Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஆள் உயர ஒளிரும் உலோகப் பொருள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் பள்ளி என்றபடியால் போன கொண்டாடட்டம் வேலைக்கே முடிந்து இங்கு வந்து நிக்கிறேன் ஆட்களை  காணவில்லை .

  • Replies 67
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னை சீண்டியவர்களை சும்மா விடுவதும் இல்லை.:cool:

நீங்கள் ஏதோ சண்டித்தனம் செய்ய வந்த மாதிரி நிற்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

நாளை திங்கள் பள்ளி என்றபடியால் போன கொண்டாடட்டம் வேலைக்கே முடிந்து இங்கு வந்து நிக்கிறேன் ஆட்களை  காணவில்லை .

அது சரி உங்கட பிரெண்ட்ஸ் எல்லாம் திங்கள்கிழமை வேலைக்கு போக, நாங்கள் ரொமேனியனோட சேர்ந்து பூட்டுடைக்க எல்லே போப்போறம் 😀

எப்படியப்பா பார்டி, அமர்களமோ?

இப்ப சும்மா வெளியால ஒரு ரவுண்ட் போட்டு வந்தனான் ஒரே fog. உங்கட ஏரியாவிலேயுமே?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அது சரி உங்கட பிரெண்ட்ஸ் எல்லாம் திங்கள்கிழமை வேலைக்கு போக, நாங்கள் ரொமேனியனோட சேர்ந்து பூட்டுடைக்க எல்லே போப்போறம் 😀

எப்படியப்பா பார்டி, அமர்களமோ?

இப்ப சும்மா வெளியால ஒரு ரவுண்ட் போட்டு வந்தனான் ஒரே fog. உங்கட ஏரியாவிலேயுமே?

இங்கு பெரிதாக இல்லை வழக்கம்போல் காருக்குள் சத்தி எடுத்து போட்டான்கள் தெரிந்தே கடையில் இரண்டு மூன்று சொப்பிங்க் பாக் வாங்கி கொண்டு போனேன் குறி தவறியிட்டுது .அடுத்தமுறை ஆள் உயர கறுத்த பாக் வாங்கி கொண்டு போய் காரில் ஏற்றும்போது பாக் மூலம் மூடிகட்டித்தான் காரினுள் ஏற்றுவது .

😄

இன்று இரண்டும் சைபரும்தான் வெப்ப நிலை .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இங்கு பெரிதாக இல்லை வழக்கம்போல் காருக்குள் சத்தி எடுத்து போட்டான்கள் தெரிந்தே கடையில் இரண்டு மூன்று சொப்பிங்க் பாக் வாங்கி கொண்டு போனேன் குறி தவறியிட்டுது .அடுத்தமுறை ஆள் உயர கறுத்த பாக் வாங்கி கொண்டு போய் காரில் ஏற்றும்போது பாக் மூலம் மூடிகட்டித்தான் காரினுள் ஏற்றுவது .

😄

அடபாவமே.

உதுதான் நான் காலம் காலமா படுற அவஸ்தைதான். ஒவ்வொருத்தரையும் வீட்டில இறக்கி விட்டு, அவங்கட வைவ் மாரிண்ட முறைப்பையும் (எதோ நாங்கள்தான் வாத்து கொடுத்த மாரி) சகிச்சு வாறதுகுள்ள வேண்டாம் எண்டு போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அடபாவமே.

உதுதான் நான் காலம் காலமா படுற அவஸ்தைதான். ஒவ்வொருத்தரையும் வீட்டில இறக்கி விட்டு, அவங்கட வைவ் மாரிண்ட முறைப்பையும் (எதோ நாங்கள்தான் வாத்து கொடுத்த மாரி) சகிச்சு வாறதுகுள்ள வேண்டாம் எண்டு போயிடும்.

சிங்கம் வாய் வைக்காமல் பார்ட்டி இல்லையே ? எப்படி கார் ஓட்டம் சாத்தியமாகும் ?

