Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவோடு இரவாக உடைத்தெறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ! பெரும் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!

அதனாற்தான் எமது போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் எதிரி தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் சரிந்து கொண்டிருக்கும் தங்கள் அந்தஸ்த்தை தூக்கி நிறுத்த இப்படிப்பட்ட அதிரடி சாகசங்கள் தேவைப்படுகிறது இந்த முடாள்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

அதனாற்தான் எமது போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால் எதிரி தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்தைக் கையாண்ட விதம் காரணமாக, எதிரி அதற்கான விலையைக் கொடுக்க எப்போதோ ஆரம்பித்து விட்டான் என்பது தான் எனது கருத்து!

இந்தப் போராட்டத்துக்கான சரியான தீர்வைச் சரியான நேரத்தில் வழங்கியிருந்தால், சீனாவிடம் இப்போது பல்லைக் காட்டிக்கொண்டு,நிற்க வேண்டி வந்திருக்காது!
இராணுவ ஆட்சி என்று பிரகடனப் படுத்தப் படாத ஒரு இராணுவ ஆட்சிக்குள் இலங்கை சென்றிருக்காது!
இந்தியா என்ற ஒரு தேசம், கடல் வழங்களைக் கண்ணுக்கு முன்னேயே சூறையாடும் போது, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவியலாது பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்காது!
சீருடையணிந்த ராச தந்திரிகளை (?) மற்ற நாடுகள் உரசிப் பார்க்கும்நிலையும் வந்திருக்காது!

இந்து சமுத்திரத்தின் முத்து, தனது முதுகைத் தானே தட்டிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை!
ஆனால் ஒரு வெளிநாட்டவனின் பார்வையில்....இன்னும் அது ஒரு மூன்றாம் உலகநாடு தான்!

இந்தியாவுடன் ஒப்பிடாமல், சிங்கப்பூருடன், மலேசியாவுடன், இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!
 தென் திசையை நோக்கி....வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது...இந்த முத்து..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டபோது சர்வதேச ரீதியாக கண்டனங்கள் வந்தன. தமிழக கட்சிகளும் கண்டன அறிக்கைகளை விட்டன. ஆனால் இனவழிப்பு நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள நினைவுத் தூபியை சிங்கள இராணுவம் உடைத்தபோது அமைதிகாக்கின்றார்கள். எவரின் உத்தரவில் நடந்தது என்று தெரிந்தபடியால் பேசாமல் இருக்கின்றார்கள் போலும்.

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி அடையாளம் தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215680

##############   ##############  ############

கேக்கிறவன், கேனையன் என்றால்.......... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி அடையாளம் தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1215680

##############   ##############  ############

கேக்கிறவன், கேனையன் என்றால்.......... 

ஓமடாப்பா உங்களுக்கு எதுவுமே தெரியாது. அதுசரி உங்களுக்கு எங்கடை மண்ணிலை இருக்க வேண்டிய தேவையும் தான் இல்லை பிறகேன் மினைக்கடுறியள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நினைவுக் கல்லை கொண்டுவந்தவர்களை கேள்வி கேட்கவும், நினைவு முற்றத்தில் யாரும் நுழையக்கூடாது என்று சுற்றி நின்று காவல் காக்கவும் தேவையென்ன வந்தது இராணுவத்துக்கு? இறந்தவர்களை நினைவு கூர தடையில்லை ஆனால் கொரோனாவால் கூட முடியாது என்று போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா என்றுமில்லாதவாறு பெருந்தன்மை வாய்ச்சவாடல் விடேக்கையே நினைச்சேன் ஏதோ விபரீதம் நடக்கபோகுதென்று. இதென்ன புதுசா இதுகளுக்கு? கடந்த காலத்தில்  மாவீரரின் கல்லறைகளை உழுவதற்கு என்ன தேவை வந்தது இராணுவத்துக்கு? அதுக்கு பித்து தலைக்கேறி நின்று சதிராடுது.  

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை தமிழர்கள் மாத்திரமே வாசிக்கும் ஒரு தளத்தில் கண்டிப்பதால் என்ன பலன் கிடைக்கும்?

மாறாக, மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்ப்பணித்தும் இன்று கல்லறை கட்ட கூட உரிமையற்ற நிலைக்கு ஏன் வந்தோம் என்றே ஆராய வேண்டும்.

உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு இல்லை வெளியே இவை கொண்டு செல்லப்படணும் என்பதில் தான் எங்கள் எல்லோரது உழைப்பும் நேரமும் இருக்கணும்.

ஆனால் மனதில் ஒரு கேள்வி வருவது இயற்கை. 

