Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

1916ab5b-c865-44e4-80f4-13814b4ffade-696
 188 Views

இனப் படுகொலை புரிந்த சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி அம்பிகை செல்வகுமாரினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்றுடன் 6ம் நாளை எட்டியுள்ளது. பிரித்தானியாவிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரதிநிதியாக அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.

PHOTO-2021-03-04-18-09-15.jpg

1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல்.

2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல். ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ழுஐளுடு இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்

3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல்

4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்.

ஆகிய தனது நான்கு கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதில் தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய 5 ஆம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வில்  அருட்தந்தை ம.சக்திவேல் (அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர்) ஆகிய மதத்தலைவர்களின் ஆசீர்வாத உரைகளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானின் சிறப்பு வாழ்த்துரையும் இடம்பெற்றதுடன் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் முன்னாள் போராளியான சந்திரிக்கா ஆகியோரது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

இதில் தமிழகத்திலிருந்து அம்பிகைக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்த சீமான் அம்பிகையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட குறித்த போராட்டத்தை உலக அரங்கி இணைய ஊடகங்கள் மூலம் மிக விரைவாக பரப்புதல் செய்யுமாறு உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களிடம் கோரிக்கையினையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில்  6 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்) மற்றும் கிறிஸ்தவர் இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் மற்றும் ஆர்த்தி, குருபரன் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளன.

அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.

மேற்படி மெய்நிகர் (zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
ID: 861 5306 3444
Password: 041066

https://www.ilakku.org/?p=43738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடல் நிலைமோசமடைந்துள்ள நிலையிலும் அம்பிகையின் நீதிகான போராட்டம் தொடர்கின்றது

PHOTO-2021-03-05-17-47-38-696x392.jpg
 165 Views

மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள இலங்கை அரசிற்கு மேலும் இன்னுமொரு கால அவகாசம் வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் இன்றுடன் ஒரு வாரத்தை பூர்த்திசெய்கின்றது.

மனித நேயத்தின் உச்சம் நாங்களே என மார்தட்டிக்கொள்ளும் பிரித்தானிய அரசு அம்பிகையின் கோரிக்கைகளுக்கு தொடர்ந்தும் மௌனம் காத்து வருவது உலக நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்க சர்வதேசம் முனைந்துள்ளமையை எதிர்த்து, இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக்கோரி நான்கு அம்சக்கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து திருமதி. அம்பிகை செல்வகுமாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 7  ஆவது நாளை (05.03.2021) எட்டியுள்ளது.

தனது கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவை உண்ண மறுத்துவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள  நிலையிலும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய நாளினை தொடர்ந்துள்ளார்.

தனது கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை நேற்றைய 6 ஆம் நாள் மெய்நிகர் (Zoom) நிகழ்வு  தாயகத்திலிருந்து தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை லியோ, மௌலவி ரிஸ்வி மற்றும் பிரித்தானிய ஆன்மீக பணியகத்திலிருந்து அருட்தந்தை எல்மோ ஆகியோரின் ஆசிச்செய்திகளுடன் ஆரம்பமானது
தொடர்ந்து வணக்க நடனம் இடம்பெற்றதுடன்  லோகன் கணபதி (Member of Provincial Parliament (MPP) for Markham-Thornhill, Canada, தமிழகத்திலிருந்து முன்னாள் தலைமை நீதியாளர் அரி பரந்தாமன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமார், பிரான்சிலிருந்து ‘நமது FM’ வானொலியின் இயக்குநர் குருபரன், தமிழகத்திலிருந்து இயக்குநர் திரு. கௌதமன், முன்னாள் போராளிகளான  ஈழவன், திருமதி. ஆர்த்தி, கனடாவிலிருந்து தேசிய செயற்பாட்டாளரான கண்ணன்  சிறப்புரைகள் ஆற்றினர்.

இந்நிலையில்  7 ஆவது நாளாகிய இன்றைய (05.03.2021) மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் முன்னாள் நீதியரசரான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன், தமிழகத்திலிருந்து ஆய்வாளர் அய்யநாதன் மற்றும் தாயகத்திலிருந்து அரசியல்வாதிகள் என பலர் அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
அதேவேளை உடல் சோர்வுற்ற நிலையிலும் திருமதி அம்பிகை செல்வகுமார் மக்களிற்கான தனது கோரிக்கை தொடர்பில் விசேட உரை நிழ்த்தவுள்ளார்.
மேற்படி மெய்நிகர் (Zoom) நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
ID: 861 5306 3444
Password: 041066
Website-
www.hungerfortruthandjustuce.blog
Facebook-
https://www.facebook.com/Hunger-Strike-for-Truth-and-Justice-105468548264839

https://www.ilakku.org/?p=43806

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள். இருவர் பெயரும் அம்பிகா. 

