Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ.

இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒரே வேட்டைதான். ரோல்ஸ் என்ன, வடை என்ன, சொக்கலேற் கேக் என்ன, ஸ்பெசல் ஐஸ்கிரீம் என்ன, கோக் என்ன, பெப்சி என்ன.... ஒரே வெட்டுத் தான் பாருங்கோ. கடை முதலாளி தொடக்கம், வேலை செய்யிற அண்ணையவை வரை எல்லாருக்கும் எங்களை நல்ல வடிவாத் தெரியும். முதலாளியின்ர மனிசி எங்களுக்கு ‘சாப்பாட்டு ராமன்கள்' எண்டு பேர் வச்சு வேலை செய்யிற பொடியளோட நக்கல் அடிக்கிறவவாம். அவ்வளவுக்கு நாங்கள் பேமஸ் பாருங்கோ. (இதையெல்லாம் பெருமையா சொல்லுது பார் சனி எண்டு நீங்கள் முணுமுணுக்கிறது கேட்குது. கதை சொல்லேக்க உப்பிடி இடஞ்சல் பண்ணக்கூடாது பாருங்கோ)

ஒரு நாள் லவ்லீக்க சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க, புதுசா ஒரு சாப்பாட்டுச் சாமான் கொண்டந்து வச்சினம். அது ரோல் மாதிரி இருந்தது பாருங்கோ. ஆனா கொஞ்சம் செவ்வக சேப்பில, ரோலை விட நல்ல பெரிசாக இருந்துது. நாங்கள் அட லவ்லியில பெரிசா ரோல் சுடத் தொடங்கீட்டாங்கள் போல எண்டு ஒரே வெட்டு. அதுக்குள்ள ஆட்டிறைச்சியோட, நல்ல உருளைக்கிழங்கு, ஒரு அரைவாசி அவிச்ச முட்டை எண்டு, சும்மா சொல்லக்கூடாது, ரண்டு திண்டால் வயிறு நிறையும் எண்ட அளவுக்கு இருந்தது. அதுவும் சுடச்சுட நல்ல மொறு மொறுவெண்டு அவையள் கொண்டந்து வைக்க நாங்களும் வெட்டு வெட்டெண்டு வெட்டினம். பில் வரேக்கதான் ஐயோ எண்டு இருந்தது பாருங்கோ. லவ்லியில அப்ப மட்டன் ரோல் 12 ரூவா, இந்தப் புதுச் சாப்பாட்டுச் சாமான் 20 ரூவா. அந்தச் சாப்பாட்டுச் சாமானின்ர பேர் வேற விளங்கேல்ல. பில்லப் பாத்திட்டுத்தான் கேட்டன் 'அண்ணை என்னத்துக்கு 20 ரூவாப் படி கணக்குப் போட்டிருக்கிறியள்?' எண்டு.

அப்பதான் கவுண்டரில நிண்ட அந்த அண்ணை சொன்னார், ‘தம்பி, இதுக்குப் பேர்தான் மிதிவெடி. இண்டைக்குதான் முதன் முதலா எங்கட கடையில போட்டிருக்கிறம்' எண்டு. அண்டைக்குத்தான் பாருங்கோ நான் முதன் முதலாக அந்தப் பேரைக் கேட்டன். அதுக்குப் பிறகு கன இடத்தில கன விதமான ரேஸ்ரில இந்த மிதிவெடிய சாப்பிட்டிருக்கிறன். இஞ்ச கனடாவில உள்ளுக்க றால் எல்லாம் போட்டு நல்லாச் செய்யினம். இந்த மிதிவெடி பற்றிக் கொஞ்சக் கேள்வியள் கேட்கோணும் உங்களிட்ட;

 

 

  • இந்த உணவுப் பண்டத்தை முதன் முதலில் யார், எப்போது, எங்கே அறிமுகம் செய்தார்கள்?
  • 2000ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பதார்த்தம் எங்கள் கடைகளில் விற்கப்பட்டதா?
  • எந்தெந்தப் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பதார்த்தம் கிடைக்கிறது? ஏனென்றால் கனடாவில் இந்தப் பதார்த்தம் பற்றித் தெரியாத பலர் இருக்கிறார்கள். முதன் முதலில் இது பற்றிக் கேள்விப்படுவோர் தேடிப்போய் வாங்குகிறார்கள்.
  • இப்போது ஆரம்ப, மத்திம, கடைநிலை இருபதுகளிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் இருக்கும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் உங்களின் இளவயதில் இந்தப் பதார்த்தம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  • நான் 2005ன் பிற்பகுதியில் கொழும்பில் வாழ்ந்த போது இது பெரியளவில் அங்கே கிடைக்கவில்லை. கொழும்பிலும் இது கிடைக்கிறதா?

ஆர் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ... எங்கட ஈழத் தமிழ் ஆக்களோட ஒருதரும் பகிடி விடேலாது. நாங்கள் ஆர்... சிம்பிளா சாப்பாட்டுக் கடையில போய் மிதிவெடி கேட்டு வாங்கிவாற ஆக்களெல்லே.....

நன்றி http://eelamlife.blogspot.com/2009/08/blog-post_22.html யாரும் யாழ் ஆட்களின் பிளாக் என்றால் முன்னமே சொல்லிடுங்க நான் கொப்பி  பேஸ்ட் பண்ண பிடிக்காமல் அது என்னுடையது நீ கொப்பி  பேஸ்ட் பண்ணக்கூடாது என்று சொன்னவர்களும் உண்டு .

இப்படிக்கு பெருமாள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பு இது பற்றி நான் அறியேல்ல..... நான் பார்ததேல்லாம் மாடென்றாலும் சரி மனிசன் என்றாலும் சரி பாரபட்சமில்லாமல் காலை உடைக்கிற மிதிவெடி மட்டுமே....!  😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் உயர்தரம் படிக்கும் போது தான் இதை பார்த்தனான். சயன்ஸ் கோல் யாழ்ப்பாணத்தில் படிக்கும் போது இது தான் என்னுடைய பிடித்த சிற்றுண்டி. ஆனால் சண்டை முடிந்தபின்பு ஒரு கடைகளிலும் காணக் கிடைக்கவில்லை

இது யாழ்ப்பாணத்தில் 98/99 களில் அறிமுகமாகியது என்றுநினைக்கிறன் ஆனால் சிங்களப்பகுதிகளில் பெரிதாக காணக்கிடைக்கவில்லை. லாச்சப்பலில் ஒரு கடையில் கண்டிருக்கிறன் ஆனால் லண்ட்னில் காணவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த சிற்றுண்டி 1990களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வரத் தொடங்கியது. Rollsக்குள் அவித்த பாதி முட்டையை வைத்தால் மிதிவெடி. அம்புட்டுதே. 😀

Posted

எனக்கும் 2002 இல் சாப்பிட்டதாய் நினைவு.இது வவுனியாவிலும் இது இல்லை. நான் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்த போது நண்பர்களுடன் ஒரு field work ற்காக சென்றிருந்தேன். அப்போது கிறிநொச்சியில் சாப்பிட்டிருக்கிறேன். பெயரை கேட்டதும் சாப்பிட பயமாய் இருந்தது. rolls மாதிரித்தான் இருக்கும் என்றதும் சாப்பிட்டு பார்த்தேன். நன்றாகவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெரியாத ஆட்களுக்கு படத்தை போட்டால் தான் தெரியும் .. 

இதுவா தோழர்.? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.