Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா ஒரு வலசரசா அல்ல வல்லரசா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே! இந்தியாவில் 100 கோடி மக்கள், அங்கே ஒரு சிறு கிராமத்தில் இப்படி நடைபெறுகின்றது. நம்ப முடிகிறதா?? முதலில் இதை பாருங்கள்!

யஸ்ட் 6 கோடி தமிழ் கதைக்கும் மாநிலத்திலேயே இப்படியெண்டால், 60 கோடி மக்கள் பேசும் ஹிந்தியில் எத்தனை அகோரங்கள், நினைத்து பார்க்க முடியாத அசிங்கள் நடைபெற்று இருக்கின்றன, நடைபெறுகின்றன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

இப்பொழுதாவது புரிகிறதா? எதற்காக இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் (இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு கொல்லும் பொழுதும், கொழும்பில் இருந்து இரவோடு இரவாக தமிழர்களை வெளியேற்றும் பொழுதும்) கண்டனங்களையோ, எதிர்ப்புகளையோ வெளியிடுவதில்லை என்று? முற்று முழுதாக சுதந்திரம் அடைந்த தங்கள் நாட்டில் நடைபெறுவதைவிடவா வேறு நாட்டில் நடைபெறப்போகின்றது என்று நினைத்துத்தான் அவர்கள் இவற்றை செய்வதில்லை என்பது நான் லேட்டஸ்டாக விளங்கிக்கொண்டது.

பாரத மாதாஜி வாழ்க!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிக்கு எத்தனை கோடி கொட்டினார்கள்? தசவதாரம் படத்திற்கு ஒரு காட்சி அதாவது சுனாமி தாக்கத்தை பிரதிபலிக்கும் கடல் காட்சியை செட் போட்டு எடுக்க போகிறார்களாம், அதற்கு எத்தனை கோடிகள்? ரஜனியின் சம்பளம் என்ன? ஜெயலலிதா ஆட்சியில் உள்ள பொழுது வாங்கி குவித்த சொத்துகளின் பெறுமதி என்ன? அண்மையில் வெளியான சிவாஜி படத்தை புதிதாக ஆரம்பிக்கவுள்ள கலைஞர் ரீவி வாங்கிய விலை என்ன?

சிவாஜிக்கான டிக்கட் ஒரு நாளீல் எத்தனை மில்லியன் வித்து முடிந்தது? அதில் எத்தனை பல மில்லியங்கள் லாபமாக அவர்களுக்கு சேர்ந்தது?

ஒரு நடிகையுடன் சல்லாபம் அனுபவிக்க, அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள் எத்தனை லட்சங்கள் செல்வழிக்கின்றார்கள்? ஒரு திரைப்படத்தை எத்தனை தரம் திருப்பி திருப்பி பார்க்கிறார்கள்? கிரிக்கட் நட்சித்திரங்களின் ஒரு நாள் சம்பளம் என்ன? 100 கோடியில் ஒரு லட்சம் பேர் காசில் புரள்கிறார்கள், மீதி சில லட்சம் பேர் தான் உண்டு தன் வேலை உண்டு எண்டு வாழுகின்றார்கள், மீதி பல லட்சம் பேர் 21ம் நவீன விஞ்ஞன உலகில் இப்படி வாழ்கின்றார்கள்.

இப்படியானவர்களுக்கு வழிகாட்ட எவருமே இல்லையா இந்தியாவில்? எல்லோரும் பேச்சளவில் இந்தியாவை வல்லரசாக ஆக்கி வைச்சிருக்கிறார்களா? அமெரிக்க, இங்கிலாந்த் போன்ற வல்லரசு நாடுகளில் பிச்சைக்காரன் கூட கையெழுத்து போடுறான், இந்தியா வளர்ந்து வரும் வல்லரசாம்? ஆனால் அங்கே நடைபெறும் படிப்பறிவற்ற செயலுகளை பாருங்கள்..

அரசாங்கம்தான் தன்னை வல்லரசாக சர்வதேசத்தில் காட்டிக்கொள்ள முயல்கிறது.

இந்தியாவால் அணுகுண்டை வெடிக்க வைக்க முடியும்.

பக்கத்து நாட்டில் சமாதானத்திற்காக இராணுவத்தை அனுப்ப முடியும்.

பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க முடியும்.

புதிய கணணித் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான மனிதவலுவைப் பிரயோகிக்க முடியும்.

...

