Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்கள் அனுப்பும் அளவுக்கு அவர்களால் அனுப்ப முடியாது என நினைக்கிறன் 

சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதில்  ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள் உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 20:18, nunavilan said:

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் வீடு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு இராணுவம். யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ராணுவ ( இலங்கை ) வீரருக்கு 22 வருடங்கள் சேவைகள் புரிய வேண்டும்  22 வருடங்கள் முடிந்த பிறகு ஓய்வு பெறலாம் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது அநேகமாக யுத்தத்தில் கலந்து சண்டையிட்டவர்கள் ஓய்வு  பெற்று இருக்கலாம்

ஆஹா.... நல்ல கண்டுபிடிப்பு! இலங்கை வரலாற்றில் இராணுவத்தில் சேர்ந்த அனைவர்க்கும் இப்போதுதான் 22 வருடங்கள் சேவை பூர்த்தியாகிறது. இதற்கு முதல் எல்லோரும் 22 வருடங்கள்  பூர்த்தியாகாதவர்கள். இதற்கு முதற் காலங்களில்  ஏன் தமிழர் இராணுவத்தில் சேர, சேர்க்க ஆர்வம் காட்டவில்லை? இப்போ மட்டும் இருபக்கமும் ஆர்வம் வரக் காரணம் என்னவோ? அப்போ மற்றய அரசாங்க துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு இன்னும் 22 வருடங்கள் அல்லது அவர்கள் சேவை பூர்த்தியாகும் காலம் இன்னும் வரவில்லையோ? அது இருக்கட்டும். வேலையில்லாத காரணத்தினால் தமிழர் இராரணுவத்தில் சேர்வதாக வாதம் செய்வோர்: அதே பிரதேசத்தில் மற்றைய  அரசாங்க இலாக்காக்களுக்கு வெற்றிடம் வரும்போது அந்த  இடத்திற்கு சிங்களவரை நியமிப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டால் தமிழர் வெளிநாட்டுக்காசில் வாழ நினைக்கிறார்கள், தகுதி பார்க்கிறார்கள், சோம்பேறிகள் என்கிறார்கள். இராணுவத்தில் சும்மா இருக்க சம்பளம் வழங்குகிறார்களோ?  இதெல்லாம் வேண்டுமென்று தமிழரை திட்டமிட்டு நலிவடையச் செய்து அதில் அறுவடை செய்யும் தந்திரம். எங்கள் உறவினர், ஊரவர் பலர் இந்த இராணுவம், கடற்படை, காவற்படையில் இருந்தவர்கள், விலகியவர்கள் தாம்.  அவர்களின் சேவையில் அவர்கள் நடத்தப்பட்ட  விதம் எனக்கும் புரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார். 

பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும். 

ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள்.

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள. 

ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள். 

சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதில்  ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள் உண்மையா?

இல்லாமல் என்ன 
அங்கே தமிழர்களையும், முஸ்லிம்களையும் திரத்தி விட்டு நாட்டை தனி சிங்கள நாடாகமாற்றுவோம் 
என்று கூச்சல் போடும் நாட்டுப்பற்றாளர்கள், எந்த ஐரோப்பிய நாடோ வளர்ந்த ஆசிய பசுபிக் (அவுஸ், நியூசி, சிங்கை,தென் கொரியா,ஜப்பான்  ) நாடோ நிரந்தர குடியுரிமை அளிக்கிறது என்று அறிவித்தால் போதும் வரிசையில் துண்டை போட்டுக்கொண்டு முன்வரிசையில் நிற்பார்கள் , 
முகப்புத்தகத்தில் பார்க்கவில்லையா நந்தசேனவின் உத்தியோகபூர்வமற்ற ஊதுகுழல்கள் முக்கால்வாசி வெளிநாடுகளில் வெள்ளைகளின் ஜனநாயகத்தை சுவைத்துக்கொண்டு நாட்டை எரித்து விளையாடிக்கொண்டிருப்பதை  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 05:32, satan said:

ஆஹா.... நல்ல கண்டுபிடிப்பு! இலங்கை வரலாற்றில் இராணுவத்தில் சேர்ந்த அனைவர்க்கும் இப்போதுதான் 22 வருடங்கள் சேவை பூர்த்தியாகிறது. இதற்கு முதல் எல்லோரும் 22 வருடங்கள்  பூர்த்தியாகாதவர்கள். இதற்கு முதற் காலங்களில்  ஏன் தமிழர் இராணுவத்தில் சேர, சேர்க்க ஆர்வம் காட்டவில்லை? இப்போ மட்டும் இருபக்கமும் ஆர்வம் வரக் காரணம் என்னவோ? அப்போ மற்றய அரசாங்க துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு இன்னும் 22 வருடங்கள் அல்லது அவர்கள் சேவை பூர்த்தியாகும் காலம் இன்னும் வரவில்லையோ? அது இருக்கட்டும். வேலையில்லாத காரணத்தினால் தமிழர் இராரணுவத்தில் சேர்வதாக வாதம் செய்வோர்: அதே பிரதேசத்தில் மற்றைய  அரசாங்க இலாக்காக்களுக்கு வெற்றிடம் வரும்போது அந்த  இடத்திற்கு சிங்களவரை நியமிப்பதற்கு என்ன காரணம்? என்று கேட்டால் தமிழர் வெளிநாட்டுக்காசில் வாழ நினைக்கிறார்கள், தகுதி பார்க்கிறார்கள், சோம்பேறிகள் என்கிறார்கள். இராணுவத்தில் சும்மா இருக்க சம்பளம் வழங்குகிறார்களோ?  இதெல்லாம் வேண்டுமென்று தமிழரை திட்டமிட்டு நலிவடையச் செய்து அதில் அறுவடை செய்யும் தந்திரம். எங்கள் உறவினர், ஊரவர் பலர் இந்த இராணுவம், கடற்படை, காவற்படையில் இருந்தவர்கள், விலகியவர்கள் தாம்.  அவர்களின் சேவையில் அவர்கள் நடத்தப்பட்ட  விதம் எனக்கும் புரியும்.  

சிம்பிளா சொல்லவா ஒ எல் தரத்தில் 6 பாடங்களுக்கு பாஸ் பண்னியவருக்கு அலுவலத்தில் வேலை கொடுக்க முடியாது மேலதிகமாக நானும் சொல்ல் இன்னும் இழுத்துக்கொண்டே செல்லும் யுத்தத்தின் பின்னர் கல்வியில் வீழ்ச்சி வட கிழக்கு அதுக்கும் அரசாங்கம்தான் காரணம் என்பீர்கள் நீங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்து நின்றது வடக்கு. ஒவ்வொரு ஆண்டு பரீட்சைப்பெறுபேறுகளை பார்த்தால் புரியும்.  கிழக்கைபற்றித் எனக்கு  தெரியாது. படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது அரசியல் வாதிகள் வெற்று வாக்குகளை   கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். வடக்கு கிழக்கு பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை..... சோம்பேறிகள் என்று சொன்னார்கள், இப்போ படிப்பறிவு காணாது.... இன்னும் என்னென்ன வருமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

வடகிழக்கில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது அரசு. 2012,2013 தொடங்கி 2020,பட்டத்தை முடித்தவர்கள்    இதுகூட  தெரியாத உங்களுடன் கருத்தாடுவது 😷🙄🙄🙄 அது மட்டும் அல்லாமல் இலங்கை அரசு  இன்று திண்டாடுவது இவர்களுக்கு வழங்க அதிக பணம் (சம்பளம்) தேவைப்படுவதாலும். இலங்கை அரசு அதிக கடன் வெளிநாடுகளில் வாங்கி குமிக்கிறது. இதில் வடகிழக்கில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் அடங்கும். 😝😝🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 05:21, ரஞ்சித் said:

ராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை, பொலீஸ் ஆகிய அரச படைகளில் தமிழர்கள் இணைவதை மட்டக்களப்பில் இருந்த காலங்களில் கண்டிருக்கிறேன். வேலைவாய்ப்பு என்று மட்டுமே பார்த்து இணைகிறார்கள். யாழ்ப்பாணத்தில் 80 கள்வரை கடற்படை மற்றும் பொலீஸில் இருந்தார்கள், பின்னர் குறைந்துவிட்டது.

பசியென்று வரும்போது மற்றையவை எல்லாமே பறந்துவிடும். இதுதான் நடக்கிறது. 

படித்தும் வேலையில்லையென்பதால் ராணுவத்தில் இணைகிறார்கள். 

