Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியிலும் சிவாஜி

Featured Replies

இதுதான் காரணமெனின் படத்தைத் தயாரித்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் பணம் போய்ச் சேர்ந்து விட்டதே.. வெளிநாடுகளில் வாங்கியோருக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம்.

நட்டம் ஏற்படுவதால் இனிவரும் காலங்களில் இது போன்ற படங்களை எடுத்து ஓடுவதை வெளிநாடுகளில் வாங்கியோர் தவிர்ப்பார்கள்தானே. அவர்களின் பணத்தை முற்பணமாக பெற்றுத்தான் இப்படியான படங்கள் வெளிவருகின்றன.

குறுக்கால போவான் ஒரு கேள்வி பதில் எழுதியிருந்தார். அதாவது முழுவதுமாக மொத்த தமிழ் சினிமாவையும் புறக்கணிப்பது குறித்து. சிடியில் பார்த்தல் மினியில் பார்த்தல் என்ற கதையளை விட்டு போட்டு உணர்வு ரீதியாக பார்க்காது இருத்தல்.

குறுக்கால போவன் சொன்னவை எல்லாமே பழுது கிடையாது... ஆனால் தமிழ் சினிமாவை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்பது சரியானது கிடையாது...!!

சினிமாவை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து ஒதுக்குவதால் எங்களுக்கு என்ன பயன் கிட்டும்...??? உங்களின் செயல்களால் ஆனால் அதே சினிமாவை எங்களுக்கு சார்பாக பயன் படுத்த கூடிய நிலையை இழந்து கொள்வீர்கள்...!

Edited by தயா

இங்கு சிவாஜி படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதைத்தான் தவிர்க்குமாறு அல்லது புறக்கணிக்குமாறு கூறப்பட்டது. திரையரங்குகளில் சேரும் பணத்தின் பெரும்பகுதி படத்தை தயாரித்தவர்களுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் எமது உணர்வுகளை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகதான் படத்தை புறக்கனிக்குமாறு கூறப்பட்டது.

ஆனால் படத்தை சீடிகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ அல்லது மினிசினிமாக்களிலோ பார்ப்பதை தவிர்க்குமாறு ஒருவரும் சொல்லவில்லை. இவற்றினால் எதுவித பணமும் தயாரித்தவர்களை சென்றடையவாய்ப்பில்லை.

ஆகவே தாயகத்தில் மினிசினிமாக்களில் பார்ப்பதையோ அல்லது இங்கு தொலைக்காட்சியில் பார்ப்பதையோ யாரும் புறக்கனிக்குமாறு கூறவில்லை

"சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்."

மேலே எழுதப்பட்டகருத்து சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்குமாறு எழுதப்பட்டதில் ஒரு துளி. நீங்கள் எழுதியது போல் திருட்டு விசிடியலோ அல்லது தொலைக்காட்சியிலோ திரைப்படத்தைப் பார்க்கும் போது மேற்சொல்லப்பட்டவை இல்லாமல் போய்விடுமா?? கருத்தை எழுதமுன் ஏற்கனவே மற்றவர்களும் எழுதிய கருத்துக்களை முழுமையாக வாசித்துவிட்டு கருத்தெழுதுங்கள். :(:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிக்குள் வந்த பிரதிகளின் மூலம்.. எங்கிருந்து வந்தது. அது காசு கொடுத்து வாங்காமல் கள்ளக்கடத்தலால் வந்ததா..??! மூலப்பிரதியையும் கொழுப்பில் உள்ள வர்த்தகர்கள் தான் பெருந்தொகை கொடுத்து வாங்கி பிரதிகளை பணத்துக்கு விற்றிருப்பர். அதன் மூலம் சினிமாத்துறைக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே இருக்கும்.!

இதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அல்லது எழுந்த மானத்தில் கதைக்கிறீர்களா? :(

எனது சொந்த கருத்து இது:

சிவாஜி படத்தை புறக்கணிக்க சொல்லவது சரியே அது வெற்றி பெறுமா இல்லை தோல்வியில் முடியுமா என்பதை விட அதுக்கான முயற்சி நான் செய்யாம இருப்து தவறு.

சிவாஜியை எதிர்பதுக்கு பல காரணங்கள் உண்டு

ஆனால் சிவாஜியை பார்த்து தான் எமது வாழ்க்கையில் 3 மணித்தியாலம்வது நல்லபடியயக ஒரு பொழுது போக்கை போக்கினோம் என்று கூற முடியாது( இதை கூறுவதுக்கு என்ற சிலர் இருக்கிறார்கள்)

ஆனால் எதிர்ப்பதுக்கு பல காரணங்கள்( ஒன்றே காணும்)

அதுக்காக வன்னியில் 40 பேர் ஒன்றாக இருந்து ரிவியில் படம் பார்ப்பதையும் வெளிநாடுகளில்

தியட்டர்களில் போய் பார்ப்பதுக்கும் வேறு பாடு உண்டு என்று நான் நினைக்கிறேன்......

இதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அல்லது எழுந்த மானத்தில் கதைக்கிறீர்களா? :(

வன்னீக்கை 70MM தியட்டர்கள் கிடையாது DVD க்களை (இல்லை VCD) போட்டு Projector இயக்கி வெள்ளை வேட்டிகளை திரையாக்கின அரங்குகள்தான் இருக்கின்றன...! சிலவற்றில் 28 அங்குல ரீவி யோடை சரி...!

புதுப்படங்களை திரையிடுறது எண்டால் அது பாண்டியன் வாணிபத்தாலைதான் முடியும்...!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலேயோ அல்லது புலம்பெயர்ந்த நாட்டிலேயோ சிவாஜி படத்தை பார்ப்பது தனிமனித சுகந்திரம்.. கருத்துசுகந்திரம் !!!!!

புலத்திலேயோ அல்லது புலம்பெயர்ந்த நாட்டிலேயோ சிவாஜி படத்தை பார்ப்பது தனிமனித சுகந்திரம்.. கருத்துசுகந்திரம் !!!!!

வாங்கோ வாங்கோ நீங்க எங்கே இருந்து வாறீங்க கண்டு கனகாலம்.................ஆமாம் தனி மனித சுகந்திரம் தான் பாருங்கோ ஆனாலும் நாங்கள் அவ்வாறு சுகந்திரத்தை பிரயோசனமாக பயன்படுத்துற மாதிரி தெறியவில்லை பாருங்கோ!!!!!!!!!!நீங்க என்ன நினைகிறீங்க இதை பற்றி...........

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா:

ஐ.நா அடிப்படை மனித உரிமை சாசனப்படி எந்தவொரு தனிமனிதருக்கும் தமக்கு பிடித்த கலாச்சாரத்தை பின்பற்றும் உரிமையுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படத்தை புறக்கணிக்க வேண்டுவோர்களுக்கு: தென்னிந்நிய நடிகர்கள், இயக்குனர்களில் யாருடைய படங்களை பார்க்கலாம் என்றொரு பட்டியலை தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்குள் வந்த பிரதிகளின் மூலம்.. எங்கிருந்து வந்தது. அது காசு கொடுத்து வாங்காமல் கள்ளக்கடத்தலால் வந்ததா..??! மூலப்பிரதியையும் கொழுப்பில் உள்ள வர்த்தகர்கள் தான் பெருந்தொகை கொடுத்து வாங்கி பிரதிகளை பணத்துக்கு விற்றிருப்பர். அதன் மூலம் சினிமாத்துறைக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே இருக்கும்.!

இதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? அல்லது எழுந்த மானத்தில் கதைக்கிறீர்களா? :unsure:

எழுந்தமானமல்ல.. நடைமுறைகளை ஒட்டிக் கதைக்கப்படுகிறது. வன்னில கள்ள விசிடி போட்டுக் காட்டுறாப் போல எல்லோ இருக்கு கதை. அங்க டிவிடியோ.. விசிடியோ இல்ல என்ன வடிவில போனாலும் கொழும்பில் இருந்துதான் அதன் மூலம் பெறப்பட்டிருக்கும். இல்ல தமிழ் நாட்டில் இருந்து கடத்தப்பட்டிருக்க வேணும். தமிழ் நாட்டில் இருந்து கடத்துவதானாலும் சரி.. கொழும்பில் இருந்து பெறுவதானாலும் சரி.. காசுப் பரிமாற்றம் இல்லாமமா அது நடக்காது.

தியேட்டர் முதலாளிகள் பெருந்தொகை பணத்தை கொடுத்து விட்டுத்தான் படப் பெட்டிகளை வாங்கி ஓட்டி.. பணம் சம்பாதிக்கின்றனர். படத் தயாரிப்பாளர்கள் பணம் பார்க்காமல் நீங்கள் படம் பார்க்க முடியாது. ரஜனி தனது சம்பளத்தை டிப்பொசிட் பண்ணி வட்டியும் பெறும் நிலையில் தான் படமே வெளி வாரும். இதனால் பாதிப்பு யாருக்கு..??! :huh::D:D

... வன்னில கள்ள விசிடி போட்டுக் காட்டுறாப் போல எல்லோ இருக்கு கதை. அங்க டிவிடியோ.. விசிடியோ இல்ல என்ன வடிவில போனாலும் கொழும்பில் இருந்துதான் அதன் மூலம் பெறப்பட்டிருக்கும். இல்ல தமிழ் நாட்டில் இருந்து கடத்தப்பட்டிருக்க வேணும். தமிழ் நாட்டில் இருந்து கடத்துவதானாலும் சரி.. கொழும்பில் இருந்து பெறுவதானாலும் சரி.. காசுப் பரிமாற்றம் இல்லாமமா அது நடக்காது.