அனுபவங்களை சொல்லி தாங்க  நாங்களும் தப்பனும் மாமாவிடம் இருந்து .

5 minutes ago, goshan_che said:

அவங்கட வைவ் மாரிண்ட முறைப்பையும்

எல்லாவிடமும் இது பெரும் பிரசினை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

சிங்கம் வாய் வைக்காமல் பார்ட்டி இல்லையே ? எப்படி கார் ஓட்டம் சாத்தியமாகும் ?

சை... உது ஒரு கள உறவு கிளப்பின புரளி🤣.

நான் வாய் வைப்பதென்றால் சைட் டிஸ்சில்தான்🤣.

எப்பவும் மொடாகுடிகாரங்களுக்கு, சேவர், டிரைவர் வேலை பார்ப்பதால் - குடியால் ஏற்படும் இன்ப துன்பங்கள் தெரியும் - அதை இங்கே ஜாலியா எழுதினா சனம் 1+1=11 எண்டு கணக்கு போட்டிடும்🤣

நானும் விட்டிடுவன் ...சுத்தல்ல விடுறது ஒரு இன்பம்தானே🤣

ஆனால் என்னை வைபவங்களில் கண்ட ஆக்களுக்கு தெரியும், நான் டயட் கோக் பார்டி என்பது 🤣

 

பிகு: தண்ணி அடிச்சி போட்டு யாழில் வந்து துல்லியமா yorker எறிய ஏலுமே🤣 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சை... உது ஒரு கள உறவு கிளப்பின புரளி🤣.

நான் வாய் வைப்பதென்றால் சைட் டிஸ்சில்தான்🤣.

எப்பவும் மொடாகுடிகாரங்களுக்கு, சேவர், டிரைவர் வேலை பார்ப்பதால் - குடியால் ஏற்படும் இன்ப துன்பங்கள் தெரியும் - அதை இங்கே ஜாலியா எழுதினா சனம் 1+1=11 எண்டு கணக்கு போட்டிடும்🤣

நானும் விட்டிடுவன் ...சுத்தல்ல விடுறது ஒரு இன்பம்தானே🤣

ஆனால் என்னை வைபவங்களில் கண்ட ஆக்களுக்கு தெரியும், நான் டயட் கோக் பார்டி என்பது 🤣

 

நம்புறம் சரி சரி சவுத் கரோவில் இன்னும் இரண்டு தமிழ் கடையாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நம்புறம் சரி சரி சவுத் கரோவில் இன்னும் இரண்டு தமிழ் கடையாமே ?

அப்படியோ? கொரோனா பீதியில அங்காலிபக்கம் போகேல்ல. எல்லாம் ஒன்லைன் அல்லது போன் ஓடர், தமிழ் கடை உட்பட.  இடைக்கிடை காரை எடுத்து ஓடுறது பட்றி படுத்துட கூடாது எண்டு. 

சரி நாங்கள் இதில ஓவரா கடலை போடுறம். கத்தி பார்டியள் கடுப்பாக போகுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உலகை அச்சுறுத்தும் மர்ம தூண்கள் – 6ஆவது தங்க நிற மர்ம தூண் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள் வரிசையில் 6ஆவது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மர்ம தூண்கள் அனைத்தும் வெள்ளி நிறத்தில் இருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தூண் தங்க நிறத்தில் உள்ளது.

இந்த தூண் கொலம்பியாவில் உள்ள சியா நகராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் இந்த மர்ம தூண்கள் ஏலியன்களால் நிறுவப்பட்டதா, அல்லது ஏதேனும் குழுக்களால் மக்களை பயமடைய செய்யும் நோக்கத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் முதன் முறையாக மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அந்த பாலைவன பகுதியின் மையத்தில் பளபளப்பான வெளிச்சத்தில் ஒரு உலோகத்தூண் நிறுவப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் இங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விபரமும் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தது. அந்த தூண் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் மர்மமான முறையில் மாயமானது.

