Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.பிரெட்லீயில் தொடங்கி பிரதமர் மோடி வரை டுவிட்டரில் வாழ்த்து மழையால் நனைக்கிறார்கள் நடராஜனை. பேரில்தான் ‘நட’ இருக்கிறதே தவிர, நடராஜனின் வாழ்க்கையே பரபர ஃபாஸ்ட் பவுலிங் ஓட்டம்தான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28.jpg
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் அறிமுகமானபோது அவருக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே சிவப்புக் கம்பள வரவேற்பு நம் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ நடராஜனுக்கும் கிரிக்கெட் உலகில் கிடைத்திருக்கிறது!யெஸ். இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் நடராஜன்தான். செல்லமாக ‘நட்டு’; பெருமையாக ‘யார்க்கர் கிங்’. எந்தவித பின்புலமும் இல்லாமல் திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருக்கும் தமிழக வீரர் இவர்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28a.jpg
கடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசஸ் சார்பாக பந்து வீசி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். துல்லியமாக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அனைவரும் புகழ்கின்றனர். லைன் & லெங்ந்த்தை சீர் செய்து பந்து வீசினால் மிகச்சிறந்த பிளேயராக உருவாகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28b.jpg
சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ருத்ரதாண்டவம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.“பள்ளி விட்டுட்டு வந்தா பேட்ட எடுத்துட்டு போயிடுவான். கிரிக்கெட் அவன் ரத்தத்துல ஊறிப் போச்சு. சோறே இல்லைனாலும் பொழுதன்னைக்கும் அவனுக்கு விளையாட்டுதான்.

நாங்க ஏழ்மையான குடும்பம். என் வீட்டுக்காரரு தறி ஓட்டிட்டு இருந்தாங்க. நான் சில்லி கடை வச்சிருந்தேன். எங்க ஊர் தம்பி ஜெயப்பிரகாஷ்தான் வெளியூர்ல இவன விளையாட கூட்டிட்டு போவாங்க. சரி; அவன் ஆசைப்படுறான், விளையாடட்டும்னு ஜெயப்பிரகாஷ்கிட்டயே
விட்டுட்டோம். அவர் இல்லைனா இவ்வளவு தூரம் நட்டு வந்திருக்க மாட்டான்.

வூட்டுக்கு வந்தாக் கூட சும்மா இருக்கமாட்டான். பந்த எடுத்துட்டு கைய, கால ஆட்டிக்கிட்டுதான் இருப்பான். ஃபிரண்டுங்க கூட ஜாலியா பேசுவான். சினிமால நடிக்கக் கூட கேட்டாங்க. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு மறுத்துட்டான். விளையாட்டுதான் மூச்சு. ஐபிஎல்ல விளையாடும்போது எப்ப இந்தியாவுக்கு விளையாடுவான்னு ஏங்கினோம். எங்க ஆச நிறைவேறி இன்னிக்கு பேர் வாங்கிக் கொடுத்துட்டான்...” பூரிக்கிறார் நடராஜனின் அம்மா சாந்தா.

‘‘எங்க வீட்டுல ஐந்து பேர். அண்ணாதான் மூத்தவர். இன்னிக்கு அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது எங்களோடு சேர்ந்து ஊரே கொண்டாடுது. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் பேசாத சொந்தக் காரங்க எல்லாம் எங்ககிட்ட இப்ப வந்து பேசுறாங்க.
அண்ணா கவுர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சாங்க.

அந்த கிரவுண்டுலதான் எப்பவும் இருப்பாங்க. இங்க இருக்குற பசங்க எல்லோரையும் உள்ளூர் டோர்னமெண்டுக்கு ஜெயப் பிரகாஷ் அண்ணாதான் கூட்டிட்டு போவாங்க. அவங்கதான் ‘எங்கண்ணன் பவுலிங் நல்லா போடுறதா’ சொல்லி சென்னையில் போய் சேர்த்து விட்டாங்க...” என்கிறார் நடராஜனின் சகோதரி தமிழ் அரசி.

