Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத்திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன.

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும்  மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக்கொண்டுவந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/95355

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

அப்படி ஒன்று அமைந்தால் நல்லது. வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை மக்களின் வாழ்வாதார தீர்வுக்கு போராடும் வியாழேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

11 hours ago, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

பாஞ்ச அவர்களே, இன்னும் நாலு வருடங்கள் இருக்கின்றன. எனவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

கடந்த நல்லாட்சி அரசுக்கும் தமிழர் பிரதிநிதிகள் அதற்க்கு வழங்கினார்கள்தானே. எத்தனை தொழிடசாலைகளை கட்டினார்கள், எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள்? இவர்கள் ஆதரவு கொடுக்க முஸ்லிம்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனார்கள்.

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா? எனவே வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் சேர்ந்து என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அரசியல் உரிமை இப்போதைக்கு இல்லை, வியாளேந்திரனும் பெற்றுத்தருவதாக கூறவும் இல்லை. தமிழர் பகுதிகளை , மக்களை அபிவிருத்தி செய்ய வேண்டியே பாராளுமன்றம் சென்றார். எனவே கொஞ்சம் பொறுத்திருப்போம்.

அரசியல் உரிமைக்காக தெரிவு செய்யப்படடவர்கள் அதனை பெற்றுத்தரட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.

யாதொன்றும் இல்லை, மக்களை மாவீரர் பக்கம் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடு. அங்காலை கிழக்கின் விடிவெள்ளி 834 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய பொத்துவில், ஊறணி மக்களுக்கு வாக்கு கொடுத்து ஏமாத்துறார். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா?

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 17:02, குமாரசாமி said:

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

கர்ணா ஒன்றும் பெரிய அமைச்சர் கிடையாது செய்து கிழிக்க ஆனால் கர்ணா பிள்ளையான் செய்தது பாதி பங்கு கூட தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டமைப்பு செய்ததா?? 

On 27/11/2020 at 19:38, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது அதனால் சில ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை நிறுத்தி இருக்கலாம் அல்லவா நாம பாட்டுக்கு ஒன்றை நினைச்சு அடித்து விடுவது 

  • கருத்துக்கள உறவுகள்

On 26/11/2020 at 19:06, கிருபன் said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர்.

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gif

On 4/7/2019 at 03:46, ampanai said:

சுமார் 3000 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது

இங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

12 hours ago, Paanch said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

அப்படி என்றால் அபிவிருத்தி இப்போதைக்கு தேவை இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் எப்போதுமே இல்லை. தமிழர்களும் இருக்க மாடடார்கள். அவர்கள் சிங்கள தமிழர்களாக மாறி இருப்பார்கள். அல்லது இஸ்லாமியர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gifஇங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

ஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்.....? நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..!  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

நல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.?? 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

உறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள். 

யாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில்  உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.

** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும் 

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

பக்கத்து வளவுக்காரரின் இரண்டு பக்கத்தாரின் உறுதியில் உங்கள் பெயர் எல்லை என‌ குறிப்பிடப்பட்டு இருக்குமாயின் ஒரு வேளை முயற்ச்சி செய்யலாம் பான்ஞ்ச் அண்ண உறுதி எடுக்க ஆனால் வருடங்கள் அதிகம் கடந்தால் நிலமை என்பதும் கேள்விக்குறியே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.