Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

BeFunky-collage%2B%25283%2529.jpg
(வா.சுதர்ஸ்சன்)
இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கு மூலோபாயம் திட்டம் - 2020-2025' க்கு இணங்க புரிதல், இன நல்லிணக்கம் , தேசபக்தி சகவாழ்வு ,பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஒரு புதிய திருப்புமுனையாக 359 தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணம்
விடத்தல்பலை பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறியானது 2021 ஓகஸ்ட் மாதம் 27 வரை யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்லவின் மேற்பார்வையில் தொடரும்.

பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் நடைப்பெற்ற ஆரம்ப விழாவில் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. தனது உரையில் சிவில் வாழ்க்கையிலிருந்து இராணுவ வாழ்க்கைக்கு மாற்றும் செயல் முறையுடன் தொடங்கும் அடிப்படை இராணுவ பயிற்சியின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தினார். 

மேலும் பயிற்சி காலத்தில் பொறுப்புகள் ,ஒழுக்கம், நடத்தை, ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இந்த ஆட்சேர்ப்பு பயிற்சி நெறியானது நிச்சயமாக தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் இளைஞர்களை ஈர்க்கும் அதே வேளை அவர்களை தொழில்த்துறை வீரர்களாக மாற்றுவது, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உடல், மன மற்றும் தார்மீக ரீதியில் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. 

இராணுவத்திற்கு புதிய வீரர்களை சேர்ப்பதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடங்கிய முதல் ஆட்சேர்ப்பு பாடநெறி இதுவாகும்.

http://www.battinews.com/2021/05/blog-post_51.html

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

புரிதல், இன நல்லிணக்கம் , தேசபக்தி சகவாழ்வு ,பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஒரு புதிய திருப்புமுனையாக 359 தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணம்

இந்த பாடநெறியால் மற்றவர்களை ஏமாற்ற முடியுமே தவிர,  இனநல்லிணக்கம், தேச பக்தி வளராது.   அவரவரின் உரிமைகளை, சுதந்திரத்தை மதித்து, அவர்களுக்குரிய அந்தஸ்தை,  உரிமைகளை வழங்குபோது அது தானாகவே  உருவாகும். அவற்றை வழங்காமல் போக்கு காட்டும் போதனை  (தந்திரம்) பயனளிக்காது. எங்களுக்குரியவற்றை புடுங்கி வைச்சுக்கொண்டு இனநல்லிணக்கம் போதிக்கினமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இராணுவத்திற்கு புதிய வீரர்களை சேர்ப்பதற்கான முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடங்கிய முதல் ஆட்சேர்ப்பு பாடநெறி இதுவாகும்.

கிருபன் அப்ப யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிவிட்டது என்ன அப்படித்தானே

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இளைஞர்களுடன் ஆட்சேர்ப்பு பயிற்சி பாடநெறி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

BeFunky-collage%2B%25283%2529.jpg

http://www.battinews.com/2021/05/blog-post_51.html

இலங்கை இராணுவத்தில் இணைபவர்கள் இவ்வளவு காலம் கட்டாய சேவை செய்யவேண்டும் என்ற விதிமுறைகள் காணப்பட்டால் அவற்றின் படிமங்கள் எவை? எவ்வளவு காலத்தின் பின் விலகமுடியும்?

வசதி அற்றவர்களுக்கு நவீன தொழில் பயிற்சிகளில் அறிவு, அனுபவம் பெறுவதற்கு இங்கு வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எல்லா இனத்தவர்ககளும் இணைந்துதானே கற்கின்றார்கள்? இங்குள்ள படங்களில் யார் எந்த இனத்தை சேர்ந்தவர் என்று இனம் காண முடியவில்லையே!

வீட்டில் சோறு பொங்குவதற்கு இதுவே ஒரு வழியாக தெரிந்தால் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதில் தவறில்லை.