இவை எல்லாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விளையாட்டு வீரர்களும் சந்திக்கும் பிரச்னைகள்தான். ஆனால், சென்னையில் நடராஜன் எதிர்கொண்டது வேறு யாரும் எதிர்கொள்ளாத சிக்கல்கள்.ஆம். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கனவுகளோடு சென்னை வந்த நடராஜனுக்கு அப்போது தெரியவில்லை விளையாட்டில் ஜெயிப்பதைவிட அணியில் இடம் பெறுவதற்குத்தான் முதலில் ஜெயிக்க வேண்டும் என்பது.

அணியில் இடம் பெறுவதற்காக நடராஜன் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், எடுத்த முயற்சிகள்… என்று கூடவே இருந்து பார்த்த பெயர் சொல்ல விரும்பாத அந்த கிரிக்கெட் கோச் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை.
“ஜெயப்பிரகாஷ் கண்ணில் பட்டு சென்னை வந்த நடராஜ், லோயர் டிவிஷன்ல முதலில் ஆடினார். இங்க ஐந்து டிவிஷன் இருக்கு. அதில் ஃபர்ஸ்ட் டிவிஷன்ல இருந்து ரஞ்சி டிராஃபிக்கு தேர்வு பண்ணுவாங்க.

நடராஜன் லோயர் டிவிஷனுக்கு அப்புறம் செகண்ட் டிவிஷன் ஆடப் போனார். அங்க நல்லா பண்ணியும் நெட் பவுலராவே வச்சிருந்தாங்க. ஆனா, இவர் போடுற ஸ்பீடை வச்சு ஃபர்ஸ்ட் டிவிஷனுக்கு எடுத்தாங்க.சென்னை முழுக்க நடராஜனுக்கு ‘ஸ்பீடு’னு பேர் வந்தது. ‘நரம்பு மாதிரி இருந்துட்டு பயங்கரமா போடுறான்’னு பேசுவாங்க. கெம்ப்ளாஸ்ட்டுக்கும், இந்தியா சிமெண்டுக்கும் லீக் மேட்ச் நடக்கும்போது அண்டர் 19
இந்தியால ஆடிய ஹேமந்த் குமார் விக்கெட்டை ஷார்ப் பவுன்சர் போட்டு எடுத்தார்.

டாப் பிளேயர் விக்கெட்டையே எடுத்துட்டார்னு கெம்ப்ளாஸ்ட் ஒரு பெரிய தொகையை சம்பளமா நிர்ணயித்து கூப்பிட்டாங்க. இதுக்கு அப்புறமாதான் தங்கச்சிங்க படிக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரி லீக் சிஸ்டம் வச்சு, பிளேயர்ஸுக்கு நல்லா பே பண்றாங்க. அதில் கெம்ப்ளாஸ்ட், இந்தியா சிமெண்ட் கிளப் முதன்மையானது. கெம்ப்ளாஸ்ட்ல இருந்துதான் எல்.பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், சடகோபன் ரமேஷ், ப்யூஸ் சாவ்லானு நிறைய பிளேயர்ஸ் இந்திய அணிக்கு போனாங்க.

நம்ம ஊர்ல ஃபாஸ்ட் பவுலருக்கு அதிகமா இன்ஜுரி வரும். வெயில்… பிட்ச்... எல்லாம் கட்டாந்தரை மாதிரி இருக்கும். தண்ணீர் இல்லாததால கிரவுண்ட் முழுசும் கல்லு மாதிரி ஆகிடும். ஃபாஸ்ட் பவுலருக்கு இவ்வளவுதான் போடணும்னு ஒரு லோடு இருக்கு. நடராஜன் ஓவர் லோடு, தவிர ஒவ்வொரு கோச்சும் ஒவ்வொரு விதமா ஆக்‌ஷன் மாத்துனதால ஷோல்டர், எல்போ இன்ஜுரி அவருக்கு வந்துட்டு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கு அவர் தேர்வானப்ப த்ரோ பால்னு கால் பண்ணிட்டாங்க. அந்த ஆக்‌ஷனை சரிபண்ணாதான் லீக் ஆட
முடியும். தன்னுடைய தன்னம்பிக்கைனால இதை சரி செய்தார். எல்லாமே புதுசா மாறினதால ஸ்விங் மாறிடுச்சு. ஸ்பீடும் கம்மியாகிருச்சு. எல்போ பெயின் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல கெம்ப்ளாஸ்ட்டை சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட்டான ஷ்யாமும், பாலாவும் அவரை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.

