Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.......நன்றாக இருக்கின்றது. செய்ய ரொம்ப பொறுமை வேண்டும்...........!   👍

மிக மிக நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலகமே சுத்தி சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கைதான் நிக்குது.
என்ன நாதமுனியர் நான் சொல்லுறது சரியோ பிழையோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2021 at 01:54, Nathamuni said:

எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.

பற்றீஸ்  பார்வைக்கு... மிக அழகாக, கலை நயத்துடன் செய்யப் பட்டுள்ளது. 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2021 at 00:04, குமாரசாமி said:

இந்த உலகமே சுத்தி சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கைதான் நிக்குது.
என்ன நாதமுனியர் நான் சொல்லுறது சரியோ பிழையோ? 😁

சீனி கொட்டி துளைக்கிறது பிடிக்கவில்லை. 😰

அடுத்தது, உந்த அலங்கார சில்லெடுப்புக்கள் சும்மா, யூடியூப் விடியோக்கு தான் சரி...

டபெக்கெண்டு கறியை போட்டு சுத்தினமா, எண்ணெய் தாச்சிக்குளை போட்டு எடுத்தமா, பிளைன் டீயோடை வாய்க்குள்ள கடாசினமா எண்டு இருக்கோணும். 🤗

****
அது கிடக்கட்டும்... பக்கத்து தமிழகம் போகாத, எங்கண்ட இந்த பற்றீஸ் தாய்லாந்து எப்படி போனது எண்ட கதை தெரியுமே? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

பொரிக்கும் உணவுப் பொருட்களில்... சிறிது சீனியை கலந்தால், அவை பொன்னிறமாக பொரியும் என்று எங்கோ வாசித்த நினைவு.

*****
தமிழ் நாட்டில்... ஜிலேபி, பூந்தி எல்லாம் இருப்பதால்...  பற்றீசில் ஆர்வம் காட்டவில்லை என நினைக்கின்றேன். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டில்... ஜிலேபி, பூந்தி எல்லாம் இருப்பதால்...  பற்றீசில் ஆர்வம் காட்டவில்லை என நினைக்கின்றேன். 🙂

இல்லை. இது உண்மையில் அறிமுகப்படுத்தியது போர்த்துக்கேயர். போர்த்துகேயர்களின் சமகால காலனி மலாக்கா. அதுபோல தாய்லாந்தில் பெரும் வணிக நடவடிகைகளை நடாத்தும் வணிக தளங்களை கொண்டிருந்தனர்.

இதனாலே, தாய் கறியில், தமிழர் தேங்காய்ப்பால் முறை அறிமுகமானது. கஞ்சி, சொதி தாய்லாந்து போனது.

அதேவேளை பக்கத்தில் இருந்த தமிழக்த்தில், போர்த்துகேயர்கள், ஒல்லாந்தர் ஆட்சி இல்லாமல்,  பிரிட்டிஷ் காரர்கள் வரும் வரை 300 வருடங்கள் சுதந்திரமாக இருந்ததால், எமது உணவு கலாசாரம் அங்கே போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2021 at 16:35, suvy said:

வாவ்.......நன்றாக இருக்கின்றது. செய்ய ரொம்ப பொறுமை வேண்டும்...........!   👍

எத்தனை நாள் எடுக்கும் ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எத்தனை நாள் எடுக்கும் ??

தெரிஞ்சு என்ன செய்யப்போறியள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2021 at 13:29, Nathamuni said:

இல்லை. இது உண்மையில் அறிமுகப்படுத்தியது போர்த்துக்கேயர். போர்த்துகேயர்களின் சமகால காலனி மலாக்கா. அதுபோல தாய்லாந்தில் பெரும் வணிக நடவடிகைகளை நடாத்தும் வணிக தளங்களை கொண்டிருந்தனர்.

இதனாலே, தாய் கறியில், தமிழர் தேங்காய்ப்பால் முறை அறிமுகமானது. கஞ்சி, சொதி தாய்லாந்து போனது.

அதேவேளை பக்கத்தில் இருந்த தமிழக்த்தில், போர்த்துகேயர்கள், ஒல்லாந்தர் ஆட்சி இல்லாமல்,  பிரிட்டிஷ் காரர்கள் வரும் வரை 300 வருடங்கள் சுதந்திரமாக இருந்ததால், எமது உணவு கலாசாரம் அங்கே போகவில்லை.

