Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Download Gif Thinking | PNG & GIF BASE

குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு....
வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது...
அதனை... எப்படியும், வெல்ல  வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது.

திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று,
தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், 
வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, 
அவனுக்கு,  வேறு வழியே இருக்கவில்லை.  

ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு,
அந்த முதலாளியிடம், மீண்டும்  வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்...
நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல.
அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும்,
இழந்தது... பெரும் சோகம்.

ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில்,
அவனுக்கு...  புது  "ஐடியா" பிறந்தது....  :grin:

➡️ ➡️ ➡️  ..... ✍️   ✍️  ✍️  🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 72
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான,  ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வே

  • கருத்துக்கள உறவுகள்

மிஷேலுக்கு இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கு எனக்குத் தெரியாது. இனி மிஷேல் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, 
ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது.
அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர,
வீதி அமைதியாகவே இருக்கும்.

வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்...
9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால்,
தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து,
வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 
8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும்,
அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி  என்ன சொல்லுவாரோ...
கை, கால்  எல்லாம் உதறல் எடுத்தது. 🥶

வீட்டிற்கு...  திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும்,
🍛 "சோத்துக்கு... என்ன வழி"  என மனதை திடப் படுத்திக் கொண்டு,
வருவது வரட்டும்  என நின்றான். 

ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில்  தனியே... 
வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன்,
கையை அசைத்து... அவரின் காரை மறித்தான்.
கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗

முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று..  
தனக்கு நடந்த சோகங்களை சொல்லி...
தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது,
"நீ... திரும்பி  வருவாய் என்று, எனக்குத் தெரியும்."
ஒரு கிழமை... கழித்து,  வேலையில் வந்து சேர்.
என்று  சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார்.

மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது.
குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். 
மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால்,
முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. :)

ஆனாலும்...  மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம்
அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢

//"விட்ட  காசை, திருப்பி எடுப்பம்" என்று...
அவனது  
🐵 "மங்கி" புத்தி 🐒  சொன்னதால்...// :grin:
 

சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான்.
என்ன... ஆச்சரியம்!!!!!! 
அவனுக்கு...  "7 மில்லியன் ஐரோ",  விழுந்து விட்டது. 😮

 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2021 at 13:50, தமிழ் சிறி said:

மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும்,
அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்...
வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் 
அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.

நிர்வாகத் திறன் இல்லை என்றால் மிசேலாக இருந்தா என்ன யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் பூட்டுவிழும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச உதெல்லாம் ரொம்ப அநியாயம் சிறி சார் .........!  😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது,
"நீ... திரும்பி  வருவாய் என்று, எனக்குத் தெரியும்."
ஒரு கிழமை... கழித்து,  வேலையில் வந்து சேர்.
என்று  சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார்.

புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்!

மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆

தொடருங்கோ....சிறியர்!

  • கருத்துக்கள உறவுகள்

"குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சு கொண்டு கொடுக்குது "சிரீயரின் கதா  நாயகனுக்கு 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்!

மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆

தொடருங்கோ....சிறியர்!

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

புங்கை... 
அங்கை...  நாலு, கை தெரியுதோ....
அவங்கள்... இரண்டு பேரும்,  
கறுப்புப் பணத்தை.... வெள்ளையாக மாற்றுகிறார்கள். 

இது.. வெறி சிம்பிள், பயலோஜி. 😂

இதுக்குப் போய்... மண்டையை, குழப்பக்  கூடாது.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

Millionen-Umsatz mit 1-Mann-Unternehmen: So geht's | OMR - Online Marketing  Rockstars

புங்கை... 
அங்கை...  நாலு, கை தெரியுதோ....
அவங்கள்... இரண்டு பேரும்,  
கறுப்புப் பணத்தை.... வெள்ளையாக மாற்றுகிறார்கள். 

இது.. வெறி சிம்பிள், பயலோஜி. 😂

இதுக்குப் போய்... மண்டையை, குழப்பக்  கூடாது.  🤣

ஓகே...ஒகே...இப்ப விளங்குது..!

இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...!