இந்த ஆண்டை ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் பாலைவனத்தின் நடுவே உலோக தூண் மர்மமான முறையில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டிருந்த சம்பவம் இந்த ஆண்டு இறுதி பகுதியை மேலும் பதற்றம் அடைய செய்தது.

அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்தும் பலர் இது ஏலியன்கள் பூமிக்கு வருவதற்கான அறிகுறி  என இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூணை போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் நிறுவப்பட்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி முதல் மர்ம தூண் நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ருமேனியா நாட்டின் பட்ஹா டொம்னி மலைப்பகுதியில் 2ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

3ஆவது மர்ம தூண் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பைன் மலைத்தொடர் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஐஸ்லி ஆப் வெயிட் என்ற தீவில் உள்ள கடற்கரையில் முக்கோண வடிவிலான  4ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள அவுண்ட் ஹார்ன் என்ற நகரில் உள்ள காட்டுப்பகுதியில் 5ஆவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தூணை நாங்கள் தான் நிறுவினோம் என அமெரிக்காவை சேர்ந்த ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற அமைப்பு பொறுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், 6-வது மர்ம தூண் கொலம்பியா நாட்டில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உலகை-அச்சுறுத்தும்-மர்ம/

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் மர்மம்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் டுபாக்கூர் பொழுது போகாத கூட்டம் செய்த வேலை உலகம் முழுக்க பத்தி எரியுது வதந்தி .

நம்ம ஊரு கிரீஸ்  மனிதன் கதை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலியன் இருக்கா? 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்..! இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... பின்னணியில் யார்? நீடிக்கும் மர்மம்

உலகையே பீதியில் ஆழ்த்திய மர்ம உலோகத்தூண்..!  இந்தியாவில் குஜராத்தில் தோன்றியது... பின்னணியில் யார்?  நீடிக்கும் மர்மம்

 

கடந்த நவம்பர் 18ம் தேதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக   மோனோலித்  எனப்படும் மர்ம தூண்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது.
 
இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் அங்கு கொண்டுவரப்பட்டது என எந்த விவரமும் தெரியாததால் மர்மம் நீடிக்கிறது.
 
 
கண்டுபிடிக்கப்பட்ட தூண்கள் சில நாட்களில் மர்மமான முறையில் மாயமாகி வருகிறது. இங்கிலாந்தில்  ஏற்கனவே  மூன்று  பகுதிகளில் தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,  மெர்ரி மெய்டன்ஸ் சர்கிள் நடுவில்   நான்காவது மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
 
அடுத்து சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணம்கிரானிச்சென் நகரில் உள்ள லைபெக்  கோட்டைக்கு வெளியே மர்ம உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டது.
 
ஆனால் ஒரு நாள் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட தூண் தோன்றியபடியே மர்மமாக மறைந்துவிட்டது.
 
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய  இந்த  மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக தெரிவித்தனர்.
 
அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும். 
 
அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் இந்த  தூண் காணப்பட்டுள்ளது. உலோக அமைப்பு தரையில் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் அதன் அடிவாரத்தில் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. 
 
பூங்காவின் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம்,  இதுபற்றி கூறுகையில், “ நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் திரும்பியபோது, அந்த அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.” என்று அவர் கூறினார். 
 
 அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியது. பெருமளவில் பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் அதன் முன் நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர். 
 
இது நெட் பிளிக்கிசின் ‘பிளாக் மிரர்’என்ற தொடரின் விளம்பரம் என வதந்திகள் பரவின.
 
நியூ மெக்சிகோவில் உள்ள ‘தி மோஸ்ட் பேமஸ் ஆர்ட்’ என்ற கலைக் குழு, யூட்டாவில் தூணை வைத்ததாக கூறியது . ஆனால் மற்ற நாடுகளில் தாங்கள் நிறுவவில்லை என தெரிவித்துள்ளது. உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த மர்ம தூண்களை நிறுவியது யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. 
 
