Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

 
1-204-696x387.jpg
 109 Views

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியில் தஞ்சம் கோரியிருந்த 100க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகளைக் அவசர அவசரமாக கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடுகடத்தும் முயற்சியில் ஜேர்மன் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந் நிலையில், ஜேர்மன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த நடவடிக்கையை உடன் நிறுத்த வலியுறுத்தியும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் ஜேர்மன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எழுத்து வடிவிலோ அல்லது காணொளி வடிவிலோ தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.

 குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் முழு வடிவம்,

“கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் வசித்து வருகின்ற ஈழத்தமிழர்களில் சிலரை விடியற்காலையில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் செயற்பாட்டில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அவர்களது உறவினர்கள் எந்தவிதமான தகவலையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது அனைத்துத் தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வருடத்துக்கான விசாவைத் தருகிறோம் என்று சொல்லப்பட்ட செய்தியை நம்பி வெளிநாட்டவர்களின் காவல்துறைக்குச் சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் 30ம் திகதி ஒரு விசேட விமானத்தில் இவர்கள் எல்லோரும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 31பேர் டுசல்டோபிலும் அண்ணளவாக 50 பேர் பிராங்பேட்டிலும் 11 பேர் ஸ்ருட்காட்டிலும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. பங்குனி மாதம் 30ம் திகதிக்கு முன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முடியாமல் இருக்கிற படியால் இந்த எண்ணிக்கையை எம்மால் உறுதிப்படுத்த முடியாதிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் சிறீலங்காவில் மோசமாகிக் கொண்டிருக்கும் மனித உரிமை நிலைமைகளை விசாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும்எ ன்ற தீர்மானத்துக்கு வாக்களித்திருப்பதை அவதானிக்கும் போது, ஜேர்மானிய அரசு ஏன் இவ்வளவு இரகசியமாக இந்த நாடுகடத்தலை செய்ய முனைகிறது என்பது புலனாகிறது. ஜேர்மானிய அரசின் இந்த வெளிவேடத்தன்மை அதிர்ச்சி அளிக்கிறது.

ஜேர்மானிய அரசுக்குரிய மனித உரிமைக்கொள்கை மற்றும் மனிதநேய உதவி என்பவற்றுக்குப் பொறுப்பான ஆணையரான பாபேல் கொவ்ளர் ஜனவரி 28ம் திகதி பின்வருமாறு ட்வீற்றரில்  செய்தி வெளியிட்டிருந்தார். “ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை அவதானிக்கும் போது சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த மனித உரிமைகள் ஆணையத்தினூடாக சிறீலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதில் ஜேர்மனி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஜேர்மனி ஆதரவு வழங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் அங்கு மேற்கொள்ளப்படும் பன்னாட்டு மனிதாயச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்களையும் சான்றுகளையும் சேகரித்து, அவற்றை உறுதிப்படுத்தி ஆய்வுசெய்தற்காக 2021, 2022ம் ஆண்டுகளில் மனித உரிமை ஆணையாளரின் பணிமனைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டு நீதிமன்றம், மற்றும் குறிப்பிட்ட நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படக்கூடிய வழக்குகள் தொடர்பான செயன்முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் மீளாய்வு செய்வதற்கும் அதே வேளை குறிப்பிட்ட தகவல்களை நாட்டின் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதிவழங்கலில் அனுபவம்மிக்க ஒரு மூத்த சட்ட ஆலோசகரும் நியமிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மற்றைய சட்ட ஆலோசகர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை உத்தியோகத்தர்கள், சட்டம் தொடர்பான மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்கும் வேண்டிய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இத் தேவைகளுக்கென மொத்தமாக 2,856300 அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டிருக்கின்றன. சிறீலங்காவில் நிலவும் மோசமான மற்றும் தொடர்ந்து அதிகரித்துச் சொல்லும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கென விசாரணையாளர்கள் கொண்ட ஒரு குழு நிறுவப்படவேண்டும் என வாதிடுகின்ற ஜேர்மனி, சமகாலத்தில் ஈழத்தமிழ் அகதிகள் 100 பேரை சிறிலங்காவுக்கு நாடுகடத்துகிறது.