இருந்த கிளப்ல சம்பளம் உயர்த்தாததால ஏற்கனவே இருந்த கிளப்கிட்ட பேசினார். அங்க இருந்த சிலர், ‘அவன் வேஸ்ட் ஆகிட்டான்’னு தட்டிக்
கழிச்சாங்க. இந்த நேரத்துலதான் சரியா டிஎன்பிஎல் வந்தது. சூப்பர் ஓவர் மேட்ச்சுல ஆறு யார்க்கர் போட்டு எல்லாரையும் மிரள வைச்சார். இதைப் பார்த்துட்டு தான் கிங்ஸ் 11 பஞ்சாப்புக்கு சேவாக் பிக் பண்ணார். அங்க ஒரு மேட்ச் கூட ஆடல.

தனக்கு கிடைச்ச பேரை வச்சு ஊர்ல கிரிக்கெட் அகடமி ஆரம்பிச்சார். கிரிக்கெட்ல இருந்து ஒதுங்கி அதுல ஃபோக்கஸ் பண்ணலாம்னுதான் இருந்தார். காரணம், இங்க அவருக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு. ஐபிஎல், இந்தியா எல்லாம் ஆடுவோம்னு நடராஜன் நினைச்சே பார்க்கலை. எல்லாரும் அவர் குறையைத் தான் பார்த்தாங்க. நிறையை கண்டுக்கவே இல்ல.
 
ஆனா, இந்த வருஷம் ஐபிஎல்ல ஹைதராபாத் சன் ரைசஸ் டீம்ல ஆடினார். டீம்ல இருந்த பெரிய பவுலர்ஸை எல்லாம் உட்கார வச்சு நடராஜை எல்லா மேட்ச்சும் ஆடவச்சாங்க. முரளி தரனுக்கு இவர்மேல ஒரு ஹோப் இருந்தது. முதல் மேட்ச்சுல இருந்தே நல்ல ரிதம்ல இருந்தார்.
 
கடைசி ஆறு மாசம் ஃபிட்னஸ்ல நல்லா ஃபோக்கஸ் பண்ணார். இவ்ளோ பெரிய சீசன் தொடர்ந்து ஆடுவது அவ்வளவு ஈசி கிடையாது. ஐபிஎல் முழுதும் ஆடி, ஒன் டே, டி 20னு ஃபிட்டாவே இருப்பது நல்ல விஷயம்.

சின்ன வயசுல இருந்தே டிரைனிங் பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. சாப்பாடும் பெருசா இருக்காது. இதையெல்லாம் மீறிதான் நடராஜன் ஜெயிச்சிருக்கார். வீட்டு மொட்டை மாடி உட்பட கிடைச்ச இடங்கள்ல எல்லாம் அவர் பயிற்சி எடுத்தது முக்கியமான விஷயம்...’’ என்று வியக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கோச்.  நடராஜனின் தாண்டவம் தொடரட்டும்!

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17545&id1=4&issue=20201213

  • Replies 111
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

131300099_10218614097891670_800808470049

  • கருத்துக்கள உறவுகள்

சாமி முத‌லாவ‌து ரெஸ் தொட‌ரில் காய‌ம் , சில‌ வேலை ந‌ட‌ராஜ‌ன் சாமிக்கு ப‌திலா ரெஸ்ரில் விளையாட‌ கூடும் , பொறுத்து இருந்து பாப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி?

