Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

Featured Replies

17 hours ago, Nathamuni said:

அதுக்கு லிமிட் உள்ளது என்று நினைக்கிறேன்.

முன்னர் £30. இப்போது, கொரோன காரணமாக £45.

ஹோட்டல் ரூமுக்கு கொடுக்க கூடுதலாக இருக்க வேண்டும்.

நாதமுனி, Apple Pay க்கு லிமிட் இல்லை. 2019  விடுமுறை முழுவதும் கூடுதலான பணக்கொடுப்பனவுகள் Apple Pay மூலம் தான் செய்தேன். தெருவோர சிறிய நடமாடும் ஜஸ்கிறீம்  கடையிலிருந்து Hotel payments, toll payments  அனைத்தும். 

  • Replies 57
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நாதமுனி, Apple Pay க்கு லிமிட் இல்லை. 2019  விடுமுறை முழுவதும் கூடுதலான பணக்கொடுப்பனவுகள் Apple Pay மூலம் தான் செய்தேன். தெருவோர சிறிய நடமாடும் ஜஸ்கிறீம்  கடையிலிருந்து Hotel payments, toll payments  அனைத்தும். 

இங்கே, போன் மூலமாக, டெபிட்காற் இல்லாமல் பணம் செலுத்தலாம் ஆகையால், அப்பிள்பே பெரும்பாலும் பாவிப்பதில்லை. அதன் லிமிட் தான் சொன்னேன்.

நீங்கள் சொன்ன பின்புதான் பார்த்தேன்.

Unlike contactless card payments that limit you to a £45 spend, there is no limit for Apple Pay. It means you can pay for your weekly shop, or fill your car up with fuel, all with your iPhone or Apple Watch.

நன்றி.

ஆனாலும் ஒரு விடயம். அந்த வகையில் பணத்தை பெறும் பே ரேமினல்ஸ், நாம் வாழும் நாடுகளுக்கு வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை.

39 minutes ago, Nathamuni said:

ஐரோப்பாவில் பல நாடுகளில் Apple pay யில் மிக சுலபமாக பொருட்களை சேவைகளை வாங்க முடியும். எனது சொந்த அனுபவம். ஸ்கன்ரிநேவிய நாடுகளில் தெருவோர நடமாடும் பெட்டிக்கடைகளில் சிலவற்றில் கூட Apple Pay மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்கள். Cash ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆச்சரியமே.  கொப்பன்ஹேகன் தெருவோர கடையில் அப்பிள் ஜூஸ வாங்குவதற்கு cash ஏற்றுக்கொள்ளாததால்  Apple Pay மூலமே பணம் செலுத்தவேண்டியிருந்தது. பணக்கொடுப்பனவு மிகவும் சௌகரயமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

ஸ்கன்ரிநேவிய நாடுகளில் தெருவோர நடமாடும் பெட்டிக்கடைகளில் சிலவற்றில் கூட Apple Pay மட்டும் தான் ஏற்றுக்கொள்வார்கள். Cash ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது ஆச்சரியமே.

நல்ல தொழில் நுட்பம் லாபநட்ட கணக்கு ஆப்பிள்ல்காரனுக்கும் சொல்லி அரசுக்கும் சொல்லி விடும் .

இங்கு நுகர்வோரையும் விற்பனையாளர் களிடமிருந்து  ஆப்பிள் இலகுவாக தகவல்கள் திரட்டிக்கொள்கிறது ஒரு நாள் இருபகுதியும் தங்கள் தனிப்பட்ட விடயங்கள் பரகசியமாவது விரும்பாமல் பழமைக்கு திரும்ப அங்கு மாபெரும் சரிவு காத்து இருக்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் கிரீக் ல் சிஸ்ட்டம் கடையின் காசு போடும் மிசின் வாட் ஒபிஸ்க்காரனுக்கும் நேரடி லிங்க் இன்னிக்கு மூலைக்கடை சாயக்கடை எவ்வளவு வியபாரம் செய்தது என்று லைவ்வா பார்க்க கூடியது போல் செய்தார்கள் . ஒரு கட்டத்தில் மிசினுக்குள் வரும் பில் என்றால் இவ்வளவு கூட இல்லை நேரடி வியபாரம் என்றால் இவ்வளவு குறைவு என்று ஒட்டுமொத்தமாய் மாறியதும் கிறிஸ் வீழ்ச்சிக்கு காரணம் .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

1 hour ago, பெருமாள் said:

நல்ல தொழில் நுட்பம் லாபநட்ட கணக்கு ஆப்பிள்ல்காரனுக்கும் சொல்லி அரசுக்கும் சொல்லி விடும் .

