Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு லோக்கடவுன் வருகிறதா?

இன்னுமொரு லோக்கடவுன் வரப்போகுதாம். இன்னைக்கு பாஸ்சை பார்த்து, வேலை இடத்தை பார்த்து, பாஸ், லேப்டாப் எடுத்துவர போனேன் . 

கோஸ்ட் (பேய் ) ஆபீஸ்: ஒரு ஈ, காக்காய் இல்லை. ஓடி வந்துட்டேன்.

large.Office1.JPG.598840a83f8b1bad8194229c8bef25e6.JPG

large.Office.JPG.9420266878f979eb75c061e57b1693d0.JPG

large.office3.JPG.d1611d2b0469d6d9c69ae441d85cd4b1.JPG

large.office2.JPG.f4cbcf1b124708f59bdc098a08964471.JPG

Edited by Nathamuni

  • Replies 118
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

(நிக்) கலா அக்கா இண்டைக்கு ராவைக்கு ஸ்கொட்லண்ட முடக்கிறா. 

ஜோன்சன் இண்டைக்கு 8 மணிக்கு என்ன சொல்லுறார் எண்டு பாப்பம். 

ஆனால் இங்க ஸ்கூல் திறப்பு எண்ட மாரித்தான் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

(நிக்) கலா அக்கா இண்டைக்கு ராவைக்கு ஸ்கொட்லண்ட முடக்கிறா. 

ஜோன்சன் இண்டைக்கு 8 மணிக்கு என்ன சொல்லுறார் எண்டு பாப்பம். 

ஆனால் இங்க ஸ்கூல் திறப்பு எண்ட மாரித்தான் கதை. 

அதுக்கு ஆசிரியர் யூனியன் ஒரே முடிவாய் சொல்லிட்டுது முடியாது என்று .

நிக் அக்கா உசாரான ஆள் போரிஸ் க்கு நேற்றே கேயார் கம்புவிட்டு மாடு களைத்தவர் போரிஸ் அப்படி இப்படி இழுத்து இரவு எட்ட்டில்  கொண்டுபோய் விட்டுருக்கார் பார்ப்பம் என்ன நடக்குது என்று .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

அதுக்கு ஆசிரியர் யூனியன் ஒரே முடிவாய் சொல்லிட்டுது முடியாது என்று .

பின்ன, அவங்கள் மழை கொஞ்சம் உரக்க பெய்தாலே வேலைக்கு போவது உயிராபத்து எண்டுவாங்கள், இதுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை பக்கம் கவனம் ஈலிங் ஆஸ்பத்திகிரியில் சேர்க்கிறம்  என்று இடமில்லாமல் அவுட் ஒப் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொண்டு போய் சேர்க்கினமாம் .

இம்முறை தமிழ் சனத்தை  கூடுதலாக தாக்கி உள்ளது .

43 minutes ago, பெருமாள் said:

உங்கடை பக்கம் கவனம் ஈலிங் ஆஸ்பத்திகிரியில் சேர்க்கிறம்  என்று இடமில்லாமல் அவுட் ஒப் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொண்டு போய் சேர்க்கினமாம் .

இம்முறை தமிழ் சனத்தை  கூடுதலாக தாக்கி உள்ளது .

இங்கும் இதே நிலைதான். தொற்றுக்குள்ளான தமிழ் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மார்க்கம் / Stouffville எனும் இடத்தில் இருக்கும் அரச மருத்துவமனையில் கடமையாற்றும் தமிழ் மருத்துவர் சுபர்ணா, டிசம்பர் இறுதியில் வீடியோ மூலம் தமிழ் மக்களை நோக்கி சமூக விலகல்களை, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கையாளும் படி வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

உங்கடை பக்கம் கவனம் ஈலிங் ஆஸ்பத்திகிரியில் சேர்க்கிறம்  என்று இடமில்லாமல் அவுட் ஒப் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொண்டு போய் சேர்க்கினமாம் .

இம்முறை தமிழ் சனத்தை  கூடுதலாக தாக்கி உள்ளது .

நன்றி பாஸ், என்ன செய்யிறது முடிந்தளவு பாதுகாப்பாகத்தான் இருக்கிறம். வாசலில் மண்மூட்டை மட்டும் அடுக்கவில்லை🤣

இந்த முறை வயது குறைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபடுவது கூடவாம்.

