Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விளைவுகள் குறித்து ஆரம்ப செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகவும், அதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் டென்மார்க்கின் சுகாதார அமைச்சர் மேக்னஸ் ஹியூனிக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டென்மார்க்கின் நகர்வைத் தொடர்ந்து அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்துவதாக நோர்வே இன்று அறிவித்துள்ளது.

இந்த முடிவு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநர், ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்த உறைவு குறித்த அறிக்கை முன்வைக்கப்படாத நிலையில், ஆஸ்திரியாவும் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை ஏற்கனவே நிறுத்தியுள்ளதுடன், இரத்த உறைவு மற்றும் நுரையீரல் அடைப்பினால் ஏற்பட்ட மரணம் குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மனிதர்களிடையேயான பரிசோதனைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என அஸ்ட்ரா செனேகா நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

http://athavannews.com/டென்மார்க்-நோர்வே-ஆகிய-ந/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

என்னுடன் வேலை செய்பவரின் தாயாருக்கு இந்த ஊசி நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது. கடுமையான இரத்த அழுத்தம்.பதட்டம் என்பன ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கியமாக இரத்த உறைவு அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

இது ஒரு முக்கியமான செய்தி.  அஸ்ட்ராசெனேகாவை டென்மார்க் நோர்வேயோடு ஐஸ்லாந்தும் இடை நிறுத்தியுள்ளது. ஆனால்  அஸ்ட்ராசெனேகா  தடுப்பூசியை நாடுகள் நிறுத்தக்கூடாது பயப்பட வேண்டியது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு WHO சொல்கிறது.

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

என்னுடன் வேலை செய்பவரின் தாயாருக்கு இந்த ஊசி நேற்று முன் தினம் ஏற்றப்பட்டது. கடுமையான இரத்த அழுத்தம்.பதட்டம் என்பன ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முக்கியமாக இரத்த உறைவு அறிகுறிகளும் ஏற்பட்டுள்ளதாம்.

இதனைப் பார்த்த பின்.... இப்படியான ஊசிகளில், நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

இதனைப் பார்த்த பின்.... இப்படியான ஊசிகளில், நம்பிக்கை இல்லாமல் போகின்றது.  

சிறித்தம்பி! அஸ்ரா சினேகா ஊசியை முதல்லை ஜேர்மனியும் விரும்பேல்லை எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்க  வேணும் கண்டியளோ...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்!

இது ஒரு முக்கியமான செய்தி.  அஸ்ட்ராசெனேகாவை டென்மார்க் நோர்வேயோடு ஐஸ்லாந்தும் இடை நிறுத்தியுள்ளது. ஆனால்  அஸ்ட்ராசெனேகா  தடுப்பூசியை நாடுகள் நிறுத்தக்கூடாது பயப்பட வேண்டியது இல்லை என்று உலக சுகாதார அமைப்பு WHO சொல்கிறது.

விளங்க நினைப்பவன்.... WHO அமைப்பு வந்து, "டபிள்  கேம்" விளையாடுகின்றது எனது, கணிப்பு.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி... ட்ரம்ப் இருந்திருந்தால், 
"கூ".... வாலை, சுருட்டிக் கொண்டு இருந்திருக்கும்.   :grin:

கூவுக்கு... இப்ப,குளிர் விட்டுப் போச்சு. 
அதுதான்.. கண்டபடி அறிக்கை  விடுகுது  கண்டியளோ...  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

ட்ரம்ப் இருந்திருந்தால்,

ட்ரம்ப் போனாப்பிறகு டீசல் பெற்றோல் விலையும் பக்கெண்டு கூடீட்டுதப்பா..:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! அஸ்ரா சினேகா ஊசியை முதல்லை ஜேர்மனியும் விரும்பேல்லை எண்டதை நீங்கள் கவனத்திலை எடுக்க  வேணும் கண்டியளோ...😁

குமாரசாமி அண்ணை... இந்த ஊசிகளை வைத்து, பெரிய வியாபாரம் நடக்குது.

சென்ற கிழமை... எனது வேலையிடத்தில் ஒருவனுக்கு,
கொரோனா தொற்று அறியப் பட்டது.
அவனிடம்  தொடர்பில் இருந்தவர்கள் யார், யார்... என்று, 
சுகாதார திணைக்களம்  கேட்ட போது...    
அவன் வேலை இடத்தில்... இரண்டு பேரின் பெயரை சொல்லியுள்ளான்.

இன்று காலை... வேலை செய்து கொண்டிருந்த,
அந்த இரண்டு பேரையும்.... உடனடியாக தனிமைப் படுத்தலுக்கு அனுப்பி விட்டார்கள்.
அவர்களுடன்... காலையில், வேலை அலுவலாக  கதைத்தேன்.
இப்போ... அதனை நினைக்க, 
"வாழ்க்கையில்... எந்த நிமிடமும் நிரந்தமில்லை" என்று தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை...   வீட்டில் வந்து, பிள்ளைகளுக்கு  சொன்ன போது...
வேறு அலுவலாக நின்ற, என்ரை மனிசி..