அது தானே சிறியர்?🥶

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

இஞ்ச உதெல்லாம் ரொம்ப அநியாயம் சிறி சார் .........!  😎

✯சண்டியர்✯ Twitterren: "அதிமுக கூட்டணியில் இணைகிறது தேமுதிக. கேப்டன் : எனக்கு  வேற வழி தெரியல ஆத்தா..… "

சுவியர்... எனக்கு வேற வழி தெரியலியே...
ஒரு, கதை எழுத... எத்தனை மன நிலைகளை, 
தாண்டி வர வேண்டும் என்பதனை... நீங்கள் அறிவீர்கள்தானே.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புங்கையூரன் said:

ஓகே...ஒகே...இப்ப விளங்குது..!

இரண்டு கைகள் கறுப்புக் கைகள்....இரண்டு கைகள் வெள்ளைக் கைகள்...!

அது தானே சிறியர்?🥶

ஓம்... புங்கையூரான், 

Barack Obama Yes GIF by Obama - Find & Share on GIPHY

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.

Leonardo Dicaprio GIFs | Tenor Top 30 Correct GIFs | Find the best GIF on Gfycat

"சிங்கப்பூருக்கு... போனதாம் நண்டு,
கால்,  சுளுக்கி வந்ததாம் சுண்டு."

என்று... முதலாளி நினைத்ததில் தப்பில்லை,  ஈழப்பிரியன்ஸ்....  💓

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை!!!!!.  18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். 🤣

a walk to remember | Tumblr | Walk to remember, Romantic films, Romance  movies

மிஷேலுக்கு... இரண்டாவது  முறை,  "7 மில்லியன் ஐரோ",  பரிசு விழுந்ததில்...
அவன், சிறிய சந்தோசம் அடைந்தாலும்...
அவனது... நினைவு முழுக்க, பிரிந்து சென்ற தனது..
மனைவி, பிள்ளைகளின் மீதே இருந்தது.  💓

தனக்குப் பரிசு, விழுந்த கதையை....
மனைவிக்கு சொல்லி... தன்னுடன் வந்து,
முன்பு போல்... வாழ்க்கை நடத்தலாம் என்று கேட்ட போது...
ஆரம்பத்திலேயே...  மனைவி,  மறுத்து விட்டார். 

இவன் பல முறை...  மன்றாட்டமாக கேட்டதாலும்...
"க(தை)ரைத்தார்.... கரைத்தால்,  கல்லும் கரையும் என்பது போல்...
பெண்களுக்கே உரிய, இழகிய மனத்துடன்.. 
1️⃣ ஒரே... ஒரு,  நிபந்தனை மட்டும் விதித்து...

அதற்கு... மிஷேல், வர சம்மதம் என்றால்...
தான்.. சேர்ந்து வாழ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  :grin:

அந்த... நிபந்தனை என்ன? ➡️ ➡️ ➡️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2021 at 08:26, புங்கையூரன் said:

பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும்...அவர்கள் பிறந்து வளரும் சூழலுக்கேற்பச் சில ஆசைகளும் ...எதிர் பார்ப்புகளும் இருக்கும்!

அவற்றை நோக்கிய பயணம் தானே வாழ்க்கை, சிறியர்?

அவற்றை அடைந்த பின்னரும்...ஒரு முழுமையான மனத் திருப்தி ஏற்பட மாட்டாது...! அதை விடவும் புதிய ஆசை ஒன்று தோன்றும்..!

காரே இல்லாதவன்....காருக்காக ஏங்குவான்..!

பென்ஸ் கார் வைத்திருப்பவன்....வீதியில் போகும் லம்போகினிக்காக ஏங்குவான்!

இதையெல்லாம் கடந்தவன்....ஞானியாகின்றான்..! தொடருங்கள்....!