அமெரிக்காவின் சேலம் நகரில் மந்திரக்காரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் போன்ற விசேட விசாரணைச் செயன்முறையா இது? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 2009ம் ஆண்டில் கோட்டாபயவும் மகிந்த இராஜபக்சவும் தமது நாட்டு மக்களை நடத்தியது போல சிறிலங்காவில் மிக மோசமாகப் பார்க்கப்படும் தமிழ் அகதிகளும் நடத்தப்படுவார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவா இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் அல்லது பண்பாட்டு அமைப்புகள் இது தொடர்பான ஒரு காணொளியையோ அல்லது எழுத்து மூலமான ஒரு அறிக்கையையோ எமக்கு மிக அவசரமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதோடு வெளிநாட்டு அமைச்சருக்கும் உள்நாட்டு அமைச்சருக்கும் அனுப்பப்படும். மிகவும் கொடுமையான இந்த செயலை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களில் யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் அல்லது காணாமற்போயிருந்தால் உடனடியாக எம்முடன் தொடர்புகொள்ளுமாறு ஜேர்மனிய தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்” .

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, பிரேமன்
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்: email@humanrights.de
 

ஜேர்மன் அரசும், இலங்கையில் ஒரு பிரச்சனையும் இல்லை, தேனும் பாலும் ஓடுகின்றது என எண்ணிக் கொண்டு இருக்கின்றது போல.

இவர்களுக்கான இலவச சட்ட உதவிகளை வழங்கும் தமிழ் அமைப்புகள் அங்கு உள்ளனவா? அவுஸிலும் கனடாவிலும் இப்படியான அமைப்புகள் பல உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

  ஓரு மில்லியன் சிரியர்களை எடுத்த ஜேர்மனால் 100 தமிழரை  வைத்திருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 கொழும்பில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்து கொண்டும், யாழ்குடாநாட்டில் பாரிய மோதல்கள் ஆட்லறி தாக்குதல்கள் விமான குண்டு வீச்சுக்களூம் தென் தமிழீழத்தில் சுற்றிவளைப்பு வகை தொகையின்றி  படுகொலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்திலும் .....

இதேபோலவே அதிகாலையில் கைது செய்து குடும்பம் குடும்பமாகவும் தனி நபர்களாகவும் கொழும்பில் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற ஒரு காரணத்தை சொல்லி இலங்கை செல்லும் ஒவ்வொரு விமானங்களிலும் திருப்பி அனுப்பியது ஜேர்மனி.

பல நூற்றுக்கணக்கானவர்களை டுல்டுங் எனும் எந்த நேரத்திலும் விமானத்தில் ஏற்றி நாட்டைவிட்டு அப்புறம்படுத்தலாம்கிற விசாவிலும் போர் காலங்களில்கூட வைத்திருந்தார்கள்.

அப்பவே அப்பிடியெண்டால் இப்போ விடுவார்களா?

ஜேர்மனி வகை தொகையின்றி அகதிகளை உள்ளே எடுப்பார்கள் அதேபோல சத்தம் போடாமலே வகை தொகையின்றி வெளியிலும் அனுப்பிவிடுவார்கள்.

பரிதாபபட்டு சிரிய பக்கமிருந்து ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்ட  லட்சத்தை நெருங்குபவர்களில் பல ஆயிரம்பேரை ஜேர்மனிக்குள் சொறி சேட்டை விட்டதன் பின்னர் ஓசையின்றி வெளியில் அனுப்பிவிட்டார்கள் என்றும் கேள்வி.

ஜேர்மனியில் சட்டதரணிகளுக்கு அதிக அதிகாரம் உள்ளது அவர்கள் மூலம் எதாவது பண்ணலாமா என்றும் பார்க்கலாம் போராட்டங்களையும் தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

  ஓரு மில்லியன் சிரியர்களை எடுத்த ஜேர்மனால் 100 தமிழரை  வைத்திருக்க முடியவில்லை.

நுணாவிலான்...  ஒரு வரியில்,  சிறப்பான கருத்து.  👍  👏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, உடையார் said:

ஈழத்தமிழ் அகதிகளை நாடு கடத்தத் தயாராகும் ஜேர்மனி – இந் நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

இவர்கள் அண்மையில் வந்தவர்களாக இருக்கக்கூடும். அல்லது பலதடவைகள் குற்றங்கள் எதாவது செய்து தண்டனை பெற்றவர்களாகவும் இருக்கலாம். உண்மைகள் வெளி வராத வரைக்கும் எதையுமே சரியாக கூறமுடியாது.

ஜேர்மனியில் ஒருகாலத்தில் இலங்கை தமிழர்கள் நாட்டுக்கு அனுப்பபடுவதற்காக விமானநிலையம் வரைக்கும் சென்று திரும்பி வந்தவர்கள் பலர் இன்று சொந்த வீடு சொத்து சுகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

இவர்கள் அண்மையில் வந்தவர்களாக இருக்கக்கூடும். அல்லது பலதடவைகள் குற்றங்கள் எதாவது செய்து தண்டனை பெற்றவர்களாகவும் இருக்கலாம். உண்மைகள் வெளி வராத வரைக்கும் எதையுமே சரியாக கூறமுடியாது.