Bild

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகையின் அகிம்சைப் போராட்டம் இன்றுடன் 8ம் நாளை எட்டியது!

AdminMarch 6, 2021
WhatsApp-Image-2021-03-04-at-22.34.38-10

நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து. பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிகவும் உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் இன்றுடன் 8ம் நாளை எட்டியுள்ளது.

  1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல்.
  2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல். ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு ழுஐளுடு இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்
  3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல்
  4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்.

ஆகிய தனது நான்கு கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளதுடன் உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகழுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அதில் தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dear All,

Ambi akka is sacrificing her life for us. She is dying every hour. Please be kind enough and give at least one minute for her and other Tamil victims. To save Ambi Akka’s life and to get justice for Tamils, please sign this petition. We beg you.

அம்பி அக்கா எமக்காக தனது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். ஓவ்வொரு மணித்துளியும் அவர் உயர் கரைந்து கொண்டிருக்கின்றது. அவர்களின் உயிரைக்காப்பாற்றவும் தமிழ் மக்களிற்கான நீதியை பெறவும் தயவுசெய்து உங்கள் நேரத்தில் ஒரேஓரு நிமிடத்தை தியாகம் செய்து, இந்த கோரிக்கையில் கையெழுத்து இடுங்கள். உங்கள் உறவுகளுக்கும் பகிருங்கள்! 

https://www.change.org/p/rt-hon-boris-johnson-mp-plea-to-save-tamils-by-saving-the-life-of-mrs-ambihai-selvakumar-531d130e-2d67-4864-bd9b-4fc6960db138Letter-to-Individuals-to-MP-Draft-1-1-1-1Download
 
http://www.errimalai.com/?p=61899

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

உண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, கற்பகதரு said:

உண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.

அடி புடியும் தோல்வியில்.....அகிம்சையும் தோல்வியில்.......இனி??????

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உண்ணாமல் இருந்து கோரிக்கை வைத்தால் ஒரு அரசு நிறைவேற்றுமா? இந்த அம்மாவை யாரோ தவறாக வழிகாட்டியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஐரிஸ் காரங்கள்  காந்தி வழியில் என்று உண்ணாவிரதம் இருந்து செத்தது வரலாறு இவாவுக்கு  பின்னால்  புதிசாய்  களமிறக்கப்பட்டு இருக்கும் வேலன் சுவாமிகள் எல்லாம் இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பு கள்  மீண்டும் மீண்டும் ஈழத்தமிழனின் குருதி ஆறு தேவையாம் .

1 hour ago, கற்பகதரு said:

உண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.

என்ன உங்கடை எஜமானர்கள் இந்த செய்தியை பரப்ப சொன்னார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒருவர் உண்ணாமல் இருந்து கோரிக்கை வைத்தால் ஒரு அரசு நிறைவேற்றுமா? இந்த அம்மாவை யாரோ தவறாக வழிகாட்டியுள்ளார்கள்.

அவவுக்கு எல்லாம் தெரியும் தெரிந்தே களத்தில்  இறங்கி  உள்ளா தகப்பனின் கோவிலில் உண்ணாவிரதம் தொடங்கினவ இப்ப தனது  வீட்டில் தொடர்கிறா இந்த கூட்டம் எல்லாம் தலைவர் வந்தால் கணக்கு காட்டுவம் என்ற கூட்டம் அவ்வளவுதான் இந்த உண்ணாவிரதத்தால் ஏதும் பயன் வந்தால் நல்லது ஆனால் வராது என்பது உள் மன  கணிப்பு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு- பிரித்தானியாவில் மாபெரும் வாகனப்பேரணி

WhatsApp-Image-2021-03-06-at-7.50.48-PM-
 40 Views

தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள ஒன்று திரண்டுள்ளனர்.

Video Player
 
00:00
 
00:43

WhatsApp-Image-2021-03-06-at-7.50.49-PM.

