Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

alleyREX_175x125.jpg

பிரித்தானியாவில்... 10 வயது சிறுமியை பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு கொண்ட 24 வயது வாலிபர் இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவுள்ளார். (லண்டனில கூட பூங்காக்கள் தான் பாலியல் களியாட்ட இடங்கள். தமிழர் வாரிசுகளும் இதில் குறை வைக்கிறதில்ல). அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.!

பிரித்தானியா உட்பட மேற்குலகில் இருந்து உலகம் பூராவும் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது நாகரிகமாக வளர்க்கப்பட்டு வருவது இந்தத் தீர்ப்பின் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகளை நியாயப்படுத்த வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளது..! இது ஒரு ஆபத்தான சூழலை பெண்களுக்கு உருவாக்கும். அவர்கள் எங்க சிந்திக்கப்ப் போகிறார்கள்...! அதுதானே பாலியல் சுதந்திரம் வேணும் என்று பிளிறிகிறார்கள்..! இப்படித் திரிஞ்சே தொலைஞ்சு போகட்டும்.

Rapist of girl aged 10 free in months

A man who raped a ten-year-old girl will be free in four months after the judge said the victim 'dressed provocatively'.

http://www.metro.co.uk/news/article.html?i...p;in_page_id=34

Edited by nedukkalapoovan

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இந்த தீர்பை நான் ஏற்று கொள்ளமாட்டேன்............உடை போடுவது அவர் அவர் விருப்பம் ஆடையை வைக்து அந்த ஆண் வாலிபர் வெளியில் வருகிறார் என்றா முழு ஆண்களுக்கும் ஒரு தலைகுனிவு பாருங்கோ ஏனென்றா ஆண்களும் அறிகுறையா ஆடை அணிவார்கள் ஆனால் எந்த பெண்ணும் ஆணை பாலியல் உறவுக்கு உட்படுத்தியதா செய்தி வந்து நான் அறியவில்லை...........சோ தாத்தா இது ஆண்களுக்கு அவமானம்.

:P :(

நீங்க காணல்ல. நாங்க கண்டிருக்கிறமே. ஆண்களும் அரைகுறையாப் போட்டிட்டு.. பெண்களும் போட்டிட்டு... ஒன்றை ஒன்று நோண்டிக் கொண்டு.. செய்யுறதை உங்க சுதந்திரத்தை மற்றவர்களை தவறான திசையில தூண்டாத விதத்தில தனிப்பட்ட இடத்தில செய்யுங்க. யார் வேணான்னா..! பப்ளிக்கில.. என்ன கூத்து வேண்டி இருக்குது. அவ்வளவுக்கு மன ஒடுக்கமே இல்லையா மனிதர்களிடம்..!

நீதிபதியில் தீர்பை விமர்சிக்கலாம். மனிதனும் உணர்ச்சி உள்ள விலங்கு என்ற வகையில் எல்லா மனிதனுக்கும் மனவடக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது. பாலியல் வன்புணர்வில ஈடுபடுவதை தூண்டலுக்கான துலங்கல் என்ற வகையில் நோக்கின் பெண் தூண்ட அவன் துலங்கினான். ஆடை என்பதே மானம் காக்க எனும் போது அதையேப்பா அரைகுறையுமா போடனும். இல்ல உலகத்தில எல்லாருமே நிர்வாணமாவே வாழலாம் தானே. ஆடை எதுக்கு...! மறைக்க ஒழுக்கம் பேணத்தானே. அதுக்குள்ள என்ன அரைகுறை.. பொத்தல் கிழிசல்.. ஜன்னல்.. துவாரம்..???! :P :(

நீங்கள் சொல்லுற மாதிரி ஜன்னல்,கதவு போட்டால் தான் இந்த பிரச்சினை என்றா இந்தியா போன்ற நாடுகளில் ஜன்னல்,கதவு இல்லாமலே இப்படியான பல பிரச்சினைகள் நடைபெறுகிறதே அது எப்படியுங்கோ??ஆடை மானம் காக்க போட்டாலும் ஆண்களின் மணம் சுத்தமா இருந்தால் பாருங்கோ ஒரு கதவு,ஜன்னலும் அவையின்ட கண்ணுக்கு தெறியாது ஆனால் ஆண்களாள அது முடியவில்லை அது தான் பிரச்சினைக்கும் முழு காரணம்..........