Edited by நியாயத்தை கதைப்போம்

ஒரு மொழிக்காக உங்களைக் கொல்வதில் என்ன பயன்?
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்.
தமிழகம் தங்கள் சொந்த மொழியான தமிழை வெறுக்கிறது.
ஆனால் வடகிழக்கு தமிழர்கள் எதற்காக போராடுகிறார்கள்?
சிங்களவர்களுடன் ஒன்றிணைந்து, சிங்களத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
முழு தீவு வளர்ச்சிக்கும் சீனா உதவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sean said:

இனவெறியைத் தூண்டித்தான் தமிழ் தேசியம் வளரும் என்று எதிர்பார்த்தால் இப்படித்தான் சலிப்பு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இனவெறியைத் தூண்டித்தான் தமிழ் தேசியம் வளரும் என்று எதிர்பார்த்தால் இப்படித்தான் சலிப்பு வரும்.

எங்களுக்கென்றால் இரத்தம் அவங்களுக்கு என்றால் தக்காளி சட்னி :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிருபன் அப்ப யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிவிட்டது என்ன அப்படித்தானே

ஆம்.

இதே வேகத்தில் போனால் இன்னும் 25 வருடங்களில் மாவட்ட சபைக்கான தேவை கூட இருக்காது.

சிங்களவனா கொக்கா..🤥

5 hours ago, கிருபன் said:

இனவெறியைத் தூண்டித்தான் தமிழ் தேசியம் வளரும் என்று எதிர்பார்த்தால் இப்படித்தான் சலிப்பு வரும்.

மதிலைக் கண்டால் .....தூக்கவேண்டியதுதான். 

பழக்கதோசம் ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

மதிலைக் கண்டால் .....தூக்கவேண்டியதுதான். 

பழக்கதோசம் ☹️

ஏனுங்கோ எப்பவும் பின்னாடி வந்து இடிக்கிறீங்க😂

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப செய்யிறதை ஏலவே செய்திருந்தால், தமிழினம் இவ்வளவு இழப்பு, அழிவுகளை சந்தித்து பரதேசிகளாய் அலைய வேண்டி வந்திருக்காது. எமது எல்லா வளங்களும் சுரண்டப்பட்டு, சொரணை கெட்ட, படிப்பறிவற்ற, பண்பாடற்ற சமுதாயமாக தோற்றுவித்து வேலை வழங்குகினமாம். நாங்கள் சொன்னால் அரசாங்கத்துக்கு வெள்ளை அடிக்கிறவை காரணங்களை அடுக்கிக்கொண்டு பாய்ந்து வருவினம். எதுக்கு வம்பு? பொறுத்திருந்து பாப்போம். இவர்கள் என்ன வேலை செய்யப்போகிறார்கள், எப்படி நடத்தப்படப்போகிறார்கள், எத்தனை பேர் உயிரோடு மீளுவார்கள் என்று. இதை வைத்து வேறொரு முறையில் எமது இனம் ஏமாற்றப்படப்போகிறது என்பது மட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஏனுங்கோ எப்பவும் பின்னாடி வந்து இடிக்கிறீங்க😂

spacer.png

பழக்க தோசம். வேறென்ன ..? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இப்ப செய்யிறதை ஏலவே செய்திருந்தால், தமிழினம் இவ்வளவு இழப்பு, அழிவுகளை சந்தித்து பரதேசிகளாய் அலைய வேண்டி வந்திருக்காது. எமது எல்லா வளங்களும் சுரண்டப்பட்டு, சொரணை கெட்ட, படிப்பறிவற்ற, பண்பாடற்ற சமுதாயமாக தோற்றுவித்து வேலை வழங்குகினமாம். நாங்கள் சொன்னால் அரசாங்கத்துக்கு வெள்ளை அடிக்கிறவை காரணங்களை அடுக்கிக்கொண்டு பாய்ந்து வருவினம். எதுக்கு வம்பு? பொறுத்திருந்து பாப்போம். இவர்கள் என்ன வேலை செய்யப்போகிறார்கள், எப்படி நடத்தப்படப்போகிறார்கள், எத்தனை பேர் உயிரோடு மீளுவார்கள் என்று. இதை வைத்து வேறொரு முறையில் எமது இனம் ஏமாற்றப்படப்போகிறது என்பது மட்டும் உண்மை.

