Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனி - வியாழன் சேர்க்கை டிசம்பர் 21: 400 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம் பார்வைக் கோணத்தில் சனி - வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு டிசம்பர் 21-ம் தேதி நிகழவுள்ளது. இப்படி நெருங்குவதால் புவிக்கு ஏதாவது நேருமா? இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அடுத்தது எப்போது இப்படித் தெரியும்? என்று பல கேள்விகளுக்கு விடை தருகிறார் அறிவியலாளர் சௌந்தரராஜ பெருமாள்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் செயல் இயக்குநராக உள்ள இவர் சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் நிகழப் போகும் இந்த அதிசயம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.

அவரது பேட்டியில் இருந்து:

இந்த மாதம் டிசம்பர் 21ஆம் தேதி வானில் ஓர் அதிசய நிகழ்வு நடைபெற இருக்கிறது.

நம்முடைய பார்வைப் புலம் (Line of sight) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவு (Great Conjunction) அப்போது நடைபெறும்.

சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சரியாக சொல்ல வேண்டுமானால் 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன.

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், வரும் 21 ஆம் தேதி அமையவுள்ளது.

20 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஒருங்கமைவில் இரு கோள்களுக்கு இடையில் தோன்றும் கோணத் தொலைவை ஒப்பிடும்போது இப்போது தோன்றும் ஒருங்கமைவில், இடைவெளி வெறும் பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவுதான் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

மீண்டும் எப்போது?

இது போன்ற நிகழ்வு மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்தும் அவர் பேசினார்.

"இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்று கூறிய அவர்,

21 ஆம் தேதிக்கும் முன்பாகவே இன்றும் கூட சூரியன் மறைந்த சில நிமிடங்களில் வானில் மேற்கு திசையில், இந்த இரண்டு கோள்களையும் பிரகாசமான புள்ளியாக காணமுடியும். ஆனால் அந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு படிப்படியாக குறைந்து டிசம்பர் 21 ஆம் தேதியன்று புள்ளி ஒரு டிகிரியாக மாறும். அன்று இந்த கோள்கள் ஒரே புள்ளியில் சேர்ந்து காட்சியளிக்கும் என்றார்.

ஆனால் உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றும்.

நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம்.

பூமியின் மீது தாக்கம் எப்படி இருக்கும்?

வியாழன் - சனி சேர்க்கை டிசம்பர் 21: 397 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம்
 
படக்குறிப்பு,

சௌந்தரராஜ பெருமாள்.

இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவாகவே இருக்கும்.

நம் பூமி மீது அதிகபட்சமாக ஆற்றலை செலுத்தி நம் பூமியில் சற்று மாற்றத்தை உண்டாக்கக்கூடிய விண்பொருள் என்றால் அது நிலவு மட்டுமே. கடல் ஓதங்களை உண்டாக்க நிலவின் ஈர்ப்பு விசையால் முடிகிறது. ஆனால் இந்த இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை புவியின் மீது செயல்படும் அளவு நிலவின் ஈர்ப்புவிசையால் ஏற்படும் தாக்கத்தைவிட 10 லட்சம் மடங்கு குறைவாக இருக்கும் என்பதால், அது எந்த ஒரு தாக்கத்தையும் புவியின் மீது செலுத்த முடியாது.

great conjunction 2020, the great conjunction 2020 astrology 21 december 2020

வரும் 21 ஆம் தேதி நடைபெறும் இந்த இரண்டு கோள்களுக்கு இடையிலான கோண ஒருங்கமைவு போல மற்ற கோள்களுக்கு இடையேயும் அவ்வப்போது நடைபெறும். கடந்த மார்ச் மாதத்தில் கூட செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) கோள்களுக்கு இடையேயும், செவ்வாய் (Mars) மற்றும் சனி (Saturn) ஆகிய கோள்களுக்கு இடையேயும் ஒரே மாதத்தில் ஒருங்கமைவு நடைபெற்றது.

இவற்றில் சில ஆண்டுதோறும் கூட நடைபெறும். ஆனால் வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) ஆகிய இந்த இரண்டு கோள்களின் ஒருங்கமைவு மிக அரிய நிகழ்வு என்பதால் இதை காண உலகெங்கிலும் ஏராளமான மக்கள் காத்து கிடக்கின்றனர் என்கிறார் சௌந்தரராஜ பெருமாள்.