இங்கு நுகர்வோரையும் விற்பனையாளர் களிடமிருந்து  ஆப்பிள் இலகுவாக தகவல்கள் திரட்டிக்கொள்கிறது ஒரு நாள் இருபகுதியும் தங்கள் தனிப்பட்ட விடயங்கள் பரகசியமாவது விரும்பாமல் பழமைக்கு திரும்ப அங்கு மாபெரும் சரிவு காத்து இருக்கும் .

இது குறித்து நான் சில ஆண்டுகள் முன்னர் பதிவு போட்டிருந்தேன். கடைகளில், ரில் மெசினை, அரசாங்கத்திடம் இருந்தே பெற வேண்டும். அது, இணைய மூலமாக, அரச வரித்துறையுடன் தொடர்பில் இருக்கும்.

மாதமுடிவில் எவ்வளவு வரியோ, அதை வங்கியில் இருந்து நேரடியாக தூக்கும்.

இந்த முறை பல்கேரியாவில் முதலிலும், அதை தொடர்ந்து, கென்யா நாட்டிலும் வந்தது.

கிறீசில், வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், வரி விகிதம் ( 24% )ஏறியதே.

பிரிட்டனில் வந்துள்ளது. கள்ள மார்கட் இருப்பது பொருளாதாரக்கு நல்லது.

பிரிட்டனில் சொப்வேர் துறையினர், கன்ராக்டில் இருந்தால், கம்பனி, வேலைக்கு கொடுக்கும் பணத்தில், செலவு போக, வருட முடிவில் கணக்குப்பிள்ளை சொல்லும் வரியை கட்டுவர். இந்தவருசம் ஏப்பிரல் மாதத்தில் இருந்து, கம்பனி, வரியை கழித்து தான் கொடுக்க வேண்டும் என்று வரித்துறை சொல்லிவிட்டது.

நிரந்தர ஊழியர்கள் போல கழிப்பதானால், கொலிடே பே, சிக் பே, கம்பனி தரவேண்டும் என்று சொல்ல, அதெல்லாம் எமக்கு தெரியாது, அரசைக் கேள் எண்ட, பெரிய சண்டை.

கொரோணாவால், அரசு ஒரு வருசத்துக்கு தள்ளிப் போட்டுள்ளது.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தோழனா, வில்லனா... நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

தோழனா, வில்லனா... நீங்கள் கிரெடிட் கார்டை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா?

Credit Card

Credit Card ( Photo by Ales Nesetril on Unsplash )

கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது.

`கிரெடிட் கார்டு வேணுமா சார்' என்று யார் போன் செய்தாலும், அலறி அடித்துக்கொண்டு அழைப்பை துண்டிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

காரணம் கந்துவட்டிக் காரர்களைவிடவும், அதிகமான வட்டியை கிரெடிட் கார்டுகள் நம்மிடமிருந்து பிடுங்குகின்றன. கண்ணுக்கு தெரிந்த வட்டி, தெரியாத மறைமுக வட்டி எனப் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன.

`சரி, அப்படியானால் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாதா?' என்று நீங்கள் கேட்கலாம். பயன்படுத்தவே கூடாது எனச் சொல்லவில்லை. சரியாகப் பயன்படுத்தினால் அதைப் போன்ற உற்ற தோழன் வேறு எதுவும் இருக்க முடியாது. நம் எதிர்காலக் கடன் தேவைகளுக்கு நம் இமேஜை உயர்த்திக் கொடுக்கும் வல்லமையும் அதற்குண்டு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதை எப்படி ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

Card
 
Card Pixabay

முதலில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, வாங்கியதுதான் வாங்கிவிட்டோம் கார்டை தேய்த்து ஏதாவது செலவுகளைச் செய்வோம் என்று நினைத்து, அதைப் பயன்படுத்த வேண்டாம். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் லிமிட் என்ன என்று பாருங்கள். பொதுவாக, முதல் முறையில் ரூ.30,000 உங்கள் லிமிட்டாக இருக்கும்.

அத்தியாவசியமான, குறைந்த செலவுகளுக்கு மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துங்கள். கிரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்த வேண்டாம். 50 சதவிகிதத்துக்கும் மேல் பயன்படுத்தினால், உங்களிடம் காசு கையிருப்பு இல்லாததால்தான், நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும். அதிகபட்சம் 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது மிக நன்று. ஏனெனில், உங்களுடைய அதிகபட்ச பயன்பாடு சிபிலில் அப்டேட் செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடன் அட்டையில் பில்லிங் தேதி, உங்களுக்குப் பணம் செலுத்த வசதியான சூழலாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் கிரெடிட் கார்டு பில் கட்டுவதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. தயவுசெய்து உங்கள் வருமானத்தையும், மாத கமிட்மென்ட்டுகளையும், கிரெடிட் லிமிட்டையும் மனதில் வைத்து, கடன் அட்டையைப் பயன்படுத்தினால் நல்லது.