ஜேர்மனியில் ஒருகாலத்தில் இலங்கை தமிழர்கள் நாட்டுக்கு அனுப்பபடுவதற்காக விமானநிலையம் வரைக்கும் சென்று திரும்பி வந்தவர்கள் பலர் இன்று சொந்த வீடு சொத்து சுகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஜேர்மனிக்காக வக்காலத்து வாங்குவதற்காக பாதிக்கப்பட்ட  எங்கள் மக்களை “பலதடவைகள் குற்றங்கள் எதாவது செய்து தண்டனை பெற்றவர்களாக” காட்ட முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதே ஜேர்மனிதான் யூதர்களை அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான முறைகளில் கொன்றுதள்ளியது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கற்பகதரு said:

ஜேர்மனிக்காக வக்காலத்து வாங்குவதற்காக பாதிக்கப்பட்ட  எங்கள் மக்களை “பலதடவைகள் குற்றங்கள் எதாவது செய்து தண்டனை பெற்றவர்களாக” காட்ட முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதே ஜேர்மனிதான் யூதர்களை அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான முறைகளில் கொன்றுதள்ளியது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

இதில் எங்கே வக்காலத்து வாங்குகின்றேன் என்று தெரியவில்லை. இங்கு நடக்கும் விடயங்களை வைத்து தான் எழுதினேன்.
பழைய வரலாறுகளை தொண்டுவதில் எனக்கும் அலாதி பிரியம்.செவ்விந்தியர்களை அழித்து குடியேறியவர்களையும் அவுஸ்ரேலியாவில் மூத்த குடிகளை அழித்து குடியேறிய நாடோடிகள் பற்றி எதுவுமே சொல்ல மாட்டீர்களா?  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

  ஓரு மில்லியன் சிரியர்களை எடுத்த ஜேர்மனால் 100 தமிழரை  வைத்திருக்க முடியவில்லை.

ஜேர்மனி கொள்கையளவில் சிரியர்களை அகதிகளாய் எறறுக்கொண்டுள்ளது .எனவே கிட்டத்தட்ட 95% விண்ணப்பங்கள் எறறுக்கொள்ளப்படும்.ஈழத்தமிழர் விசயம் அவர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களில் தங்கியுள்ளது.உண்மையான பாதிப்புக்கு உள்ளனவர் கூட சரியாகவிண்ணப்பிக்காவிடில் திருப்பி அனுப்படுவார். எந்தவித பாதிப்புமில்லாதவரும் விண்ணப்பித்த முறை சரியெனில் அகதியாக அங்கிகரிக்கப்படுவார். ஈழத்தமிழர் 5%கூட அகதியாக எற்க்கபபடவில்லை. ஆறு மாத விசாக்களில் அதிக தடவையிருந்து பல ஆண்டுகள் சென்றவர்கள் .இங்குள்ளவெளிநாடடவர்(கவனிக்க அகதிச்சடடமில்லை) சட்டங்களின்படி குடியுரிமையும் விசாவும் பெற்றுள்ளார்கள்.சிரியர்களை விமானம் அனுப்பியும் எடுத்துள்ளார்கள். வந்த உடன் நல்ல தொழில் பயிற்ச்சியுடன் கூடியவேலை வாயப்பு..கடை போட மூலதனம்.  ..கல்வி.. எனப்பல வசதிகள் அவர்களுக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

ஜேர்மனிக்காக வக்காலத்து வாங்குவதற்காக பாதிக்கப்பட்ட  எங்கள் மக்களை “பலதடவைகள் குற்றங்கள் எதாவது செய்து தண்டனை பெற்றவர்களாக” காட்ட முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதே ஜேர்மனிதான் யூதர்களை அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான முறைகளில் கொன்றுதள்ளியது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

நாங்கள் கதைத்துக்கொண்டிருப்பது இன்றைய நிலைபற்றி மறாக இறந்த காலத்தைப்பற்றியில்லை.ஜேர்மனியில் 5%க்கும் குறைவான ஈழததமிழர்களே அகதியாக எற்றுக்கொள்ளபபட்டிருக்கிறாரகள். மற்ற 95%வெளி நாட்டவர்களாய் கணிக்கப்பாடுவாரகள்  இங்குள்ள வெளி நாடடுசடடப்படி விசாப்பெறமுடியும் நாங்கள் அவ்வாறுதான் பெற்றுள்ளோம். அதற்க்கு எட்டு வருடங்கள் இங்கு இருநது இருக்கவேணடும் நாங்கள் ஆறு மாத விசாக்களில் பல தடவையிருநதபடியால்  இலகுவில்எடடு வருடம போய்விட்டது  அல்லது விடில் நாமும் நாடு கடத்தப்பட்டிருப்போம் இப்போதையநிலையில்  எட்டு வருடம்போவது  மிக மிக. கடினம்  ஜேர்மனி மிக நல்ல நாடு  இங்கு நடப்பது சட்டததினட்ச்சி .