கார், வீடு போன்ற ஆசைகள் ஓரளவுக்கு கிடைத்து அறுபது வயதை அடையும் பொழுது ஓர் ஆசை வரும் ஞானம் அடைய என்ன வழி என்று..... கோவில்  ,யு டியுப் என அலைந்து திரிய வேண்டிகிடக்கு🤣

39 minutes ago, தமிழ் சிறி said:

எச்சரிக்கை!!!!!.  18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்தப் படத்தை பார்க்க வேண்டாம். 🤣

நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, putthan said:

நான் இந்த படத்தை பார்த்தேன் அப்படி பெரிய தாக்கம் ஒன்ரும் எனக்கு நட்க்கவில்லை ...நான் 17 +🤣

புத்தன்....  மிஷேலின்,  நாடிக்கு கீழ் உள்ள.... 
தோல், நரம்பு, சதை, கழுத்து... எல்லாம்,
சுளுக்கிறதை பார்க்க... எனக்கு,  ஒரு மாதிரி... பயமாய்  கிடக்கு.  :grin:
அதுக்காகத் தான், அந்த,  எச்சரிக்கைப்  பலகை. 😎
ஹா... ஹா... ஹா...........  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்....  மிஷேலின்,  நாடிக்கு கீழ் உள்ள.... 
தோல், நரம்பு, சதை எல்லாம்....
சுளுக்கிறதை பார்க்க... எனக்கு,  ஒரு மாதிரி... பயமாய்  கிடக்கு.  :grin:
அதுக்காகத் தான், அந்த,  எச்சரிக்கைப்  பலகை. 😎
ஹா... ஹா... ஹா...........  🤣

🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Electric Pencil Sharpener | KiwiCo | Electric pencil sharpener, Sharpener,  Science kits for kids

மிஷேலின்... மனைவி, கேட்ட..  
ஒரேயொரு நிபந்தனை...
இதுதான்.... 

உன்னுடைய.... வங்கிக் கணக்கில் இருக்கும்,
ஏழு மில்லியன் ஐரோவையும்... தனது, தனிப்பட்ட  வங்கிக்  கணக்கில்,
மாற்றினால் மட்டுமே... இருவரும் சேர்ந்து, 
குடும்பம் நடத்தலாம் என்று  சொன்ன போது... 

மிஷேல்... கொஞ்சம், அரண்டு போனாலும்...
தான்... முதல், செய்த தவறுகளை.... 
மீண்டும்,  நினைவு மீட்டிப்  பார்த்த போது...
அவள்... சொல்வதிலும், ஒரு நியாயம்  இருக்கு என்று...

என்ரை..... செல்லக் குட்டி,  பிரவுணி  குட்டி,  கள்ளிக்  குட்டி...
என்று... அவளை   தூக்கி,  கொண்டாடினான்.  

அந்த நேரம்... பார்த்து, 
அப்பா.... 
"பென்சில்  சீவி"  தாருங்கப்பா... 
என்ற குரல்  கேட்டதும்.... 
மிச்சத்தை,  நாளைக்குப் பாப்பம் என்று,
பென்சிலை... சீவத் தொடங்கினான். 

முற்றும்...  திறந்த, முனிவனாகினான் மிஷேல்.    🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"உடைந்த ஒரு இதயத்தை பெண்ணிடம் கொடு அதை உருவாக்கி தருவாள்.

மிஷேல் குடும்பம் இனிதே வாழ்க 👨‍👩‍👧‍👦👏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முற்றும்...  திறந்த, முனிவனாகினான் மிஷேல்.   

தொடருமா?முற்றுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தொடருமா?முற்றுமா?

 ஈழப்பிரியன்.... சரியான கேள்வி கேட்டீர்கள்.

இன்னுமொரு உறவு... இதனை, இன்றுடன் முடிக்கும் படி வேண்டினார்.

அந்தப்  பெண்ணிற்கு, தலை வணங்கி... கதை முற்றுப் பெறுகின்றது.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்.... சோலி, சுரட்டுக்குப் போய்... கன நாளாச்சு.  
சும்மா... சிவனே... என்று, சும்மா இருந்தாலும்
எங்கள்  கற்பனை குதிரையை... தட்டி விட்டாலும்,
அழுத்தங்கள்... எங்கிருந்தோ வருகின்றது.

இதற்கு மேல்.... சொல்ல, எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 ஈழப்பிரியன்.... சரியான கேள்வி கேட்டீர்கள்.

இன்னுமொரு உறவு... இதனை, இன்றுடன் முடிக்கும் படி வேண்டினார்.

அந்தப்  பெண்ணிற்கு, தலை வணங்கி... கதை முற்றுப் பெறுகின்றது.  

எனக்கும் ஆரோ பிடரியில தட்டின மாதிரி இருந்தது!

திடுக்கிட்டுத் திரும்பினால் தானாச் சீனா!😝

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.