நல்லது நடந்தால் சரி ....இராணுவத்தில் தமிழர்கள் ,முஸ்லீம்கள் கடைமையாற்றுகிறார்கள் என்று காட்ட வேண்டிய காட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது....யாருக்கு என்று கேட் க வேண்டாம் .....சந்திரிக்கா ஆட்சியில் காலத்தில் தமிழ் இராணுவப்படை உருவாக்குவோம் என்று சொன்னவர்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

ஆம்.

இதே வேகத்தில் போனால் இன்னும் 25 வருடங்களில் மாவட்ட சபைக்கான தேவை கூட இருக்காது.

சிங்களவனா கொக்கா..

இப்ப மாத்திரம் என்னவாம் 

5 hours ago, putthan said:

நல்லது நடந்தால் சரி ....இராணுவத்தில் தமிழர்கள் ,முஸ்லீம்கள் கடைமையாற்றுகிறார்கள் என்று காட்ட வேண்டிய காட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது....யாருக்கு என்று கேட் க வேண்டாம் .....சந்திரிக்கா ஆட்சியில் காலத்தில் தமிழ் இராணுவப்படை உருவாக்குவோம் என்று சொன்னவர்...

இன்னும் 5 ஆண்டுகளில் கணிசமான  எண்ணிக்கையில் தமிழ் பொலிசார், ( பெண்கள்+ஆண்கள் ) ஆர்மி ( முன்னாள் போராளிகள் ஆண் + பெண்)  தற்போதுள்ள ஆண் ,பெண்கள் கடற்படை , விமானப்படை என்பனவற்றில் பல ஆயிரம் பேர் சேர்ந்து இருப்பார்கள் புத்தன் வேலை வேண்டும் இதுதான் நிலை படித்தவர்கள் தான்  எல்லோரும் 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, putthan said:

நல்லது நடந்தால் சரி

இதுவரையில் நடவாதது இனிமேற்தான் நடக்கபோகுதாக்கும். தாங்கள் செய்தது பிழை என்று ஒத்துக்கொள்ளாதவர்கள், இன்னும் தாங்கள் அழித்த இனத்தையே குற்றம் சுமத்திகொண்டிருப்பவர்கள். இவர்களிடம் இருந்து நல்லது வருமா? போக்கத்து நிக்கும் எம்மினத்துக்கு வேறு வழியில்லை, எல்லாம் பிடுங்கப்படாயிற்று அதை வைத்து எதிரி தன்னை புனிதனாக காட்ட முனைகிறான். ஏதோ தமிழர் விரும்பி இராணுவத்தில் சேர்வதுபோல படம் காட்ட பலர் முயற்சி செய்கிறார்கள். தலைவர் பிறந்த இனத்தில்தான் இப்படிப்பட்டவர்களும் பிறந்திருக்கிறார்கள். இராணுவத்தில் சேர்பவர்களை நான் குறை சொல்லவில்லை. எப்படி நம்மை விழுத்தி, விழுந்த எம்மை வைத்து தன்னை பெருமைப்படுத்திக்கொள்கிறான் எதிரி. அதை நாமும் கைதட்டி வரவேற்கிறோம்  என்பதுதான் வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 02:13, தனிக்காட்டு ராஜா said:

இப்ப மாத்திரம் என்னவாம் 

இன்னும் 5 ஆண்டுகளில் கணிசமான  எண்ணிக்கையில் தமிழ் பொலிசார், ( பெண்கள்+ஆண்கள் ) ஆர்மி ( முன்னாள் போராளிகள் ஆண் + பெண்)  தற்போதுள்ள ஆண் ,பெண்கள் கடற்படை , விமானப்படை என்பனவற்றில் பல ஆயிரம் பேர் சேர்ந்து இருப்பார்கள் புத்தன் வேலை வேண்டும் இதுதான் நிலை படித்தவர்கள் தான்  எல்லோரும் 

Just now, putthan said:

அன்றும் (போராட்டம் தொடங்க முதல்) வேலை வாய்ப்பு தேடித்தான் முப்படைக்கும் ,பொலிஸிக்கும்  எம்மவர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.. இனவாத போக்குடன் அந்த விண்ணப்பங்களை நிராகரித்தார்கள்....இன்றுதான் இனவாதிகள் செய்த தவறை உணர்ந்திருக்கிறார்கள் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் சிறுபான்மையினமும் கை கொடுக்க வேண்டும் என்று....
ஆனால் அது எல்லை மீறி போய்விட்டது
 சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்பது சிறிலங்கா படைகளின் கையில் இல்லை ....சர்வதேசங்களின் நிலப்பட்டில் தங்கியுள்ளது

