Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்: சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்:

சிக்கலில் டாக்டர் தம்பதியின் மகன்

ஜூன் 21, 2007

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

dileeppp8.jpg

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர்.

மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன் ஒரு வீடியோ படத்தை அங்கு திரையிட்டார். ஒரு பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது.

இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று டாக்டர்கள் கேட்டனர். அதற்கு முருகேசன், இருக்கிறது, இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது எனது 15 வயது மகன் திலீப் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முருகேசனின் செயலுக்கு டாக்டர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் தவறு என்று கூறினர். அதை மறுத்த முருகேசன், கின்னஸ் சாதனைக்காக இந்த அறுவைச் சிகிச்சையை எனது மகன் செய்தான். வெற்றிகரமாக இந்த அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எதிர் கேள்வி கேட்டார் முருகேசன்.

ஆனால் அங்குள்ள டாக்டர்களால் முருகேசனின் செயலை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்ச்சையில் சிக்கியுள்ள திலீப், பத்தாவது வகுப்பை முடித்து விட்டு மணப்பாறையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறான்.

முருகேசனின் செயலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மணப்பாறை பிரிவு அவசரமாக கூடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அகில் இந்திய தலைமை அலுவலகத்திற்கும் இந்த தீர்மான நகலை அனுப்பியுள்ளனர்.

டாக்டர் முருகேசனின் செயல், ஒரு உயிருடன் விளையாடியதற்கு ஒப்பாகும். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் மோகன்தாஸ், முருகேசனின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது டாக்டர் படிப்பை ரத்து செய்யும் வகையில் பரிந்துரை செய்ய முடியும். திருச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் இதுகுறித்து தீர்மானிப்போம் என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கோட்டாட்சியர் இந்த விசாரணையை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/21/doctors.html

இப்பிடி ஆளாளுக்கு இனி வெளிக்கிட போயினம் கின்னஸ் சாதனை படைக்க :unsure: :wacko:

Edited by பிரியசகி

இப்பிடி ஆளாளுக்கு இனி வெளிக்கிட போயினம் கின்னஸ் சாதனை படைக்க :unsure: :wacko:

முதல் ஆளா நான் வெளிகிட போறேன் அக்கா யாரை முதல் ஒப்ரேசன் பண்ண நீங்களே சொல்லுங்கோ

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் ஆளா நான் வெளிகிட போறேன் அக்கா யாரை முதல் ஒப்ரேசன் பண்ண நீங்களே சொல்லுங்கோ

:P

ஒருவரும் மாட்டுப்பட மாட்டாங்கள் என்ன செய்யிறது நானே வாறேன் :unsure:

இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று டாக்டர்கள் கேட்டனர். அதற்கு முருகேசன், இருக்கிறது, இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது எனது 15 வயது மகன் திலீப் என்று கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சையை முழுவதுமாக பார்த்த டாக்டர்கள் "இதில் என்ன விசேஷம்" என்று கேட்டதன் மூலம் அது மிகவும் சரியாகவே செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அதன் பின் 15 வயத சிறுவன் என்றதும் அதிர்ச்சி அடைந்தது பொறாமையால், எங்கே தங்களை கடவுள் என்று வணங்கும் மக்கள் கண்டுகொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற பயம் தான்.

இதையே இவர் அமெரிக்காவில் செய்திருந்தால் இவருக்கு பெரும் பெயரும் புகழும் கிடைத்திருக்கும். தமிழ்நாடு முன்னேறாமைக்கு காரணம் வேறு மானிலத்தவர் அல்லர். அவர்களேதான்!

ஒருவரும் மாட்டுப்பட மாட்டாங்கள் என்ன செய்யிறது நானே வாறேன் :unsure:

சொல்லவே இல்லை கப்பியக்கா :lol: :P

ஒருவேளை அறுவைச் சிகிச்சை பலனளிக்காது அந்தப் பெண் இறந்திருந்தால் இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்திருக்குமா ?

ஒருவேளை அறுவைச் சிகிச்சை பலனளிக்காது அந்தப் பெண் இறந்திருந்தால் இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்திருக்குமா ?

