> அந்த சிங்கள  உச்சரிப்பை கொடுக்கும் தமிழ் பிரமி அளிக்கும் எழுத்து வடிவம் (scripts)- சிங்கள எழுத்து.

 தமிழ் பிரமிக்கு முன்பு  தோன்றிய மொழிகள்,  சில உச்சரிப்பை இழந்து இருக்கும், சிலவற்றை புதிதாக பெற்று இருக்கும்.  


இன்றைய மொழிகள் எல்லாவற்றினதும் அடிப்படை உச்சரிப்பு தமிழில் இருப்பதற்கான காரணம் தமிழ் பிரமி  ஒலி வடிவமைப்பு ஒழுங்கமைக்கும் அமைப்பு.

அசோகன் கொடுத்து அனுப்பியதாக சொல்லப்படும் பிராமி, தமிழ் பிராமியின்  அவர்களின்  உச்சரிப்புக்கு ஏற்ற மாதிரி தமிழ் பிரமியைத் தழுவியது. 

இதில் சிங்களவர் (சிங்கள மொழி) என்பது, பௌத்த மதம், பாளி, சமஸ்கிருதம், பின்பு வந்த பல படை எடுப்புகள் என்பதில் வந்த கலப்பினால் வந்தது.       

நான் சொல்வது, இந்த தமிழ் பிரமி சுழிக்குள் சிங்களம் தானாக, சட்ட அடிப்படையில்  அகப்பட்டு விட்டது.

சிங்களம் இப்பொது சொல்வது, தாம் இலங்கை தீவில் இருந்த homo sapiens இருந்து சிங்களமாக கூர்ப்படைந்தவர்கள் என்று ((இது சிங்களத்திடம் இருந்து அரிது நான் சொல்வது).. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் பிரமியின் சுழியை வேறு திரியில் பதிந்து விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், இப்படி செய்வதை பார்த்து கொண்டு, வெளியில் இருக்கும் தமிழர்கள், முக்கியமாக பிரித்தானியாவில் tory மற்றும் labour இற்கு கொடிபிடடிப்பவர்கள், கட்சி பேதமின்றி, இப்படி போலீஸ் விசாரணை என்று ஆரம்பித்ததிதை பாராளுமன்றத்தில் கடுந்தொனியில் கண்டிக்குமாறு அந்த கட்சிகளுக்கு அழுத்தம் தர வேண்டும்.  

தமிழ் நாடு கூட இந்த அணுகுமுறையை கண்டிக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டை இன்னும் சனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் சர்வதேசம் தான்.. சொறீலங்காவில் இந்த நிலைக்குக் காரணம். 

இவர்களை சர்வதேச வெகுசனத்தின் முன் அடையாளம் காட்டாமல்.. உருப்படியான மாற்றங்களை உண்டு பண்ணவே முடியாது.

புலிகளின் அழிவுக்கு சிங்களவனோட கூட உழைத்தவர்கள்.. தங்கள் தங்கள் பொக்கட்டுக்களை நிரப்புவதோடு சரி. இனம்.. மண்.. தேசம் பற்றி கிஞ்சிதமும் அக்கறையற்றவர்கள் என்பது இப்போவாவது எம்மவர்களுக்குப் புரிந்தால் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2020 at 04:47, பெருமாள் said:

விக்னேஸ்வரன் முதலாவது தடவையாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இன்று இரண்ாடாவது தடவையாக விசாரிக்கப்பட்டார்.

பயமுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிக்கிறார்கள். இப்படி பலதடவை சி. ஐ. டி. விசாரணை என்று திரிந்தால், சி. வி. எதுக்கு வம்பு என்று அடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஐயா வடிவாய் அவர்களை வரவேற்று,  உபசரித்து, நன்கு விளக்கம் கொடுத்து திருப்பி பேச முடியாதவாறு ஆதாரங்களை தொகுத்து கொடுத்து, இனி வருவதென்றால் நீங்கள் ஆதிக்குடிகள் என்பதற்கு ஆதாரத்தோடு வாருங்கள் இல்லையேல் எங்கள் ஆதாரத்தை முறைப்பாட்டாளருக்கு விளங்கப்படுத்துங்கள் என்று சொல்லி அனுப்பவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.