:P :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுற மாதிரி ஜன்னல்,கதவு போட்டால் தான் இந்த பிரச்சினை என்றா இந்தியா போன்ற நாடுகளில் ஜன்னல்,கதவு இல்லாமலே இப்படியான பல பிரச்சினைகள் நடைபெறுகிறதே அது எப்படியுங்கோ??ஆடை மானம் காக்க போட்டாலும் ஆண்களின் மணம் சுத்தமா இருந்தால் பாருங்கோ ஒரு கதவு,ஜன்னலும் அவையின்ட கண்ணுக்கு தெறியாது ஆனால் ஆண்களாள அது முடியவில்லை அது தான் பிரச்சினைக்கும் முழு காரணம்..........

:P :D

ஆணோ பெண்ணோ.. பாலியல் தூண்டல் என்பது பொதுவானது. சிலர் மனவடக்கம் மூலம்.. சிம்பிளா எடுத்துக்குவாங்க. அனுபவப்பட்டவங்க.. அட இதுதானே என்றிட்டுப் போவாங்க. ஆனாப் பாருங்க ஆண்களிலும் பெண்களிலும் உள்ள இந்த இரண்டும் கெட்டானுகள் இருக்கே.. அதுதாங்க நாகரிமுன்னு உரிஞ்சிட்டுப் போறவங்க.. உட்பட ரீன் ஏஜ் பொண்ணுங்க ஆணுங்க.. அதுகள் மனசுகள அடக்கிறது என்றது லேசுப்பட்ட விசயமே அல்ல. சட்டம் போட்டே கட்டுப்படுத்த முடியுறதில்ல. அதுகள் அனிமல்ஸ் போலத்தான் பிகேவ் பண்ணுறதே..! அப்படியான அனிமல்ஸை சமூகத்தில உள்ள அனிமல்ஸ் யூஸ் பண்ணிக்குதுகள்..!

சமூகத்தில ஆண் அனிமல்ஸும் இருக்கு.. பெண் அனிமல்ஸும் இருக்கு மனிதர்களில. அண்மைல பாடசாலை ஆசிரியை ஒருவர் பிரித்தானியாவில் மாணவன் கூட வற்புறுத்தி உடலுறவு கொண்டது வெளிச்சத்துக்கு வந்தது. நம்மூரில பருத்தித்துறைல கூட அப்படியொன்று நடந்தது..! இப்படியெல்லாம் உள்ள அனிமல்ஸிட்டப் போய்.. ஜன்னல் பார்க்காத.. கண்ண மூடிக்கோ என்ற ஆகுமாங்க.

நாங்க தான் ஜன்னலை மூடிட்டுத் திரியனுமே ஒழிய ஊரில உள்ளவன் கண்ண மூடனும்.. நாங்க ஜன்னல் திறக்கனும் என்று எதிர்பார்க்கக் கூடாது. குறிப்பாக ஆபாசமா திரிய விரும்பும் "புதுமை"ப் பெண்கள்..! :rolleyes::D

தாத்தா இங்கே பாருங்கோ ரீன் ஜேயை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பாருங்கோ ஏனென்றா இப்ப பார்த்தா சில பெரிசுகள் தான் கூடுதலா லொள்ளு பண்ணுற மாதிரி இருக்கு.........ரீன் ஏஜ் பசங்களும்,பொண்ணுகளும் ஜன்னல்,கதவு போட்டால் தான் பிழை விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது பாருங்கோ சுடிதாரோட திறியிறவை எல்லாரையும் நாங்க நம்ப முடியாது பாருங்கோ அவையில தான் விசயமே இருக்கு...............

ஜன்னல் போட்டு போறவையை நம்பலாம் வெளிபடையா செய்யினம் இந்த சுடிதார் போட்டு வாறவையை நம்பமுடியாது பாருங்கோ,என்ன தான் ஜன்னல்,கதவை மூடி கொன்டு போனாலும் அனிமல்ஸ் எப்பவும் அனிமல்ஸ் குணத்தை தான் செய்யும் பாருங்கோ..........

:P :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா இங்கே பாருங்கோ ரீன் ஜேயை மட்டும் குற்றம் சொல்ல முடியாது பாருங்கோ ஏனென்றா இப்ப பார்த்தா சில பெரிசுகள் தான் கூடுதலா லொள்ளு பண்ணுற மாதிரி இருக்கு.........ரீன் ஏஜ் பசங்களும்,பொண்ணுகளும் ஜன்னல்,கதவு போட்டால் தான் பிழை விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது பாருங்கோ சுடிதாரோட திறியிறவை எல்லாரையும் நாங்க நம்ப முடியாது பாருங்கோ அவையில தான் விசயமே இருக்கு...............

ஜன்னல் போட்டு போறவையை நம்பலாம் வெளிபடையா செய்யினம் இந்த சுடிதார் போட்டு வாறவையை நம்பமுடியாது பாருங்கோ,என்ன தான் ஜன்னல்,கதவை மூடி கொன்டு போனாலும் அனிமல்ஸ் எப்பவும் அனிமல்ஸ் குணத்தை தான் செய்யும் பாருங்கோ..........

