Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணே நீ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீ..

மலரல்ல

வாட...

மானல்ல

இரையாக...

கண்ணல்ல

கரைய..

நிலவல்ல

எட்ட வைக்க...

தேனல்ல

எறும்பு மொய்க்க..

வண்டல்ல

ஏமாற..!

பெண்ணே நீ

மதுவல்ல

மயங்க...

தண்ணியல்ல

அடிக்க..

மஞ்சமல்ல

தூங்க..

தங்கமல்ல

கிண்ட...

புதையலல்ல

தோண்ட...

மாவல்ல

பிசைய...

"குவிட்" அல்ல

போர்த்திக்க..

பொன்னல்ல

பதுக்கி வைக்க

தேசமல்ல

கட்டிக் காக்க...!

பெண்ணே நீ

புயலல்ல

வீச..

எரிமலையல்ல

வெடிக்க..

பறவையல்ல

பறக்க..

கூண்டுக் கிளியல்ல

விடுவிக்க..

ஈழமல்ல

சுதந்திரம் வாங்க..!

பெண்ணே நீ

சரக்கல்ல

திருட...

சக்கரையல்ல

ருசிக்க..

பிகரல்ல

மாட்ட...

பாடமல்ல

படிக்க..

முத்தல்ல

மூழ்கித் தேட

சிப்பியல்ல

திறக்க..!

பெண்ணே நீ

அலையல்ல

கரை சேர...

கப்பலல்ல

அந்தரிக்க..

குருடல்ல

கை பிடிக்க..

மாடல்ல

விலை பேச..

நாயல்ல

கட்டி வைக்க

பொம்மையல்ல

அலங்கரிச்சு விற்க..!

பெண்ணே நீ

சொர்க்கமல்ல

சொர்க்கிக்க...

தாஜ்மகாலல்ல

அதிசயக்க..

போமலீனல்ல

மயங்க...

பூவல்ல

முகர..

பண்டமல்ல

வாயூற..

வாயல்ல

கடலை போட..

வசனமல்ல

பேசி மகிழ...

குழந்தை(பேபி)யல்ல

கொஞ்சிட...

கடவுள் அல்ல

கும்பிட..!

பெண்ணே நீ

பொய்யில் மகிழும்

போலியில் மயங்கும்

நிஜத்தை தொலைக்கும்

மனித விலங்கு..!

சுயநல மிருகம்..!

பொய்யல்ல

நிஜம்...

புளுகல்ல

இது...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள், குறிப்பாகத் தமிழ்க் குடும்பப் பெண்கள் பின்வருமாறு இருந்தால் ஒரு பிரச்சினையும் இருக்காது!

முகம் கழுவி, வாசல் பெருக்கி, கோலம் போட்டு, யாழினை எடுத்துத் தமிழிசை இசைத்துப் பிள்ளைகளை எழுப்பி, பால் கறந்து, மல்லிக் காப்பி வைத்துக் கணவனை எழுப்பி, அவனைக் குளிக்க வைத்து, அவனுக்கும் பிள்ளைகளுக் கும் காலை உணவு வழங்கி, பிள்ளைகளுக்குச் சங்கத் தமிழ் பாடம் புகட்டிப் பின்னர் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடைக்குச் செல்லும் கணவனின் சட்டையிலிருந்த கிழிசலைத் தைத்துக்கொடுத்து அவனை வழியனுப்பி விட்டு, ஒட்டடை அடித்து, தையல் வேலை, தச்சர் வேலை, கொத்தனார் வேலை எல்லாம் பார்த்து, மாமன் மாமயை வரவேற்கும் நல்ல தமிழ்ப் பெண்மணி அவள்.