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்....அன்றே இனபாகுபாடு அற்று இனவிகிதாசாரப்படி முப்படைகளிலும் பொலிஸிலும் ஆட்சேர்ப்பு நடந்திருந்தால் புலிகள்,ஏனைய இயக்கங்கள்...ஏன் இன்று நாங்கள் எல்லாம் உருவாகியிருக்கமாட்டோம் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியிருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 11:04, ரஞ்சித் said:

சிங்கள ராணுவத்திலும், காவல்த்துறையிலும் பெருமளவில் தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்படுவது முன்னர் நடந்திருக்கவில்லை. மிகக் குறைவான தமிழர்களே ராணுவத்தில் முன்னர் இருந்தனர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தின் தளபதியாக ஒரு தமிழரான அன்டன் முத்துக்குமார் இருந்திருக்கிறார். அதன்பிறகு பிரிகேடியர் துரைராஜா என்பவர் மருத்துவப் பிரிவிற்குப் பொறுப்பாக 80 களின் இறுதிப்பகுதியில் இருந்திருக்கிறார். 

பின்னர் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றபின்னர் புலிகளுக்கெதிரான இயக்கங்களில் இருந்தவர்கள் ராணுவத்தின் துணைப்படையாக, உளவாளிகளாக செயற்பட்டு வந்தனர். ராசீக், புளொட் மோகன், டக்கிளஸ் போன்றவர்கள் இதற்குள் அடங்கும். 

ஆனால், ராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் சேர்க்கப்பட்டது கருணாவின் பிரிவின் பின்னர்தான். அதிலும் குறிப்பாக இவர்கள் ஒன்றில் புலிகளின் முன்னாள்ப் போராளிகளாக இருந்தவர்கள் அல்லது கருணாவின் பிரிவின் பின்னால் அவரோடு இணைந்தவர்கள்.

கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையே நேரடியான மோதல் வலுத்தபோது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து கருணா சுமார் 2500 போராளிகளுடன் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் ஏறத்தாள அனைவருமே ராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ சேர்க்கப்பட்டுள்ளதாக கருணா 2009 போர் முடிவுறும் தறுவாயில் கூறியிருந்தார். மாதுரு ஓயா பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தின் விசேட படைகளுக்கான முகாமிலிருந்தே கருணாவின் போராளிகளில் சுமார் 300 பேர்வரை தொப்பிகல காட்டுப்பகுதியில் செயற்பட்டு வந்ததாக கருணா கூறியிருக்கிறார். இவர்களை விடவும் இன்னும் 2,200 கருணா குழு போராளிகள் ராணுவத்தில் பல்வேறு படைப்பிரிவுகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு தமிழ் இளைஞர்கள் கருணாவால் ராணுவத்தில் இணைக்கப்பட்டது வெறுமனே வேலைவாய்ப்பிற்காகத்தான் என்று கூறி ஒதுக்க முடியாது. 2009 இல் போர் நிறைவடைய முன்னர் இணைக்கப்பட்ட இவர்கள் அனைவருமே ஒரு காரணத்திற்காகத்தான் ராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டார்கள், அது புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்த, தமிழர்களுக்கெதிரான போரில் தமிழர்களையே பயன்படுத்தி, சிங்கள இளைஞர்களின் இழப்புக்களைக் குறைத்துக்கொள்ள. 

ஆனால், யுத்தம் முடிவடைந்தபின்னர் ராணுவத்திலும், பொலீஸாரிலும் இணைக்கப்பட்டு வரும் தமிழர்களின் நிலை வேறானது. வேலைவாய்ப்பு, வறுமை போன்ற காரணங்களுக்காக இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். வன்னியில் போர் முடிந்த பின்னர் ராணுவச் சேவையில் பல தமிழ்ப் பெண்களை ராணுவம் சேர்த்தது. சிலர் மாயமான காரணங்களால் சுகயீனமுற்றிருந்தார்கள், பலர் ராணுவத்தை விட்டுத் தப்பியோட முயன்றிருந்தார்கள். 

சிங்கள ராணுவத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவது நிச்சயமாக தமிழினத்தின் இருப்பிற்கும், அபிலாஷைகளுக்கும் நேர் எதிரானது. இன்று இதனை ஆதரிக்கும் சிலர் என்னதான் காரணங்களை முன்வைத்தாலும், அவர்களின் அடிமனதிலும் இந்த எண்ணம் இருக்கும் என்பது திண்ணம். ஒரேயொரு உண்மை என்னவென்றால், போரின் பின்னரான எமது சமூகத்தின் நிலையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் இளைஞர்களை சிங்கள ராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கிறது. நாம் ஒரு சமூகமாக இவர்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தாதவரை இதனைத் தடுக்க முடியாதிருக்கும். 

