Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பதிவு: ஜூன் 09,  2021 06:52 AM
பெரம்பூர்,

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.
 
இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/Districts/2021/06/09065253/DMK-in-Kodungaiyur-Administrators-wife-commits-suicide.vpf

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:
இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

மூன்று பிள்ளையின், தாய்... 
ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட  வேண்டும் என்று  கேட்டிருப்பாரா?
அந்த ஒரு காரணத்துக்காக... தூக்கில் தொங்கியிருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

***

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

*** மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Nathamuni said:

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்
 
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழன் பிரசன்னாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்
 
தமிழன் பிரசன்னாவிற்கு திருமணத்தை நடத்தி வைத்த சீமான் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழன் பிரசன்னா பல நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பதும் இருப்பினும் அவரது குடும்பத்திற்கு ஒரு சோகம் நிகழ்ந்தபோது சீமான் கருத்து வேறுபாடுகளை மறந்து தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

6 minutes ago, Nathamuni said:

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சீமான் ஒரு நிலைப்பாடு எடுக்கேலயே தலை. மறைவுக்கு இரங்கல் தானே தெரிவிச்சு இருக்கிறார்.

எல்லாம் ராவின் மாஸ்டர் பிளான் தான் எண்டு நினைக்கிறன்.... நீங்களும் அப்படி தான் நினைப்பியள், என்ன?

இதுக்கு மேல.... முடியாது. படுக்கத்தான் போறன்.... 

ஆ.... சுப ராத்திரி... தெலுங்கில எப்படி சொல்லுறது எண்டு பார்த்து வையுங்கோ.... நாளை சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

எசேம வேவா நாதம் மஹாத்தயா.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

கொடுங்கையூரில் பிறந்த நாளை " ஆடம்பரமாக " கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.

தீப்பொறி ஆறுமுகம் 

வெற்றிக்கொண்டான்

ராதாரவி

எஸ்.எஸ் சந்திரன் 

ரி. ராஜெந்தர் 

இன்னும் பல லிஸ்ற்.. 

உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ,  "வருமானத்தை"   தீம்கா வழங்குவதில்லை .

மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் . 👍 அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..👌

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும். 

11 hours ago, குமாரசாமி said:

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் ) 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தூசண பிரசன்னாவின் மனைவியா ...?
ஒன்று  RAW இன் சதியாகதான் இருக்கும், இல்லாட்டில் திராவிட ஸ்டாக் சீமானை மாட்டிவிட செய்திருக்கும் உள்ளடி சித்துவேலையாக இருக்கலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.

உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.

சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.

சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.

இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான். 

6 minutes ago, goshan_che said:

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . 

என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.

திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.

முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.

கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.

இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.

பிகு

நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.

ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

நல்லது அப்பன். இணைந்திருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.