மாமன்- மாமியை உபசரித்து, மாமனின் நோய்க்கு மருந்து கொடுத்து, மதிய உணவுக்குக் கணவன் வந்தபின் அவனது கடைக்குச் சென்று கணக்கரை மதிய உணவு உண்ண அனுப்பிவிட்டு, கடை வாணிபம் புரிந்து பின் வீடு திரும்பி, தையல் வேலைகளை செய்து, பள்ளியிலிருந்து திரும்பும் பிள்ளைகளுக்கு உடை மாற்றிவிட்டு, இரவு எட்டுமணிக்கு வீடு திரும்பும் கணவனிடமிருந்து, ‘பிள்ளை வளர்ப்புப் போட்டி’யில் தனக்கும் தன் துணைவிக்கும் பரிசு கிடைத்திருப்பதை அவன் சொல்லக் கேட்டு மகிழ்ந்து, மாமன் மாமிக்கும் கணவன் குழந்தைகளுக்கும் இரவு உணவு வழங்கி மாடு கன்றுக்கு வைக்கோல் வைத்துவிட்டு, மீண்டும் யாழெடுத்துத் தமிழிசை இசைத்துப் பிள்ளைகளைத் தூங்கவைத்து, தங்கள் சொந்த சுகம், குடும்ப நலன் மட்டும் பாராமல், தமிழர் தம் பொதுநலத்திற்கும் தொண்டாற்ற வேண்டாமா என அவள் கேட்க, தனது கடை வருமானத்தில் ஒரு பகுதியைத் தமிழர் முன்னேற்றத்துக்குத் தந்து வருவதாகக் கணவன் தரும் பதிலில் அக மகிழ்ந்து அவனுக்கு இராச் சுகம் தரத் தயாராகிறாள் இந்தக் குடும்ப விளக்கு!

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=312722

நெடுக்ஸின் ஆக்கங்கள் பல பெண்களைச் சீண்டினாலும் உண்மையயே உரைக்கிறது.

கிருபன்ஸ் கூறுவது அடிமைப் பெண்.

ஹும் பெண்ணை பூவெண்டும் சொல்லுறாங்க.... :o நீங்க.... பெண்ணே நீ... விலங்கு மிருகம் எண்டுறீங்களே .... :D:lol:

பெண்ணே நீ

பொய்யில் மகிழும்

போலியில் மயங்கும்

நிஜத்தை தொலைக்கும்

மனித விலங்கு..!

சுயநல மிருகம்..!

பொய்யல்ல

நிஜம்...

புளுகல்ல

இது...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹும் பெண்ணை பூவெண்டும் சொல்லுறாங்க.... :D நீங்க.... பெண்ணே நீ... விலங்கு மிருகம் எண்டுறீங்களே .... :o:D

பின்ன.. பெண்கள் தேவதைகள் என்று சொல்லச் சொல்லுறீங்களா..! மனிதனே விலங்கு தானே..! பெண்களும் மனித விலங்குகள் தானே.. என்ன அவர்கள்.. சுயநலம் மிஞ்சிய விலங்குகளாகவும் வேற இருக்கிறார்கள்..! அதுதான் நிஜமே..! தேவதை.. எல்லாம் கற்பனை.. பொய்..! :P :D:lol:

லிசா உங்கள் கருத்துக்கும் நன்றிகள். கிருபன் சாரின் விடயங்களுக்கும் நன்றி சொல்லித்தானே ஆகனும்..! :P

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்ஸ் கூறுவது அடிமைப் பெண்.

பாரதிதாசன் "குடும்பவிளக்கு" எப்படி இருக்கவேண்டுமென்று புனைந்த கவிதையின் பொழிப்பை பார்த்து அடிமைப்பெண் என்று சொல்லுகின்றீர்கள்! பாரதிதாசனின் "குடும்பவிளக்கு"ப் போன்று தமிழ்ப் பெண்கள் இருந்திருந்தால் "நெடுக்ஸ்" இப்படியெல்லாம் நேரத்தைச் செலவழித்துக் கவிதை புனைந்திருக்கமாட்டார்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணே நீ

பொய்யில் மகிழும்

போலியில் மயங்கும்

நிஜத்தை தொலைக்கும்

மனித விலங்கு..!

சுயநல மிருகம்..!

பொய்யல்ல

நிஜம்...

புளுகல்ல

இது...! :lol:

எனக்கென்றால் புரியலை...உங்களுக்கு பெண்கள் மேல அப்படி என்ன கோபம் என்று?

நெடுக்ஸின் ஆக்கங்கள் பல பெண்களைச் சீண்டினாலும் உண்மையயே உரைக்கிறது.

கிருபன்ஸ் கூறுவது அடிமைப் பெண்.