...

சிவாஜி படத்தின் டிவிடி இன்னும் வெளியிடப்படவில்லை. 70 மி.மி. திரயரங்கமும் வன்னியில் இல்லை.

நாங்கள் உண்மை என்னவென்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

சிவாஜி படத்தின் டிவிடி இன்னும் வெளியிடப்படவில்லை. 70 மி.மி. திரயரங்கமும் வன்னியில் இல்லை.

நாங்கள் உண்மை என்னவென்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

மலேயாவில் திரையிடப்பட்டது ஈழத்தமிழ் நிறுவனமான Ayngaran international நிறுவனத்தால்...! இப்ப வன்னீக்கை படம் போறதுக்கு பணம் முக்கியம் இல்லை... பரஸ்பரம் ஒத்துளைப்பு... இனாமாக கூட போய் இருக்கலாம்....!

சிவாஜியை புறக்கணியுங்கள் என்று கூக்குரலிட்டவர்கள்தான் திரையரங்குகளில் கற்பூர அர்ச்சனை செயதும் முன்கூட்டிய பதிவுகள் செய்தும் திரைப்படம் பார்த்தவர்கள்.

எதற்காக இந்த வெளிவேசம் என்றுதான் புரியவில்லை. பலலட்சம் போராளிகளை இழந்து நிர்க்கதியற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிற்காக எதையும் பிரயோசனமாக செய்ய முற்படாமல் சிவாஜி எதிர்ப்போம் என்று நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கிக்கொண்டு தேவையா இது.

தினம் தினம் ஓரு உயிர் பறி போய்க்கொண்டிருக்கின்றது. அதைப்பற்றி கவலை இல்லை தற்சமயம் சிவாஜி படம் வந்தததுதான் பிரச்சினை...... பிள்ளையை நுள்ளினவன் ஓய்யாரமாக உறங்குகின்றான். வேடிக்கை பார்த்தவர்கள்தான் இங்கு வெட்டும் குததும்

ஒரு உண்மை சம்மபவம்

உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும்.

போர்நிறுத்த ஓப்பந்த காலகட்டத்தில் வெளியான புதிய திரைப்படங்கள் யாழ்ப்பான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தன. கொழும்பில் இருந்து திருட்டு விசிடிக்கள் வெளிவந்து அவற்றை நண்பர்கள் மூலம் பெற்றுக்கொண்டேன். ஓமந்தைச்சாவடியில் வைதது அவை பறிமுதல் செய்யப்பட்டன. கூறப்பட்ட காரணம் அந்த திரைப்படங்கள் அந்த சமயம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிரு

உண்மைகள் சிலவேளைகளில் உறைக்கத்தான் செய்யும்.

போர்நிறுத்த ஓப்பந்த காலகட்டத்தில் வெளியான புதிய திரைப்படங்கள் யாழ்ப்பான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தன. கொழும்பில் இருந்து திருட்டு விசிடிக்கள் வெளிவந்து அவற்றை நண்பர்கள் மூலம் பெற்றுக்கொண்டேன். ஓமந்தைச்சாவடியில் வைதது அவை பறிமுதல் செய்யப்பட்டன. கூறப்பட்ட காரணம் அந்த திரைப்படங்கள் அந்த சமயம் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிரு

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

Aingaran international , இதே நிறுவனம் தானே பிரசாந்தை கூப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி சிறீலங்காவின் பாதுகாப்பு நிதிக்கு கொடுத்தது???

Aingaran international , இதே நிறுவனம் தானே பிரசாந்தை கூப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி சிறீலங்காவின் பாதுகாப்பு நிதிக்கு கொடுத்தது???

கொழும்பிலை திரையரங்கு கட்ட லஞ்சம் குடுத்தார்கள் எண்று திருத்தி சொல்லுங்கள்... சுதந்திர கட்சிக்கு...!