குஜராத்தின் அகமதாபாத்தில்  பூங்காவில்  நிறுவிய  உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என  தெரியவந்ததால், பிற நாட்டில் நிலவியதைப் போல நீண்ட நாட்கள் மர்மம் இங்கு  நீடிக்கவில்லை.
 
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் கூறும் போது  பூங்காவை விரிவாக்கம்  செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான தனியார் நிறுவனத்தால் இந்த உலோகத்தூண்   நிறுவப்பட்டதாகக் கூறினார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2020 at 23:39, குமாரசாமி said:

ஏலியன் இருக்கா? 

உந்த உலோகம் நடுறது ஆரெண்டு தெரியேல்ல😀.

ஆனால் இன்னும் முடிவை நாம் காணாத (காண முடியாத?)அண்ட வெளியில் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒற்றை கல அமிபாவாவது இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

உந்த உலோகம் நடுறது ஆரெண்டு தெரியேல்ல😀.

ஆனால் இன்னும் முடிவை நாம் காணாத (காண முடியாத?)அண்ட வெளியில் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒற்றை கல அமிபாவாவது இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

 

முப்பத்து முக்கோடி சூரிய மண்டலம் இருக்கெண்டுறியள்...? புராணங்களிலை சொன்னது போல...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

முப்பத்து முக்கோடி சூரிய மண்டலம் இருக்கெண்டுறியள்...? புராணங்களிலை சொன்னது போல...:cool:

ஓம் எல்லாம் ஒரு எடுகோள் என்ற அளவில் ஆராயபட வேண்டியதுதான்.

ஆனல் ஹபிள் டெலஸ்கோப், ஏனைய விண்கலங்கள்  காட்டுவதை மட்டும்தான் இப்போதைக்கு உறுதியா சொல்ல முடியும்.

எம்மை போலவே ஆதி காலத்து மனிதனும் தனக்கு தெரிந்த மட்டில் ஆராய்சி செய்தவந்தான்.

என்ன எமது காலத்தில் பலதை பெளதீக ஆதாரத்தினால் நிறுவுகிறோம் அவரகள் பாதி விஞ்ஞானம், பாதி நம்பிக்கை என கலந்து மூடுமந்திரமாக சொன்னதால், பல ஆராயபட்வேண்டிய விஞ்ஞான கோட்பாடுகள் கூட மறைக்கப்பட்டுவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

ரொறொன்ரோவிலும் மர்மமான உலோகத் தூண்! | Athavan News

ரொறொன்ரோவிலும்.... மர்மமான,  உலோகத் தூண்!

மானிட்டோபா, அல்பர்ட்டாவை தொடர்ந்து தற்போது ரொறொன்ரோவிலும் ஒரு உலோகத் தூண் தோன்றியுள்ளது.

இந்த அமைப்பை வியாழக்கிழமை ரொறொன்ரோவில் வசிக்கும் மோன் லெரின், ஹம்பர் பே டிரெயிலின் விளிம்பில் கண்டுபிடித்தார்.

நான் தினமும் காலை நடைப்பயணங்களுக்குச் செல்கிறேன். நேற்று காலை அங்கே அது இல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்று லெரின் கூறினார்.

லெரின் அந்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டார். பின்னர் அது ரெடிட்டில் பகிரப்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்தில், ஒரு வின்னிபெக் உள்ளூர்வாசி இதேபோன்ற உலோகத் தூணைக் கண்டார். இருப்பினும், தூண் திடீரென மறைந்து போக அதிக நேரம் எடுக்கவில்லை.

இது பூங்கா அதிகாரிகள் அல்லது வேற்றுகிரகவாசிகளால் செய்யப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று அவர் டுவீட் செய்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, அல்பர்ட்டாவின் லெத்பிரிட்ஜில் ஒரு பெரிய உலோகத் தூணின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

http://athavannews.com/ரொறொன்ரோவிலும்-மர்மமான-உ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.