On 4/5/2021 at 11:44, satan said:

இதுவரையில் நடவாதது இனிமேற்தான் நடக்கபோகுதாக்கும். தாங்கள் செய்தது பிழை என்று ஒத்துக்கொள்ளாதவர்கள், இன்னும் தாங்கள் அழித்த இனத்தையே குற்றம் சுமத்திகொண்டிருப்பவர்கள். இவர்களிடம் இருந்து நல்லது வருமா? போக்கத்து நிக்கும் எம்மினத்துக்கு வேறு வழியில்லை, எல்லாம் பிடுங்கப்படாயிற்று அதை வைத்து எதிரி தன்னை புனிதனாக காட்ட முனைகிறான். ஏதோ தமிழர் விரும்பி இராணுவத்தில் சேர்வதுபோல படம் காட்ட பலர் முயற்சி செய்கிறார்கள். தலைவர் பிறந்த இனத்தில்தான் இப்படிப்பட்டவர்களும் பிறந்திருக்கிறார்கள். இராணுவத்தில் சேர்பவர்களை நான் குறை சொல்லவில்லை. எப்படி நம்மை விழுத்தி, விழுந்த எம்மை வைத்து தன்னை பெருமைப்படுத்திக்கொள்கிறான் எதிரி. அதை நாமும் கைதட்டி வரவேற்கிறோம்  என்பதுதான் வேதனை.

எம்மவர்கள் விரும்பாமலயே கூப்பிட்டு கொடுக்கும் நிலையில் இன்று சிங்கள இனவாதிகள் இருக்கின்றனர் ....இதற்கு காரணமும் எமது போராட்டம் தான்...எமது போராட்டம் நடை பெறாமல் இருந்திருந்தால் இப்படி கூப்பிட்டு முப்படைகளிலும் ஆட்சேர்ப்பு நடை பெற்றிருக்காது...
அவர்கள் யாருக்கு புனிதனாக காட்ட நினைத்தாலும் அது எடுபடாது காரணம் இவர்கள் புனிதத்தை இழந்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது அதை  அழிக்க பல முயற்சிகளை செய்கிறார்கள் 

இன்றும் அன்றும் சிறிலங்கா சிறுபான்மையினரை வைத்து தனது தேசியத்தை நிலநாட்ட பல முயற்சிகளை எடுக்கிறது...

இந்தியாவுடன் குறிப்பாக தமிழ்நாட்டுடன் பகை வளர்க்க ...மீன்பிடி அமைச்சு பதவியை தமிழ் அமைச்சருக்கு வழங்கி இந்தியா மீனவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவது ....அதே அமைச்சர் பிறகு இந்திய மீனவர்கள் அனுமதி எடுத்து எமது கடற்பரப்பில் மீன்பிடிக்கலாம் என அறிக்கை விடுவது ...(தமிழ் அமைச்சர் ஜனாதிபதிக்கு நிகரானவர் என்று இந்திய மீனவர்களுக்கு சொல்லாமல் சொல்லுயினமாம்)
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

.இன்றுதான் இனவாதிகள் செய்த தவறை உணர்ந்திருக்கிறார்கள்

இல்லையில்லை... அப்படி ஒரு படம் காட்ட வேண்டிய  தேவையேற்பட்டிருக்கிறது சிங்களத்துக்கு. அதிலும் ஒரு தந்திரம் இருக்கும், அது வெளிப்பட நாளாகும். அதுக்குப்பின்னாலும் எம்மவரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அது வெற்றியளிக்குமா என்பது இப்போது சொல்ல முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

எல்லா படங்களையும் தாண்டி இயற்கை என்று  ஒன்று இருக்கு ..

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

எல்லா படங்களையும் தாண்டி இயற்கை என்று  ஒன்று இருக்கு ..

