Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

நாதமுனி சொன்னது போல் தன்னை சிறை சென்ற தியாகியாக காட்டுவது அரசியல் தலைவராக வருவதற்கு பெரிதும் உதவும்.

மேயர் மணிவண்ணன் ஒரு அரசியல் தலைவராக வருவதில் தப்பு ஏதும் இல்லையே. ஆட்களுக்கு முத்திரை குத்தி சாணி அடிப்பது எல்லா காலங்களிலும் நடக்கின்றது. 

  • Replies 59
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மேயர் மணிவண்ணன் ஒரு அரசியல் தலைவராக வருவதில் தப்பு ஏதும் இல்லையே. ஆட்களுக்கு முத்திரை குத்தி சாணி அடிப்பது எல்லா காலங்களிலும் நடக்கின்றது. 

தப்பு இல்லை சுமத்திரனின் ஆளுகைக்குள் இருக்கும் ஒருவரால் மேலும் மேலும் குழப்பத்தை மட்டுமே தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? விக்கி VS ஆரசாங்கம்.

April 10, 2021

Mani-Wicki-Gota-Douck.jpg

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, (i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் (iii) சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், அதேவேளை, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? பொலிசார் மக்கள் பொலிசாரா ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்
10.04.2021
 
https://globaltamilnews.net/2021/159178/

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர்

மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு  அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், தூதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயா் உறவுகள், நண்பா்கள், ஆதரவாளா்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. என்னுடைய பயணம் மிக நோ்மையாது, வெளிப்படையானது, மக்களுக்கானது என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப்பிரிவினாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தனது கைது மற்றும் விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்.மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரியான நடவடிக்கை தொடா்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸாா் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன். 

“துாய்மையான நகரம், துாய்மையான கரங்கள்” என்று நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்து கொள்வதே யாழ்.மாநகர மக்களுக்கான எனது பணியாகும். 

அந்த பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிக தவறாக வியாக்கியானம் செய்து என்னை கைது செய்தாா்கள். 

மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு  அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், தூதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயா் உறவுகள், நண்பா்கள், ஆதரவாளா்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. என்னுடைய பயணம் மிக நோ்மையாது, வெளிப்படையானது, மக்களுக்கானது. 

பாதை எப்படியானது என்பதை தெரிந்து கொண்டுதான் பயணத்தையே ஆரம்பித்திருக்கிறேன். 

ஆதலால் எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பணயம் நிற்கப்போவதில்லை. மக்களுக்கான எனது பயணம் தொடரும், எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும், அமைப்புக்களுக்கும், மன நிறைவுடன் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/103623

இது தொடர்பாக திரு. விக்கினேஸ்வரினின் அறிக்கை மிக முக்கியமானது. ஆனால் அவர் இதை ஊடக அறிக்கையாக மட்டும் கொடுத்தாரா அல்லது சர்வதேச நாடுகளுக்கும் ஐநா போன்ற அமைப்புகளுக்கும்,  முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி என்ற ரீதியில்  அறிக்கையாக அனுப்பினாரோ தெரியாது. அவ்வாறு செய்வதூடாக ஶ்ரீலங்காவின் நீதித்துறையில் அரசியல் தலையீடு இருப்பதை ஆவணப்படுத்த முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மேயர் மணிவண்ணன் ஒரு அரசியல் தலைவராக வருவதில் தப்பு ஏதும் இல்லையே. ஆட்களுக்கு முத்திரை குத்தி சாணி அடிப்பது எல்லா காலங்களிலும் நடக்கின்றது.

தாராளமாக அவர் ஒரு அரசியல் தலைவராக வரலாம் அப்படி வருவதற்காக ஸ்ரண் செய்து காட்டுவது தான் தவறு.

நியாயத்தை கதைப்போம் said: மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2021 at 05:08, தமிழ் சிறி said:

மணிவண்ணனின் கூற்றுப்படி தீர்மானம் இயற்றப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

EPDP இனர் கூறுவது போல் இதில் ஒளிவு மறைவு இல்லையே 

46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தாராளமாக அவர் ஒரு அரசியல் தலைவராக வரலாம் அப்படி வருவதற்காக ஸ்ரண் செய்து காட்டுவது தான் தவறு.

நியாயத்தை கதைப்போம் said: மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? நீதிமன்றமா? விக்கி VS ஆரசாங்கம்.