நீங்க ஒரு பெண்ணாக இருந்து இருந்தால் இந்த கருத்தை சொல்லி இருக்க மாட்டீங்க

தாத்தா கவிதை சூப்பர் என்ன தான் பெண்களை பற்றி குறை சொல்லி இருந்தாலும் நீங்கள் சொல்வது எல்லாம் சிந்திக்க வேண்டிய விடயங்களா தான் இருக்கு

;)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை, கவிதையாகப் பார்த்தால் ரசனை வித்தியாசமாகவிருக்கும்.

எல்லாம் எங்கள் பார்வையில் தான் தங்கியுள்ளது,

இதை எழுதிய கவிஞரின் பக்கமாக நின்று சிந்தித்தோமானால்,

பெண்களினால் பாதிக்கப்பட்ட மாதிரி தோன்றுகின்றது.

ஆகவே இது முழுப்பெண்களையும் நோக்கமாக கொண்டு எழுதியதாக நாம் கருதக்கூடாது.

-------

நெடுக்கண்ணா உங்க வரிகள், ஒழுங்கமைப்பு பிரமாதம், பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை பிள்ளைப் பெறும் மெசினாக இருக்குமோ.

நெடுக்ஸ் சொன்ன

கவி வரிகள்

மிக அழகானது

உண்மையும் அதுதான்.

நிலவுக்கு மறு பெயர் பெண்ணாம்

நிலவில் மனிதன் வாழமுடியாதாம்- விஞ்ஞானம்

அப்படியானால் நிலவுக்கு மறு பெயருடன்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையாக ஆறுதலாக கருத்தரித்து ஆரோக்கியமான கவிதைக் குழந்தையை பிரசவிப்பீர்கள். இதுவும் இறுதிவரை அழகாக வளர்த்தெடுத்து இறுதியில் அபோஸன் செய்திட்டீங்க சார்.

பெண் மட்டுமல்ல ஆணும் தான் மனித விலங்கு. தின்னுறோம்-பீச்சுறோம்-பத்தாததுக்கு ஆட்டுக்குட்டி கணக்கில குட்டிகளை பீச்சுறோம்- பின் செத்துமடிகிறோம். விலங்கு மனத்திலிருந்து பரிணமிக்கும் வரை விலங்குகள் போல இயந்திர வாழ்வு தான்.

மூக்கி மேம் சொன்ன மாதிரி "யாரோ நோஸ் கட் பண்ணி நொஸ்ரில்ஸ்" அடைச்சதால இப்பிடியெல்லாம் சிந்திக்க தூண்டியிருக்கிறது - இல்லையென்றால் நீங்களும் கவிதைகள் பிரசவிக்காம குட்டிகளை பீச்சித்தள்ளிக் கொண்டு இருந்திருப்பீங்க... :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக ஆறுதலாக கருத்தரித்து ஆரோக்கியமான கவிதைக் குழந்தையை பிரசவிப்பீர்கள். இதுவும் இறுதிவரை அழகாக வளர்த்தெடுத்து இறுதியில் அபோஸன் செய்திட்டீங்க சார்.

பெண் மட்டுமல்ல ஆணும் தான் மனித விலங்கு. தின்னுறோம்-பீச்சுறோம்-பத்தாததுக்கு ஆட்டுக்குட்டி கணக்கில குட்டிகளை பீச்சுறோம்- பின் செத்துமடிகிறோம். விலங்கு மனத்திலிருந்து பரிணமிக்கும் வரை விலங்குகள் போல இயந்திர வாழ்வு தான்.

மூக்கி மேம் சொன்ன மாதிரி "யாரோ நோஸ் கட் பண்ணி நொஸ்ரில்ஸ்" அடைச்சதால இப்பிடியெல்லாம் சிந்திக்க தூண்டியிருக்கிறது - இல்லையென்றால் நீங்களும் கவிதைகள் பிரசவிக்காம குட்டிகளை பீச்சித்தள்ளிக் கொண்டு இருந்திருப்பீங்க... :huh:

பெண்களால் நாங்க பாதிக்கப்படல்ல. எங்க கூட தொடர்புள்ள பெண்கள் மேல நமக்கு பிரியமும் அன்பும் எப்பவும் உண்டு..! அதற்காக எல்லாப் பெண்களையும் அதிலடக்க நாம் தயாரில்ல...! ஆண்களையும் தான்.! சிலவேளை பெண்கள் எங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. எம்மையறியாமலே..! :P :blink:

மனிதனை மனித உணர்வுகளை மதிக்கும் பெண்களை ஆண்களை நாம் மதிக்கிறோம். மனித உணர்வுகளை சுயநலத்துக்காகவும் வெட்டிப் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மிதிக்கும் மனிதர் உருவில் உள்ள பெண்களை நாம் இப்போ அல்ல எப்பவுமே கண்டிக்கத் தவறுவதில்லை..!

இவ்வரிகளில் இரண்டு பரிமானங்கள் உண்டு. கொஞ்சம் கவனமாக வாசித்தால் புரியும்..! :P :lol:

கருத்துரைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..!

பெண்ணே நீ ............ !!!! இவ்வளவு இருக்கின்றதா பெண்ணுக்குள். நெடுக்ஸ் உங்கள் கவிதை அழகு. இக்கவிதை பாணி எங்கேயோ உதைக்குதே.

பாரதிதாசன் "குடும்பவிளக்கு" எப்படி இருக்கவேண்டுமென்று புனைந்த கவிதையின் பொழிப்பை பார்த்து அடிமைப்பெண் என்று சொல்லுகின்றீர்கள்! பாரதிதாசனின் "குடும்பவிளக்கு"ப் போன்று தமிழ்ப் பெண்கள் இருந்திருந்தால் "நெடுக்ஸ்" இப்படியெல்லாம் நேரத்தைச் செலவழித்துக் கவிதை புனைந்திருக்கமாட்டார்.. :huh:

குடும்பவிளக்கு போன்று பெண்கள் இருந்திருந்தால் நெடுக்ஸ் இப்படி கவிதை வடிப்பதில் நேரத்தை செலவழித்திருக்கமாட்டார். ஒருவேளை அப்படி பொண்ணுக இல்லாததால்தான் இப்படி கவி வடித்தாரோ என்னமோ :blink:

ம்

ஜேசுநாதர் சொல்லி இருக்கிறார்

ஒரு கன்னத்தில் அறைந்தால்

ம|று கன்னத்தையும் காட்டு என்று

ஒரு பெண்ணில் உள்ள கோபத்தால் அவளால் ஏற்பட்ட காயத்தால் மொத்த பெண்களையும ;குறைகூறுவது தவறு.

பெண் மிருகம் இல்லை. ஆண்தான் மிருகம்.

தன் இச்சைக்கு அவளை ஆட்டி வைக்கின்றான். மறுத்தால் மிருகம் என்கின்றான். அடக்கி ஆள அவள் என்ன உன்னை விட எந்த விதத்தில் குறைந்தவள். நீயும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைதான். அவளும் அதே தாய் வயிற்றுப் பிள்ளைதான்.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குலாவித்தான் நீயும் பிறந்தாய். அவளும் அப்படித்தான். பின் எதற்காக இந்த மிருகம் பேய் என்ற வீண் பேச்சு.

ஒரு தந்தை தப்புச்செய்தால் மறைக்கின்றோம். மறுக்கின்றோம். ஓரு தாய் தப்புச்செய்தால் மறக்கின்றோம் அவளை. மரணிக்க வைக்கின்றோம். இது சுயநலம் மிக்க பூமி........

நெடுக்ஸ் அண்ணா,

வாசிக்கும் போது உங்கள் கவி வரிகள் அழகு!

வரிகள் சொல்லும் கருத்துக்கள் அழகு!

அப்பிடியே விடாமல் வாசித்துக்கொண்டு வர..எப்பிடியும் முடிவ்லில் பெண்ணை ஏதும் சொல்லி இருப்பீர்கள்.

பெண்களால் நாங்க பாதிக்கப்படல்ல. எங்க கூட தொடர்புள்ள பெண்கள் மேல நமக்கு பிரியமும் அன்பும் எப்பவும் உண்டு..! அதற்காக எல்லாப் பெண்களையும் அதிலடக்க நாம் தயாரில்ல...! ஆண்களையும் தான்.! சிலவேளை பெண்கள் எங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. எம்மையறியாமலே..!