செலவழித்த தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திவிடுங்கள். உங்களால் இதை நினைவில் வைத்துக்கொண்டு செலுத்த இயலாது என்றால், வங்கியின் ஆன்லைன் பேங்கிங் மூலம் ஆட்டோ டெபிட் (Auto Debit) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும். வங்கியில் தேவையான அளவு பணம் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Credit Card
 
Credit Card Pixabay

உங்கள் கிரெடிட் கார்டு பில்லில், கட்ட வேண்டிய குறைந்தபட்சத் தொகை மற்றும் முழுத் தொகை தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் முழுமையான பில்லைக் கட்டிவிடுங்கள். குறைந்தபட்ச பில் மட்டும் கட்டினால், மீதமுள்ள தொகைக்கு எக்ஸ்ட்ரா வட்டி கட்ட வேண்டியிருக்கும். அது மட்டுமன்றி, அடுத்த மாத பில்லுடன் கூடுதல் சுமையாக வந்து நிற்கும். தாமதமாக பில் கட்டினால், அதுவும் சிபிலில் பதிவு செய்யப்படும். பின்னர் நீங்கள் வேறு கடன் கேட்டால் எந்த நிறுவனமும் தராது.

ஸ்மார்ட்கேர் டிப்ஸ்!

* ஆன்லைன் பர்ச்சேஸ் என்றால் நம்பிக்கையான இணையதளங்களில் மட்டும் அட்டையைப் பயன்படுத்துங்கள். விலை குறைவு, நல்ல ஆஃபர் என ஆசைப்பட்டு, பரிச்சயமில்லாத இணைய தளங்களில் கார்டைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கார்டு விவரங்கள் களவாடப்பட்டு பெரும் துயரத்தில் தள்ளிவிட்டுவிடும்.

* கிடைக்கிறதே என்பதற்காகக் கணக்கில்லாமல் கிரெடிட் கார்டை வாங்க வேண்டாம். கையாள்வது கஷ்டம். நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், இருக்கும் கார்டிலேயே லிமிட் அதிகப்படுத்திக் கொடுப்பார்கள்.

சஞ்சய் காந்தி
 
* எக்கச்சக்க ரகங்களில் கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து வாங்குங்கள். ஷாப்பிங் செய்வர்களுக்கு, அதிகம் பயணம் செய்பவர்களுக்கு, எரிபொருள் நிரப்புபவர்களுக்கு எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. உங்களுக்கேற்ற கார்டை வாங்கினால், சலுகைகளின் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

* கடன் அட்டையைப் பயன்படுத்துவதற்கு முன், உங்களுக்கு வழங்கிய வங்கியின் இணைய தளத்துக்குச் சென்று, உங்கள் அட்டைக்கான சலுகைகளைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்தலாம். உங்கள் முன்னிலையில் மட்டுமே அட்டையைப் பயன்படுத்துங்கள். ஹோட்டல், கடை பணியாளரிடம் கொடுத்து அனுப்பி பயன்படுத்த வேண்டாம். உங்கள் அட்டையைப் பிரதியெடுக்க வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2020 at 16:08, Nathamuni said:

இது குறித்து நான் சில ஆண்டுகள் முன்னர் பதிவு போட்டிருந்தேன். கடைகளில், ரில் மெசினை, அரசாங்கத்திடம் இருந்தே பெற வேண்டும். அது, இணைய மூலமாக, அரச வரித்துறையுடன் தொடர்பில் இருக்கும்.

மாதமுடிவில் எவ்வளவு வரியோ, அதை வங்கியில் இருந்து நேரடியாக தூக்கும்.

இதை பற்றி அன்றே அழுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், விடுபட்டு விட்டது.

இது ஒரு போதுமே செய்யக்கூடாத விடயம்.

தனிப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட தகவல்களை, எந்தவொரு அரசாங்கத்திடமும், அப்படியான தாராளமயசதக் கொள்கைகைகள் உள்ள அரசிடமும், சட்டக் கட்டாயம் இன்றி வழங்குவது ஆபத்தானது.

தனிப்பட்ட அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட வியாபாரம், மற்றும் வரி வசூலிப்பு, முற்றான உண்மை என்ற நிலைக்கும், ஏற்றுக்கொள்ள முடியாத வரி வரிவசூலிப்பு கொள்கைகள், ஒழுங்குமுறைகள் என்பவற்றுக்கு இடையில் இருக்கும் grey zone இல் செயற்படுத்தப்படுவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.