Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

465789830_528111146776311_74503732640915

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

தாத்தா... ஸ்ரேடியத்துக்கு வந்து, என்னத்தை படம் எடுக்கிறார் என்று பாருங்கோ... 😂

  • கருத்துக்கள உறவுகள்

466383292_874036271568327_20657730797237

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சிரிங்க பாஸ்

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார்,

பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி

பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும்

கணவனே , ஏழு ஜென்மத்துக்கும்

கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால்

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் ,

ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும்

என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும்

திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,

பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,

அவர் பெயர் சாணக்கியர், அவரைப்

பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .

சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து

பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு

விடுவோம் என்று முடிவு செய்து ,

அவர்களிடம் பேசினார்கள் .

கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை

சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர்

அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு

இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்

இருக்க முடியாது என்று கூறிவிட்டு

இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள்

என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்

கூறினார் . அதற்கு அந்த பெண்கள்

சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு

எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று

சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள்

கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற

கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால்

ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே

மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு

சம்மதமா என்றார் ....

........ " வாழ்க வளமுடன் " ..

 
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் காலில் விழுந்தால் நம்பாதீங்க!

நேற்று என் புருசன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று என் காலில் விழுந்து சத்தியம் பண்ணினார்!

ஓ! அப்ப உன் வீட்டுக்காரர் குடிப்பதை நிறுத்தி விட்டார் என்று சொல்லு!

நீ வேற என் ரெண்டு கொலுசையும்

கழட்டி விற்று குடித்து விட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

466042766_1118574479784821_3438890627032

தூக்கம் ரொம்ப நல்லது . ......விலங்குகள் உயிர் வாழ்வதற்கு . ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people smiling and text

  • கருத்துக்கள உறவுகள்

467731790_877625451209409_90662970694854

அந்த இடைவேளையில் சாப்பிட்டுட்டு மீண்டும் ஆரம்பிக்க வசதியாய் இருக்கும் ............!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of snake and text

வீட்டிலை... யாரும் இல்லையா?
படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம்  கதவை திறங்க.

  • கருத்துக்கள உறவுகள்

467312055_122130478082387856_76576842708

கண்மணி கணணியைக் கைவிட்டு கடிநாயுடன் விளையாடும் என்று பார்த்தால் கடிநாயும் பிடிநாயாய் கண்மணியைக் கட்டிபிடித்துக் கொண்டு கணனி மேயுது . .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் சரியான போட்டி ! - நீயா ! நானா !

main-qimg-251fcd87cf7893afc0845b476193e9fd

ஒரு முறை ஒரு பெண்மணி பொருட்கள் வாங்க சூப்பர் மார்கெட் சென்றார் . பொருட்கள் வாங்கிய பின் பணத்தை கொடுக்க பர்ஸை திறக்க அதில் டீவி ரிமோட் ஒன்று இருக்க, அதை பார்த்த கேஷியர் அவரிடம் !

" என்னம்மா ! எப்பவும் டீவி ரிமோட் வைத்து இருப்பீர்களா " என்று கேட்க அதற்கு அவர் !

" இல்லை ! நான் கடைக்கு போக வேண்டும் கொஞ்சம் வாங்க என்று என் கணவனை கூப்பிட்டேன் ! அவர் இன்று கிரிக்கெட் மேட்ச் இருக்கு நான் வரலை என்று சொல்லிவிட்டார் ! அதான் அவரை பழி வாங்க டீவியை ஆஃப் செய்துவிட்டு ரிமோட்டை எடுத்து வந்து விட்டேன் ! இப்ப அவர் எப்படி படம் பார்ப்பார் " என்றார் !

நீதி - எப்பொழுதும் மனைவி வெளியே செல்ல கூப்பிட்டால் மறுக்காமல் செல்லவும் !


இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது !

பொருட்களுக்கு கொடுக்க பணம் குறைவாக இருந்ததால், பெண்மணி அவரின் க்ரெடிட் கார்டை கொடுக்க !

அதை வாங்கி SWIPE செய்த கேஷியர் சிறிது கொண்டே !

" அம்மா ! உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டார் ! என்று சொன்னார் !

நீதி - கணவனின் கருத்திற்கு மதிப்பு கொடுங்கள் !


இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது !

பெண்மணி ! தன் பர்ஸில் இருந்த கணவனின் க்ரெடிட் கார்டை எடுத்து, கொடுக்க !கணவன் தன் கார்டை பிளாக் செய்யவில்லை !

