Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டு தலைவர்களின் சொத்து மதிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும் கொஞ்சம் சொத்து வைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கமல் ஹாசன், சீமான், டிடிவி தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அவர்களின் முன்னணி வேட்பாளர்கள் சிலரது சொத்து மதிப்பு விவரங்கள்.

சீமான் சொத்து மதிப்பு எவ்வளவு?

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குக் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கமல்

பட மூலாதாரம்,MAKKAL NEEDHI MAIAM

கமல் ஹாசன் தமக்கு 45,09,01,476 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131,84,45,000 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இவரது மொத்த சொத்து மதிப்பு 176.93 கோடி ரூபாய்.

தமக்கு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாய் கடன் இருப்பதாகவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் சொத்து மதிப்பு எவ்வளவு?

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

டிடிவி தினகரன் தமது பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 19,18,485 ரூபாய் என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு 57,44,008 என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 7,66,76,730 ரூபாய் என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 2,43,76,317 ரூபாய் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

தமது வாரிசுதாரர் பெயரில் அசையும் சொத்தாக 1,39,76,777 ரூபாய் இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன், சீமான், டிடிவி தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - BBC News தமிழ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

சீமான் சொத்து மதிப்பு எவ்வளவு?

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தமக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தமக்குக் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாகவும் சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார்

வருடம் ரூ.1000/- சம்பாதித்து, வெறும் Adidas T-Shirt, Nike Shoes அணிந்து...பாவப்பட்ட விளையாட்டான Badminton விளையாடி வாழும் அரிய வகை ஏழை அண்ணன் சீமான் 🔥

May be an image of 1 person, standing and indoor
 
Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, zuma said:

வருடம் ரூ.1000/- சம்பாதித்து, வெறும் Adidas T-Shirt, Nike Shoes அணிந்து...பாவப்பட்ட விளையாட்டான Badminton விளையாடி வாழும் அரிய வகை ஏழை அண்ணன் சீமான் 🔥

மல்லையாவை ஏன் புடிக்க முடியாது தெரியுமா...?

ஐடியா குடுத்தது
தலைவன்டா....😎

Bild
 
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

மல்லையாவை ஏன் புடிக்க முடியாது தெரியுமா...?

ஐடியா குடுத்தது
தலைவன்டா....😎

Bild
 
இப்படிபட்ட , திராவிட ஊழல்வாதிகள், கருப்பு பண முதலைகள் என்பவர்களை தேற்கடிக்க 1000 ரூபா வருட  வருமானத்துடன் எளிய வாழ்க்கை நடத்தும் நவீன காமராஜர் எங்கள் அண்ணன் சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and text that says 'M.பழுவேட்டரையர் @mrpaluv... 2s ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தன்னிடம் தனது பெயரில் வாகனம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். FFT'

May be an image of 2 people and text that says '9s r.பழுவேட்டரையர் @mrpaluv... ஸ்டாலினுக்கு வாகனங்கள் ஏதுமில்லையாம் பாவம், ஊர் ஊரா lift கேட்டு பயணம் செய்து தான் மக்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு UATHAYAM வாகனங்கள் துமில்லை நகைகள் விவரம் 720 கிராம் 2021 மொத்த சொத்து மதிப்பு ரூ.8.88 கோடி தமைமுதை த'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people, people standing and text that says 'M.பழுவேட்டரையர் @mrpaluv... 2s ஸ்டாலின் தனது வேட்புமனுவில் தன்னிடம் தனது பெயரில் வாகனம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். FFT'

May be an image of 2 people and text that says '9s r.பழுவேட்டரையர் @mrpaluv... ஸ்டாலினுக்கு வாகனங்கள் ஏதுமில்லையாம் பாவம், ஊர் ஊரா lift கேட்டு பயணம் செய்து தான் மக்களை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின் சொத்து மதிப்பு UATHAYAM வாகனங்கள் துமில்லை நகைகள் விவரம் 720 கிராம் 2021 மொத்த சொத்து மதிப்பு ரூ.8.88 கோடி தமைமுதை த'

IMG-20210319-105726.jpg

ரொம்ப பரம ஏழை தோழர்..😢

அந்த லேண்ட் குருசர் கூட இரவல் வாங்கியது போல கிடக்கு ..😢

  • கருத்துக்கள உறவுகள்
 
சீமான் 2016 இல் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி 
 
161813397_474306350588425_28315465566488
சீமான் 2021 இல் முதல் தரம்  தாக்கல் செய்த சத்தியக்கடதாசி 
 
161675518_474306313921762_26227755183976
 
சீமான் 2021 இல் இரண்டாம்  தரம் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி 
162047125_474306270588433_13239324117820
 
2015-2016 நிதியாண்டில் சீமான் அவரின் வருமானத்தை மூன்று சத்தியக்கடதாசியிலும் மூன்று விதமாக குறிப்பிட்டு உள்ளார்.அதிகாரத்துக்கு வருமுன்னர் இப்படிப்பட்ட பிராடுதனம்(தில்லாலங்கடி) செய்பவர் , அதிகாரத்துக்கு வந்தால் என்ன எல்லாம் செய்வார். திராவிட ஊழல்வாதிகளை  தூக்கி சாப்பிட்டு விடுவார்.
 
Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சீமான் 2016 இல் தாக்கல் செய்த சத்தியக்கடதாசி 

சீமான் மீது பழி  சுமத்துவது அதை பிழை என்று நிரூபிக்க  அப்படியான திரிகளில் இருந்து ஓடி ஒழிப்பது  உங்கள் வழக்கம். மறுபடியும் துண்டுகளை காவிக்கொண்டு வந்து நிக்கிறியள் நல்வரவு .😃

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சீமான் மீது பழி  சுமத்துவது அதை பிழை என்று நிரூபிக்க இந்த அப்படியான திரிகளில் இருந்து ஓடி ஒழிப்பது  உங்கள் வழக்கம். மறுபடியும் துண்டுகளை காவிக்கொண்டு வந்து நிக்கிறியள் நல்வரவு .😃

கருத்துக்களை தர்க்கிக்கமால் கருத்தாளரை தாக்குவது ஏன்? கருத்துக்களில் வறுமையையா?. யாழ் களம் என்பது ஒரு பக்கத்தை சொல்லும் சீமானின் தம்பிகளின் பிரச்சார கூடரமாக மாறக்கூடாது என்ற நல்நோக்கம் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, zuma said:

கருத்துக்களை தர்க்கிக்கமால் கருத்தாளரை தாக்குவது ஏன்? கருத்துக்களில் வறுமையையா?. யாழ் களம் என்பது ஒரு பக்கத்தை சொல்லும் சீமானின் தம்பிகளின் பிரச்சார கூடரமாக மாறக்கூடாது என்ற நல்நோக்கம் தான். 

இதற்கு முன்னைய சீமானின் திரிகளில் நீங்கள் சீமான் சார்பு கருத்து  வைக்கும் கருத்தாளர்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குவது வழமையான ஒன்று . அத்துடன் சீமானின் பிரச்சார  கூடாரமாக மாறினாலும் சீமானுக்கு நாலு வோட்டு கூட போவதுமில்லை குறையப்போவதுமில்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.  சீமானின் தளம்  தமிழ்நாடு அது அவர்களின் வீடு அவர்கள் அடித்து கொள்வார்கள் ஒன்றாக சேர்ந்து சென்று சுகம்விசாரிப்பார்கள் நாங்க ஏன் அடித்து கொள்ளுவான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.