WhatsApp-Image-2021-03-06-at-7.50.48-PM-

பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து, இன்றுடன் 8 ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கு அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானி அரசின் கவனத்தை திருப்பும் நோக்கில் ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி சென்றுள்ளனர்.

Video Player
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

உண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.

2 hours ago, பெருமாள் said:

என்ன உங்கடை எஜமானர்கள் இந்த செய்தியை பரப்ப சொன்னார்களா ?

ஆம், அவர் சொன்னார், “இயற்கை எனது நண்பன், வரலாறு எனது வழிகாட்டி.” அந்த செய்தியை பரப்புகிறேன். உங்கள் கேள்விக்கு நன்றி.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

உண்ணாவிரதங்கள் தோல்வியில் முடிந்ததே வரலாறு.

7 hours ago, குமாரசாமி said:

அடி புடியும் தோல்வியில்.....அகிம்சையும் தோல்வியில்.......இனி??????

இவை இரெண்டையும் விட வேறு வழிகள் இல்லையா என்று கேட்கிறீர்கள், இல்லையா?

1. பொருளாதாரத்தை பயன்படுத்துதல்

2. சர்வதேச புவிசார் அரசியல் அணுகுமுறை

3. பன்மொழி பரப்புரை வழி

4. தொழில்நுட்ப மேலாண்மை

இப்படி பல வழிகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் அறைக்குள் இருந்து கொண்டு அந்த வழி இந்த வழி என்று எழுதிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம் அரசியல் தத்துவவியளாளர் போலவே ஆனால் கூட்டிக்கொண்டு போகத் தான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அவவுக்கு எல்லாம் தெரியும் தெரிந்தே களத்தில்  இறங்கி  உள்ளா தகப்பனின் கோவிலில் உண்ணாவிரதம் தொடங்கினவ இப்ப தனது  வீட்டில் தொடர்கிறா

பாராளுமன்றம் முன்னால் உண்ணாவிரதம் இருந்தாலே கண்டுகொள்ளமாட்டார்கள். ஒரு மூலையில் உள்ள வீட்டில் இருந்தால் அம்புலன்ஸை மட்டும்தான் அனுப்புவார்கள்.

ஜெனீவாவில் இந்தியா சிறிலங்கா அரசுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு கொடுக்காத பட்சத்தில் எதுவித முன்னேற்றமும் இருக்காது. இந்த நிலையில் உண்ணாவிரதம் இந்தியன் எம்பஸிக்கு முன்னால் நடந்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பாராளுமன்றம் முன்னால் உண்ணாவிரதம் இருந்தாலே கண்டுகொள்ளமாட்டார்கள். ஒரு மூலையில் உள்ள வீட்டில் இருந்தால் அம்புலன்ஸை மட்டும்தான் அனுப்புவார்கள்.

இதெல்லாம் தமிழ் சனத்தை  முட்டாளாக்க நடாத்தும் நாடகங்கள் .

42 minutes ago, uthayakumar said:

நாங்கள் எல்லாம் அறைக்குள் இருந்து கொண்டு அந்த வழி இந்த வழி என்று எழுதிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம் அரசியல் தத்துவவியளாளர் போலவே ஆனால் கூட்டிக்கொண்டு போகத் தான் தெரியவில்லை.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுவது .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

இவை இரெண்டையும் விட வேறு வழிகள் இல்லையா என்று கேட்கிறீர்கள், இல்லையா?

1. பொருளாதாரத்தை பயன்படுத்துதல்

2. சர்வதேச புவிசார் அரசியல் அணுகுமுறை

3. பன்மொழி பரப்புரை வழி

4. தொழில்நுட்ப மேலாண்மை

இப்படி பல வழிகள் உள்ளன.

தந்தை செல்வநாயகம் தலைமையில் மேற்கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தியிருநதால் இப்ப நாங்கள் தமிழீழத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

2030 ஆம் ஆண்டில் எவரும் இங்கு எழுதமாட்டார்கள்

(1)அடி பிடியும் தோல்வி,அகிம்சையும் தோல்வி. 

(2)பொருளாதாரம் பயன்படுத்தலும் தொல்வி

(3)சர்வதேசபுவிசார் அரசியலும் அணுகுமுறையும் தோல்வி

(4)பன்மொழி பரப்புரையும் தோல்வி

(5)தொழில்துட்ப மேலாண்மையும் தோல்வி.  

எனெனில் அப்போ தமிழர் பிரச்சனை தீர்கக்கப்பட்டிருக்கும். 