பூவெல்லாம் ஒரு நாளில் வாடும்! எண்டு சொல்லேலாது.பூவை குறிப்பிட்டு தான் சொல்ல முடியும்.

ஏனெண்டால் பல பூக்கள் கன நாள் வாடாமல் இருக்கும்.

" பெண்ணே நீ...!" எண்டா..இப்பிடித்தான் எல்லாரும் வாசிக்க பொதுவா சொல்வது போல இருக்கும். அதுவும் நல்ல பெண்ணா இருந்தா தான் கோவம் வரும். டென்சன் ஆவாங்க. என்னை போல டென்சனை அவங்க குறைக்க கொஞ்ச நாளாகும். :lol: அதுக்கு நீங்க இன்னும் கொஞ்ச கவிதை எழுதினா..தான் " இவர் இப்பிடித்தான்!" எண்டு விடுவாங்க. ;) அதனால எழுதுங்க தொடர்ந்து :P

நெடுக்ஸ்ஸின் கவிதை நன்று...

சினிமாவில் எவ்வாறெல்லாம் ஒரு பெண்ணை விழித்து கவி எழுதினார்களோ....அவற்றையெல்லாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்

ஜேசுநாதர் சொல்லி இருக்கிறார்

ஒரு கன்னத்தில் அறைந்தால்

ம|று கன்னத்தையும் காட்டு என்று

ஒரு பெண்ணில் உள்ள கோபத்தால் அவளால் ஏற்பட்ட காயத்தால் மொத்த பெண்களையும ;குறைகூறுவது தவறு.

பெண் மிருகம் இல்லை. ஆண்தான் மிருகம்.

தன் இச்சைக்கு அவளை ஆட்டி வைக்கின்றான். மறுத்தால் மிருகம் என்கின்றான். அடக்கி ஆள அவள் என்ன உன்னை விட எந்த விதத்தில் குறைந்தவள். நீயும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைதான். அவளும் அதே தாய் வயிற்றுப் பிள்ளைதான்.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து குலாவித்தான் நீயும் பிறந்தாய். அவளும் அப்படித்தான். பின் எதற்காக இந்த மிருகம் பேய் என்ற வீண் பேச்சு.

ஒரு தந்தை தப்புச்செய்தால் மறைக்கின்றோம். மறுக்கின்றோம். ஓரு தாய் தப்புச்செய்தால் மறக்கின்றோம் அவளை. மரணிக்க வைக்கின்றோம். இது சுயநலம் மிக்க பூமி........

சார் மீண்டும் சொல்லுறம் நமக்கு பெண்களால் துளிகூட பாதிப்பு வந்ததில்ல சார்.

ஆனா ஜேசுநாதர் சொன்னார் என்பதற்காக எத்தனை மனிதர்கள் அடிக்க அடிடா என்று கன்னத்தைக் காட்டிறாங்க சார்..! நல்லா கதைவிடுறளே..!

சார் நீங்க உங்க பக்கம் சார்புத்தன்மைதான் தெரிகிறது. அதாவது ஆண்களில் குற்றம் பிடித்து பெண்களை முன்னிலைப்படுத்தனும் என்ற நிலைபாடு தெரிகிறது. ஆனால் யதார்த்த உலகில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆண்களை மிருகத்துக்கும் கேடா அவங்க மனித உணர்வுகளை அடிப்படை உரிமைகளைக் கூட மதிக்காம நடந்துக்கிறாங்க. இதை நிகழ்கால உலகில் காணுகின்ற வேளையிலும் நீங்க இன்னும் 19 ம் நூற்றாண்டில் இருந்தது போல ஆண்களால் தான் பெண்கள் படுறாங்க பாடு என்று எழுதி இருக்கீங்க..!

நிகழ்காலத்துக்க வாங்க சார்..! வந்து பாருங்க சார்..!