சிங்கம்,

தண்ணி குடிக்கிற பழக்கமும் இப்படித்தான் இலங்கையில் இருந்து அரபியர் மூலம் இந்தோனேசியா போனதாக பேசிக்கொள்கிறார்கள் உண்மையோ?

அதுக்கு முதல் இந்தோனேசியா சனம் பல்லில பச்ச தண்ணி படாமல் கிடந்ததாம்?

ஒருக்கா யூடியூப்பில பார்த்து சொல்லுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சிங்கம்,

தண்ணி குடிக்கிற பழக்கமும் இப்படித்தான் இலங்கையில் இருந்து அரபியர் மூலம் இந்தோனேசியா போனதாக பேசிக்கொள்கிறார்கள் உண்மையோ?

அதுக்கு முதல் இந்தோனேசியா சனம் பல்லில பச்ச தண்ணி படாமல் கிடந்ததாம்?

ஒருக்கா யூடியூப்பில பார்த்து சொல்லுங்கோ.

தல வந்தாச்சே ...  வாங்க...வாங்க...

சும்மா, தெரியதே....  கொரோனா காலம் எண்ட படியாலை ஒரு பயம் இருந்தது. இப்ப நிம்மதி.

வரேக்கையே.... சும்மா சத்த வெடி இல்லை. கிபிர் அடி தான் போலை.... சும்மாவே.... சேர்த்து வச்ச ஸ்டொக் எல்லாம் விடவேணுமே...

அட.... தாய்லாந்து....கதை...  ... நீங்க.. சொல்லி தந்த வித்தைதானே தானே தல...  பூரணம் போட்டு அரைச்சு குளுசை கொடுத்தாச்சு.

இந்தோனேசியா.....காரனுக்கள்.... ஓமோம்... அவனுகள் தண்ணி குடிக்காம இருத்திருக்கானுகள்.... அட.... அந்த குளுசை அடுத்த மாசம் தானே அரைச்சு குடுக்க சொன்னணியல்....

இப்ப, நீங்களே வந்து குடுத்துவிட்டாச்சு.... குருஜிக்கு, சிஷ்யனில நம்பிக்கை இல்லை...

அப்படியே நம்ம தொழில் இமேஜ் மைண்டைன் பண்ண நான் பட்ட பாடு...

இப்ப குறுக்கு கேள்வியோட வருவினம்... தல  வெட்டி ஆடும்... பயம் இல்லை. 

இந்த முறை கொஞ்சம் கூட லீவு எடுத்தாச்சு போல... சரி, நானும் கொஞ்ச வேலை, இருக்கிறதால, நீங்க.... உங்கை சனங்களை மேயுங்கோ.... வாறன் பிறகு....  

புரொஜெக்ட்ல 4 பேரை மேய்க்கிறன். அதில ஒருத்தர், வானம் ஏறி வைகுந்தம் போற கதை.... சும்மா ஓவர் அலம்பறை....விசயம் இல்லை. அவருக்கு என்ன குளுசை கொடுக்கலாம் தல....

தண்ணி தெளிச்சு, காடாத்தலாமே என்று யோசனை?  

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

வணக்கம் நாதம்,

கண்டது சந்தோசம்.

நான் 24/7 யூடியூப் வீடியோவில் நோயெதிர்ப்பை வளக்கிறன் சிங்கம். கொரோனா கிட்ட வருமே.

23 minutes ago, Nathamuni said:

புரொஜெக்ட்ல 4 பேரை மேய்க்கிறன். அதில ஒருத்தர், வானம் ஏறி வைகுந்தம் போற கதை.... சும்மா ஓவர் அலம்பறை....விசயம் இல்லை. அவருக்கு என்ன குளுசை கொடுக்கலாம் தல....

தண்ணி தெளிச்சு, காடாத்தலாமே என்று யோசனை?  

வெரி சிம்பிள்,

நான் உங்களை எப்படி டீல் பண்ணுவனோ அதை போல நீங்கள் அவரை டீல் பண்ணுங்கோ நாதம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

வணக்கம் நாதம்,

கண்டது சந்தோசம்.

நான் 24/7 யூடியூப் வீடியோவில் நோயெதிர்ப்பை வளக்கிறன் சிங்கம். கொரோனா கிட்ட வருமே.