19 minutes ago, நிழலி said:

இங்கும் இதே நிலைதான். தொற்றுக்குள்ளான தமிழ் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மார்க்கம் / Stouffville எனும் இடத்தில் இருக்கும் அரச மருத்துவமனையில் கடமையாற்றும் தமிழ் மருத்துவர் சுபர்ணா, டிசம்பர் இறுதியில் வீடியோ மூலம் தமிழ் மக்களை நோக்கி சமூக விலகல்களை, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கையாளும் படி வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.

இங்கே இப்படி தமிழ் டொக்டர்மார் சொன்ன 4 மெசேஜாவது நான் பாத்திட்டேன். எங்க ? சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நன்றி பாஸ், என்ன செய்யிறது முடிந்தளவு பாதுகாப்பாகத்தான் இருக்கிறம். வாசலில் மண்மூட்டை மட்டும் அடுக்கவில்லை🤣

இந்த முறை வயது குறைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபடுவது கூடவாம்.

நவம்பரில் இருந்து பார்ட்டி சீசன் ஆரம்பித்தமை தான் காரணம். 

இங்கிலாந்து நிலை பற்றி இங்கே யாழ் களத்திலேயே:

ஒருவர் பார்ட்டிக்குப் போய் டயற் பெப்சி குடித்து விட்டு சாணி மிதித்திருக்கிறார்.🤣

இன்னொருவர் பார்ட்டிக்குப் போன "குடி மக்களை" வாகனத்தில் ஏற்றி இறக்கியிருக்கிறார்

இன்னொரு அம்மணி கோவிட் பற்றி PHE தவிர்ந்த வேறு எவர் சொல்வதையும் நம்பி விடுகிறார்! 

(பகிடி தான்! ஆனால் பார்ட்டிகள் தான் இப்போதைய அதிகரிப்பிற்குக் காரணம் என்பது உண்மை!) 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

🤣 ஜஸ்டினாண நான் கடைசியா போன பார்டி பெப்ரவரி 2020 இலதான் 🤣.

Partyக்கு போனால் வீட்டில் இருக்கும் பாட்டி போகும் என்பதால்🤣

ஆனால் festive season க்கு பிறகு தொற்று கூடியயுள்ளதும் இரெண்டுக்குமான தொடர்பும் மறுக்கவியலாததே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

இங்கே இப்படி தமிழ் டொக்டர்மார் சொன்ன 4 மெசேஜாவது நான் பாத்திட்டேன். எங்க ? சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை.

சார்! சும்மா தமிழ்ச்சனத்தை வழிச்சு கொட்டுறதை நிப்பாட்டுங்கோ..:(
வெள்ளைக்கார சனமும் எங்களை விட மோசமாய்த்தான் திரியினம். அதாலை தான் இஞ்சை ஜேர்மனியிலையும் மூண்டாவது லொக்டவுண் வருது.ஆஸ்திரியாவிலையும் மூண்டாவது லொக்டவுண். சினோ கொட்டினவுடனை சனம் வீட்டுக்குள்ளை இருக்குதுகள் இல்லை...

3,c=0,h=558.bild.jpg

Trotz Corona! Riesiger Ansturm auf Ski-Gebiete in Hessen und Niedersachsen  | Frankenberg / Waldeck

Trotz Corona: Wieder Ansturm auf Skigebiete

இது தமிழ்சனத்தின்ரை கார்கள் இல்லை.சினோவுக்கு சறுக்க வந்த வெள்ளைக்கார சனங்களின்ரை கார்கள். கொரோனாவாவது மண்ணாங்கட்டியாவது 😀

Voller Parkplatz im Harz, mittig ein paar Rodler. © Nord-West-Media TV

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இன்னொருவர் பார்ட்டிக்குப் போன "குடி மக்களை" வாகனத்தில் ஏற்றி இறக்கியிருக்கிறார்

“குடிமக்கள்” அருந்தப்பில தப்பியிட்டினம். அதில் கலந்துகொண்ட நண்பர் ஒருவருக்கு அடுத்தடுத்த நாட்களில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் வகை தொற்றி அதன் பின்னர் பலருக்கு வேகமாகப் பரவியிருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

சார்! சும்மா தமிழ்ச்சனத்தை வழிச்சு கொட்டுறதை நிப்பாட்டுங்கோ..:(
வெள்ளைக்கார சனமும் எங்களை விட மோசமாய்த்தான் திரியினம். அதாலை தான் இஞ்சை ஜேர்மனியிலையும் மூண்டாவது லொக்டவுண் வருது.ஆஸ்திரியாவிலையும் மூண்டாவது லொக்டவுண். சினோ கொட்டினவுடனை சனம் வீட்டுக்குள்ளை இருக்குதுகள் இல்லை...