அப்படி என்றால் இதுவரையும் ஒருவரையும் கொல்லாத மருத்துவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவியுங்கள்!

அப்படி என்றால் இதுவரையும் ஒருவரையும் கொல்லாத மருத்துவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவியுங்கள்!

இன்னொரு உயிருடன் விழையாடுவது உலக சாதனையல்ல.

அறுவை சிகிச்சை செய்வதற்கு பல ஆண்டுகால மருத்துவக் கல்வியும் அனுபவ வயது முதிர்ற்சியும் வேண்டும்.

இந்தச் சிறுவன் செய்தது சரியாக இருந்தால் 10ஆம் வகுப்பில் மருத்துவர் பட்டம் கொடுக்கலாம்.

தகுதி இருந்தால் 10ஆம் வகுப்பென்ன 5ஆம் வகுப்பிலேயே கொடுக்கலாம்!

இந்த ஒரே ஓரு வேறுபாடு காரணமாகத்தான் தனியார் துறை அசுரவளர்ச்சியை எட்டி நிற்கின்றது, அரசு துறைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது!

தகுந்த மேற்பார்வையுடன் இச்சாதனை நடைபெற்றிருக்கலாம்! உயிருடன் விழையாடுதல் என்பது ஏற்புடையதன்று. ஒரு டாக்டரின் முதலாவது சத்திர சிகிச்சை எவ்வளவு உயிராபத்தானதோ அத்தகையதே இதுவும். இத்தனைக்கும் அந்தப் பெண் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கவில்லை?

ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து சாதனை நிகழ்த்தும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் உலகம், இன்னொருவர் உயிர் காக்கும் இந்த வித்தையையும் ஏற்கத்தான் வேண்டும்.

இச்சாதனையை படைக்க ஊக்குவித்த பெற்றோருக்கும், சாதனை படைத்த சிறு டாக்டருக்கும் வாழ்த்துகள்!

(வழமைபோலவே இவர்களும் மேலைநாட்டிற்கு குடிபெயர்ந்து பிழைத்துக் கொள்வார்கள், இவர்களை துரத்திய பெருமை எங்களுக்கே!)

Edited by சாணக்கியன்

ஏனைய சாதனைகளைப் போலல்ல மருத்துவச் சாதனை. புதிய மருத்துவம் ஒன்றையோ மருந்து ஒன்றையோ கண்டுபிடித்திருந்தால் அது நிச்சயம் பாராட்ட வேண்டிய சாதனை. வயதெல்லையும் கிடையாது.

மேல்நாடுகளில் 15 வயதுச் சிறுவன் இப்படியான காரியத்தைச் செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஒருவரும் மாட்டுப்பட மாட்டாங்கள் என்ன செய்யிறது நானே வாறேன் :lol:

கப்பி அக்காவிற்கு என்னில எவ்வள்வு பாசம் என்றாலும் நான் ரிஸ்க் எடுக்க விரும்பல்ல வேற யாரையும் பார்போம்...........

:P

தகுதி இருந்தால் 10ஆம் வகுப்பென்ன 5ஆம் வகுப்பிலேயே கொடுக்கலாம்!

இந்த ஒரே ஓரு வேறுபாடு காரணமாகத்தான் தனியார் துறை அசுரவளர்ச்சியை எட்டி நிற்கின்றது, அரசு துறைக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது!

உண்மையாவோ அப்ப நீங்க 5 வகுப்பு டாக்டரிட்ட ஒப்ரேசன் பண்ன ரெடியா சாணக்கியன் அண்ணா???

:unsure:

அறுவை பிழைத்திருந்தால்..

தாய் பிள்ளை..

என்று இருவர் வாழ்க்கை..

சாதனை சோதனையாகிப் போயிருக்கும்..

அதிகப்பிரசங்கித்தனம்..

இதையே இவர் அமெரிக்காவில் செய்திருந்தால் இவருக்கு பெரும் பெயரும் புகழும் கிடைத்திருக்கும்.

அமரிக்காவில் என்றால் இச்செயல் பாராட்டுப் பெற்றிருக்கும் என்பது முற்றுமுழுதான அறியாமை!