சிங்கள இராணுவத்தின் தமிழர் மீதான வெறுப்பை விட இந்த தமிழ் இராணுவத்தினருக்கு தமிழர் மீது அதிக வெறுப்பு இருக்கும்...சிறந்த உதாரனம் அண்மையில் நல்லூர் கோவில் சம்பந்தமாக அரசு சார்பு இளைஞர் சொன்ன விடயம்....

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, putthan said:

அன்றே இனபாகுபாடு அற்று இனவிகிதாசாரப்படி முப்படைகளிலும் பொலிஸிலும் ஆட்சேர்ப்பு நடந்திருந்தால்

சிங்களம் மட்டும் என்ற சட்டம் ஏன் கொண்டு வந்தார்கள்? அன்றே இனப்பாகுபாட்டுக்கு அடிக்கல் நாட்டியாயிற்று. தொண்ணூறுகளில் என்று நினைக்கிறன் வடக்கில் பொலிஸாருக்கு ஆள் சேர்க்கிறோம் என்று அறிவித்தல் வந்து, படித்த இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்தார்கள். அவர்களில் எனக்குத் தெரிந்தவரையில் யாரும்  சேர்க்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

நான் 82 களில் SI க்கு அப்பிளிக்கேசன் போட்டனான்😆

தனது பெயரை முஸ்லீம் பெயராக மாற்றி பதவி உயர்வு பெற்ற ஒருத்தரையும் தெரியும்...தமிழ் என்ற காரணத்தினால் பதவி உயர்வுகள் கிடைக்கவில்லை என கூறினார்..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த வரையில், நீங்கள் குறிப்பிடும் ஆண்டில் எட்டாந்தரம் கூட படித்திருக்க தேவையில்லை SL  லில் உயர் பதவியைவிட, சாதாரணமாக இணைவதற்கு.  உங்களை இணைத்துக்கொள்ளாததற்கு  காரணம் நீங்கள் தமிழர் என்று சொல்லலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யுத்தத்தின் பின்னர் கல்வியில் வீழ்ச்சி வட கிழக்கு அதுக்கும் அரசாங்கம்தான் காரணம் என்பீர்கள் நீங்கள் .

சேச்சே......  இப்பிடியெல்லாம் இலகுவாய் குற்றஞ் சுமத்தமுடியுமா? போதைப்பொருள் தாராளமாய் மாணவர்களிடையே  புழங்க விட்ட தாராள மனது,  வாள்வெட்டுக்குழுக்களை உருவாக்கி, ஊக்குவித்து, மோதவிட்டு வேடிக்கை பார்த்த காவற்துறை, இராணுவப்படை இருக்க, இவ்வளவு வசதி செய்து தந்த, பெருந்தன்மையுள்ள அரசாங்கத்தை காரணஞ் சொல்ல யாருக்கு மனம் வரும்?  

என்ன.... போடுற வேஷந்தான் கொஞ்சம் பொருந்தவில்லை என நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

என்ன.... போடுற வேஷந்தான் கொஞ்சம் பொருந்தவில்லை என நினைக்கிறன். 

உங்களைப்போன்ற இலங்கையென்றால் அங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என எள்லவும் புரியாதவர்களிடம் இதையேதான் எதிர்பார்க்க முடியும் நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் உறவுகளும், வெளிநாடுகளில் வாழும் உறவுகளும் மனதால், சிந்தனைகளால் எவ்வளவு தூரம் பிரிந்து உள்ளார்கள், எவ்வளவு விதமான வேற்றுமைகள் உள்ளன என்பதை இங்குள்ள உரையாடல்கள் விபரிக்கின்றன?

வெளிநாடுகளில் வாழும் உறவுகளையும், இலங்கையில் வாழும் உறவுகளையும் இணைப்பதற்கு வெறும் சோசல்மீடியா மட்டும் போதாது? 

ஏதாவது ஒரு வினைத்திறனான வகையில் இவர்களிடையே இணைப்பு பாளம் Bridge ஒன்று ஏற்படுத்தப்படலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.