:P :D

பசில அலைற பூனைக்கு ( அது ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும்.. இரண்டுக்கும் பசி இருக்கத்தான் செய்யும்) கருவாட்டை காட்டி வைச்சா விட்டா வைக்கும்.. எட்டி சாப்பிடத்தான் பார்க்கும். அது போல கருவாட்டை கட்டி ஒழிச்சி வைச்சிட்டா அது தானாப் போகும்..! மனித உணர்ச்சி சம்பந்தப்பட்ட இந்த விசயத்தில எவனையும் எவளையும் லேசில நம்பக் கூடாது. ஆகவே ஜன்னலை மூடிக்கிறது நல்லம். மூடிட்டு திரியுறது மேலதிக பாதுகாப்பு. இல்ல வழிய வம்பை இலவசமா வாங்கிறது போல..! மூடிட்டுப் போறது கொஞ்சம் என்றாலும் தூண்டலைத் தவிர்த்து துலங்கல்களைக் குறைக்கலாம்..!

(நீங்கள் ஏன் கஸ்டப்படுறீங்க.. இப்படி ஆரம்பித்து எழுதப்பட்ட நகைச்சுவை கலந்த கருத்து தவறான உதாரணமாகலாம் என்று நிர்வாகம் சுட்டிக்காட்டியதை அடுத்து சுயதணிக்கைக்கு ஆளாகிறது. வாதத்தில் ஜம்முவிடம் மிகவும் புரிந்துணர்வை எதிர்பார்த்துதான் குறித்த கருத்து நகைச்சுவை கலந்து எழுதப்பட்டது. இருந்தாலும் தப்பான உதாரணமாக அது அமைந்திருப்பின்.. அல்லது அமையும் என கருத்தப்பட இடமளித்ததன் மூலம் அது தவறானது என்பது உணரப்படுகிறது. தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பும் கோருகின்றோம்..!) :rolleyes::D

Edited by nedukkalapoovan

என்னவோ நீங்க சொல்லுறபடியா சரியா தான் இருக்கும் ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் வெள்ளைகாரர்களும் இப்படி தான் திரிகிறார்கள் ஆனால் ஆணும்,பெண்ணும் சகஜமாக கதைப்பார்கள்,பழகுவார்கள் ஆனால் நம்மன்ட ஆட்களை பாருங்கோ இப்படி அரைகுறையா வந்தா நெளிந்து கொண்டு இருப்பீனம் அது தான் எனக்கு விளங்கவில்லை.

நம்ம ஆளோ நான் சின்ன பிள்ளையாக்கும் இப்படி எல்லாம் கேட்ககூடாது பாருங்கோ.

:P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

10 வயதுச் சிறுமி அணிகின்ற ஆடையைக் கூடவா காம இச்சையோடு பார்ப்பார்கள். இதற்கு மரணதண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஒரு சிறுமி மீது வன்புனர்ச்சி செய்ததற்கு எவ்வித நியாயப்படுத்தலையும் செய்திட முடியாது.

வயது வந்த பெண்கள் அணிகின்ற ஆடைகள் பற்றிய விமர்சனம் எனக்கும் உண்டு. ஆனால் ஒரு சிறுமியின் ஆடை மீதான காரணத்தை வைத்து சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. அச்சிறுமிக்கு என்ன தெரியும் இதைப் பற்றி?

இக்கருத்திற்குக் காரணமான பகுதி தலைப்பில் மாற்றப்பட்டுள்ளதால் எனது கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 வயதுச் சிறுமி அணிகின்ற ஆடையைக் கூடவா காம இச்சையோடு பார்ப்பார்கள். இதற்கு மரணதண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஒரு சிறுமி மீது வன்புனர்ச்சி செய்ததற்கு எவ்வித நியாயப்படுத்தலையும் செய்திட முடியாது. வயது வந்த பெண்கள் அணிகின்ற ஆடைகள் பற்றிய விமர்சனம் எனக்கும் உண்டு. ஆனால் ஒரு சிறுமியின் ஆடை மீதான காரணத்தை வைத்து சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. அச்சிறுமிக்கு என்ன தெரியும் இதைப் பற்றி?