வெரி சிம்பிள்,

நான் உங்களை எப்படி டீல் பண்ணுவனோ அதை போல நீங்கள் அவரை டீல் பண்ணுங்கோ நாதம்.

நீங்கள், இந்த பக்கமே தல காடேல்ல.... என்ன கோவமோ எண்டு பதறி போட்டன்....

அப்படி எல்லாம், இந்தோனேசியா, தாய்லாந்து லெவல் குளுசையல் அரைச்சு கொடுக்கேலாது தல.... அது நம்ம தொழில் தர்மம்.

வேற ஐடியா இருந்தால் தனி மடலில் போடுங்கோ... 👌

எல்லாம், குருஜியின் ஆசீர்வாதம். 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீங்கள், இந்த பக்கமே தல காடேல்ல.... என்ன கோவமோ எண்டு பதறி போட்டன்....

அப்படி எல்லாம், இந்தோனேசியா, தாய்லாந்து லெவல் குளுசையல் அரைச்சு கொடுக்கேலாது தல.... அது நம்ம தொழில் தர்மம்.

வேற ஐடியா இருந்தால் தனி மடலில் போடுங்கோ... 👌

எல்லாம், குருஜியின் ஆசீர்வாதம். 🙏

நாதம் 

வக்சின் அடித்தயிற்று கொரோனா முடிந்த கையேடு இரண்டு உள்ளங்கைகளுக்கும் சனிடைசர்  தேய்த்துகொன்டு 
உந்த தாய்லாந்து பக்கம் போகலாம் என்றிருக்கின்றேன். உங்க யூ டுபிலா பார்த்தன், பார்பர் சாப்புவில் அச்சா பெட்டைகள் தலைமுடி வடிவாய் வெட்டி / நகம் வெட்டி /கைகாகல் எல்லாம் பிடித்து விடுகிறார்கள் உது நிசமா? ஆரும் போன அக்கள் இங்க உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இஞ்ச கொழும்பான் உந்த போன வந்த டிரவல் ஹிஸ்டரி எல்லாம் எங்களிட்ட கேட்கப்படாது. நாங்கள் கூகிள் லொகேசனையே ஓப் பண்ணி வைக்கிற ஆக்கள்.

ஆனால் பாங்கொக்கில சுக்கும்விற் சாலை, கெளபாய் வீதி, பிறகு இதுகெண்டே நானா பிளாசா எண்டு ஒரு “சொப்பிங் செண்டர்” எல்லாம் இருக்கு.

சனிடைசர் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்களை எடுத்து கொண்டு போய் வடிவா சுத்தி பார்த்துட்டு வாரும். வந்து நாதம் மாத்தையா ஸ்டைலில ஒரு பயணக்கட்டுரை போடும்.

பிகு: தாய்லாந்தில் மறக்க கூடாத பழமொழி

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.

#புரிஞ்சவன் பிஸ்தா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2021 at 13:29, Nathamuni said:

இல்லை. இது உண்மையில் அறிமுகப்படுத்தியது போர்த்துக்கேயர். போர்த்துகேயர்களின் சமகால காலனி மலாக்கா. அதுபோல தாய்லாந்தில் பெரும் வணிக நடவடிகைகளை நடாத்தும் வணிக தளங்களை கொண்டிருந்தனர்.

இதனாலே, தாய் கறியில், தமிழர் தேங்காய்ப்பால் முறை அறிமுகமானது. கஞ்சி, சொதி தாய்லாந்து போனது.

அதேவேளை பக்கத்தில் இருந்த தமிழக்த்தில், போர்த்துகேயர்கள், ஒல்லாந்தர் ஆட்சி இல்லாமல்,  பிரிட்டிஷ் காரர்கள் வரும் வரை 300 வருடங்கள் சுதந்திரமாக இருந்ததால், எமது உணவு கலாசாரம் அங்கே போகவில்லை.

பற்றிஸ், போர்த்துக்கேயரால் தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டது என்று நான் சொன்னபோது, ஆதாரம் கேளாமல் நையாண்டி மட்டும் செய்யப்பட்டது. தமது எதிர் ஆதாரங்களையாவது தந்திருக்கலாம்.

நிழலியும் இன்னோரு திரியில் தனது குறிப்பில், இதனை சொல்லி இருந்தார்.