ஒரு அநியாயமாக கொல்லப்பட்ட செத்த வீட்டில் வந்து ஆறுதல் சொல்ல முடியாதவர்கள் அல்லது இவர்களின் தவறால் இது நடந்தது என்பவர்கள் எப்படி அதை வெளியே எடுத்து செல்வர்????

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

உங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு இல்லை வெளியே இவை கொண்டு செல்லப்படணும் என்பதில் தான் எங்கள் எல்லோரது உழைப்பும் நேரமும் இருக்கணும்.

ஆனால் மனதில் ஒரு கேள்வி வருவது இயற்கை. 

ஒரு அநியாயமாக கொல்லப்பட்ட செத்த வீட்டில் வந்து ஆறுதல் சொல்ல முடியாதவர்கள் அல்லது இவர்களின் தவறால் இது நடந்தது என்பவர்கள் எப்படி அதை வெளியே எடுத்து செல்வர்????

புலம்பெயர்தவர்களின் கைகளீல் எல்லாம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது அவர்கள்தான் எல்லாமே என்று சொல்பவர்கள் புலம்பெயர் நாட்டில் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் நீங்கள் வசிக்கும் நாடுகளில் அந்த நாட்டின் முக்கியதலைவர்களை கூட்டி ஏன் நினைவேந்தல்களை நடத்தக்கூடாது இங்கு அடக்கு முறைக்குள் இருக்கிறோம் என எத்தனை தடவை சொன்னாலும் புரியாது  வீண் பேச்சு மட்டும் பேசுவார்கள் 30 வருட போராட்டத்தையே புரிய வைக்க முடியாமல் உள்ளது உலக நாடுகளுக்கு  நாம் நமக்குள் மட்டும் குத்தி குடைஞ்சு கொண்டு இருப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபி உடைக்கப்பட்டதற்கு க.வி.விக்னேஸ்வரன் கண்டனம்

 
download-1-2.jpg
 34 Views

2009 இல் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி  கடந்த 12ம் திகதி இரவு உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன்,

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த 12 ஆம் திகதி இரவு அடித்து உடைக்கப்பட்டு, புதிதாக நடப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டிருந்த நடுகைக்கல் அகற்றப்பட்டமை அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான, நாகரிகம் அற்ற செயற்பாடாகும்.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களின் இதயங்களை மிகவும் இரணப்படுத்தி இருந்தாலும், எமக்கு இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், கடந்த காலங்களில் இத்தகைய பல மிலேச்சத்தனமான நடவடிவக்கைகளை தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவித்ததுடன் மட்டும் நின்றுவிடாமல், துயிலும் இல்லங்களை உழவு இயந்திரம் கொண்டு உழுது அழித்திருந்தார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எத்தகைய கேவலமான செயற்பாடுகளையும் செய்யலாம் என்ற சிந்தனையில் செயற்படும் இந்த அரசாங்கம் தனது தலையில் தானே மண்ணை அள்ளி வாரிக்கொட்டிக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை உலகம் வெகு விரைவில் ஏற்றுக்கொள்ளத்தான் போகின்றது. அரசாங்கத்தின் இத்தகைய முட்டாள்த்தனமான செயற்பாடுகளினால் இந்த உண்மையை இப்போதும் மறைக்க முடியாது. ஆர்மேனியாவில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை இத்தனை காலம் கடந்தபின்னர் அமெரிக்கா இப்போது தான் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.
அரச படைகள் இதனைச் செய்யவில்லை என்று அறிக்கை விட்டிருக்கின்றார்கள். அப்படியானால் குறித்த நினைவுத்தூபி முள்ளிவாய்க்காலில் தொடர்ந்து நிரந்தரமாக இருப்பதில் தமக்கு ஆட்சேபணை இல்லை என்று அவர்கள் கூறுகின்றார்கள் போல் தெரிகின்றது.

விரைவில் எமது மக்கள் புதிய நினைவுத்தூபியை அதே இடத்தில் தாபிக்க அரசாங்கமும் படைகளும் இடமளிப்பார்கள் என்பதா இதன் அர்த்தம்?
அரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி கோவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூர இப்பொழுதே தயாராகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.ilakku.org/?p=49567

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த எம் உறவுகளை  கல்லறைகளில்கூட  அமைதியாக உறங்க அனுமதிக்காத மிருகங்களோடு நாம் எப்படி சேர்ந்து வாழ்வது என்பதை எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைக்கும் சர்வதேசமே நமக்கு விளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்

 
MA-Sumanthiran--696x363.jpg
 37 Views

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது.

மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும்  காவல்துறையினரும்  அந்த இடத்திற்கு  சென்று  பார்வையிட்ட பின்னர் தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது.

அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றார்.

 

 

https://www.ilakku.org/?p=49563

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.