நீங்கள் இணைப்பில் தரப்பட்ட மீதிச் செய்தியையும் வாசித்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டிங்க. குறித்த சிறுமி 10 வயதானாலும் 16 வயது போன்ற தோற்றமுடையவர் என்று எழுதப்பட்டிருக்கிறது. காரணமில்லாம தீர்ப்பு வழங்காது பிரித்தானிய நீதிமன்றம்..! :P

இவ்விவாதத்தில் தான் உணர்ந்த தவறொன்றை சுட்டிக்காட்டும் நோக்கில் இன்னுமொருவன் எழுதிய கருத்து இதில் மேற்கோள் இடப்பட்டிருந்தது. அவர் சுட்டிக்காட்டிய கருத்து சுயதணிக்கைக்கு ஆளானதை இட்டு அவரும் தனது சுட்டிக்காட்டுதலை அகற்றிக் கொண்டுள்ளதால்.. அக்கருத்தின் இம் மேற்கோள் காட்டலும் அகற்றப்படுகிறது. - அனைத்துத் தரப்புக்கும் அவர்களின் புரிந்துணர்வுக்கு நன்றிகள்.

உங்கள் கருத்தும் நிர்வாகத்தின் சுட்டிக்காட்டலும் கருத்தில் கொள்ளப்பட்டு குறித்த பகுதி சுயதணிக்கைக்கு ஆளாகியுள்ளது. சுட்டிக்காட்டிய தரப்பினருக்கு நன்றிகள்.

நீங்களும்.. மேற்கோள் காட்டியுள்ள குறித்த பகுதியை அகற்றலாம்.. விரும்பும் பட்சத்தில்..! ஜம்முக்கு எமது குறித்த கருத்துத் தொடர்பில் ஏதேனும் தவறான கருத்தோட்டம் இருந்தால் பகிரங்கமாக இங்கேயே சுட்டிக்காட்டலாம். தப்பா எல்லாம் நினைக்க மாட்டம்..! :P

Edited by nedukkalapoovan

நீங்களும்.. மேற்கோள் காட்டியுள்ள குறித்த பகுதியை அகற்றலாம்..

அகற்றி விட்டேன்.

உங்களது புரிந்துகொள்ளும் தன்மையும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவ முதிர்ச்சியும் உண்மையிலேயே பெரு மகிழ்ச்சி தருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.!

இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பார்த்தால் கோடைகாலத்தில் பல ஆண்களின் மனநிலை எப்படிப்போகப்போகிறதோ?

கோடைகாலத்தில் பல ஆண்களின் மனநிலை எப்படிப்போகப்போகிறதோ?

அதையேன் கேக்குறீங்கள். B) B) B) B) B)

உணர்ச்சிகள் என்பது பொதுவான ஒன்று...

தாய்..சகோதரங்கள்..குழந்தைகள்..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைப்பில் தரப்பட்ட மீதிச் செய்தியையும் வாசித்திருந்தால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கமாட்டிங்க. குறித்த சிறுமி 10 வயதானாலும் 16 வயது போன்ற தோற்றமுடையவர் என்று எழுதப்பட்டிருக்கிறது. காரணமில்லாம தீர்ப்பு வழங்காது பிரித்தானிய நீதிமன்றம்..! :P

ஒரு 10 வயதுச் சிறுமி அணிகின்ற ஆடைகளை விடுவோம். உங்களின் கருத்துப் போல, 16 வயதாகவே இருக்கட்டும். அதற்காக அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்? அங்கே ஆடைகள் தான் காம இச்சைக்க் காரணம் என்பதல்ல. அந்த மனிதன் ஒரு காமுகவெறியன். அவரை ஆண்களுக்கு ஆதரவாக எழுதுவாக நினைத்து ஒட்டுமொத்த ஆண்களையும் அசிங்கப்படுத்தாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றம் தவறிழைப்பதாகவே சொல்லுவேன். அதற்குக் காரமும் இருக்கக் கூடும். ஏனென்றால் அதை நடத்துபவர்களும் மனிதர்கள் தானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு 10 வயதுச் சிறுமி அணிகின்ற ஆடைகளை விடுவோம். உங்களின் கருத்துப் போல, 16 வயதாகவே இருக்கட்டும். அதற்காக அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததை எப்படி நியாயப்படுத்த முடியும்? அங்கே ஆடைகள் தான் காம இச்சைக்க் காரணம் என்பதல்ல. அந்த மனிதன் ஒரு காமுகவெறியன். அவரை ஆண்களுக்கு ஆதரவாக எழுதுவாக நினைத்து ஒட்டுமொத்த ஆண்களையும் அசிங்கப்படுத்தாதீர்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றம் தவறிழைப்பதாகவே சொல்லுவேன். அதற்குக் காரமும் இருக்கக் கூடும். ஏனென்றால் அதை நடத்துபவர்களும் மனிதர்கள் தானே

இதில் எந்த இடத்திலும் குற்றவாளியைப் பாதுகாக்கும் எண்ணத்தில் எமது கருத்துப் பதியப்படவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

நாம் சுட்டிக்காட்டுவது ஆபாச உடை அணிவதன் மூலம் ஆண்களால் இழைக்கப்படும் குற்றங்கள் கூட பெண்களுக்குப் பாதகமாக அமையும் என்பதையும் அதனால் ஆபாச ஆடைகளை நாகரிகம் என்ற போர்வையில் அணிய வேண்டுமா..??! என்பது குறித்தும் தான்..!