ஒர் தடவை களவெருத்து ..அது பிழையெனயுணர்ந்து திரிந்தி மற்றவர்கள் போல் வாழ்பவனை  ஏன் கள்ளயென தொடர்ந்தும் அழைக்க வேணடும்? அவன் தொடர்ந்தும்      

களவு எடுக்கவேணடுமென விருப்புகிறிர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

ஒர் தடவை களவெருத்து ..அது பிழையெனயுணர்ந்து திரிந்தி மற்றவர்கள் போல் வாழ்பவனை  ஏன் கள்ளயென தொடர்ந்தும் அழைக்க வேணடும்? அவன் தொடர்ந்தும்      

களவு எடுக்கவேணடுமென விருப்புகிறிர்களா?

கற்பகதரு அண்ணை மேல் சொன்ன உதாரணம்  ஜேரமனி நாட்டுககு ..கிட்லர் காலத்தில் பிழை விட்டவார்கள் .இப்போ திருந்திநடக்கிறார்கள் ..பிழை விடுபவர்களை திருத்தவும் செய்கிறாரகள். எமது தமிழ் சமுகத்தை கள்ளர் என நான் கூறவில்லை .இந்த விளக்கத்தை கவனததிலெருககவும்

  • கருத்துக்கள உறவுகள்

Deportation terror unleashed against the Tamil community in Germany

 
Screen-Shot-2021-03-26-at-4.09.06-AM-696

 

The Tamil refugee community in Germany has been subjected to a wave of dawn raids and arrests during the past few days. Relatives and friends do not know their whereabouts, the detained have had their phones taken away from them and communications severed. Some people have been lured to come to the foreigners’ police with the promise of a 2-year visa – then arrested and put in detention.

We have found out that they are to be deported on the 30th March on a special plane to Sri Lanka. We have heard from various sources that 31 are being held in Düsseldorf, approximately 50 at Frankfurt and 11 in Stuttgart. No doubt the numbers will increase before the 30th. It is difficult to verify these numbers because the communications with the victims have been cut.

When you consider that the United Nations Human Rights Council has just voted for a resolution — that Germany was involved in drafting — to have a UN team investigate serious and worsening human violations in Sri Lanka, it is easy to understand why the German authorities want to carry out this deportation with maximum stealth. The hypocrisy is startling.

On the 28th January the Commissioner for Human Rights Policy and Humanitarian Assistance for the German government, Bärbel Kofler (SPD) tweeted: “The report published by UN Human Rights Council yesterday is cause for grave concern about the situation of human rights in Sri Lanka. I am pleased that Germany remains committed to reconciliation and accountability, also through the Human Rights Council.”

Just a few days ago on the 23rd March, the UN Human Rights Council passed the German-backed resolution calling for international investigations. The UN Human Rights Council has budgeted resources that would be required in 2021 and 2022 for the Office of the High Commissioner “to collect, consolidate, analyse and preserve information and evidence and to develop possible strategies for future accountability processes for gross violations of human rights or serious violations of international humanitarian law in Sri Lanka”. Amongst the resources identified were a “Senior Legal Advisor with experience in international criminal justice” that would “coordinate the processes of reviewing and sharing of information with national authorities for universal jurisdiction and extraterritorial jurisdiction cases”. Other legal advisors, analysts, human rights officers, Juris-Linguists were also budgeted for, with a total of US$2,856,300 requested.

So, Germany while supporting a team of investigators tasked with examining the gross and increasing violations of human rights in Sri Lanka, plans to, at the same time, deport a hundred or so Tamil refugees to Sri Lanka. Is this part of a special investigation process in the spirit of the Salem witch trials? Is it a test to see if the Tamil refugees, who are demonised in Sri Lanka, will be treated in the same way that Gotabaya and Mahinda Rajapaksa treated their compatriots in 2009? (see the verdict of the People’s Tribunal in Sri Lanka here).