கொப்பாவின்ரை... பெயரை, 
அவன், சொல்ல வில்லையோ...  எண்டு கேக்குது. 😮

பிள்ளையள்... எனக்கு மேலை, ஏறி  விழுந்து... சிரிக்குதுகள்.  😂

நான், இரண்டு கிழமை... வீட்டில் இருக்க,  மனிசிக்கி  ஆசை போல கிடக்குது. :grin: 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/3/2021 at 17:06, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... இந்த ஊசிகளை வைத்து, பெரிய வியாபாரம் நடக்குது.

இரண்டு எம்பி மார் மாஸ்க் விசயத்திலை லஞ்சம் வாங்கி மாட்டுப்பட்டுப்போச்சினம் தெரியுமோ?எங்கடை உவன் ****** சுகாதார அமைச்சர் பச்சை கள்ளன் போல கிடக்கு...

முந்தநாள் டொனர் வாங்குவமெண்டுட்டு துருக்கியிட்டை போனன். அவன் சொன்னான் இன்னும் இரண்டு கிழமையிலை கொரோனா எல்லா ஓகே எண்டான். ஏன் எப்பிடியெண்டன்.... உவங்கள் வைச்சிருக்கிற மாஸ்க் எல்லாம் வித்து முடிய லொக்டவுணும் முடியும் எண்டான்....

துருக்கியள் எங்களை விட புத்திசாலியள் எல்லோ....சொன்னால் சரியாத்தான் இருக்கும்..😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் கதையை...   வீட்டில் வந்து, பிள்ளைகளுக்கு  சொன்ன போது...
வேறு அலுவலாக நின்ற, என்ரை மனிசி..

அப்பாவின்ரை... பெயரை, 
அவன் சொல்ல வில்லையோ...  எண்டு கேக்குது. 😮

நான், இரண்டு கிழமை... வீட்டில் இருக்க,  மனிசிக்கி  ஆசை போல கிடக்குது. :grin: 😜

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெலிட்டை களட்டி

அவரும் அதுக்குத்தான் ஆசப்படுறார் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

56 minutes ago, நந்தன் said:

அவரும் அதுக்குத்தான் ஆசப்படுறார் 😁

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

ஓம் சிறித்தம்பி எல்லா வீட்டிலையும் ஒரே மாதிரி இல்லைத்தானே? சில வீடுகளிலை மனிசிமார்தானே  புருசன்மாரை கைத்தாங்கலாய் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வாறவையள்.😂 🌹
நான் என்னையும் சொல்லேல்லை உங்களையும் சொல்லேல்லை....ஊர் உலகத்திலை நடக்கிறதை சொன்னன்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 23:06, தமிழ் சிறி said:

இன்று காலை... வேலை செய்து கொண்டிருந்த,
அந்த இரண்டு பேரையும்.... உடனடியாக தனிமைப் படுத்தலுக்கு அனுப்பி விட்டார்கள்.
அவர்களுடன்... காலையில், வேலை அலுவலாக  கதைத்தேன்.
இப்போ... அதனை நினைக்க, 
"வாழ்க்கையில்... எந்த நிமிடமும் நிரந்தமில்லை" என்று தோன்றுகின்றது.

EU, யேர்மனியில்  இந்த தடுப்பூசி போடுவதில் குற்றசாட்டுக்கள் உள்ளதாக UK விட மிகவும் பின்தங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.UK 60 வயதான தமிழ் ஆட்களுக்கே தடுப்பூசி போட தொடங்கிவிட்டார்களாம்.  EU நாடுகளில் 80 வயதானவர்களுக்கே தடுப்பூசி போட்டு இன்னும் முடியவில்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 23:54, குமாரசாமி said:

என்ரை ஆள் கதையை  சொல்லியிருந்தால் சட்டி பானை  எல்லாம் ஜன்னலுக்கு வெளியாலை பறந்திருக்கும்.😎
சிறித்தம்பி நீங்கள் ஆகலும் இடம் குடுத்திட்டியள். ஆரம்பத்திலையே பெலிட்டை களட்டி வெருட்டி இருக்க வேணும்...😁🤣:grin:

கவுண்டமணி ஒரு படத்தில் கத்தியோட ஓடின ஞாபகம் தான் வருது. அடி தாங்க முடியாமல் கவுண்டமணி ஓடினதை மறைச்சு சத்தம் போட்டால் ஊர் நம்பீடுமெண்ட நினைப்பு.😷

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 21:18, தமிழ் சிறி said:

பாவமப்பா....  அந்தப் பிள்ளை. :)

நான்.... வேலையால், பத்து நிமிசம், வரப் பிந்தினாலும்,
கடவுளை... நேர்ந்து கொண்டு, ஜன்னலில் பார்த்துக்  கொண்டு நிற்கும்.