..... ஊர் பெயரை / நபர்களின் பெயரை / உணவின் பெயரை ஒரு ஆவணமாக கருதி அதனூடாக தகுந்த ஆதாரங்கள் ஆய்வுகள் எதுவும் இன்றி வரலாற்றை எழுத / அறிய முற்படும் தவறான போக்கை.....

இதிலிருந்து என்ன தெரியுது என்றால்.... ஒரு ஆதாரம் இல்லாமலே பதிகிறார்கள் என்று நினைக்கிறார்களோ என்று கவலை வருகிறது.

இது தமிழர்கள் மன நிலையோ தெரியவில்லை. அனைத்தையுமே அடுத்தவன் எடுத்துக்கொண்டு போக, சரிதான் என்று முகட்டினை பார்த்து கொண்டிருக்கும் மனநிலை.

****

பற்றிஸ் என்பதன் பூர்வீக பெயர் எம்பனாடஸ். இதன் பூர்வீகம், போர்த்துக்கல், ஸ்பெயின். 

ஸ்பெயின் காலனியாக இருந்த பிலிப்பீன்சுக்கும், போர்த்துக்கேய காலனியாக இருந்த தமிழர் பகுதிக்கும் வந்து சேர்ந்தது. (அப்போது, சிங்களவர் பகுதி வேறு என்பதால் அதனை தனியே விட்டு விடுகிறேன்) தமிழர் பகுதியில், உள்ளுடன் ஆக, கடலுணவு, கோழி இறைச்சி மட்டுமே பாவிக்கப்பட்டது. காரணம் அங்கே வாழ்ந்த இந்துக்கள் அல்லது சைவர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. (இதுவே பௌத்த தென் இலங்கை நிலை).

1511ம் ஆண்டு, போர்த்துக்கேயர் மலாக்காவினை பிடித்துக் கொண்டார்கள். அங்கே இருந்த மலே இஸ்லாமியர்கள் உடன்  இந்த உள்ளுடன் ஆக போர்த்துகேயர்களுக்கு பிடித்தமான மாட்டு இறைச்சி பாவிக்க கூடியதாக இருந்தது.

இந்த மலாக்கா பிரதேசம், (தாய்லாந்தின்) சியாம் ராஜ்ஜியதுக்கு திறை செலுத்திக்கொண்டு இருந்ததால், போர்த்துக்கேய தளபதி, சில சீனர்களுடன், சியாம் அரசரை சந்திக்க சென்றார். பர்மா நாட்டின் படையெடுப்புக்கு முகம் கொடுத்த மன்னர், ஐரோப்பிய ஆயுதங்களுக்காக, போர்த்துகேயர்களின், மலாக்கா ஆட்சியினை அங்கீகரித்தார்.

https://siamrat.blog/2019/07/06/the-remarkable-history-of-the-portuguese-in-thailand/

நல்லுறவு காரணமாக, அயோத்தியாவில், ஒரு போர்த்துக்கேய வணிக முகாம் உருவாக்கியது. போர்த்துக்கேயர் கிராமம் என்று அறியப்பட்ட இந்த கிராமம் மூலம், பல உணவு வகைகள் அங்கே அறிமுகமாகின.

பௌத்த நிலமாகையால், மாட்டு இறைச்சி பாவிக்க முடியாமல், தமிழர் பகுதியின் பாவனையில் இருந்த உள்ளுடனே பாவித்தனர். யாருக்கு தெரியும், தமிழர்களை வேலைக்கு கொண்டு போயிருக்கலாம். (ஆனாலும், தமிழர்கள் தாய்லாந்தில் பல நூறாண்டுகளாக வாழ்ந்தனர் என்று வரலாறு உண்டு)

மேலும், பிரேசில் நாட்டில் இருந்து கொண்டுவந்த பலவகை பழங்கள், தமிழர் பகுதியை போலவே அங்கே போயின.

தமிழர்கள், கஞ்சி அங்கே போய் சேர்ந்தது.

தேங்காய் பால் தாய்-கறிக்கு பாவிக்கும் முறையும் போனது. அதுபோல ஜப்பான் நாட்டுக்கும் போனார்கள். அங்கிருந்து பெண்களை விலைமாதுக்களாக போர்த்துக்கல் கொண்டு சென்றார்கள் என்ற குற்றசாட்டுகளும் உண்டு.