அதன் நேரம் வந்தாச்சு ஆனால் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அடம்பிடிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபுறம் புலிகளின் படங்களை தரவேற்றினார்கள், பயங்கரவாதத்தை மீள உருவாக்குகிறார்கள், அவர்களுடன் தொடர்பை பேணினார்கள் என்று ஏதோ ஒன்றைக்கூறி தமிழ் இளைஞர்களை கைது செய்துகொண்டு, மறுபுறம் அந்த இளைஞர், யுவதிகளை படையில் சேர்க்கினமாம். இனிமேற்தான் பயங்கர அடக்குமுறை தமிழர் பிரதேசங்களில் தாண்டவமாடப்போகுது. எல்லோரும் படையில், எதிர்ப்பார் இல்லை இருந்தாலும் அதை அடக்கபோவது நமது இளைஞர். இல்லாவிடில் தண்டிக்கப்படப்போவதும் நமது இளைஞர். இந்த அட்டூழியத்தை  எதிர்த்து நாம் போராடபோவதும், கைகாட்டப்போவதும் நம் இளைஞருக்கெதிராகவே.  அவன் பால் சோறு சாப்பிட்டபடி அதை ரசிப்பான். இதற்காகவே அப்பாவிகளையும், வேறு சிலரை பணம் கொடுத்தும் பயங்கரவாதிகளாக உருவாக்கி, திகில் நாடகம்  அரங்கேற்றும் சிங்களம். அதன் கட்டியமாகவே இது தோன்றுகிறது. அவனுக்கு வேண்டியது: சிங்கள பவுத்த நாட்டில் தாம் கதாநாயகர்கள்.  அப்போ சொல்வான் "இது நாடுபூராவும் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கை, அன்று சிங்கள இராணுவத்தை எதிர்த்து போராடினார்கள், இன்று அவர்களது இராணுவத்தை எதிர்த்து போராடுகிறார்கள். ஆக மொத்தத்தில் தமிழர் போராட்டக்காரர்." என்று நிறுவுவான். எப்படி நம் தமிழ் அதிகாரிகளை நியமித்து, தமிழ் அரசியற் தலைவர்களை விலைக்கு வாங்கி கச்சிதமாய் அவர்களைக்கொண்டு தமது திட்டங்களை நமது பிரதேசத்தில் எதிர்ப்பில்லாமல் இரகசியமாக நிறைவேற்றுகிறார்க்ளோ.... அதில் இதுவும் ஒன்று. எமக்குத்தான் நாம்  குழி பறிக்கிறோம் என்று தெரியாமலே ஆரவாரமாய் வெட்டுகிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, putthan said:

அன்றும் (போராட்டம் தொடங்க முதல்) வேலை வாய்ப்பு தேடித்தான் முப்படைக்கும் ,பொலிஸிக்கும்  எம்மவர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.. இனவாத போக்குடன் அந்த விண்ணப்பங்களை நிராகரித்தார்கள்....இன்றுதான் இனவாதிகள் செய்த தவறை உணர்ந்திருக்கிறார்கள் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் சிறுபான்மையினமும் கை கொடுக்க வேண்டும் என்று....
ஆனால் அது எல்லை மீறி போய்விட்டது
 சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்பது சிறிலங்கா படைகளின் கையில் இல்லை ....சர்வதேசங்களின் நிலப்பட்டில் தங்கியுள்ளது

ஒரு கோப்பை கஞ்சி குடிக்கும் ஒருவன் ஒரு வேலையாவது கிடைக்காதா தன் குடும்பம் கஞ்சி குடித்து வாழ வேண்டும் என நினைக்கும் ஒருவனிடம் நாம் என்னத்தை சொன்னாலும் ஏறாது.

இலங்கை தற்போது தங்கியிருப்பது சர்வதேசத்திடம் அதுவும் சீனாவை முழுவதும் நம்பி🖐

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 02:13, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் நிலை படித்தவர்கள் தான்  எல்லோரும்

வேறொரு தலைப்பில் யாழ் இளைஞர், யுவதிகளின் இராணுவ சேர்ப்பு பற்றி  நான் படித்த உங்கள்  கருத்துக்கும், இந்தக் கருத்துக்கும் முரணாக இருக்கிறதே? ஒருவேளை என் புரிதலில்தான் தவறோ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.