3,c=0,h=558.bild.jpg

Trotz Corona! Riesiger Ansturm auf Ski-Gebiete in Hessen und Niedersachsen  | Frankenberg / Waldeck

Trotz Corona: Wieder Ansturm auf Skigebiete

இது தமிழ்சனத்தின்ரை கார்கள் இல்லை.சினோவுக்கு சறுக்க வந்த வெள்ளைக்கார சனங்களின்ரை கார்கள். கொரோனாவாவது மண்ணாங்கட்டியாவது 😀

Voller Parkplatz im Harz, mittig ein paar Rodler. © Nord-West-Media TV

உண்மைதான். 

நான் சொல்ல வந்தது பெருமாள் இந்த முறை தமிழருக்குள் வேகமாக பரவுகிறது என்பதற்கான பதிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 ஜஸ்டினாண நான் கடைசியா போன பார்டி பெப்ரவரி 2020 இலதான் 🤣.

இதில நான் உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். சம்மர் முழுவதும் அரசின் வெளியே போயிருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறவில்லை.  ஆனால் செப்டம்பரில் இருந்து  விரும்பியோ, விரும்பாமலோ ஒரு கிளப் (💃🏼🕺🏼), சில ரெஸ்ரோரன்ற்ஸ் என்று டிசம்பர் 18 வரை போனதுண்டு. சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லை என்பதுதான் பலரின் பேச்சில் தொனித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இங்கும் இதே நிலைதான். தொற்றுக்குள்ளான தமிழ் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மார்க்கம் / Stouffville எனும் இடத்தில் இருக்கும் அரச மருத்துவமனையில் கடமையாற்றும் தமிழ் மருத்துவர் சுபர்ணா, டிசம்பர் இறுதியில் வீடியோ மூலம் தமிழ் மக்களை நோக்கி சமூக விலகல்களை, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை கையாளும் படி வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.

இங்கு போரிஸ் எட்டுக்கு சொல்றன் என்கிறார் பார்ப்பம்  இங்குள்ள வெள்ளைகளும்  நம்மடையதுகளும் சரி சொல்லுமல்லு  கேட்க்கிறதில்லை COSTCO போன்ற இடங்களில் ஒரு மாஸ்க் 16பென்ஸ் அதே மாஸ்க் சாதாரண கடைகளில் 50 பென்ஸ் ஒரு பவுன் அந்த ஒரு மாஸ்க்கை வேண்டி  காலையில் இருந்து இரவுமட்டும் உபயோகித்தால் வருத்தம் வராமல் என்ன செய்யும் ?

12 minutes ago, கிருபன் said:

“குடிமக்கள்” அருந்தப்பில தப்பியிட்டினம். அதில் கலந்துகொண்ட நண்பர் ஒருவருக்கு அடுத்தடுத்த நாட்களில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் வகை தொற்றி அதன் பின்னர் பலருக்கு வேகமாகப் பரவியிருந்தது. 

உங்களுக்கும் செய்தி வந்துட்டுது 😁

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ஒரு வெள்ளை பில்டர் கரியர்  அந்த மங்கி திரிந்த  அவ்வளவு இடமும் குன்சு குருமான் பாக்கியில்லமால் தாக்கி உள்ளது ஆனால் அந்த மங்கி பனடோலை  போட்டுகொண்டு திரிந்தது இப்ப மாறியும் விட்டது இன்னமும் அழுக்கு உடுப்புடன் திரியுது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கும் செய்தி வந்துட்டுது 😁

ஸூம் ஒன்றுகூடலில் வந்து தனது அனுபவத்தைச் சொல்லி எல்லோரையும் பல கேள்விகள் கேட்கவைத்தார். அதன் பின்னர் இன்னமும் நான் வீட்டிலிருந்து வெளியே போகவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இதில நான் உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். சம்மர் முழுவதும் அரசின் வெளியே போயிருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறவில்லை.  ஆனால் செப்டம்பரில் இருந்து  விரும்பியோ, விரும்பாமலோ ஒரு கிளப் (💃🏼🕺🏼), சில ரெஸ்ரோரன்ற்ஸ் என்று டிசம்பர் 18 வரை போனதுண்டு. சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லை என்பதுதான் பலரின் பேச்சில் தொனித்தது. 

என்னப்பா இது மேட்டுகுடி லீடர் நீங்களே உப்பிடி செய்யலாமோ🤣.