இவ்வாறு ஒரு செயல் இங்கு நடந்திருப்பின் குறித்த தந்தையின் அனுமதிப்பத்திரமும் பறிபோய் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

அது மட்டுமல்ல, மகப்பேறின் போது மனைவியோடு கணவன் கூட இருக்கும் இந்நாடுகளிலேயே சத்திரசிகிச்சை என்றால் கணவன் கூட அங்கிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு ஒரு அந்நியன் செல்வாக்கைப் பாவித்து உள்ளே வந்து அந்தப் பெண்ணின் பிறைவசியை அத்துமீறியது மட்டுமன்றி அவளின் உயிரோடு விளையாடி உள்ளான்.

பையன் அதிபுத்திசாலி என்றால் சிறுவயதிலேயே பல வகுப்புக்களைத் தாண்டிக் கடந்து பல்கலைக்கழகம் சென்று வைத்தியராய் பட்டம் பெற்றிருப்பார் (வைத்தியத் துறை என்று வரும் போது வயது கூட சில சிக்கல்களை உருவாக்கலாம்). அப்படி அனுமதிப்பத்திரம் பெற்ற பின் சத்திரச்சிகிச்சை செய்திருந்தால் அது சாதனை. அதை விடுத்து ஏதோ கண்பார்த்ததைக் கைசெய்யும் என்பது போல் நடந்து கொண்ட இச்செயல் எவ்விதத்திலும் பாராட்டிற்குரியது அல்ல.

மேலும், மேலை நாடுகளில் வைத்தியத்துறையினை, இந்த நோயிற்கு இந்தக் குழிகை என்று இயந்திரநோக்கில் கற்பிப்பதுமில்லை நடைமுறைப்படுத்துவதும் இல்லை. உடல்ரீதியான வைத்திய அணுமுறைகளில் கூட உளவியல் அதிகம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உளவியல் என்று வரும் போது அது நோயாளியினுடையது மட்டுமல்ல, வைத்தியருடைய உள ஸ்த்திரத்திலும் தங்கியுள்ளது.

இந்தப் பதினைந்து வயதுப் பையனிற்கு ஒருவேளை வெட்டித் தைக்கும் இயந்திரத்தன்மையில் தேர்ச்சி இருக்கலாம்( இலத்திரனியலின் அருச்சுவடி கூடத் தெரியாது தொலைக்காட்சி வானொலி திருத்தும் மெக்கானிக்கைப் போல. ) ஆனால் அறுவைச் சிகிச்சை என்பது அவ்வளுதான் என்றும் இல்லை பல ஆண்டுகள் கடின பயிற்சி பெறும் சத்திரச்சிகிச்சை நிபுணர்களும் அதைக் அத்தனை ஆண்டுகள் கற்பிக்கும் வல்லுனர்களும் மடையர்களும் அல்ல!

தனக்குத் திறமை உள்ளது எனத் தானும் தனது தந்தையும் நம்பினால் ஒருவர் எதனையும் செய்யலாம் என்றால் பின் எந்த நாட்டிலும் எந்தத்துறையிலும் அனுமதிப்பத்திரம வழங்கும் நடைமுறை தேவை இல்லையே!

Edited by Innumoruvan

இன்னொருவன்,

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

முதலில் எனக்கு மருத்துவத்துறை அல்லது அதுசார்ந்த சட்ட திட்ட அறிவு கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு சாதாரண பாமரன். என் கேள்விகளில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் கருத்தில் உள்ள யதார்த்த நடைமுறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு அப்பால் ஒரு இலட்சிய உலகை நோக்கிய பயணத்தில் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

அமரிக்காவில் என்றால் இச்செயல் பாராட்டுப் பெற்றிருக்கும் என்பது முற்றுமுழுதான அறியாமை!