ஏன் சார் எத்தனை பிள்ளைகள் இன்று அனாதைகளாக நிற்கின்றன. எத்தனை பிள்ளைகள் சார் நிலைமாறும் பெண்களின் உறவு முறைகளால் தந்தை என்ற உறவு நிலையே நிரந்தரமில்லாம இருக்கிறாங்க சார்...! எத்தனை பெண்கள் இரண்டாம் முறையா மணக்கிறாங்க.. காதலிக்கிறாங்க..! அதால பிள்ளைகள் படுற மனித மன அவலங்களை உணருறாங்க இல்ல. அதற்கும் தந்தைதான் காரணமா சார்..! உடல் தேவை.. பணத்தேவைக்காக குடும்ப உறவுநிலைகளை சிதைக்கிற எத்தனை பெண்கள் சார் சமூகத்தில..! அவங்க எல்லா உங்க கண்ணில குற்றமற்றவங்களா சார்..! பல ஆண்கள் மனதளவில் தளர்ந்து அவர்கள் வாழ்வு சிதைய பெண்களின் நிலைப்பாடுகளும் காரணமா இருக்கேக்க.. எப்படி நீங்க இன்னும் 19ம் நூற்றாண்டில நின்று பெண்களை வீட்டுக்க பூட்டி வைச்சு சித்திரவதை செய்யுறாங்க என்று சொல்லுறீங்க.

உங்கள் வாதம்.. ஆண்களில் குற்றம் காண முற்பட்டுள்ளதே தவிர யதார்த்த உலகைக் காண விரும்பல்ல. யதார்த்த உலகில் பல நிலைகளின் பெண்கள் உள்ளனர்..! அதை முதலில ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடையுங்க. அவங்க தவறுகளை சரியான வடிவில சுட்டிக்காட்டி சமூகத்துக்கு ஏற்ப திருந்தச் சொல்லுங்க. இல்ல இப்படி ஆண்களிலேயே குற்றம் கண்டு பெண்களின் தவறுகளை புறக்கணிச்சு பெருக விடுங்க. இறுதியில நீங்களும் உங்கள் சமூகமும் பாதிக்கப்படேக்க தான்.. அதன் தாக்கம் புரியும்..! அப்ப புலம்பிப் பிரயோசனம் இருக்காது..! :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா,

வாசிக்கும் போது உங்கள் கவி வரிகள் அழகு!

வரிகள் சொல்லும் கருத்துக்கள் அழகு!

அப்பிடியே விடாமல் வாசித்துக்கொண்டு வர..எப்பிடியும் முடிவ்லில் பெண்ணை ஏதும் சொல்லி இருப்பீர்கள்.

பூவெல்லாம் ஒரு நாளில் வாடும்! எண்டு சொல்லேலாது.பூவை குறிப்பிட்டு தான் சொல்ல முடியும்.

ஏனெண்டால் பல பூக்கள் கன நாள் வாடாமல் இருக்கும்.

" பெண்ணே நீ...!" எண்டா..இப்பிடித்தான் எல்லாரும் வாசிக்க பொதுவா சொல்வது போல இருக்கும். அதுவும் நல்ல பெண்ணா இருந்தா தான் கோவம் வரும். டென்சன் ஆவாங்க. என்னை போல டென்சனை அவங்க குறைக்க கொஞ்ச நாளாகும். :lol: அதுக்கு நீங்க இன்னும் கொஞ்ச கவிதை எழுதினா..தான் " இவர் இப்பிடித்தான்!" எண்டு விடுவாங்க. ;) அதனால எழுதுங்க தொடர்ந்து :P

வரிகள் பாதிப்பைத் தரணும் என்றதிலும் வரிகள் செய்திகளை காவனும். காவினா கோபமும் வரணும்.. யதார்த்தமும் வெளிப்படனும்..! அதுதான் நோக்கம்.