நான் சொந்த பந்தங்களையே டிரைவேயின்ற தொங்கல்ல நிண்டு போனில மெதுவா கதைச்சு (உரக்க கதைச்சால் காத்தில கூட பரவுமாம்🤣) கொண்டு கைய மட்டும் காட்டுங்கோ போதும் எண்டு சொல்லி வச்சிருக்கிறன்.

“டிரைவேய் தாண்டி போகாதேங்கோ, கண்ணிவெடி இருந்தாலும் இருக்கும்” எண்டு சொல்லி சிரிக்கினமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறையை விட இம்முறை கடுமையானது  போல் இருக்கு லொக் டவுன் .

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டி விட்டார்கள், பி.பி.சியில் பார்த்தேன்.

முகக்கவசம் அணியாமல் ஆறடி தூரத்திற்குள் 15 நிமிடங்களுக்கு மேல் இன்னொருவருக்கு அருகில் நிற்க வேண்டிய இடங்களுக்குப் போகாதீர்கள்! 

இப்படிப் பார்க்குப் போது சந்திப்புகள், விருந்துகள் தான் தவிர்க்க வேண்டியவையாக  இருக்கும். வேலை செய்வோர் அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டியது தான்!

இன்னும் 6 மாதங்கள் மட்டும் தான் உறவுகளே, பொறுத்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் லண்டனில் அஸ்ரா என்ற ஒரு மருந்து பாவனைக்கு வருகிறதாக அங்குள்ள உறவினர் முலமாக அறிந்தேன்..இது ஒரு ஒக்ஸ்போரட் யூனியின் தயாரிப்பாகும்..பைசர் போன்று அல்லாது சாதரணமான ஒன்று எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.பார்க்கலாம்.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரில், கொரோனா அதிகமாக பரவ, cash in hand  வாங்கும் இரண்டு வகை ஆட்கள் பேராசையும் ஒரு காரணம்.

வெள்ளைகள்  ஒன்லைன் டியூஷன் எடுக்கினம்.

நம்மட வாத்திமாரோ.... அதெல்லாம் சரிவராது.... நேர வாங்கோ..... 

அல்லது.... நான் நாலு மணிக்கு வீட்ட  வாறன்...

ஓமோம்  உங்கண்ட  நட் வெஸ்ட் பாங்கே..... get cash கோட்  தந்தியில் எண்டால் atm ல எடுத்துக் கொண்டு போடுவன்.... நீங்கள் ஏன்  அலையிறியல்?

அடுத்த குரூப் உந்த டிரைவிங் வாத்திமார்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

இன்று முதல் லண்டனில் அஸ்ரா என்ற ஒரு மருந்து பாவனைக்கு வருகிறதாக அங்குள்ள உறவினர் முலமாக அறிந்தேன்..இது ஒரு ஒக்ஸ்போரட் யூனியின் தயாரிப்பாகும்..பைசர் போன்று அல்லாது சாதரணமான ஒன்று எனவும் அறியக் கூடியதாக இருக்கிறது.பார்க்கலாம்.

பைசர் மைனஸ் 70 ல் வைத்து இருக்கணும் ஒக்ஸ்போர்ட்  சாதாரண குளிரூட்டியில் வைத்து எடுக்கக்கூடியது இன்றுதான் போட்டவர்கள் நாளை மறுநாள் தான்  விளக்கமாய் விபரங்கள் வரும் .இல்லாவிடின் நெடுக்கர்  வந்தால் விளக்கம் கிடைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

பைசர் மைனஸ் 70 ல் வைத்து இருக்கணும் ஒக்ஸ்போர்ட்  சாதாரண குளிரூட்டியில் வைத்து எடுக்கக்கூடியது இன்றுதான் போட்டவர்கள் நாளை மறுநாள் தான்  விளக்கமாய் விபரங்கள் வரும் .இல்லாவிடின் நெடுக்கர்  வந்தால் விளக்கம் கிடைக்கும் .

உண்மை..நான் அறிந்தவரையில் மிகவும் சாதரண குளிர் நிலையில் வைத்திருக்க கூடிய ஒன்று.நெடுக் அண்ணா வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

22 பக்க ஆவணம் மினக்கெட்டு தயாரித்து உள்ளார்கள் லொக் டவுன் சம்பந்தமாக .

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/949536/NationalLockdownGuidance.pdf

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மாத்திரம்தான் வித்தியாசம் மற்றபடி பாரிய வித்தியாசம் எதனையும் காணமுடியவில்லை .

https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/949536/NationalLockdownGuidance.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.