சீனாவில் மகோவா பகுதியையும் பிடித்துக் கொண்டார்கள். தமிழன் கஞ்சியும் சீனா போனது.

போர்த்துகேயர்களின் தென்கிழக்காசிய பரவல், விரைவானதும், காத்திரமானதுமாக இருந்தது. 

கேரள கொச்சின் பகுதியில், இவர்கள் வணிகம் நடாத்திக் கொண்டிருந்த போது, அரபிகளும், சீனர்களும், இவர்களை தவிர்த்து கோழிக்கோடு பகுதி சமூரிய அரசர் வசம் வாசனை திரவியம் வாங்க போனதால், மேலே கோவா, பம்பாய் பகுதியை பிடித்து, அரபிகளை மடக்கினார். மத்தியகிழக்கை பிடித்துக் கொண்டனர்.

வாஸ் கொட காமாவின் இரு மகன்கள் இந்த வேலைகளை செய்தனர்.

மறுபுறம் சீன கப்பல்களை தடுக்கும் வகையில் மலாக்காவினை பிடித்தார்கள். சீனர்களுக்கு, மகோவா பகுதி ஊடாக தாமே வாசனை திரவியங்களை வியாபாரம் செய்தார்கள்.

எனினும், ஒல்லாந்தர்கள், இவர்கள் ஆட்சிக்கு முடிவு கட்டினார்கள். இலங்கைத்தீவு, மலாக்கா என்று ஒவொன்றாக இழந்தார்கள். மிக மோசமான, மத மாற்றுதல் அதன் தண்டனை காரணமாகவே அவர்கள் வெளியே போக, உள்ளூர் மக்கள் புதிய சக்திக்கு ஆதரவு கொடுத்தார்கள். 

(பிற மதத்துக்கு செய்த பெரும் அழிவு காரணமாக, சபிக்கப்பட்டதே, போர்த்துக்கேய ராஜா, தனது நாட்டினை விட்டு, பிரேசில் நாட்டுக்கு ஓடி அங்கே இருந்து ஆட்சி செய்ய வேண்டி இருந்தது என்றும் சொல்வார்கள்.)

எமது காலத்தில், ஆங்கிலமும், பிரிட்டிஷ்காரர் வரலாறும் தான் முக்கியமாக தெரிந்தது. ஆனால் போர்த்துக்கேயர் வரலாறு குறித்து பெரிதாக அறிந்து கொள்வதில்லை, பொதுவாகவே, இலங்கைக்கு போர்த்துக்கேயர் வந்தார்கள் என்று தவறாக சொல்லி விட்டு நகர்கிறோம். ஆனால், அவர்கள் வந்தபோது, வடக்கு வேறு, தெற்கு வேறு என்று சிந்திப்பதில்லை.

*****

Congee - Portugal Resident

போர்த்துக்கேய கஞ்சி (congee)

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.portugalresident.com%2Fcongee%2F&psig=AOvVaw0M_NOyyM-fhcAkJvFkVGaM&ust=1622134215592000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCMjJlIXn5_ACFQAAAAAdAAAAABAD

Chinese Chicken Congee

சீனத்து கஞ்சி (congee)

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.chinasichuanfood.com%2Fchinese-chicken-congee%2F&psig=AOvVaw1hieCcXyrKC4CDtJPzGTYq&ust=1622134340388000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCJCMw7_n5_ACFQAAAAAdAAAAABAD

தாய்லாந்து கஞ்சி

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Ffearlesseating.net%2Fthai-congee-breakfast%2F&psig=AOvVaw2W0d2I-09K1n2hXNrOzS7K&ust=1622134432019000&source=images&cd=vfe&ved=0CAIQjRxqFwoTCPishO3n5_ACFQAAAAAdAAAAABAD

தாய்லாந்து கறி

இந்த லிங்கில் Did you know பகுதியில் கறி தமிழ் சொல் என்றும், தென் இந்தியாவில் இருந்து வந்தது என்கிறார்கள். தவறு. போர்த்துக்கேயர் கொலனியாக இருந்த தமிழர் பகுதியில் இருந்து போனது என்பது சரியானது. 

https://www.takeaway.com/foodwiki/thailand/thai-curry/

****

https://www.bbc.com/culture/article/20150619-how-india-changed-english

இந்த பிபிசி லிங்கில், வரும் வீட்டுக்கு மேலே உள்ள பகுதியில் மாங்காய் எப்படி போர்த்துகேயத்துக்கும், ஆங்கிலத்துக்கும் போனது என்று சொல்கிறார்கள்.