இதில் குற்றவாளிக்கு ஆதரவு தேடுவதாக நீங்கள் சொல்வது அல்லது நீங்கள் புரிந்து கொண்டது முற்று முழுதும் தவறானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புறம்.

அதுபோக ஊரில உள்ள 10 வயதுச் சிறுமிகள் போல அல்ல இங்குள்ளவர்கள். 10 வயதிலேயே சிகரட்டும் கையுமா வீதில அலைபவர்களும் இருக்கிறார்கள்..! 12 வயதில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்..! இங்கு தற்போது Teenage pregnancy மிகச் சவாலான விடயமாகி உள்ளது..! 9 - 13 வயதுள்ள பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் நோய் தொற்றுக்கு எதிரான ஊசிகள் போட பாடசாலைகள் பரிந்துரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இவ்வயதுச் சிறுமிகள்.. கருத்தடை சாதனங்கள் பாவிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்..! அப்படி இருக்கு நிலை இங்கு..!

ஆபாசமான உடைகள் தப்புப் பண்ணுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று காட்டுவதற்காகத்தான் இந்தத் தீர்ப்பு என்பதாகவே நாம் காண்கின்றோம். இங்குள்ள நிலவரப்படி.. இது தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது. இங்கு தினமும் பெண்கள் பாலியல் ரீதியில் வன்முறைக்கு உள்ளாவதும் நடை பெறுகிறது..! அதற்கு ஆண்கள் மட்டுமல்ல காரணம்.. ஆண்களோடு சேர்ந்து குடிப்பதும்.. கும்மாளம் அடிப்பதும் தான் காரணம். 10 வயதுச் சிறுமிக்கு கூட அற்ககோல் வாங்கிக் கொடுக்கிறார்கள். அவர்களும் வீதிகளில் நின்று வாங்கிக் குடிக்கிறார்கள்.. நம்ப முடியுமா.. உங்களால் முடியாது.. ஆனால் இங்கு நடக்கிறது..! இவை குறித்து நாம் பெருமையாகப் பேச முடியாது. அது மட்டுமன்றி ஆண்களின் இப்படியான குற்றங்களை நியாயப்படுத்த முடியும் என்று சொல்லேல்ல. இப்படிச் செய்வது குற்றம் செய்யும் ஆண்களுக்கு பெண்களா உதவி செய்யுறாங்க என்பதைத்தான் சொல்கின்றோம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

10 வயது குழந்தையுடன் வல்லுறவு செய்தால்தான் தவறு. 16 வயது சிறுமியுடன் வல்லுறவில் ஈடுபடுவதில் தவறே கிடையாது.22 வயது குமரியுன் வல்லுறவில் ஈடுபட்டால் உங்களுக்கு வெகுமதிகள் காத்திருக்கீன்றன.

பிரித்தானி(அ) நீதிமன்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பார்த்தால் கோடைகாலத்தில் பல ஆண்களின் மனநிலை எப்படிப்போகப்போகிறதோ?

ஆண்களின் மனநிலை இருக்கட்டும்.. அரைகுறையா அலையுற பெண்களின் மனநிலையைப் பற்றியும் சிந்தியுங்க என்பதுதான் கோரப்படுகிறது.

பார்த்த அளவில் எந்த ஆணும் பெண்கள் அளவுக்கு அரைகுறையா திரியுறது வெகு குறைவு..!

மனிதர்கள் எல்லாம் ஞானிகளாக இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நிகழ்வுகளில் உணர்ச்சித் தூண்டலுக்கு ஆளாகி குற்றம் இழைப்பதற்கு.. உணர்ச்சித் தூண்டலுக்குரியவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பது நியாயமானதே..!

எப்படி ஒரு ஆண் வல்லுறவு கொள்கிறானோ.. அதற்கு ஈடானது அவனை வல்லுறவு கொள்ளத் தூண்டுவது. எப்படி கொலைக்குற்றவாளியை விட கொலைக்குத் தூண்டுதலா இருப்பவனும் தண்டிக்கப்படுறானோ.. அந்த நிலை இங்கும் வரனும். அங்கு கேட்க முடியாது தூண்டினா கொலை செய்யனுமா.. மனசை அடக்கிக்கலாம் தானே என்று..! ஆனால் அப்படி கேட்பது கிடையாது..??! ஏன்..??! அதேதான் இங்கும். குற்றம் என்றால் குற்றம் தான். குற்றம் செய்யத் தூண்டுபவனும் குற்றவாளிதான். அவர்களும் தப்பிக்கக் கூடாது. இதுவரை பெண்கள் செய்த குற்றம் அறியப்படல்ல.. ஆனால் இந்தத் தீர்ப்பு.. நிச்சயம் பெண்கள் பக்கமுள்ள தவறை காட்டும்..! அவர்களும் திருந்தனும்.. மாறனும்.. மாற்றிக்கனும்..! எப்பவும் ஆண்களில் மட்டும் குறை பிடிச்சிட்டு தங்கள் தவறை பெண்கள் அறியாது பெருக்குவதால் தான் குற்றங்களை அழிக்க முடியல்ல..!