இவ்வாறு ஒரு செயல் இங்கு நடந்திருப்பின் குறித்த தந்தையின் அனுமதிப்பத்திரமும் பறிபோய் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

மேலைநாடு என்பதைதான் நான் இங்கு அமெரிக்கா என குறிப்பிட்டேன். ஆனால் அமெரிக்க அணுகு முறை மிகவும் வேறுபட்டது, யதார்த்தமானது, அளவு மீறிய சட்டதிட்டங்களற்றது. நான் அத்தகைய ஒரு நிறுவனத்தில் அந்த அணுகுமுறையை பெற்றிருக்கிறேன். அது போலவே பிரித்தானியர் பல சட்டதிட்டங்களையும் ஒழுங்குகளையும் திணிப்பார்கள். ஆரம்பத்தில் தோல்வியடைவது போல் தோன்றினாலும் இறுதியில் நல்ல பெறுபேறுகளை அமெரிக்க பாணி ஏற்படுத்துகின்றது. பிரித்தானிய பாணி நாட்செல்லச் செல்ல இறங்குமுகத்தையும் சோர்வையுமே தருகிறது.

அது மட்டுமல்ல, மகப்பேறின் போது மனைவியோடு கணவன் கூட இருக்கும் இந்நாடுகளிலேயே சத்திரசிகிச்சை என்றால் கணவன் கூட அங்கிருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இங்கு ஒரு அந்நியன் செல்வாக்கைப் பாவித்து உள்ளே வந்து அந்தப் பெண்ணின் பிறைவசியை அத்துமீறியது மட்டுமன்றி அவளின் உயிரோடு விளையாடி உள்ளான்.

பொதுவாகவே டாக்டர்கள் எதோ தெய்வங்கள் போலவும், சத்திரசிகிச்சை கூடம் சன்னிதானம் போலவும், நர்சுகள் எல்லாம் புசாரிகள் போலவும் ஒரு ஐதீகத்தை சாதரணமாக எல்லா வைத்தியசாலைகளிலும் பார்க்கலாம். ஏன் இந்த பித்தலாட்டம்?

அண்மையில் ஒரு குண்டுவெடிப்பில் காயமடைந்த ஒரு பெரிய புள்ளிக்கு மருத்துவர் அல்லாதவர்கள் அவசர சிகிச்சை செய்து அவரை சத்திரசிகிச்சை கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே இருந்த டாக்டர்கள் அந்த ஏனையவர்கள் வெளியேறினால்தான் சிகிச்சை தரமுடியும் என்று கூற (வந்தவர்கள் யார் என்று தெரியாமல்) பின்னர் துப்பாக்கி முனையில் சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தது ( வசூல்ராஜா MBBS ஸ்டைலில்)

பட்டம் பெற்வர்கள் மாத்திரம் மற்றவர்கள் பிரைவேசியில் தலையிடலாம் என்றால், ஒரு அவசரமான அனாதரவான நிலையில் யாருமே உதவ வரமாட்டார்கள்.

மேற்குறித்த செய்தியில் தரவுகள் போதாது, சிறுவனின் வயது காரணமாகவே இந்த பரிதாப நிலை. அவனின் திறமை குறித்து ஆராயமல் / போதிய தரவுகள் இல்லாமல் கண்டிக்க முடியாது.

வயது வந்த பட்டம் பெற்ற டாக்டர்களின் கவனக்குறைவு பணத்தாசை என்பவற்றாலும், வயது வந்த கள்ள டாக்டர்களின் கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்த பின் செய்யும் கொலைகளுக்கு மத்தியில் இது பெரிய குற்றமாக தெரியவில்லை. (அத்துடன் இங்கு கொலை செய்யும் நோக்கமும் இருக்கவில்லை)

பையன் அதிபுத்திசாலி என்றால் சிறுவயதிலேயே பல வகுப்புக்களைத் தாண்டிக் கடந்து பல்கலைக்கழகம் சென்று வைத்தியராய் பட்டம் பெற்றிருப்பார் (வைத்தியத் துறை என்று வரும் போது வயது கூட சில சிக்கல்களை உருவாக்கலாம்). அப்படி அனுமதிப்பத்திரம் பெற்ற பின் சத்திரச்சிகிச்சை செய்திருந்தால் அது சாதனை. அதை விடுத்து ஏதோ கண்பார்த்ததைக் கைசெய்யும் என்பது போல் நடந்து கொண்ட இச்செயல் எவ்விதத்திலும் பாராட்டிற்குரியது அல்ல.

