Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை

March 20, 2021

1-6-1024x766.jpg

தலைமன்னாரில் இருந்து   தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான  பெண் ஆசிரியர்    சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்திற்கு ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நீச்சலை நிறைவு செய்துள்ளாா்.

பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ர்ந்த சியாமளா கோலி   (வயது-48), என்பவரே இவ்வாறு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா். #பாக்ஜலசந்தி #சாதனை #நீந்தி

https://globaltamilnews.net/2021/158300/

  • கருத்துக்கள உறவுகள்

இது பாக் ஜலசந்தி அல்ல. பாக்கு நீரிணை. Google translation வந்தது globaltamilnews க்கு வாய்ப்பாகப் போய்விட்டது.. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

இது பாக் ஜலசந்தி அல்ல. பாக்கு நீரிணை. Google translation வந்தது globaltamilnews க்கு வாய்ப்பாகப் போய்விட்டது.. ☹️

பல தவறான தகவல்களை பரப்புகிறார்கள் நவரத்தினசாமி , ஆழிக்குமரன் சாதனைகளின் நீந்தல்  தூரம் வல்வை  ரேவடி  கடற்கரையில் இருந்து கோடியக்கரை அண்ணளவாக 60KM  தூரம் .அந்த பகுதியையே நீந்தி கடந்தார்கள் அதிலும் ஆழிக்குமரன்  கோடியக்கரையுடன் நிறுத்தவில்லை மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து முடித்துக்கொண்டார் . 

மன்னாரில் இருந்து தனுஷ்கோடி 20  கிலோ மீற்றர் அளவுதானே வரும் சிலவேளை ஐந்து கிலோமீற்றர் கூடலாம்  . சைனாக்காரன் தீவை கொண்டுபோகப்போறான் என்றவுடன் எதை எதையோ தின்று பித்தம் கொள்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சியாமளாவிற்கு பாராட்டுக்கள். எங்கள் ஆட்களுக்கு இப்படியான விடயங்களில் ஈடுபாடு குறைவோ. தாயகத்து தமிழ் பிள்ளைகளுக்கும் நீச்சல் பயிற்சி கொடுத்து போட்டிகளில் பங்கு பெற வைக்கலாம். பெருமை சேர்ப்பார்கள். தமிழ் பிள்ளைகள் நீச்சல் போட்டிகளில் முன்னணி வகிக்கும் நிலையை ஒரு காலத்தில் உருவாக்கலாம் அக்கறை எடுத்தால்.

ஒரு பெண்ணாக இந்த நீச்சல் சாதனையை செய்த சியாமளா பாராட்டுக்குரியவர்.  வாழ்ததுகள் சியாமளா. 

ஒரு நீச்சல் வீராங்கனையை  பாராட்டும் சாதாரண இயல்பான மனித மனநிலை  கூட இல்லாமல் அதற்குள் அரசியலை கலந்து  அவதூறு கூறும்  அளவுக்கு இனவெறியை எம்மில் சிலர் மீது  திணித்துள்ளார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஒரு பெண்ணாக இந்த நீச்சல் சாதனையை செய்த சியாமளா பாராட்டுக்குரியவர்.  வாழ்ததுகள் சியாமளா. 

ஒரு நீச்சல் வீராங்கனையை  பாராட்டும் சாதாரண இயல்பான மனித மனநிலை  கூட இல்லாமல் அதற்குள் அரசியலை கலந்து  அவதூறு கூறும்  அளவுக்கு இனவெறியை எம்மில் சிலர் மீது  திணித்துள்ளார்கள். 

அட பார்ரா...🤥

ஐயா துல்பன், உங்களுக்கு யார் புனிதர் பட்டம் கொடுத்தது. அதை முதலில் கூறுங்கள். 

உங்கள் எழுத்தைப் பார்க்கும்போது பரிநிர்வாணமடைந்துவிட்டீர்கள் போலுள்ளது. 

🥴

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அட பார்ரா...🤥

ஐயா துல்பன், உங்களுக்கு யார் புனிதர் பட்டம் கொடுத்தது. அதை முதலில் கூறுங்கள். 

உங்கள் எழுத்தைப் பார்க்கும்போது பரிநிர்வாணமடைந்துவிட்டீர்கள் போலுள்ளது. 

🥴

ஒவ்வொரு செய்தித்தளத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தியை போட்டுள்ளார்கள் உண்மையாகவே சாதனை புரிந்தவர்களின் நிலையை தாழ்த்தியதை கண்டு பிடித்து உண்மையை இங்கு எழுதினத்துக்கு  அழுகினமோ இல்லை அந்த பெண்ணுக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதுக்கு அழுகையா அப்படியென்றால் வாழ்த்துக்கள் அந்த பெண்ணுக்கு இல்லை மூன்று தீவு கையை விட்டு போகுதென்பதுக்கு அழுகையா தெரியலை .

கீழே பாருங்கள் எவ்வளவு பிழையான தகவல்கள் தமிழ்வின் போடுகிறது என்று 

தலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த 48 வயதான பெண்!

Report us Ashik 2 days ago

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. இராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான இராமர் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது.

பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார்.

தொடர்ந்து 1966ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச் சென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில், பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி (வயது-48), தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

தலைமன்னாரில் நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமானது. 30 கி.மீ தூரத்தை தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.

இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கோவிட் பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.

பாக் ஜலசந்தியை பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என சியாமளா கோலி தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/special/01/271258?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார்.

எங்கடையலுக்கு மற்ற இனத்தவன் செய்தால் வாயை 90 டிகிரி திறந்துகொண்டு பாராட்டுவது எங்கடையல் முதன்மைப்படுத்தி எழுதினால் இனவெறி என்று தூற்றுவது .

இங்கு மற்ற மாநிலத்தவரை தூக்கி பிடிக்கும் தமிழ்வின் குற்றாலீஸ்வரன் என்ற தமிழ்நாட்டு தமிழனை மறந்துவிட்டது ஒரு வருடத்தில் ஆறுக்கும் மேற்பட்ட கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் அப்போது வயது 13 தான் இதே மன்னார் தனுஸ்க்கோடி பாக்கு நிரிணையையும்  குறுகிய நேரத்துக்குள் நீந்தி கடந்தவர்.நம்ம தமிழனை நாங்கள் கூட தட்டி கொடுக்கவில்லை இந்திய மத்திய அரசும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்கு பாராமுகமாய் இருந்து கொண்டது பிடிக்காமல் IT வேலையில் தற்போது அமெரிக்காவில் .

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த 48 வயதான  சியாமளா கோலி என்ற  வீர தெலுங்கிச்சிக்கு 
வாழ்த்துக்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை செய்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து சியாமாளாவின் நீச்சல் பயணத்தை கூட்டமைப்பு  முன்னாள் இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் வேலுபிள்ளை கந்தையா சிவஞானம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
https://www.bbc.com/tamil/india-56467307

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சாதனை செய்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
இலங்கை தலைமன்னார் கடற்கரையிலிருந்து சியாமாளாவின் நீச்சல் பயணத்தை கூட்டமைப்பு  முன்னாள் இலங்கை வடக்கு மாகாண சபைத் தலைவர் வேலுபிள்ளை கந்தையா சிவஞானம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
https://www.bbc.com/tamil/india-56467307

இந்த  சேர்.பொன் இராமநாதன் கோஷ்டிகளால் மட்டுமே இலங்கை தமிழர்களுக்கு பலதரப்பட்ட பிரச்சனை.

அன்று குதிரை வண்டில்...
இன்று....
வீடு வளவு பணம் மற்றும் இதர வசதிகள்....😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.