என்னைக்  கண்டவுடன், 
அவள்... முகத்தில், காணும் புன் சிரிப்புக்கு....
உலகில்... எனக்கு,  எதுவும்... இணையாகாது. 🙏 💓

சிறி அண்ணாவின் மனைவியும் இப்போது யாழுக்கு வாறவ போல இருக்கு 😉😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, shanthy said:

கவுண்டமணி ஒரு படத்தில் கத்தியோட ஓடின ஞாபகம் தான் வருது. அடி தாங்க முடியாமல் கவுண்டமணி ஓடினதை மறைச்சு சத்தம் போட்டால் ஊர் நம்பீடுமெண்ட நினைப்பு.😷

என்னதொரு வெறித்தனமான கருத்து? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னதொரு வெறித்தனமான கருத்து? :cool:

என்ன செய்ய கவுண்டமணி அடி வாங்கி ஓடினது ஞாபகம் வருதே 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2021 at 05:47, தமிழ் சிறி said:

விளங்க நினைப்பவன்.... WHO அமைப்பு வந்து, "டபிள்  கேம்" விளையாடுகின்றது எனது, கணிப்பு.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி... ட்ரம்ப் இருந்திருந்தால், 
"கூ".... வாலை, சுருட்டிக் கொண்டு இருந்திருக்கும்.

இந்த கூ படு கள்ளன், நன்றாக சீனாவின் லஞ்சப்பணத்தில் மிதந்து விட்டு நேரம்பிந்தி கூப்பாடு போட்ட புண்ணியவான், அதற்குள் சீனா உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து முடிந்துவிட்டது, சீனா மட்டும் 
நினைத்திருந்தால் மிகவிரைவாக லோக்டவுன் போட்டு அவனது நாட்டிற்குள்ளேயே வைத்து கொரோனாவை 
காலிசெய்திருக்கலாம், ஆனால் மெதுவாக சைனீஸ் புதுவருடத்திற்கு உலகம் முழுவதும் வேலை செய்யும் தன்  நாட்டு மக்களை நாட்டிற்குள் எடுத்து அவர்களையே காவிகளாக்கி உலகம் முழுவதும் பரப்பியது,
சைனீஸ் புதுவருடம் தான் அநேக சீனாகாரர்கள் சீனாவிற்கு விடுமுறையில்  திரும்பி செல்லும் காலம்,
அதனை சீனா சரியாக பயன்படுத்தியது     

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சரி சீனா நன்றாக பயன்படுத்தியதென்றால்

மற்றைய நாடுகள் இந்த வைரசின் தன்மை தெரிந்திருந்தும் தங்கள் நாடுகளை மூடவில்லை.

அமெரிக்க சியாட்டில் மாநிலத்தில் முதல் சாவு.
தென்கொரியாவில் முதல் சாவு.

தென்கொரியாவை ஊடனடியாக மூடிவிட்டனர்.
அமெரிக்க மூடவில்லை.
பலன் கொத்துகொத்தாக விழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க மூடவில்லை.
பலன் கொத்துகொத்தாக விழுந்தது.

அமெரிக்காவிற்கு இலங்கை போல் பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பு, அந்த நினைப்பே பிழைப்பை கெடுத்தது,  இலங்கையின் அரசியல்வியாதிகளுக்கு   கொரோனவை கொண்டு போய் போர் வெற்றியுடன் ஒப்பிடும் மந்தபுத்தி என்றால் அமெரிக்காவின் பழைய அதிபர் மிஸ்டர் சைக்கோ எப்படியாவது இதனை 
பண்டமிக் ஆக்கி அந்த அழிவிற்குள் சீனாவை இழுத்துவிட்டு ஒரு குதியாட்டம் போடும் ஆசையில் திட்டமிட்டே தனது நாட்டு மக்களை பலிக்கடாவாக்கி வேடிக்கை பார்த்தார். பைடன் இருந்திருந்தால் வேறுவிதமாக கையாண்டிருப்பார், மற்றைய நாடுகள் மூடும் முன், சீனா வினைத்திறனாக உள்நோக்கமற்று செயலாற்றியிருந்தால் இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது, சிங்கப்பூரின் முதலாவது நோயாளி 66 வயது சீனபெண் , இலங்கையின் நோயாளியும் சீன பெண் (பவித்ரா கட்டிப்பிடித்து கிஸ் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கும்)   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இலங்கையின் நோயாளியும் சீன பெண் (பவித்ரா கட்டிப்பிடித்து கிஸ் அடித்தது உங்களுக்கு நினைவிருக்கும்)   

Sri Lanka discharges fully recovered Chinese Coronavirus patient |  EconomyNext

Chinese woman cured; released from IDH hospital - Lanka China Today

Sole COVID-19 patient in Sri Lanka discharged from hospital after recovery  - Xinhua | English.news.cn

Sri Lanka Minister who promoted 'Covid syrup' tests positive - BBC News

17 Pavithra Wanniarachchi Photos and Premium High Res Pictures - Getty  Images

Sri Lankan health minister who endorsed sorcery tests positive for COVID-19

ஈழப்பிரியன் அந்த  "கிஸ்ஸை"  மறந்திருப்பார்.
அவருக்கு.... நினைவூட்ட அந்தப் படங்களை இணைக்கின்றேன். 🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.