மேலும், மேலை நாடுகளில் வைத்தியத்துறையினை, இந்த நோயிற்கு இந்தக் குழிகை என்று இயந்திரநோக்கில் கற்பிப்பதுமில்லை நடைமுறைப்படுத்துவதும் இல்லை. உடல்ரீதியான வைத்திய அணுமுறைகளில் கூட உளவியல் அதிகம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உளவியல் என்று வரும் போது அது நோயாளியினுடையது மட்டுமல்ல, வைத்தியருடைய உள ஸ்த்திரத்திலும் தங்கியுள்ளது.

இந்தப் பதினைந்து வயதுப் பையனிற்கு ஒருவேளை வெட்டித் தைக்கும் இயந்திரத்தன்மையில் தேர்ச்சி இருக்கலாம்( இலத்திரனியலின் அருச்சுவடி கூடத் தெரியாது தொலைக்காட்சி வானொலி திருத்தும் மெக்கானிக்கைப் போல. ) ஆனால் அறுவைச் சிகிச்சை என்பது அவ்வளுதான் என்றும் இல்லை பல ஆண்டுகள் கடின பயிற்சி பெறும் சத்திரச்சிகிச்சை நிபுணர்களும் அதைக் அத்தனை ஆண்டுகள் கற்பிக்கும் வல்லுனர்களும் மடையர்களும் அல்ல!

தனக்குத் திறமை உள்ளது எனத் தானும் தனது தந்தையும் நம்பினால் ஒருவர் எதனையும் செய்யலாம் என்றால் பின் எந்த நாட்டிலும் எந்தத்துறையிலும் அனுமதிப்பத்திரம வழங்கும் நடைமுறை தேவை இல்லையே!

மேற்குறித்த அனைத்து குற்றங்களுக்குமாக ஒரு கேள்வி,

புலிகளின் கனரக வாகனமோட்டிகளும், விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

Edited by சாணக்கியன்

உண்மையாவோ அப்ப நீங்க 5 வகுப்பு டாக்டரிட்ட ஒப்ரேசன் பண்ன ரெடியா சாணக்கியன் அண்ணா???

:blink:

அது தானே நான் அவரை "சிறுவன் டாக்டர்" என்று மனமார வாழ்த்திவிட்டேனே, பிறகு டாக்டர் குள்ளமா இருந்தால் என்ன நெட்டையாக இருந்தால் என்ன?

என்ன ஒரே ஒரு பிரச்சனை அவர் என்னிடம் இருக்கும் சொற்ப பணத்திற்கு சிகிச்சை தர முன்வர வேண்டும் என்பதே.

கொழும்பு மருத்துவமனைகளின் சிசேரியன் விலைப்பட்டியலை (6மாதங்களுக்கு முன்)

  • நவலோகா - 120,000/=
  • ஆசிரி - 80,000/=
  • டேடர்ன்ஸ் - 75,000/=

இதுக்கு சிறுவன் டாக்டர் எவ்வளவோ மேல்!

சாணக்கியன் அண்ணா இது என்ன சின்னபிள்ளைதனமா இருக்கு காசை பார்த்து கடைசியா மாறி நடக்க கூடாது நடந்தா வேண்டாமப்ப விபரித விளையாட்டு பேசாம சிட்னிக்கு வாங்கோ நல்ல டாக்டரா நான் பார்த்து விடுறேன்.............

சுண்டங்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் போலல்லவா இருக்கிறது உங்கள் கதை?

சிட்னிகுவர யார் காசுதாரது?

எம்போன்ற ஏழைகளுக்கு இருக்கவே இருக்கு இலவச மருத்துவமனை!

என்ன தான் அரசாங்கத்தை திட்டி எழுதினாலும் இதை இன்னமும் தனியார் மயப்படுத்தாமல் இருக்கிறதிற்காக அவர்களை வாழ்த்தலாம்!

...

புலிகளில் கனரக வாகனகனமோட்டிகளும் விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

வாகனமோட்டுவதும் விமானமோட்டுவதும் சாதனைதான். பாக்கு நீரணையை சிறுவன் நீந்திக் கடந்தால் சாதனை. ஏன் முடிந்தால் விண்வெளிக்கே போய் சாதனை படைக்கலாம்.