முன்னர் குறிப்பிட்டது போல மேலுள்ள வரிகள் ஒரு பரிமான தளத்தில் அமைந்தவையல்ல. அதன் பரிமான தளங்கள் வேறுபட்டது. அதுமட்டுமன்றி ஆண்களை இங்கு எந்த இடத்திலும் பெண்களோட ஒப்பிடேல்ல..! பெண்களை மனிதன் என்ற அடிப்படைக்குள் வைச்சிட்டு கதைச்சிருக்கிறம். ஆணும் மனிதன் என்ற அடிப்படைக்குள் இருப்பதால் அவனும்.. சுயநல மிருகமாக ஒரு கட்டத்தில் இருப்பான் என்பதை நீங்கள் உங்களை மனிதனாவும் ஆண்களை மனிதனாவும் யதார்த்த உலகில் நோக்கும் போது தென்படும்..! உங்க மனசைத் தொட்டுக் கேளுங்க.. நீங்க அடுத்தவரின் உரிமைகளை கஸ்டங்களை கருத்தில் எடுக்காம எத்தனை தடவை சுயநலத்தோட நடத்திருக்கிறீங்க என்று. அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏனும் நீங்க காணல்லை என்றால் நீங்க புத்தர் போல பரிநிர்வாண நிலை அடைந்தவர் பெண் ஆவீர்கள்..! :lol:

நாம் யதார்த்ததைப் பேசுறம்.. நீங்க பெண்களை புளுகனும் என்று நினைக்கிறீங்க.. அதுதான் வேறுபாடு..! கோபம்..! நிச்சயம்.. நாம் யதார்த்ததை தொடர்ந்து பேசுவம்..! :P

மயங்குவது பெண்கள் மட்டுமல்ல

ஆண்களும்தானே..

மாதர்மடி கொண்டு

அந்தப்புறமே கெதியென்ற அரியணை இழந்த அரசர்கள் எத்தனை பேர்..

பெண்ணின் விழி வாளில் விழுந்துகிடக்கம்.. ஆண்கள் எத்தனை பேர்..

புதுமனையவியாலே போதை தலைக்கேறி தாயை தெருவில்லிட்ட தனையன் எத்தனைபேர்..

பெண்மோகம் கொண்டதனால் கல்வியை முறித்து கயிறில் தூங்கிய காளைகள் எத்தனை பேர்..

ஒருதலையாய் காதலித்து ஒருதலையாய் வாழ்ந்து காதலை சொல்லாய் வீணாய்ப்போன ஆண்கள் எத்தனை பேர்..

என்னைக்கேட்டால்..

ஆண்கள்தான் 80 வீதத்திற்கும் அதிகமாக மயக்கத்தில் புரள்பவர்கள்..

பெண்கள் வாழ்வை அமைப்பதிலும்..

வளம் செய்வதிலம் புத்திசாலிகள்..

பெண்களை புகழ்வதாக ஏன் குறை..

அம்மாவை நினைத்தால்.. ஆருயிரும் உருகும் அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி..

நல்ல காதலி உயிர் போல உயிரைவிட உயர்வாய் ஏதுமுண்டோ..

அன்பான மனைவி பாதி வாழ்க்ககை..

நான் எழுதுபவை நான் உணர்பவை..

சின்ன வயதில் இருந்தே எனக்குத்தெரிந்த அழகு அம்மா காட்டிய நிலாதான்.

நான் அதைவிட அவளை அழகாக நினைக்கிறேன் தவறா...

எனக்குதெரிந்த தொடுகை சுகம் சிலுசிலு காற்று அவள் தொடுவது அதைவி சுகம் மெய் சொன்னால் தவறா..

மன்னிக்குவம் வாதமாக இதை எண்ணாதீர்கள் என் கருத்து உங்கள் நிற்தனை சக்தி ஆழம்..

சிந்தித்த கோலம் எனக்கு சிறிது கோபம்.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்ஸின் கவிதை நன்று...

சினிமாவில் எவ்வாறெல்லாம் ஒரு பெண்ணை விழித்து கவி எழுதினார்களோ....அவற்றையெல்லாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயங்குவது பெண்கள் மட்டுமல்ல

ஆண்களும்தானே..

மாதர்மடி கொண்டு

அந்தப்புறமே கெதியென்ற அரியணை இழந்த அரசர்கள் எத்தனை பேர்..

பெண்ணின் விழி வாளில் விழுந்துகிடக்கம்.. ஆண்கள் எத்தனை பேர்..

புதுமனையவியாலே போதை தலைக்கேறி தாயை தெருவில்லிட்ட தனையன் எத்தனைபேர்..

பெண்மோகம் கொண்டதனால் கல்வியை முறித்து கயிறில் தூங்கிய காளைகள் எத்தனை பேர்..