9 hours ago, கற்பகதரு said:

இவை இரெண்டையும் விட வேறு வழிகள் இல்லையா என்று கேட்கிறீர்கள், இல்லையா?

1. பொருளாதாரத்தை பயன்படுத்துதல்

2. சர்வதேச புவிசார் அரசியல் அணுகுமுறை

3. பன்மொழி பரப்புரை வழி

4. தொழில்நுட்ப மேலாண்மை

இப்படி பல வழிகள் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன் துக்ளக்  'சோ'வை ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்டார் நீங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சார் ஆக பதவி ஏற்கவேண்டுமென.   சோ  ..சொன்னர் தன்னால் குறை நிறைகளை மட்டும் சுட்டிக்காட்ட  முடியும்.நடைமுறைப்படுத்ததெரியாது.நான் பத்திரிக்கையளன் ..அரசியல்வாதியில்லை. எனறு. எப்படி யிருக்கு. பட்டால்தான்தெரியும் அதன் அருமை என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப்படுகொலைக்கு நீதி – சாத்வீகப் போராளி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு…

image-21.png
 47 Views

மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள சிறீலங்கா அரசிற்கு மேலும்  கால அவகாசம் வழங்குவதை உலக நாடுகள் நிறுத்துவதோடு, சிறீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக் குராலாய் பசித்திருந்து, நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர்  ஒன்பதாவது நாளை எட்டி நிற்கின்றது.

அம்பிகையின் உடல் நிலை மோசம் அடைந்து வரும் நிலையில், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழர் தாயக பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டங்களில் அரசியல் தலைவர்கள், அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் வாகனப்பேரணிகள் மற்றும் அம்பிகையின் போராட்ட இடத்திற்கு மக்கள் திரளாகச் சென்று   அப்போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

image-22.png

அதே போல் மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்தும், அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள  சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

image-23.png

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேசத்தை நோக்கி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லை எனவும் சர்வதேச நீதிமன்றில் சிறீலங்காவை நிறுத்தி தமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும்  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

image-24.png

இந்நிலையில்,   குறித்த போராட்டத்தில் பங்குகொண்டுள்ளவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை  காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image-25.png

அத்துடன் நல்லூர் – நல்லை ஆதீனம் அருகில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து, இணைந்து கொண்டுள்ளனர்.

1-இந்தப்  போராட்டத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறீலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2-தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

https://www.ilakku.org/?p=43963

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2021 at 23:09, கற்பகதரு said:

இவை இரெண்டையும் விட வேறு வழிகள் இல்லையா என்று கேட்கிறீர்கள், இல்லையா?

1. பொருளாதாரத்தை பயன்படுத்துதல்

2. சர்வதேச புவிசார் அரசியல் அணுகுமுறை

3. பன்மொழி பரப்புரை வழி

4. தொழில்நுட்ப மேலாண்மை

இப்படி பல வழிகள் உள்ளன.

On 7/3/2021 at 00:48, uthayakumar said:

நாங்கள் எல்லாம் அறைக்குள் இருந்து கொண்டு அந்த வழி இந்த வழி என்று எழுதிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறோம் அரசியல் தத்துவவியளாளர் போலவே ஆனால் கூட்டிக்கொண்டு போகத் தான் தெரியவில்லை.

உண்மைதான். அதற்கான காரணங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும்.

தத்துவார்த்த சிந்தனையாளர்கள் தலைமைத்துவம் உள்ளவர்களாகவும் அமைவது அபூர்வம். மறைந்த அரசியல் தத்துவவியளாளர் அன்ரன் பாலசிங்கம் சிறந்த தத்துவவியளாளரும் இராஜதந்திரியுமாவார், ஆனால் அவர் விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கவில்லை. அவரிலும் பார்க்க சிறப்பான தலைமைத்துவ ஆற்றல் கொண்ட ஒருவரே அந்த தலைமைத்துவத்தை வழங்கினார். 

இன்றைய தலைவர்கள் அஹிம்சை அல்லது  ஆயுதப்போர்  தவிர்ந்த மாற்று வழிமுறைகளில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த முறைகள் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் இருந்தாலும் தலைவர்களுக்கு இந்த முறைகளிலேயே நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் நம்பிக்கைகள் மாறும்வரை மற்ற முறைகளில் முயற்சி இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே இருக்கும்.

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.