அந்த வகையில் நீதிமன்றம் பெண்களின் மாயக்கண்ணைத் திறக்கும் என்று நம்பலாம்.

குறித்த குற்றவாளி ஆண்.. வெளியில் விடப்பட்டாலும் கெட்டவன் என்ற முத்திரையோடு கண்காணிப்போடுதான் வெளியே வருகிறான். ஆனால் அவன் வெளிய வரக்காரணம்.. பெண்கள்.. அவர்களின் ஆடை.. எனும் போது பெண்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய நேரத்தில்.. நியாயம் கற்பிக்கக் கூடாது..! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பார்த்தால் கோடைகாலத்தில் பல ஆண்களின் மனநிலை எப்படிப்போகப்போகிறதோ?

வெளியில் இருக்கும் பூ, புஷ்பங்களுடன் காலம் போகப்போகின்றது. B)

இந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பார்த்தால் கோடைகாலத்தில் பல ஆண்களின் மனநிலை எப்படிப்போகப்போகிறதோ?

நிம்மதியா நித்திரை கொள்ளவே முடியலீங்க.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

மிகக் குறைந்த தண்டனை என்று பல சிறுவர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.. சிறுவர் அமைப்புக்கள் சிறுமி மீது பழி சுமத்திக் கருத்துக்களை வைக்கவில்லை..

ஒரு பிஞ்சுச் சிறுமியின் குழந்தைப் பருவத்தைச் சூறையாடியவனின் மனப்பிறழ்வை அவன் வைத்த வாதங்களில் இருந்து புரிந்துகொள்ளலாம்..

தொடர்புபட்ட செய்தி..

Anger at 'lenient' rape sentence

The Attorney General will review the decision

Children's charities have reacted with anger after a window cleaner who raped a girl of 10 was jailed for two years.

Keith Fenn, 24, will be free in four months after a judge said the girl, who was attacked in Henley-on-Thames, Oxfordshire, had appeared older.

The charity Kidscape accused Judge Julian Hall of "trying to find excuses" and said a child must never be blamed.

Attorney General Lord Goldsmith is to decide whether the sentence should be appealed against as "unduly lenient".

......................

....................

'Back to the 1950s'

Dr Michele Elliott, director of Kidscape said the decision had left her "lost for words".

She said: "It takes us back to the 1950s when the victim was blamed if they were dressed provocatively.

"No-one in my opinion could mistake a 10-year-old child, even dressed up, for a 16-year-old. They are just trying very hard to find excuses.

"You can never blame a child victim for sexual abuse when excusing the abuser of any kind of abuse."

The NSPCC added: "There is no excuse for having sex with a 10-year-old, no matter how she dresses."

A spokesman for Lord Goldsmith said he had asked the Crown Prosecution Service to send him the papers on the case, and would consider whether or not to refer the sentence to the Court of Appeal as "unduly lenient".

He has 28 days to make a decision.

http://news.bbc.co.uk/1/hi/uk/6237480.stm

Edited by kirubans

இந்த தீர்பானது நீதிதுறையின் கறுப்பு பக்கம் இந்த தீர்ப்பு பாக்கிஸ்தானின் மோசமான மத தீர்புகளை விட கேவலமானது

நீங்களும்.. மேற்கோள் காட்டியுள்ள குறித்த பகுதியை அகற்றலாம்.. விரும்பும் பட்சத்தில்..! ஜம்முக்கு எமது குறித்த கருத்துத் தொடர்பில் ஏதேனும் தவறான கருத்தோட்டம் இருந்தால் பகிரங்கமாக இங்கேயே சுட்டிக்காட்டலாம். தப்பா எல்லாம் நினைக்க மாட்டம்..! :P