ஆனால் நாட்டு மக்கள் எக்கேடு கெட்டால் என்ன, மனித உரிமை மீறப்பட்டால்லென்ன, அயல்நாட்டில் இன அழிவு நிகழ்த்தப்பட்டாலென்ன எதைப்பற்றியுமே கவலை கொள்ளத் வேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கேவலமான நிலை சட்டம், ஒழுங்கு எல்லாம் மூட்டை கட்டி வைக்கப் பட்டிருக்கா அந்த ஊரிலே, இந்தியச் சட்டங்கள் அந்த ஊரை எட்டிபார்க முடியாத இன்னொரு தேசமா அது? தலையே சுற்றுகிறது அதை பார்த்ததால்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா உண்மையிலேயே ஒரு வல்லரசுதான். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு என்பது ஆயுதங்களையும் படைகளையும் குவித்து வைப்பதால் அடையப்படும் மேலாதிக்க நிலை என்ற மனப் போக்கை அமெரிக்காவும் முன்னைய வல்லரசான ரஷ்யாவும் இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள் மனங்களில் பதியச் செய்து விட்டன. அணுகுண்டு வைத்திருந்தால் வல்லரசு எனின் வட கொரியாவும் வல்லரசாகி விடுமல்லோ? உலகத்திற்கு நேர்மையான தலைமைத்துவம் தர முடியாத நாடுகளில் ஒன்று தான் இந்தியா. புத்தர் காந்தி அவதரித்த நாடு என்று பழம் பெருமை பேசிக் கொண்டு ஆட்கொல்லி அரசுகளுக்கு முண்டு கொடுக்கத் தான் இந்தியா போன்ற நாடுகள் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண்ணே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமென்றால் இந்தியாவில் உள்ள அத்தனை நாகரியம் இல்லாத அனைவரையும் நவின இந்தியாவிற்குள் இழுதுவரமுடியும்

எப்படி என்றாலும் 2020 யில் இந்தியா வல்லரசுதான்

வரலாற்று ரீதியாக பார்க்கும் போது ஆரியர்கள் தமது இனம் தமது சாதி வேறு சாதியுடன் கலந்து விடக் கூடாது என்று பல கட்டுப்பாடுகளை மதத்தின் வாயிலாக குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்தினார்கள். அவைகளை எனைய சமூக குழுமங்கள் பின்பற்றின. நாகரீக வளர்ச்சியில் தம்மை இணைத்துக்கொண்ட குழுமங்கள் ஓரளவு மீண்டு விட்டார்கள். ஒதுக்குப்புறமான கிராமங்களில் வாழும் மக்கள் இன்னமும் மாற்றமின்றி இருக்கின்றனர்.

பேரூந்தில் இன்னமும் பயணம் செய்யாத பழங்குடி மக்கள். இந்தியா அல்லது இந்திய அரசியல். பிரதமர் என்று எவரையும் தெரியாத மக்கள் ஆங்காங்கே குக்கிராமங்களில் இருக்கின்றனர். அவ்வாறான மக்களில் பெரும்பாலானோர் இவ்வாறு பின்தங்கிய நிலையில் இருப்பதில்லை. ஆனாலும் தமது சாதியை தாண்டி திருமணம் செய்வதை அனுமதிப்பதில்லை. தற்போதும் நகர்புறங்களில் வாழும் குறவர் என்னும் சமூகமும் இதற்கு அனுமதிப்பதில்லை. அவ்வாறு யாரும் மீறி சென்றுவிட்டால் தமது குழுமத்தில் இருந்து விலக்கி வைத்து விடுவார்கள்.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் நாகரீகமடைந்த ஏனைய சாதிகளும் தமது பிள்ளைகள் வேற்று சாதியை மணம்முடிக்க விரும்புபவர்கள் இல்லை. ஆனால் உத்தியோகம,; பொருளாதார வசதி, சமூக அந்தஸ்த்து போன்ற காரணிகள் இந்த விசயத்தில் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

நாகரீக வளர்ச்சியானது இவ்வாறான மூட நம்பிக்கைகளை தேற்று வித்தவர்களையே இப்படியான விசயங்களை ஆச்சரியமாகவும் அப்பவித்தனத்துடன் பார்க்க வைக்கின்றது. என்பது அடுத்த ஆச்சரியம்.

இந்த மக்கள் இன்னமும் நாகரீக வளர்ச்சியின்றி உள்ளனர். அண்ணன் தம்பி குத்துப்படாமல் உடல்சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். பல நூற்றாண்டுகாலமாக ஒரு பழமொழி உண்டு "அண்ணன் பொண்டாட்டி அரைப்பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி முழுப்பொண்டாடி" இந்த பழமொழி இந்த உறவை நாகரீகமாக சித்தரிக்கின்றது. பாரதியாருக்கும் பதின் மூன்று வயதில் திருமணம் நடந்தது.

தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் மார்பை மறைக்க பல நூறு வருடம் உயர்சாதிகளிடம் போராடினார்கள். மரணமடைந்தார்கள். மார்பின் வழர்ச்சிக்கேற்ப வரி கட்டினார்கள். (மாராப்பு சேலைப் போரட்டம் பற்றி "பார்ப்பன பயங்கரவாதத்தின் ரத்த சாட்சியங்கள"; என்ற மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஆவணப்படத்தில் பார்க்கலாம்)

எனவே இந்திய ஒரு வல்லரசுதான்அந்த வல்லரசு என்ற பலம் பக்கத்தில் இருக்கும் பகிஸ்தானையோ அல்லது சீனாவையோ கட்டுப்படுத்துகின்றதுக்கு மட்டுமில்லை தமது நாட்டு மக்களை கணணி உலகிலும் விழிப்புக்குள் கொண்டுவராமல் கட்டுப்படுத்துவதிலும் வல்லரசுதான்.

இவ்வாறான மூடநம்பிக்கைகளை அகற்ற பலர் வரலாற்றில் தோன்றினாலும் அவர்களால் முற்று முழுதாக முடியவில்லை. தற்போதய தலை முறை தொலைக்காட்சி வாயிலாக ஏதோ காணாததை கண்டது போல் வரலாற்றில் இல்லாத ஒன்றை கண்டது போல் புறப்பட்டுள்ளது. வரவேற்க தக்க விசயம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் நம்மில் பலர் உயிரோடு இருக்கத் தான் போகிறோம், பார்க்கத் தான் போகிறோம். ஒரே இரவில் எந்த நாடும் வல்லரசாவதில்லை. பத்து ஆண்டுகளில் இன்று இல்லாத மனமாற்றம் வரப் போவதுமில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள்!

என்னபா ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சு ( கறியாக்கின பெறவு) கடசீல பெரியண்ணாவையே கடிக்க்கிற்றீங்க....

சின்னப்பையனுக்கு இரண்டு கல்யாணமாகி (முதிர்ந்த பெண்களுடன்) குழந்தை பெற்றுக்கொள்வது எப்படி எண்டு சொல்லி குடுக்கிறாங்க.... மேற்க்கு நாட்டுக்காறன் தோத்தாம்பா....! ( யாராவது இங்கை பகுத்தறிவு பெரியார் எண்டு தொடங்கினா..... :angry: :angry: :angry: )

அட சீ.... துதுதுதுதுதுதுதுது :angry: :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சீ.... துதுதுதுதுதுதுதுது :angry: :angry: :angry: :angry:

எதுக்கும் அங்காலை கொஞ்சம் அரக்கி நிண்டு கொண்டு.................. :blink:

வால் பிடிக்கும் அரசு. அதனிடம் தமிழ் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இது இன்றுதான் கண்டறியப்பட்ட விடயமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வருபவனுக்கு நாட்டை கொள்ளையடிப்பது பற்றியே சிந்தனை.

இதில் படித்தவர்கள்..... அவர்களுக்க கொடி பிடிப்பது வேலை. என்ன செய்யும் கிராமம்!

இதுல் ஆச்சரியப்பட ஏதுமில்லை..... இது தொலைகாட்சியில் இடம்பெறும் அளவிற்கு ஒரு முக்கியமான செய்தியும் கிடையாது. அது வெறும் அறியாமையின் வெளிப்பாடே அன்றி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான் இது அமெரிக்கா தொடங்கி ஆபிரிக்கா வரை நாளும் நடக்கிறது.

அண்ணன் தம்பி ஒரு பெண்ணுடன் உறவு வைக்கின்றார்களா??????

ஆச்சரியத்துடன் கூறுகிறார் நிகழ்சியை தொகுத்து வழங்கிய படித்த பெண்.

இதே பெண்ணுடன் காசை கொடுத்து எத்தனை அரசியலில் உள்ள அண்ணன் தம்பிமார் உறவை வைத்திருப்பார்கள் என்பது அம்மணிக்கு மட்டுமே தெரிந்தது.

நாளும் இந்த தொலைகாட்சியின் பின்னறையில் சிதையும் பெண்களின் கதையை யார் காட்டுவாரோ?

கொள்ளை கொலை காசை காட்டி கற்பளிப்பு காசுக்காக மடிவிரிப்பு அதெல்லாம் தொலைகாட்சி நிறுவனமிருக்கும் பின் தெருவிலேயே நடக்கின்றது........

ஏன் இவர்கள் நேரம் செலவளித்து கிரமத்துக்க போகின்றார்களோ தெரியவில்லை!

ஆசாமின் சிறு குழுவையே அடக்க வக்கில்லை.....

இதிலே நெருப்பிலேயே நீராடும் புலிகளை முடக்கும் கனவோட

சில புத்தி பேதலித்ததுகளாலா இந்த நாடு செலவழித்ததில் வெறும் பத்து வீதத்தை இந்த கிராமங்களுக்காக செலவிட்டுருப்பின் இவற்றில் ஒன்றாவது நடந்திருக்குமா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.