Video Player
 
03:24
 
08:30

Apart from the anguish and fear this will cause the Tamil Diaspora, with this planned deportation of Tamils fleeing Sri Lanka into the hands of the Rajapaksa brothers, Germany will, by vouching for their safety, give a propaganda gift to the Sri Lankan regime. This will send a very negative signal to the current international efforts to address serious human rights violations that have occurred and are continuing to occur in Sri Lanka.

We call urgently on all to send us a video or text statement, which can be publicised and also sent off to the Foreign Minister and Inner Minister.

We urge the global Tamil Diaspora, and the international human rights community to organise delegations to German embassies on Monday Morning (29 March) to hand in documents and speak to the diplomats. We urge people to respect social distancing rules. Please send us information of planned actions and those which have already taken place so that we can put in on this site and can be an inspiration to others.

We must stop this atrocity.

Contact: email@humanrights.de     

https://humanrights.de/4382

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகத்தினர்க்கு வணக்கம்!
இங்கு  இந்த திரியில் யாழ்கள உறவு கற்பகம் எழுதிய ஒரு சில கருத்துக்களையும் நான் எழுதிய பதில் கருத்துக்களையும் காணவில்லை. ஊர் மொழியில் சொல்வதானால் காக்கா தூக்கிக்கொண்டு போட்டுது.

நிற்க.....

வேண்டத்தகாத கருத்துக்களை நீக்குவது நல்ல விடயம். ஏனெனில் ஒருவர் எழுதிய கருத்தை பலர் பல கோணங்களில் பார்க்கும் போதுதான் சரி பிழைகள் தெரியும். எழுதியவருக்கு நான் உட்பட எழுதியது சரியாகத்தான் தெரியும்/இருக்கும். இது மனித வாழ்வின் நிதர்சனம்.

நான் சொல்ல வருவது என்னவெனில்....

இந்த திரியில் உங்கள் தீர்ப்பை செய்தது போல் எல்லா திரிகளிலும் நடைமுறைப்படுத்துக்குங்கள். எச்சரிக்கை புள்ளிகளும் நடைமுறைக்கு ஒவ்வாத தடை உத்தரவுகளும் தேவையில்லை என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/3/2021 at 17:29, valavan said:

பரிதாபபட்டு சிரிய பக்கமிருந்து ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்ட  லட்சத்தை நெருங்குபவர்களில் பல ஆயிரம்பேரை ஜேர்மனிக்குள் சொறி சேட்டை விட்டதன் பின்னர் ஓசையின்றி வெளியில் அனுப்பிவிட்டார்கள் என்றும் கேள்வி.

சொறிச்சேட்டையல்ல......
பாலியல் கொலைகள் செய்தவர்கள். இளம் பெண்களை பாலியல் வல்லுறவாக்கியவர்கள். சிநேகபூர்வமாக பழகிய சிறுமிகளை பல சிரியர்கள் பாலியல் வல்லுறவுகளாக்கியவர்கள்.
 ஒருசில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு வந்தவர்களின் முகத்தில் காறி துப்பியவர்கள் இந்த சிரியர்கள்.

அனேக ஜேர்மனியர்களுக்கு அதியுச்ச கோபம் சிரியர்கள் மேல் அல்ல. ஏனெனில் அவர்கள் குணம் அப்படி. ஜேர்மனியர்களின் கோபம் முழுவதும் அங்கெலா மேர்க்கல் மீதுதான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்: தமிழ் அகதிகளை நாடு கடத்த முயற்சி- தமிழ் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

 
1-222.jpg
 91 Views

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

https://www.ilakku.org/?p=45623

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திட்டமிட்டு இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக ஜேர்மனில் தடுப்பு மையங்களுக்கு முன்னால் போராட்டம்.   

Bild

Bild

Bild

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை நாடு கடத்துவதற்க்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை நாடுகடத்தும் திட்டத்தை யேர்மனி கைவிடவேண்டும் – கஜேந்திரகுமார்

 
Kajendrakumar.jpg
 10 Views

யேர்மனியில் புகலிடத் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவதை யேர்மன் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யேர்மன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“மார்ச் 30 ஆம் நாள் புகலிடக் கோரிக்கையாளர்களான பெருமளவு தமிழர்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவதற்கு யேர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாம் பெரும் கவலையடைந்துள்ளோம்.

யேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை. அச்சங்களுக்கு அப்பால் சிறீலங்காவில் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய ஒரு வார காலத்திற்குள் தமிழ் மக்களை சிறீலங்காவுக்கு நாடுகடத்துவது எதிர்மறையான செயலாகும். புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவை யேர்மனி உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=45728

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.