சனி - வியாழன் சேர்க்கை டிசம்பர் 21: 400 ஆண்டுகளுக்கு பின் சூரிய மண்டல விண்வெளி அதிசயம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

சனியும் வியாழனும் அருகருகாகத் தோன்றும் வானியல் அதிசயம் இன்று; வெறுங்கண்ணால் பார்க்கலாம்

 

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களான சனியும், வியாழனும் மிக அருகில் இன்று இரவுக் காட்சி தரும். இப்படியான நெருக்கத்தில் இந்தக் கோள்கள் பார்க்கப்பட்டு சுமார் 400 ஆண்டுகளாகின்றன. ‘Great Conjunction’ அல்லது ‘Christmas Star’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை இன்று (டிசம்பர் 21) உலகமெங்கும் பார்க்க முடியும்.

s.png
‘Conjunction’ என்பது பொதுவான ஒரு பெயர்தான். வானில் கோள்கள் அல்லது சிறுகோள்கள் (Asteroids) நெருக்கமாகக் காணப்பட்டால் அதை Conjunction என்பார்கள். உதாரணத்துக்கு 2005-ல் திங்கள், செவ்வாய், சனி ஆகிய மூன்று கோள்கள் மிக அருகில் காட்சி தந்தன. நீட்டிய கைகளில் கட்டை விரலால் மறைத்துவிடும் அளவுக்கு வானில் மூன்றுமே மிக அருகிலிருந்தன. இதற்கு முன்பு நடந்த முக்கிய Conjunction நிகழ்வாக அதைச் சொல்லலாம். சனியும், வியாழனும் மிகப்பெரிய கோள்கள் என்பதால் இவை இரண்டும் நெருக்கமாகத் தெரிவதை ‘Great Conjunction’ என்று அழைக்கின்றனர்.

இந்த ‘Great Conjunction’ 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். காரணம், இரண்டு கோள்களும் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம்தான். வியாழன் சூரியனை முழுவதுமாக சுற்றிவர 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். அதே நேரத்தில் சனிக்குச் சூரியனை முழுவதுமாக சுற்றிவர சுமார் 30 ஆண்டுகளாகும். சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் அதன் புவி ஈர்ப்பு விசை என்பது சனியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதனால் மிகவும் மெதுவாகவே சூரியனை சனி சுற்றிவரும் . மிகத் தொலைவில் இருப்பதால் சனியின் சுற்று வட்டப் பாதையும் பன்மடங்கு பெரிதானதாக இருக்கிறது.

1608195929-2139.jpg
இப்படி வேறுபட்ட நேரத்தில் சூரியனைச் சுற்றி வருவதால் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சனியை வியாழன் முந்திச் செல்லும். இந்த நேரத்தில் இரண்டு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் லட்சக் கணக்கான கிலோமீட்டராக இருந்தாலும் பூமியிலிருந்து பார்க்கும்போது இரு கோள்களும் அருகருகே இருப்பது போலத் தெரியும். இதைத்தான் ‘Great Conjunction’ என்கின்றனர்.

இந்த டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே வியாழன் சனிக்கு அருகில் வந்துகொண்டிருப்பதை வானில் பார்த்திருக்க முடியும். இன்றைய தினம் சனியை, வியாழன் முந்திச் செல்லும். அப்போது 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் அருகருகே இந்தக் கோள்கள் இருக்கும். பூமியிலிருந்து பார்க்கும்போது இரு கோள்களுக்கும் இடையே ஒரு பாகைக்கும் குறைவான (கிட்டத்தட்ட 1/10 பாகை அல்லது 6.1 arc minutes) இடைவெளியே இருக்கும். அதாவது கிட்டத்தட்ட இரு கோள்களும் ஒரே கோளாகத் தெரியும். கடைசியாக 1623ஆம் ஆண்டில்தான் இந்த அளவு நெருக்கத்தில் இரு கோள்களும் தெரிந்தன.

jupiter_saturn_conjunction-1024x808-1-30

இந்த நிகழ்வின் இன்னொரு சிறப்பு இது இரவில் நடக்கப்போகிறது என்பதுதான். இது 800 ஆண்டுகளாக நடந்ததில்லை என்கின்றனர். இரு கோள்களுமே பிரகாசமானவை என்பதால் இரவு வானில் வெறும் கண்களாலேயே அவற்றை உங்களால் பார்க்க முடியும். மற்றுமொரு ஆச்சரியம் என்னவெனில் இந்த வருடம் இந்த நிகழ்வு ‘Winter Solstice’ நாளான டிசம்பர் 21 (இன்று) இது நடக்கவிருப்பது தான்.

அது என்ன Winter Solstice? பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் பகுதிகளில் இன்றுதான் இருப்பதிலேயே மிகவும் குறைந்த நேரம் சூரிய ஒளி கிடைக்கும்.

அதனால்தான் இதை Winter Solstice என அழைக்கின்றனர். பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் பகுதிகளில் தெற்கு அரைக்கோள பகுதிகளில் இருப்பதிலேயே அதிக நேரம் இன்று சூரியன் தென்படும். இதை Summer Solstice என்கின்றனர்.

எங்கு, எப்படிப் பார்க்க முடியும்?

முன்பு கூறியது போலவே இந்த மாதம் முழுவதுமே இரண்டு கோள்களையும் எம்மால் பார்த்திருக்க முடியும். சில தினங்களுக்கு முன்பு நியூஸிலாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்து-பாகிஸ்தான் இடையேயான ரி20 போட்டியின் நடுவே வானில் சனியும், வியாழனும் இருப்பதை ஒளிப்பதிவு செய்து காட்டினார்கள்.