Edited by தயா

தவறு நண்பா தவறுஅந்த திரைப்படத்தை யாழ்நகரிலும்சரி வன்னியிலும் சரி வெளிப்படையாக ஒடியதே தமிழ் மக்கள்தான் என்பதை புரிநதுகொள்ளுங்கள்.சிவகாசி திரைப்படம் எமது இனத்திற்கு அவதூறான படங்கள் என்றால் அவற்றை கைவசம் வைத்திருக்க நாம் ஒன்றும் தமிழினத்துரோகி இல்லை. கொழும்பில் நடைபாதையில் விற்ற ஒரு தமிழ் திரைப்படத்தை வைத்திருந்தது குற்றமா ? அந்த திரைப்படம் ஏன் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு கூறப்பட்ட காரணம்தான் தற்போது விடயம்.திரையில் ஒடும் ஒரு திரைப்படத்தை வைத்திருப்பது குற்றமாம். இங்கு ஒரு உண்மை உறைக்கின்றது நன்றாக உற்றுப்பாருங்கள்

என்னைப்பொறொத்தவரையில் பெயரிற்கும் புகழிற்கும் அதேவேளை சிலரின் பின்னுந்துதலினாலும்தான் இந்த சிவாஜி திரைப்படத்திற்கான எதிர்ப்பு. அது ஒரு விளம்பர உத்தி. போராட்ட சிந்தனையில் ஊன்றி புலம்பெயர் மக்கள் என்னேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருக்கின்றபோது இந்த சிவாஜி எதிர்ப்பு அந்த எதிர்ப்பு என்று அவர்களின் கவனத்தை திசை திருப்ப சில தீய சக்திகளின் (அவர்கள் எமக்குள்ளேயே இருக்கின்றார்கள் என்பதுதான் கவலை) வெட்கக்கேடான செயல்தான் இது.

Edited by Paranee

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு விளம்பர உத்தி. போராட்ட சிந்தனையில் ஊன்றி புலம்பெயர் மக்கள் என்னேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் இருக்கின்றபோது இந்த சிவாஜி எதிர்ப்பு அந்த எதிர்ப்பு என்று அவர்களின் கவனத்தை திசை திருப்ப சில தீய சக்திகளின் (அவர்கள் எமக்குள்ளேயே இருக்கின்றார்கள் என்பதுதான் கவலை) வெட்கக்கேடான செயல்தான் இது.

இப்படியும் இருக்கலாம் நல்ல சிந்தனை...

ஜமுனா:

ஐ.நா அடிப்படை மனித உரிமை சாசனப்படி எந்தவொரு தனிமனிதருக்கும் தமக்கு பிடித்த கலாச்சாரத்தை பின்பற்றும் உரிமையுண்டு.

நிச்சயமாகா நீங்க சொல்வதை ஏற்று கொள்கிறேன் ஆனால் நான் கேட்டது எங்களுக்கு புலத்தில் கிடைத்த கருத்து சுகந்திரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி இருகிறோமோ!!!! அது தான் என்னுடைய வினா ரிசி??

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படத்தின் டிவிடி இன்னும் வெளியிடப்படவில்லை. 70 மி.மி. திரயரங்கமும் வன்னியில் இல்லை.

நாங்கள் உண்மை என்னவென்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.

உள்ள வடிவங்களைச் சொல்லும் போது டிவிடியும் வந்திச்சு. அதற்காக அதுதான் ஓடப்படுகிறது என்று நினைக்கிறல்ல..! டிவிடி.. விசிடி.. என்று பட்டியலை நீட்டினதே இதற்காகத்தான்..! :huh:

தவறு நண்பா தவறுஅந்த திரைப்படத்தை யாழ்நகரிலும்சரி வன்னியிலும் சரி வெளிப்படையாக ஒடியதே தமிழ் மக்கள்தான் என்பதை புரிநதுகொள்ளுங்கள்.சிவகாசி திரைப்படம் எமது இனத்திற்கு அவதூறான படங்கள் என்றால் அவற்றை கைவசம் வைத்திருக்க நாம் ஒன்றும் தமிழினத்துரோகி இல்லை. கொழும்பில் நடைபாதையில் விற்ற ஒரு தமிழ் திரைப்படத்தை வைத்திருந்தது குற்றமா ? அந்த திரைப்படம் ஏன் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு கூறப்பட்ட காரணம்தான் தற்போது விடயம்.திரையில் ஒடும் ஒரு திரைப்படத்தை வைத்திருப்பது குற்றமாம்.