15 வயதில் சிறுவன் மருத்துவ பரீட்சை எழுதி சித்தியடைந்தால் அதனை சாதனையாக ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அமெரிக்க அணுகு முறை மிகவும் வேறுபட்டது, யதார்த்தமானது, அளவு மீறிய சட்டதிட்டங்களற்றது. நான் அத்தகைய ஒரு நிறுவனத்தில் அந்த அணுகுமுறையை பெற்றிருக்கிறேன்.

வட அமெரிக்காவில் தகுதிக்குச் சான்றிதழைப் பார்க்காது வாய்ப்பளிப்பது என்பது

சில துறைகள் (உதாரணம்: கணினி மென்பொருள்உற்பத்தி. கணினி மென்பொருள் என்னும் போதும் எல்லாம் இல்லை. பொதுவாக இணையத்தளங்கள் சாhநதன போன்ற எளிய வேலைகள. கடின நேர வரையறை மிக்க றியல் ரைம் மென்பொருட்களிற்கு அவசியம் அனுபவமும் தேர்ச்சியும் அவசியம் ) உள்ளது தான். எனினும்வைத்தியத் துறை மற்றும் ஆசிரியத் துறை போன்ற நுணுக்கமான துறைகளில்இங்குள்ள சட்டங்கள் எண்ணற்றவை. அவை முற்றிலும் காரணத்தோடு தான்வைக்கப்பட்டிருக்கின்றன மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதுபோலத் தான் இங்கு ஒரு பயணிகள் விமான ஓட்டுனராக வருவது என்பது பலத்த சிரமங்கள் நிறைந்த ஒன்று. ஒருவர் எத்தனை விற்பன்னரான விமான ஓட்டுனராக இருந்தால் கூட குறிப்பிட்ட விடயங்களைப் பூர்த்தி செய்து அனுமதிப் பத்திரம் பெறும் வரை அவரால் எந்தப் பயணிகள் விமானத்தையும் ஓட்டமுடியாது. அது போலத் தான் மின்காந்தப் புலம் சார்ந்த பொறியிலிலும் இதர மக்கள் நலன் சார் பொறியலிலும் குறிப்பிட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற ஒருவரது கையொப்பமின்றி விடயங்கள் நகரமுடியாது. கொத்தனார் வீடு கட்டமுடியும் என்றபோதிலும் ஒவ்வெர்ரு மாநகர சபையும் ஒவ்வெர்ரு கட்டிட அனுமதியையும் குறிப்பிட்ட தேர்ச்சி பெற்றவர் உத்தியோகத்தர் பல சோதனைகள் செய்து ஒப்புதல் அளிக்கும் வரை அனுமதிப்பதில்லை. மாறிக் கட்டப்படும் கட்டுடங்கள் தயவு தாட்சணியம் இன்றி இடிக்கப்படும். ஒவ்வொருதுறைக்கும் வௌ;வேறு நடைமுறை.

பட்டம் பெற்வர்கள் மாத்திரம் மற்றவர்கள் பிரைவேசியில் தலையிடலாம் என்றால், ஒரு அவசரமான அனாதரவான நிலையில் யாருமே உதவ வரமாட்டார்கள்.

பிறைவசி என்பது அவரவர் மனநிலையை ஒத்தது. பிரத்தியேகமானது. வேறுபடுவது.

ஒரு நோயின் காரணமாக ஒரு வைத்தியரிற்கு தனது உடலைப் பரிசோதிக்கும் உரிமையினை ஒரு நோயாளி மனப்பூர்வமாக வழங்குகின்றார் என்பதற்காக வைத்தியர் பாக்கிறார் தானே பள்ளிப் பையனும் வந்து பார்க்கட்டும் என்ற வாதம் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

புலிகளில் கனரக வாகனகனமோட்டிகளும் விமானமோட்டிகளும் எந்த சட்ட திட்டங்களுக்கு அமைய அல்லது எந்த நிறுவத்தில் பட்டமும் சான்றிதழும் வைத்துக் கொண்டு அவற்றை கையாளுகின்றனர்?