அன்டார்டிகாவில் இன்று முழுவதுமே சூரியன் தென்படும் என்பதால் அங்கு மட்டும்தான் இந்த ‘Great Conjunction’ நிகழ்வைப் பார்க்க முடியாது. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மேகங்கள் மறைக்கவில்லை என்றால் இரு கோள்களையும் உங்களால் பார்க்க முடியும்.

maxresdefault-1.jpg
மேலும் பார்க்க நீளமான ஒரு நட்சத்திரம் போன்று காட்சியளிக்கும் என்கிறது நாசா. சில ஆய்வாளர்கள் இது இரட்டை கோள்களாகவே காட்சியளிக்கும் என்கின்றனர். பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களும் கோளாராய்ச்சி மையங்களும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் நேரில் பார்க்கவும், அதை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்திருக்கின்றன.

தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது வியாழனின் நான்கு நிலவுகளும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனியும் வியாழனும் அருகருகாகத் தோன்றும் வானியல் அதிசயம் இன்று; வெறுங்கண்ணால் பார்க்கலாம் – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கெண்டு, வானம்.... மப்பும், மந்தாரமாக இருக்குது. 😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தோசத்தை கொண்டாட  நினைத்த வானம் மப்பில் நிக்கிறது......!   🌩️

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் இன்றைக்கென்று இரவிரவாக மழை கொட்டுகிறது...பார்க்கமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இண்டைக்கெண்டு, வானம்.... மப்பும், மந்தாரமாக இருக்குது. 😎

 

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சிட்னியிலும் இன்றைக்கென்று இரவிரவாக மழை கொட்டுகிறது...பார்க்கமுடியவில்லை

உலகின் இரு வேறு பகுதிகளிலும் இன்று இந்த அரிய நிகழ்வை பார்க்கவிடாமல் காலநிலை சதி செய்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உலகின் இரு வேறு பகுதிகளிலும் இன்று இந்த அரிய நிகழ்வை பார்க்கவிடாமல் காலநிலை சதி செய்கிறதே

எப்படியும்... வேறு நாடுகளில், பார்த்தவர்கள்... படம் எடுத்துப்  போடுவார்கள்,
அதனை பார்த்து... திருப்தியடைவோம். :)

  • கருத்துக்கள உறவுகள்
397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் நடக்கப்போகும் அதிசயம் ...
பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 21 Dec, 2020
 
 
 
breaking
வானில் அதிசய நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம்.
 
இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-
 
“பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று (திங்கட்கிழமை) பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.
 
சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.
 
இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ந் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம். அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியும், அதற்கு பிறகு 2060-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதியும் நடக்க இருக்கின்றன.”
 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

எப்படியும்... வேறு நாடுகளில், பார்த்தவர்கள்... படம் எடுத்துப்  போடுவார்கள்,
அதனை பார்த்து... திருப்தியடைவோம். :)

https://www.mdr.de/wissen/jupiter-saturn-grosse-konjunktion-sternenhimmel-weihnachten-100~amp.html

சிறித்தம்பி!  எவ்வித உபகரணங்களும் இன்றி கிரகங்களின் நகர்வுகளை கண்காணித்து கணக்கிட்டவர்கள் எம் முன்னோர்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

https://www.mdr.de/wissen/jupiter-saturn-grosse-konjunktion-sternenhimmel-weihnachten-100~amp.html

சிறித்தம்பி!  எவ்வித உபகரணங்களும் இன்றி கிரகங்களின் நகர்வுகளை கண்காணித்து கணக்கிட்டவர்கள் எம் முன்னோர்கள்.:)

அதை.... இப்ப சொன்னால்,  நம்மை பைத்தியக்காரர்கள் என்பார்கள், சில புத்திசாலிகள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் மழை  அது வழக்கமானது லண்டனில் கடைசியில் நாசா வெப்தான் .

nhq202012130001.jpg

Saturn and Jupiter just before their great conjunction on Dec. 21, 2020.  Skull Valley, Utah.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கும் மழை  அது வழக்கமானது லண்டனில் கடைசியில் நாசா வெப்தான் .

nhq202012130001.jpg

பட இணைப்பிற்கு... நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

உலகின் இரு வேறு பகுதிகளிலும் இன்று இந்த அரிய நிகழ்வை பார்க்கவிடாமல் காலநிலை சதி செய்கிறதே

உண்மைதான்..

இங்கே இரவு 11 மணியளவில்(சிட்னி), இரவு 8மணி(மேற்கு அவுஸ்ரேலியா) பார்க்கமுடியும் என்றுதான் இருந்தது.. மனிதர்களிடமிருந்து இயற்கையும் சதி செய்வதை படித்துக்கொண்டுவிட்டதோ தெரியவில்லை🤔

156-ECD2-C-5-AC5-4-D69-BC5-D-5-D4335-E30
 

https://www.9news.com.au/national/great-conjunction-2020-christmas-kiss-jupiter-and-saturn/946d2a90-5910-46e1-a73b-b476e138fa8c

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.