இத‌ பார்க்க‌ என‌க்கு என்ன‌ தோனுது என்றால் , க‌ரும்புலிக‌ளுக்கு நீச்ச‌ல் ப‌ழ‌க‌ க‌ட்டின‌ சிமிங்பூலில் தேசிய‌ த‌லைவ‌ர் அவ‌ர் ம‌க‌னோட‌ குளிச்ச‌த‌ வைச்சு பார் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி எல்லாம் உல்லாச‌மாய் வாழுகிறார் , 

ந‌ட‌ராஜ‌னை ப‌ற்றி போதையின் புக‌ழ் என்று எழுதின‌து ம‌லையால‌ ஊட‌க‌ம் என்று நினைக்கிறேன் , ஒரு ச‌ண் கிலாஸ் மிஞ்சி போனால் 10டொல‌ர் , இதை எல்லாம் வ‌யித் எரிச்ச‌லில் கொட்டி தீக்கிறாங்க‌ள் ஒரு த‌னின் வ‌ள‌ர்சியை பிடிக்காத‌ர்வ‌ர்க‌ள் ,

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
 
மும்பை,
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 14:09, சுவைப்பிரியன் said:

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

சுவை அண்ண‌ , ஜ‌ந்து நாள் விளையாட்டில் நீண்ட‌ ஓவ‌ர் ப‌ந்து வீச‌னும் , ம‌க்க‌ள் ம‌த்தியில் ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு இப்போது வ‌ர‌வேற்பு இல்லை ,

ந‌ட்டு 20ஓவ‌ர் ம‌ற்றும் 50 ஓவ‌ர் விளையாட்டில் விளையாடி சாதிச்சு இந்திய‌ அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிச்சா ம‌கிழ்ச்சி , ந‌ட்டு 20 ஓவ‌ர் விளையாட்டில் துல்லிய‌மாய் ப‌ந்து போட்டு ஓட்ட‌த்தை க‌ட்டு ப‌டுத்துவ‌தில் சிறந்த‌ வீர‌ர்  😍🙏

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
 
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15065156/4th-Test-against-Australia-Natarajan-and-Washington.vpf

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

உண்மைதான்..

தற்போதைய நிலை 2/15 நடராஜன்

  • கருத்துக்கள உறவுகள்
பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1 ரன்), மார்கஸ் ஹாரிஸ்(5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15123104/Natarajan-Washington-Sundar-added-pride-to-Tamil-Nadu.vpf

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இது தான் ஜ‌ந்து நாள் ரெஸ்ட் அறிமுக‌ விளையாட்டு ,

இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள் 🙏

இன்று இந்திய‌ அணியில் ப‌ல‌ மாற்ற‌ம் செய்து இருக்கின‌ம் , 

வும்ரா 
அஸ்வின்
ஜ‌டேயா
விகாரி இவ‌ர்க‌ள் இன்று விளையாட‌ வில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ர‌ வ‌ர‌ ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு வ‌ர‌வேற்பு குறையுது , 

அவுஸ்ரேலியா இங்லாந்த் விளையாடும் ஜ‌ந்து நாள் ஜ‌ந்து போட்டிக்கு இங்கிலாந்தில் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பாப்பின‌ம் , ம‌ற்ற‌ நாடுக‌ள் விளையாடினா , ப‌ற‌வைக‌ள் தான் மைதான‌த்தில் அதிக‌ம் ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 
அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, பையன்26 said:

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

அப்பன்! நான் இணைச்சது ஜேர்மன் நியூசிலை  வந்தது.ஒரு கிரிக்கெட் மச்சுக்காக 10 மாதமாய் சிலோனிலை தவம் கிடக்கிறாராம்.😁

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

6 hours ago, குமாரசாமி said:

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

என்ன அண்ணை,

எங்கட 7 வருச யாழ்கள பந்தம் தொடங்கின நாளில் இருந்து என்னை ஏஜெண்ட் எண்டுதானே சொல்லுறியள்?

இப்ப என்ன கேள்வி குறி போடும் அளவுக்கு திடீர் சந்தேகம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 
காலம் எல்லா வலிகளையும் ஆற்றும்🙏🏾

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 
அப்பிடிப்போடு அரிவாளை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.