நீங்கள் இங்கு விடும் பெரிய தவறு என்னவெனில், புலிகளிலும் எல்லாப் போராளிகளையும் எல்லாத்தையும் செய் விடுவதில்லை என்பதைக் காணத் தவறுவதே. தமிழீழ அரசில் ஒவ்வொரு துறைக்கும் (அது இராணுவமாகட்டும் பொதுசனமாகட்டும்) தரங்காண் வழிமுறைகளும் அனுமதி வழங்கலும் உள்ளன.

மேலும் புலிகள் என்று நீங்கள் குறிப்பிடுவதை புலிகளின் ஆயுதப் பிரிவு பற்றி மட்டுமே நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தாலும் கூட, அங்கும் கனத்த பயிற்சியும்

தேர்ச்சியும் இன்றி எவரும் எதுவும் செய்வதில்லை. மார்ச் 28 ம் திகதி, நின்ற

போராளிகளில் ஒருவரை எதேச்சையாய்ப்பிடித்து விமானத்தில் ஏற்றி யுத்த முனைக்கு அவர்கள் அனுப்பியிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. விமானத்தை விடுகங்கள் ஒரு தரைப்படை கள முயற்சிக்குக் கூட, அது ஒரு இராணுவ முன்னிலையின் சென்றியை அழிப்பதாய் இருந்தால் கூட பலத்த திட்டமிடலும் பயிற்சியும் போரணி தெரிவும் இன்றி அது நடப்பதாய் நான் நினகை;கவில்லை.

ஆனால் நீங்கள் கூறுவது போல சில களங்களில் முன்பின் பாத்திராத ஆயுதம் அல்லது வாகனத்தை போராளிகள் எதிர்கொள்ள நேரலாம் தான். அவ்வாறு முன்னர் ஆட்லரிகளையும் கவச வாகனங்களையும் அவர்கள் ஓட்டிச் சென்றிருக்கின்றார்கள் தான். அது எதிர்பாராத எமேர்ஜென்சி சிற்றுவேசன். எமெர்ஜன்சிக்குச் சிறந்த இன்னுமொரு உதாரணம்தனது, ஊரடங்கு நேரத்தில் குண்டு மழைக்குள் பங்கரிற்குள் பிரசவிக்க நேரும் ஓரு தாய்க்கு; அதே பங்கரிற்குள் நிற்கும் இன்னுமொருவர் சந்தர்ப்பத்தைச் சுதாகரித்துக் கொண்டு செய்யும் அற்புதமான மனித பணி .

கின்னசில் இடம்பெறுவதற்காக, கமரா பதிந்து கொண்டிருக்க, நோயளிக்கே தெரியாது அவரின் உடலைதத் தனது மகனின் கையில் கத்தி கொடுத்து, தனது மகனின் புகழொன்றே குறியாகக் கொண்டு அறுக்கக் கூறும் வைத்தியத் தந்தைக்கும், பங்கரில் பிரசவம் பாத்த விடயத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு

Edited by Innumoruvan

சாதாரண பள்ளிப் பையனாக அவன் உள்ளே வரவில்லை, நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்று மனதளவில் டாக்டராகத்தான் அவன் உள்ளே வந்தான் என்பதே என் எடுகோள், ஏனெனில் அங்கே ஆரம்பத்தில வீடியோவை பார்த்தவர்களுக்கு அது சாதரணமான சத்திரசிகிச்சை போலவே தெரிந்துள்ளது. அத்துடன் சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளது. (கொலைக்குற்றம் சாட்டப்படவில்லை என்பதனால்) செய்தியின் படி பையனின் வயதை கேட்டதுமே டாக்டர்கள் (வயதான) வெகுண்டெழுந்துள்ளனர்.

உங்கள் வாதப்படி பட்டம் இருந்தால் சிறுவன் சத்திரசிகிச்சை செய்யலாம். ஆனால் பட்டம் பெறுவதற்கு வயது தடை உள்ளது. புலிகள் அமைப்பிலோ அல்லது தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களிலோ வயது ஒரு தகுதியே அல்ல. பயிற்சியும் திறமையும் முயற்சியும் தான் தேவை. சிலர் குறுகி நேரத்தில் பயிற்சியை நிறைவு செய்துவிடுவர். சிலர் வருடக்கணக்கில் பயின்றும் தோற்று விடுவர். அதனால் சிறுவனின் அனுபவம் குறைவு என்ற வாதம் தற்காலத்தில் ஏற்புடையதாக இருந்தாலும் எதிர்காலத்தில் செல்லாக்காசாகி விடும்.