ஓட்டியது தமிழ் மக்கள்தான் அதனூக வரவேண்டிய கேளிக்கை வரி தமிழ் மக்களையும், தாயகத்து உறவுகளை நிர்மானிக உதவும்...! நீங்கள் நடைபாதையில் வாங்கிய திரைப்படம் என்பது இலங்கை அரசுக்கு கூட வரி செலுத்த படாதது என்பதினால் நீங்கள் வாங்கியது தவறானது அல்ல....! ஆனால் அதை வன்னிக்குள் கொண்டு செண்றது தவறானது... நீங்கள் தவறுதலாக கூட ஒருவருக்கு அந்த படத்தை கொடுக்க போக அவர் மேலதிகமாக தனக்கு இன்னும் ஒரு பிறின்ரை எடுப்பதினால் இன்னும் ஒருவரின் வருமானம் பறிபோகும் நிலைமையை உருவாக்க பட்டு இருக்கும்...

இலங்கை அரசாங்கம் ஊழல் நிறைந்தது... அங்கு காவல்துறைக்கு கிம்பழம் கொடுத்தால் சட்ட விரோதமாக நடைபாதை கடையில் என்ன வேணுமானாலும் விக்கலாம்... கண்டு கொள்ள பட மாட்டார்கள். ஆனால் ஈழத்து எல்லைக்குள் ஒரு அரசாங்கம் தான் இருக்கிறது...! இலங்கையை போல தண்டம் எடுத்தவர் எல்லாம் அதிகாரங்கள் அல்ல... ஆகவே ஈழத்து எல்லைக்கோட்டுக்கு உள்ளான சட்டத்தை மதிக்கத்தான் வேண்டும்...!!

ஒருவேளை உங்களது திரைப்படத்தை பறிமுதல் செய்து விட்டு... இன்னும் ஒருவரை கொண்டு செல்ல அனுமதித்து இருந்தால் அது தவறானது... ஊழல் பெருக்கிவிட்டது எண்று சொல்லாம்...!

இங்கு ஒரு உண்மை உறைக்கின்றது நன்றாக உற்றுப்பாருங்கள்என்னைப்பொற

Edited by தயா

இலங்கையிலும் சிவாஜி!

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் சிவாஜி மேனியா, இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு படத்தைப் பார்த்து வருகிறார்களாம்.

இலங்கையிலும் சிவாஜி அலை படு வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறதாம். தலைநகர் கொழும்பில் 7 தியேட்டர்களில் தினசரி 41 முறை படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அத்தனைக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

கொழும்பில் சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு திருவிழாக் கூட்டமாம். இதுகுறித்து கொழும்பில் உள்ள ராம் திலக் என்கிற செய்தியாளர் கூறுகையில், அமெரிக்க தூதரகம் முன்பு கூட இத்தனை கூட்டத்தை நான் பார்த்ததில்லை. கொழும்பில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தமிழர்கள் என்பதால், சிவாஜிக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது.

நான்கு தியேட்டர் வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் வேறு எந்தப் படத்தையும் போடாமல் சிவாஜியை மட்டுமே திரையிட்டுள்ளனராம். மரடனா என்ற இடத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் ஒன்றில் தினசரி 20 காட்சிகளை ஓட்டிக் கொண்டுள்னராம். இங்கு டிக்கெட்டின் விலையும் பிரமாண்டமாகவே உள்ளது. 300 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம்.

இனப் பிரச்சினையின் அழுத்தத்தால் தொய்ந்து போயிருக்கும் தமிழர்களுக்கு சிவாஜி 3 மணி நேர இளைப்பாறுதலை கொடுப்பதாக உள்ளதாம்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மனோகரா தியேட்டரிலும் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். இங்கு 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளதாம்.

திரிகோணமலையிலும், மத்திய இலங்கையில் உள்ள தியேட்டர்களிலும் கூட சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். சிவாஜி படத்தைப் பற்றி டெய்லி மிர்ரர், தி ஐலண்ட் ஆகிய இதழ்கள் வெகுவாகப் பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளன. இதை விட பெரிய படம் இனி வரப் போவதில்லை என்று டெய்லி மிரர் கூறியுள்ளது.

சிவாஜிக்கு இப்படி இலங்கையில் வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் கடுமையான எதிர்ப்பும் கூடவே கிளம்பியுள்ளது.

இலங்கையிலிருந்து நடத்தப்படும் தமிழ்நாதம் என்ற இணையதளம், சிவாஜி படத்தை தமிழர்கள் பார்க்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கன்னட வெறியர், தமிழர்களுக்கு விரோதி. எனவே ரஜினி படத்தைப் பார்க்கக் கூடாது என்று தமிழ்நாதம் கடுமையாகக் கூறியுள்ளது.

தமிழ்நாடு ரோக்

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.