தாத்தா நீங்கள் சொன்ன கருத்தை நான் சீரியசாகவே எடுக்கவில்லை............அதற்கு தானே நகைசுவையா பதில் அளித்திருந்தேன் பேபிக்கு இதை பற்றி தெறியாது என்று அதன் பின் என்ன நடந்தது என்று எனக்கு தெறியாது பாருங்கோ........தாத்தா விவாதம் என்று வந்தால் இருவரும் விட்டு கொடுத்து மன்னிப்பு கேட்டு விவாதம் பண்ணிணா அது பெயர் விவாதம் இல்லை அது தகவல் அது நம்மளுக்கு சரிபட்டு வராது அதற்காக இரன்டு பேரும் சீரியசா விவாதம் நடத்தி கொண்டு இருந்தாலும் அது சலிப்பு ஏற்படும் அதனால் நகைசுவை இவ்வாறு வருவதை நான் ரசிகிறனான் அதற்கு நகைசுவையா மீண்டும் பதில் அளிக்க யாரால் முடியுமே அவன் தான் சிறந்த விவாதி என்று சொல்லி கொடுத்தது நம்ம யூனி தான் பாருங்கோ...........

சிட்னிக்கு வந்த புதிதில் யூனியில நடக்கும் விவாதத்தில் இப்படி ஒருவன் கேட்க நான் டென்சன் ஆகிறது வழக்கம் பிறகு போக போக நாமளே மற்றவனை கடிகிற அளவுக்கு போய் விட்டோம் ஆகவே நீங்க சொன்ன கருத்தில் எந்த வித தவறையும் நான் காணவில்லை.........ஆனால் எல்லாரையும் நாங்கள் அவ்வாறு எதிர்பார்கவும் முடியாது பாருங்கோ இன்னொருவன் அண்ணா என்ன சொன்னார் என்று எனக்கு தெறியவில்லை அந்த கருத்தை மறுபடி சொன்னா நிச்சயமாக என்னிடத்தில் இருக்கும் குறைகளி எடுத்து கொள்ளாம்.........

தாத்தா இப்படியே நான் உங்களுடன் விவாதம் இட ஆசைபடுகிறேன் ஆனால் நிர்வாகவிதிமுறைகளை என்ன சொல்லுகிறது என்று தெறீயவில்லை அத்துடன் தாத்தா என்னை பற்றி உங்களுக்கு தெறியும் தானே பிழை இருந்தா நேரா சுட்டி காட்டுவேன் ஆகையால் நீங்கள் இப்படி கேட்டது தான் வருத்தம் பாருங்கோ.........

மன்னிப்பு கேட்கிறீங்க என்று சொல்லி இருந்தீங்க நான் சிறந்த விவாதியாக இருக்க விரும்புகிறேன் மன்னிப்பு கேட்டு மற்றவர்கள் போல் என்னையும் ஆக்கிவிடவேண்டாம் அதை நீங்களே வைத்து கொள்லுங்கோ........

வரட்டா

:) :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்பானது நீதிதுறையின் கறுப்பு பக்கம் இந்த தீர்ப்பு பாக்கிஸ்தானின் மோசமான மத தீர்புகளை விட கேவலமானது.

அப்படின்னா சிறுமி என்பதற்காக பொட்டுத்துணி கூட இல்லாம போக அனுமதிக்கனும் என்று தீர்ப்பளிப்பது புரட்சி புதுமை என்றீங்களா..??!

சிறுமி என்ற வகைக்குள் எல்லாம் நிகழ்ந்து விடுவதால் அவர்கள் இலகுவாக குற்றங்களைச் செய்திட்டு தப்பிக்கிறார்கள். உதாரணத்துக்கு கடையில் நுழைந்து களவும் செய்வார்கள்.. பிடிக்க கூட முடியாத அளவுக்கு அவர்களுக்கு சலுகைகள்..! இதனால் திருட்டை அழிக்க முடியுமா.. இல்ல பெருக்க முடியுமா..??! சிறுவர்களைத் தான் திருத்த முடியுமா..??!

சிறுவர்களும் சிறுமியர்களும் கண்காணிக்கப்படனும். பல சிறுவர்கள் சிறுமிகள் பாலியல் ரீதியில் தாமாகவே செயற்படுவதால் தானே சிறுமிகள் கர்ப்பமாவது பெருகியுள்ளது..! 14 வயது எல்லையிடப்பட்டும்.. அதற்கு கீழாகவும் பாலியல் ரீதியான தொடர்புகளைச் சிறுமிகள் போணுவதால் இன்று பாடசாலைகளில் பாலியல் தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி 10 வயசிலேயே வழங்கப்பட்ட வேண்டிய நிலை இருக்கிறது. இவை குறித்து சிறுவர் அமைப்புக்கள் மெளனம் சாதிக்கின்றன..??! ஏன்...???!