"பெண்ணுக்குத் தெரியாமல் இது நடைபெற்றது" என்ற வாதத்தையும் ஏற்கமுடியவில்லை, ஏனெனில் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பெண் சிவில் சட்டப்படி காவல்துறையில் குற்றம் சாட்டவில்லை.

இங்கு குற்றம் சாட்டியவர்கள் டாக்டர்கள். மக்கள் மீதுள்ள பற்றுக்காரணமாகவே அல்லது அந்த பெண்ணின் மீதுள்ள அக்கறை காரணமாகவோ அவர்கள் அதை செய்யவில்லை. தங்கள் கீர்த்திக்கு பாதிப்பு என்பதாலும் தாங்கள் பல வருடங்கள் பயின்று பந்தாவாக செய்து வருவதை அற்ப சிறுவன் செய்துவிட்டானே என்ற பொறாமையே காரணம். மருத்துவர்களில் பலர் பணத்தை குறியாக கொண்டவர்கள், தலைக்கனம் கொண்டவர்கள், சக மனிதர்களுடன் இயல்பாக பேசிப் பழகமாட்டர்கள்.

நீச்சலில் சிறுவன் சாதனை படைப்பதும், மலையேறுவதில் சிறுவன் சாதனை படைப்பதும் உண்மையில் சிறுவனது பெற்றோரின் வழிகாட்டலிலேயே தங்கியுள்ளது. சிறுவர்கள் பெற்றோரினை முன்னுதாரனமாக் கொண்டே சாதனை படைக்க முயல்வர். இச்சிறுவனது பெற்றோர் இருவரும் மருத்துவர்களாக இருந்தது அவனையும், பெற்றோரையும் சத்திரசிகிச்சையில் சாதனை படைக்கத் தூண்டியுள்ளது.

வயதை காரணம் காட்டி அவனுக்கும் அவனது பெற்றேருக்கும் தண்டனை விதித்து அவர்களின் ஆர்வத்தை முடமாக்கும் இந்த நடவடிக்கை குறுகிய நோக்கமுடையதாவே எனக்குத் தெரிகிறது.

இன்று மகப்பேறு சத்திரசிகிச்சை என்னும் போது பாரதூரமானதாக தெரியும் எமக்கு எதிர்காலத்தில் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாதரணமானதாக தெரியலாம். அந்த தொழில்நுட்பத்தில் இச்சிறுவன் பெரியவனாகி பங்களிக்கவும் இடமுண்டு. எனவே அவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து தண்டிக்காதீர்கள்.

நன்றி

வணக்கம்.

Edited by சாணக்கியன்

பள்ளிப் பையனாக அவன் உள்ளே வரவில்லை, நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்று மனதளவில் டாக்டராகத்தான் அவன் வந்தான் என்பதே என் எடுகோள், ஏனெனில் அங்கே ஆரம்பத்தில வீடியோவை பார்த்தவர்களுக்கு அது சாதரணமான சத்திரசிகிச்சை போலவே தெரிந்துள்ளது. அத்துடன் சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளது.(கொலைக்க

Edited by Innumoruvan

இன்னொருவன்,

உங்கள் கருத்து யதார்த்தமானது, உண்மையானது அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

கருத்தாடலுக்கு நன்றி

அன்புடன்,

சாணக்கியன்,

இக்கருத்தாடலில் உண்மையிலேயே வெற்றி தோல்வி என்ற அடிப்படையில் நான்

வெறும் விவாதமாக ஈடுபடவில்லை. ஒரு ஏiழு நோயாளியின் உயிரோடு விளையாடியுள்ளார்கள் என்ற ஆத்திரம் அடிமனதில் கிடந்து உறுத்தியமையயே எனது விவாத்திற்கான காரணம்.

உங்களோடு கருத்தாடியது மிகுந்த மகிழ்ச்சி.

நன்றி

இன்னுமொருவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.