April 10, 2021

Mani-Wicki-Gota-Douck.jpg

யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, (i)மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் (ii)அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் (iii) சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும். ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், அதேவேளை, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாத பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக? பொலிசார் மக்கள் பொலிசாரா ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் மாவட்டம்
10.04.2021
 
https://globaltamilnews.net/2021/159178/

ஒரு கதையின் ஆசிரியரும், இயக்குனரும் சேர்ந்து தமக்கு ஏற்றபடி கதை எழுதி, அதன் முடிவையும் தீர்மானித்தபின்னே அதை அரங்கேற்றுகிறார்கள். பாவம் வாசகர்கள் கதையின் முடிவை அறிவதற்கு  கதை முழுவதையும் வாசிக்கும்வரை, நாடகம் முடியும் வரை  பொறுத்திருக்க வேண்டுமே. முடிவு இப்படிதான் என்று நாடகத்தின் ஆரம்பத்திலேயே சொல்ல; கதை ஆசிரியராலும், இயக்குனராலும், அல்லது இவர்களின் கதை எப்படியிருக்கும் என்று அனுமானிக்க இவர்களின் நாடகத்தை தொடர்ந்து பார்த்து, ரசிப்பவர்களால், அதில் பங்கேற்று நடிப்பவர்களால்  மட்டுமே முடியும்.

இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்ன ஆதாரமாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

அதற்கு ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

யாழ். மாநகர முதல்வர் கைதானது மக்களைத் திசை திருப்பும் முயற்சியே- சஜித்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாழ். மாநகர முதல்வர் தமது கடமையின்போது ஏதாவது பிழை செய்திருந்தால் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடைமுறைகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, அவரைப் பயங்கரவாதிபோலச் சித்தரித்து, நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இன்னும் அறியப்படாது உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, புதிதாக அச்சங்களை ஏற்படுவதைத் தவிர்த்து ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1209073

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு காட்டை ஆண்டு வந்த வேங்கை ஒரு நாள் மறைந்து போனது. வேங்கை இறந்து விட்டதாக சிலர் கூறினார்கள். வேங்கை ஒரு நாள் திரும்பி வரும் என்று இன்னும் சிலர் கூறினார்கள்.
அதற்குள் காட்டுக்குள் நுழைந்த சிங்கங்களும், அவற்றின் எடுபிடிகளான நரிகளும் அங்கிருந்த விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தன.
ஒரு காலத்தில் சிங்கத்தின் குகையில் நின்று சீறிய சிறுத்தையின் குட்டி ஒன்றும், வேங்கையின் நிழலில் வளர்ந்த ஏனைய சில சிறுத்தைக் குட்டிகளும் மட்டும் சிங்கங்களையும், நரிகளையும் எதிர்த்து நின்றன. அதனால் சிங்கங்களால் தாம் நினைத்ததை சாதிக்க முடியவில்லை.
அப்பொழுது தான் சிறுத்தைத் தோல் அணிந்த நரி ஒன்றை சிறுத்தைக் குட்டிகளின் மத்தியில் சிங்கங்கள் களமிறக்கி விட்டன.
முதலில் அந்த நரியைத் தங்களின் இனம் என்று தான் சிறுத்தைக் குட்டிகள் நினைத்தன.
ஒரு நாள் நரியின் சிறுத்தைத் தோல் கழன்று விழுந்தது. நரி அம்மணமாகியது.
நரியின் வேசம் கலைந்ததால் சிங்கங்கள் திகைத்துப் போயின.
மறைந்து போன வேங்கையிடம் நீல நிறத் தோல் கொண்ட காவல் படை ஒன்று இருந்தது ஒரு நாள் சிங்கங்களுக்கு நினைவில் வந்தது.
அதனால் நரிக்கு நீலச் சாயம் பூசி மீண்டும் அதனைக் காட்டுக்குள் சிங்கங்கள் அனுப்பி வைத்தன. நீலச் சாயம் பூசிக் காட்டுக்குள் நுழைந்த நரியை வேங்கையின் காவல் படை என்று நம்பி எருமை மாடுகள் சில நரிக்கு அருகில் சென்றன.
அப்பொழுது ஒரு அசரீரி ஒலித்தது: 'எருமை மாடுகளே கவனம். உங்களை சிங்கங்களிடம் ஒப்படைப்பதற்காக நீலச் சாயம் பூசியவாறு சிங்கங்களின் அடிமையான நரி வந்துள்ளது.'
இதைக் கேட்டதும் நரிக்குக் கோபம் வந்து விட்டது. அசரீரி ஒலித்த திசையில் பாய்ந்த நரி, குட்டை ஒன்றுக்குள் விழுந்தது.
அத்தோடு நரியின் சாயம் வெளுத்துப் போனது.
(யாவும் கற்பனை அல்ல)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.