இலங்கையில் சிறுவர்கள் திட்டமிட்ட பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்.. அண்மையில் கூட ஒரு பிரித்தானியர் சிறையில் அடைக்கப்பட்டார். பல சிறுவர்கள் பணத்துக்காக இவ்வகை தொழிலுக்கு அனுப்பபடுகின்றனர். அவர்கள் அறிந்தோ அறியாமலோ சிறுவர் பாலியலில் ஈடுபடுவோரைக் கவரத்தக்க செயற்பாடுகளைச் செய்கின்றனர்.

சிறுவர் தொடர்பான குற்றங்கள் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு தீர்வுகள் வழங்கப்ப்படாவிடில்.. இந்த நிலை தவிர்க்க முடியாதது.

இந்தத் தீர்ப்பின் முக்கியம் என்னவென்றால்.. சிறுமி என்ற அடிப்படையில் வைப்பதற்கு முதல் பாலியல் ரீதியில் ஒருவரைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்ததுதான் சிறுமி தொடர்பான இவ்வழக்கில்.. முக்கியமானது. இது பெண்கள் தொடர்பான வருங்காலத் தீர்ப்புகளுக்கு ஒரு முன்னோடி ஆகும்.

பெண்களுக்கு அரைகுறை ஆடைகளை அணியக் கொடுத்து அவர்களை விளம்பர முதலீடாக்கி வாழப்பழகி விட்ட மேற்குலக ஆண்கள் சமூகம் இத்தீர்ப்பை 1950 என்று சொல்லிச் சமாளிக்க நினைக்கலாம். ஆனால் 1950 இல்லாத அளவுக்கூ பெருகி வரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு என்ன காரணத்தை அறிந்து களைந்திருக்கிறார்கள்..??! எதுவுமில்லை..!

நடைமுறைக்கு சாத்தியமான மனித ஒழுக்கங்களைப் பேண முடியாத சமூகம் ஒன்றில் இவ்வகைக் குற்றங்களுக்கு ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்ல முடியாது.

அண்மையில் ஒரு வயோதிபர் ஆடையின்றி பெண்களைப் பாலியலுக்குத் தூண்டினார் என்று சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பையும் இதே பிரித்தானிய நீதித்துறைதான் வழங்கியது..! அவர் ஆடையோடு இருப்பதும் இல்லாமல் இருப்பது அவர் விருப்பம்.. பெண்கள் ஏன் அவரைப் பார்க்கனும்.. அதைத் தூண்டலா நினைக்கனும்..என்று யாரும் கேள்வி எழுப்பல்ல..!

உடற்கூற்று ரீதியில் பாலியலுக்குத் தூண்டத்தக்க நிலையில் குறித்த சிறுமி குறித்த வகையில் ஆடை அணிந்தது பாலியல் தூண்டலுக்கான காரணி என்பதை இலகுவாக கொள்ள முடியும். அதுவும் பூங்காவிற்கு அழைத்துச் செல்லும் வரை.. குறித்த சிறுமியின் செயற்பாடு.. சந்தேகத்துக்கிடமானது மட்டுமன்றி அசாதாரணமானதும் கூட..! இப்படி அசாதாரணமாக வளரும் சிறுமியருக்கும் பெண்களுக்கும் இத்தீர்ப்பு நல்ல பாடமாகும். சிறுமியரை அசாதாரணச் சூழலில் வாழ விடும் பெற்றோருக்கும் இது நல்ல படிப்பினையாகும்.

சிறுவர் உரிமை என்று சிறுவர்கள் தொடர்பான சிறுவர்கள் மேற்கொள்ளும் குற்றச் செயற்பாடுகளை மூடிமறைப்பது குறித்த சிறுவர்கள் வாலிப வயதை அடையும் போது தவறான வாழ்க்கையை சமூகத்தில் பிரதிபலிக்க வகை செய்யும். வீதிச் சிறுவர்கள் தான் வன்முறைக் குழுக்களின் உருவாக்கத்தின் பின் முன்னணியில் உள்ளனர், வீதி விபச்சாரத்தில் முன்னணியில் உள்ளனர் என்பதையும் சிறுவர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுவர்களையும் பெண்களையும் கவர்ச்சி நோக்கத்துக்காக பாவிப்பவர்கள் இத்தீர்பை 1950 காலத்துக்கு என்று கொண்டு செல்லலாம். ஆனால் நீதித்துறை தெளிவாக எழுதியுள்ளது தீர்ப்பு.அவர்கள் குற்றவாளியை குற்றமற்றவன் என்று விடவில்லை. அவனுக்கு சரியான தண்டனை அளிக்கப்பட்டுள்ளதுடன்.. குற்றத்துக்கான தூண்டுதலும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு முக்கியமாக அரைகுறை ஆடைகளில் அலையும் பெண்களுக்கு புத்தியை ஊட்டும்.. என்பது திண்ணம்..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.