ஒருதலையாய் காதலித்து ஒருதலையாய் வாழ்ந்து காதலை சொல்லாய் வீணாய்ப்போன ஆண்கள் எத்தனை பேர்..

என்னைக்கேட்டால்..

ஆண்கள்தான் 80 வீதத்திற்கும் அதிகமாக மயக்கத்தில் புரள்பவர்கள்..

பெண்கள் வாழ்வை அமைப்பதிலும்..

வளம் செய்வதிலம் புத்திசாலிகள்..

பெண்களை புகழ்வதாக ஏன் குறை..

அம்மாவை நினைத்தால்.. ஆருயிரும் உருகும் அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி..

நல்ல காதலி உயிர் போல உயிரைவிட உயர்வாய் ஏதுமுண்டோ..

அன்பான மனைவி பாதி வாழ்க்ககை..

நான் எழுதுபவை நான் உணர்பவை..

சின்ன வயதில் இருந்தே எனக்குத்தெரிந்த அழகு அம்மா காட்டிய நிலாதான்.

நான் அதைவிட அவளை அழகாக நினைக்கிறேன் தவறா...

எனக்குதெரிந்த தொடுகை சுகம் சிலுசிலு காற்று அவள் தொடுவது அதைவி சுகம் மெய் சொன்னால் தவறா..

மன்னிக்குவம் வாதமாக இதை எண்ணாதீர்கள் என் கருத்து உங்கள் நிற்தனை சக்தி ஆழம்..

சிந்தித்த கோலம் எனக்கு சிறிது கோபம்.. :D

அப்படின்னா ஆண்களின் தொடுகையில் பெண்கள் மயங்கியதே இல்லை என்றீங்களா..?! ஆண்களின் பேச்சில் அழகில் பெண்கள் மயங்கியதே இல்லை என்றீங்களா. பருவ மயக்கங்கள் மனிதனுக்குப் பொது. ஓமோன் களின் தூண்டல்கள். அதற்காக அந்த மயக்கங்களே நிஜங்கள் அல்ல. வாழ்வும் அல்ல. அவை தற்காலிகமானவை..! எப்போதாவது ஒரு வயது போன மூதாட்டி தொட உங்களுக்கு சிலு சிலு காற்றைவிட சுகமா இருந்ததா..!

எங்களைப் பொறுத்தவரை நாமறிஞ்ச மென்மை என்றால் நிஜமான ரோஜா மலரின் இதழ்களை வருடிய போது கிடைத்த அந்த மென்மைதான் இதுவரைக்கும் அதி மென்மையா இருக்குது..! அப்புறம் தான் பெண்மையின் மென்மை..! அதாவது அவங்க தோலில கொழுப்பு அதிகம் என்பதால தோல் மென்மையா இருக்கும்..! :P :lol: :lol:

Edited by nedukkalapoovan

இதிலிருந்து தெரிகிறதே தேகத்தை பொறுத்தவரை பெண்கள் மென்மையானவர்கள் என்று..

ஒரு ரோஜாவை சாக்குப்பையால் மூடிவைக்கமுடியுமா..

சரி அதை விடுங்கள் ஆணிற்குப்பின்னால் பெண் அலைகிறாரா

பெண்ணுக்கப் பின்னால் ஆண் அலைகிறாரா என்றால்..

நீங்கள் பெண்தான் அலைகிறார் என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே..

(ரொம்ப கவிதை எழுதிட்டேன் கொஞ்சமாச்சும் defend பண்ணணும்) :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவி அருமை :lol:

Edited by Vishnu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி அருமை <_<

எங்க சார் போயிருந்தீங்க இவ்வளவு நாளும். நன்றிங்க. :P

விகடகவி சார்.. நீங்க நிச்சயம் டிவெண்ட் பண்ணித்தான் ஆகனும்.. தப்புப் பண்ணீட்டங்கில்ல..அதுதாங்க பெண்களைப் பொய்யாப் புளுகித் தள்ளி சந்தோசப்படுத்தி.. மாயை மயக்கத்துக்குள்ள தள்ளி... குசிப்படுத்தினீங்கல்ல.. அதுக்கு தண்டனை..! நிஜத்தை பேசி இருந்தா.. இப்ப.. அவஸ்தை.. தேவையா..?! :D:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.