நீதி - மனைவியின் புத்திசாலித்தனத்தையும் அறிவையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் !


இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது !

கேஷியர் கார்டை swipe செய்ய அது பின் நம்பர் கேட்க ! கேஷியர் பெண்மணியை பார்த்து உங்க கணவரின் மொபைலுக்கு பின் நம்பர் வந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்று சொல்ல !

நீதி - சில நேரம் ஆண் தோற்றாலும் ! அவன் சார்ந்த தொழில் நுட்பம் அவனை காப்பாற்றும் !


இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது !

பெண்மணி ! இருங்க சொல்றேன் என்று பர்ஸை திறந்து அதில் இருந்த கணவனின் போனை எடுத்து பின் நம்பரை கேசியார் கிட்ட சொன்னார் ! ரிமோட் எடுக்கும்போதே எதற்கும் இருக்கட்டும் என்று, கணவனின் க்ரெடிட் கார்டையும் மொபைலையும் எடுத்து வந்தார் !

நீதி - மனைவியின் அபார புத்திசாலித்தனம் சாதாரணமானது இல்லை !


இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது !

பொருட்களை வாங்கி கொண்டு ! டாக்சி பிடித்து வீடு வந்த சேர்ந்த பெண்மணி , கணவனின் வண்டி இல்லாதது கண்டு ஆச்சரியம் அடைய ! வீட்டிற்குள் சென்று பார்த்தல் , மேசையில் ஒரு பேப்பர் எழுதி இருந்தது! அதி " எல்லா இடங்களிலும் டீவி ரிமோட் தேடி பார்த்தேன் ! கிடைக்கவில்லை அதனால் என் நண்பர்களுடன் மேட்ச் பார்க்க போகிறேன் ! உனக்கு எதாவது வேண்டும் என்றால் என் போனுக்கு கூப்பிடு என்று எழுதி இருந்தது !

நீதி - கணவனை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள் ! நீங்கள் தோற்று போவீர்கள் !

 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

"சார் எம் புருசனை ரெண்டு நாளா காணோம்?"

"பேரு என்னம்மா?"

"லியோ"

"நீ தானா அவன் ஒயிஃப். இந்தாம்மா 'நீ தேடி வருவ, வந்து கம்பளைண்ட் கொடுக்கும் போது இந்த லெட்டரை கொடுங்கன்னு கொடுத்துட்டு போயிருக்கான்'

main-qimg-1865578480e2370dd6c5bb81e8d58278

"மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி மீன் எடுத்து மீன் குழம்பு வைத்தார்.‌ செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் மீன் குழம்பு மற்றும் வறுவலோடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது 'மீன் குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது. இன்றோடு ஐந்தாம் நாள் மீன் குழம்புக்கு கெடு முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை நானே வீடு திரும்புவேன் என்று கூறிக்கொள்கிறேன். நன்றி"

"அந்தாளு வீட்டுக்கு வரட்டும், இன்னைக்கு இருக்கு கச்சேரி"

"ஏம்மா அதான் வர்றேன்னு சொல்லிட்டார்ல. திரும்ப ஏம்மா பிரச்சினை?"

"கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆச்சு, ஏழு வருசம்னு எழுதியிருக்கார் பாருங்க 🤬🤬"

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..

விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார். தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..

மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக் காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு.. ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணி தான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..

மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து..மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது..

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( 🙁 ) சிந்திக்கவும்.😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

இணைப்புக்கு நன்றி பெருமாள்.

சிரிப்பாகவும் இருக்கு கோபமாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.

திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான்.

main-qimg-28e13d4d6d3537aff417d69635e2692f-lq

அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.

அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.

எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.

முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.

அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.

அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.

வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான்.

" இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"

மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

  • கருத்துக்கள உறவுகள்

nil-sinthika.jpg

  • கருத்துக்கள உறவுகள்

469483936_1201242324945177_3399976123973

  • கருத்துக்கள உறவுகள்

469485015_596574536229700_68912857637494

டாக்டர் "ஸ்டெதஸ்கோப்"பை காதில் வைக்க மறந்துட்டீங்க. 😂

Bob's Burgers silly, man covering eyes with hand sticker

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

"மூ.தேவி விலாஸ்" இட்லி கடை.
எண் சாத்திரம் பார்த்து, பெயர் வைத்திருப்பாரோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்

469606657_462776523533449_20642365644398

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி அலப்பறைகள்..

sirikka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

yju.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.