***

ஆகவே நண்பர்களே, முதலில், தமிழ் உலகின் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர், உங்கள் சந்தேகங்களை தேடி, ஆராய்ந்து, தீர்த்துக்கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் கேளுங்கள். என்னை நையாண்டி செய்வதாக நினைத்து தமிழ்மொழியினை நையாண்டி செய்யாதீர்கள்.

தயவு செய்து எதிராக ஆதாரம் இருந்தால் மட்டும் சீரியஸ் ஆக பதிவு இடுங்கள். இல்லாவிடில் கடந்து செல்லுங்கள்.

இலங்கை மலே சமூகத்தின் அச்சாறு, வட்டிலாப்பம், தொதல் எல்லாம் தமதே என்கிறார்.

நாம் பற்றிஸ் என்கிறோம், அவர்கள் பஸ்தோல். இவர்கள் முன்னோர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை வந்தார்கள். மகிந்தர் மனைவி மலே இனத்தவர்.

**

https://explainqn.com/patties-vs-pastry/

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

பற்றிஸ், போர்த்துக்கேயரால் தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டது என்று நான் சொன்னபோது, ஆதாரம் கேளாமல் நையாண்டி மட்டும் செய்யப்பட்டது. தமது எதிர் ஆதாரங்களையாவது தந்திருக்கலாம்

நாதம்,

நான் உங்கள் பற்றீஸ் தாய்லாந்து போன கதையை நான் எங்கும் மறுக்கவில்லை ஆகவே ஆதாரம் கேட்கவில்லை. 

ஆனால் patty என்பது ஒரு ஆங்கிலசொல் என்பதும் அதன் பன்மை plural தான் patties என்பதும் pate என்ற பிரெஞ் சொல்தான் இதன் அடி என்பதும் விளங்கினால் - போத்துகேயர் இலங்கைக்கு பற்றீசை கொண்டு வந்தார்கள் எனும் உங்கள் தியரின் அபத்தம் விளங்கும்.

போத்துகேயர் நமக்கு தந்த அலவாங்கு, பீங்கான், பீரிசு, கக்கூசு,குசினி எல்லாவற்றையும் போத்துகீச மொழியில் திசை சொல்லாக பயன்படுத்தும் நாங்கள். பற்றீசை மட்டும் போத்துகேய சொல்லில் எம்படனாஸ் என அழைக்காமல் ஆங்கிலத்தில் அழைக்க காரணம் என்ன?

அது மட்டும் அல்ல நான் பல தடவைகள் போர்துக்கல் போயுள்ளேன். வகை வகையான எம்படனஸ்சையும் கபளீகரம் செய்துள்ளேன்.

Felthamத்தில் ஒரு நல்ல cafe உண்டு அங்கும் கிடைக்கும்.

எம்படனாசுக்குக் பற்றீசுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

சந்தானத்தின் பாசையில் சொன்னால் எம்படனாஸ்தான் பற்றீஸ் எண்டால் தக்காளி சோசே நம்பாது 🤣

ஆகவே இலங்கைக்கு பற்றீசை கொண்டு வந்தது பிரித்தானியர் என்றும் வாதாடலாம்.

ஆனால் நான் அப்படி வாதாடப் போவதில்லை ஏன்றால் லண்டனில் ஒரு மேசையில் குந்தி இருந்து takeaway.com இல் உலக உணவின் வரலாற்றை ஆராயும் (இதுக்கு யுடியூப்போடையே நிண்டிருகலாம் நீங்கள்🤦‍♂️) அபத்தத்தை நான் செய்வதில்லை.

எனக்கு தெரிந்ததெல்லாம், நூல்-உள், பிசியாப்பம் இவைதான். அதை பற்றியும் எழுத வேண்டாமாம்🤣.

இது ஒரு திராவிட ஷதி.

வரட்டே பின்ன. நான் இனிதான் கஞ்சி, மன்னிகவும் கொஞ்சி காய்ச்சவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.